10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 05/11/2019
கார்பனும் அதன் சேர்மங்களும்
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
வளைய பியூட்டேன் ________ சேர்மத்திற்கு உதாரணம்.
வளைய
வளையமில்லா
அரோமேட்டிக்
அலிசைக்ளிக்
2.
TFM என்பது சோப்பின் எந்த பகுதிப் பொருளைக் குறிக்கிறது.
தாது உப்பு
வைட்டமின்
கொழுப்பு அமிலம்
கார்போஹைட்ரேட்
3.
கீழ்கண்டவற்றுள் எது மயக்கமூட்டியாக பயன்படுகிறது.
கார்பாக்சிலிக் அமிலம்
ஈதர்
எஸ்டர்
ஆல்டிஹைடு
4.
IUPAC பெயரிடுதலின்படி ஆல்டிஹைடுக்காக சேர்க்கப்படும் இரண்டாம் நிலை முன்னொட்டு______.
ஆல்
ஆயிக் அமிலம்
ஏல்
அல்
5.
ஒரு கரிம சேர்மத்தின் IUPAC பெயர் 3-மெத்தில்பியூட்டன்-1–ஆல் இது எந்த வகைச் சேர்மம் ____.
ஆல்டிஹைடு
கார்பாக்சிலிக் அமிலம்
கீட்டோன்
ஆல்கஹால்
6.
ஒரு திறந்த சங்கிலித் தொடர் கரிம சேர்மத்தின் மூலக்கூறு வாய்ப்பாடு C3H6 அந்த சேர்மத்தின் வகை ___.
அல்கேன்
அல்கீன்
அல்கைன்
ஆல்கஹால்
7.
எத்தனாயிக் அமிலம் ________ சுவையுடையது.
8.
மிக எளிய அல்கேன் ________
9.
உயரிய சிதைவு டிடர்ஜெண்ட்கள் ________ (கிளை / நேரான) சங்கிலி தொடரினை உடையவை.
10.
எத்தனாயிக் அமிலம் ________ லிட்மஸ் தாளை _________ ஆக மாற்றுகிறது.
11.
அடர் சல்பியூரிக் அமிலத்தைக் கொண்டு எத்தனாலை நீர் நீக்கம் செய்யும் போது _____ (ஈத்தீன் / ஈத்தேன்) கிடைக்கிறது.
12.
IUPAC பெயரிடுதலில் கரிமச் சேர்மத்தின் கட்டமைப்பை குறிப்பிடுவது ________ (அடிப்படைச் சொல் / பின்னொட்டு / முன்னொட்டு)
13.
ஒரு சேர்மத்தின் சிறப்பு பண்புகளுக்கு காரணமான அணு அல்லது அணுக்கள் அடங்கிய தொகுதி அச்சேர்மத்தின் _______ ஆகும்.
14.
அரோமேட்டிக் சேர்மம்
15.
பல் இன வளைய சேர்மம்
16.
கார்போ வளையச் சேர்மங்கள்
17.
நிறைவுறா சேர்மங்கள்
18.
வினைச் செயல் தொகுதி – OH
19.
கூற்று (A): அசிட்டிக் அமிலம் நீல லிட்மஸ் தாளை சிவப்பாக மாற்றுகிறது.
காரணம் (R): இது வலிமை குறைந்த அமிலம்.
அ) A மற்றும் R சரி. R, A ஐ விளக்குகிறது.
ஆ) A சரி R தவறு
இ) A தவறு R சரி
ஈ) A மற்றும் R சரி. R, A க்கான சரியான விளக்கம் அல்ல.
20.
கூற்று A: அல்கேன்கள் நிறைவுற்ற ஹைட்ரோகார்பன்கள்
காரணம் R: ஹைட்ரோகார்பன்கள் சகப்பிணைப்பைப் பெற்றுள்ளன.
அ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றை நன்கு விளக்குகிறது.
ஆ) கூற்று சரி, காரணம் தவறு.
இ) கூற்று தவறு, காரணம் சரி.
ஈ) கூற்று மற்றும் காரணம் சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.
21.
கூற்று A : கடின நீரில் சோப்பை விட டிடர்ஜெண்டுகள் சிறப்பாக செயல் புரிகின்றன.
காரணம் R : டிடர்ஜெண்டுகள் கால்சியம் மற்றும் மெக்னீசியம் உப்புக்களை வீழ்படிவ செய்வதில்லை.
அ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றை நன்கு விளக்குகிறது.
ஆ) கூற்று சரி, காரணம் தவறு.
இ) கூற்று தவறு, காரணம் சரி.
ஈ) கூற்று மற்றும் காரணம் சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.
22.
கடின நீர் என்பது யாது?
23.
எத்தனாலை எவ்வாறு ஈத்தீனாக மாற்றுவாய்?
24.
எரிசாராயம் எனப்படுவது யாது?
25.
ஹைட்ரோ கார்பன்கள் என்பது யாது?
26.
சோப்பு மற்றும் டிடர்ஜெண்டை வேறுபடுத்துக.
27.
எத்தனாயிக் அமிலம் எத்தனாலில் இருந்து எவ்வாறு தயாரிக்கப்படுகிறது. அவ்வினைக்கான சமன்பாட்டை எழுதுக.
28.
கீழ்க்கண்ட சேர்மங்களின் கார்பன் சங்கிலி தொடரைப் பொறுத்து வகைப்படுத்துக மற்றும் மூலக்கூறு வாய்ப்பாடை எழுதுக.
1. புரப்பேன்
2. பென்சீன்
3. வளைய பியூட்டேன்
4. பியூரான்
29.
சோப்பின் தூய்மையாக்கல் முறையை விளக்குக. (அ) சோப்பை நீருடன் சேர்க்கும் போது ஏன் மிசெல்ஸ் உருவாகிறது என்பதை தகுந்த படத்துடன் விளக்குக.
30.
படிவரிசை என்றால் என்ன? படிவரிசை சேர்மங்களின் மூன்று பண்புகளைக் கூறுக.
31.
பின்வரும் கரிமச் சேர்மங்கள் A முதல் F வரை பெயரிடப்பட்டுள்ளன.
(i) ஒரே தொகுதியை சேர்ந்த சேர்மங்களை குறிப்பிடுக.
(ii) ஹைட்ரோ கார்பன்களை கொண்டிராத சேர்மங்கள் எவை?
(iii) C -யை எவ்வாறு A -வாக மாற்றுவாய்?
32.
ஒரு கரிம சேர்மம் A என்பதன் மூலக்கூறு வாய்ப்பாடு C2H4O2 இது பதப்படுத்துதலில் பயன்படுகிறது. மேலும் எத்தனாலுடன் வினைபுரிந்து இனிய மணமுடைய சேர்மம் B யை தருகிறது.
அ. சேர்மம் A யைக் கண்டறிக.
ஆ. சேர்மம் B உருவாதல் வினையினை எழுதுக.
இ. இந்நிகழ்விற்கு பெயரிடுக.
1.
(d)
அலிசைக்ளிக்
2.
(c)
கொழுப்பு அமிலம்
3.
(b)
ஈதர்
4.
(c)
ஏல்
5.
(d)
ஆல்கஹால்
6.
(b)
அல்கீன்
7.
( )
புளிப்பு
8.
( )
CH4
9.
( )
நேரான
10.
( )
நீல, சிவப்பு
11.
( )
ஈத்தீன்
12.
( )
அடிப்படைச் சொல்
13.
( )
வினைச் செயல் தொகுதி
14.
பென்சீன்
15.
பியூரான்
16.
ஆல்கஹால்
17.
பென்சீன்
18.
ஈத்தீன்
19.
ஈ) A மற்றும் R சரி. R, A க்கான சரியான விளக்கம் அல்ல.
20.
ஈ) கூற்று மற்றும் காரணம் சரி, ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் அல்ல.
21.
அ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றை நன்கு விளக்குகிறது.
22.
கால்சியம் மற்றும் மெக்னீசியம் அயனிகளைக் கொண்டுள்ள நீர் கடினநீர் எனப்படுகிறது.
23.
(i) எத்தனாலை அதிக அளவு அடர் H2SO4 உடன் 443Kக்கு வெப்பப்படுத்தும் போது மூலக்கூறினுள் நீர் நீக்கம் ஏற்பட்டு ஈத்தீனைத் தருகிறது.
24.
(i) எத்தனாலின் நீர்க்கரைசல் 95.5% எத்தனாலையும் 4.5% நீரையும் பெற்றுள்ளது.
(ii) இது எரிசாராயம் என அழைக்கப்படுகிறது.
25.
கார்பன் மற்றும் ஹைட்ரஜன் மட்டுமே இணைந்து உருவாகும் சேர்மங்கள் ஹைட்ரோ கார்பன்கள் ஆகும்.
26.
| சோப்பு | டிடர்ஜென்ட் |
|---|---|
| இது நீண்ட சங்கிலி அமைப்பை பெற்ற கார்பாக்சிலிக் அமிலங்களின் சோடியம் உப்புகள். | இது சல்போனிக் அமிலத்தின் சோடியம் உப்புகள். |
| சோப்பின் அயனி பகுதி COO-Na+ | டிடர்ஜெண்டின் அயனி பகுதி SO-3 Na+ |
| விலங்குகளிடமிருந்து கிடைக்கும் கொழுப்பு மற்றும் தாவரங்களிடம் இருந்து கிடைக்கும் எண்ணெய் ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படுகிறது. | பெட்ரோலியத்திலிருந்து கிடைக்கும் ஹைட்ரோகார்பனிலிருந்து இவை தயாரிக்கப்படுகிறது. |
| உயிரியல் சிதைவு அடையும் தன்மை பெற்றது. | உயிரியல் சிதைவு அடையும் தன்மை அற்றது. |
| கடின நீரில் பயன்படுத்த முடியாது. | கடின நீரிலும் சிறப்பாக சலவை செய்யலாம் |
27.
எத்தனாலை காரம் கலந்த பொட்டாசியம் பெர்மாங்கனேட் (அ) அமிலம் கலந்த பொட்டாசியம்-டை-குரோமேட் கரைசலை கொண்டு ஆக்ஸிஜனேற்றம் அடையச் செய்து எத்தனாயிக் அமிலத்தை தயாரிக்கலாம்.
\({ CH }_{ 3 }{ CH }_{ 2 }OH\overset { kMn{ O }_{ 4 }/OH^-}{ \underset { 2[o] }{ \longrightarrow } } { CH }_{ 3 }COOH+{ H }_{ 2 }O\)
எத்தனால் எத்தனாயிக் அமிலம்
28.
| வ.எண் | சேர்மம் | வகை | வாய்ப்பாடு | |
| 1. | புரப்பேன் | வளையமற்ற சேர்மம் | CH3 - CH2 - CH3 | |
| 2. | பென்சீன் | கார்போசைக்கிளிக் (ஓரின) வளையச் சேர்மங்கள் | அரோமேட்டிக் சேர்மங்கள் | ![]() |
| 3. | வளைய பியூட்டேன் | அலிசைக்கிளிக் சேர்மங்கள் | ![]() |
|
| 4. | பியூரான் | பல்லின வளையச் சேர்மங்கள் | ![]() |
|
29.
1. ஒரு சோப்பு மூலக்கூறு நீரில் இரு வேதிப் பகுதிகளாக மாறுகிறது.
2. ஒரு முனை சிறிய தலை போன்ற கார்பாக்சிலேட் பகுதியையும், மறுமுனை பெரிய வால் போன்ற நீளமான ஹைட்ரோகார்பன் சங்கிலி தொடரையுடைய முனைவற்ற பகுதியையும் பெற்றுள்ளது.
3. முனைவுள்ள பகுதி நீர் விரும்பும் பகுதியாக செயல்பட்டு நீருடன் ஒட்டிக் கொள்கிறது.
4. முனைவற்ற பகுதி நீரை வெறுக்கும் பகுதியாக செயல்பட்டு ஆடைகளில் உள்ள அழுக்கு மற்றும் எண்ணெய் ஆகியவற்றுடன் ஒட்டிக் கொள்கிறது.
5. நீரை வெறுக்கும் பகுதி மாசினை தன்னுள் அடக்கி கொள்கிறது.
6. நீரை விரும்பும் பகுதி மொத்த மூலக்கூறையும் நீரில் கரையச் செய்கிறது. சோப் அல்லது டிடர்ஜென்டை நீரில் கரைக்கும் பொழுது சோப்பு மூலக்கூறுகள் ஒன்றாக இணைந்த கொத்துகளாக (Micelles) மீசெல்ஸ் உருவாகிறது.
7. இந்த கொத்துகளில் ஹைட்ரோகார்பன் சங்கிலி பகுதியானது, அழுக்கு மற்றும் எண்ணெய் பகுதியோடு ஒட்டிக்கொள்கிறது.
8. இவ்வாறாக சோப்பின் முனைவற்ற பகுதி அழுக்கைச் சுற்றிக் கொள்கிறது.
9. சோப்பின் கார்பாக்சிலேட் பகுதி, கொத்துக்களை நீரில் கரையச் செய்கிறது. இவ்வாறாக அழுக்கு சோப்பினால் நீக்கப்படுகிறது.
30.
படிவரிசை என்பது ஒரே பொதுவான மூலக்கூறு வாய்ப்பாட்டையும் ஒத்த வேதிப் பண்புகளையும் கொண்ட ஒரே தொகுதி (அ) ஒரே வகையில் உள்ள கரிமச் சேர்மங்களையும் குறிப்பதாகும்.
மீத்தேன் - CH4
ஈத்தேன் - CH3 CH3
புரப்பேன் - CH3 CH2 CH3
படிவரிசை சேர்மங்களின் பண்புகள்:
1. ஒரு படிவரிசையில் உள்ள அடுத்தடுத்த சேர்மங்கள் மெத்திலீன் CH2 என்ற பொது வேறுபாட்டிலும் மூலக்கூறு நிறை 14 amu வேறுபடுகின்றன.
2. ஒரு படிவரிசையில் உள்ள அனைத்து சேர்மங்களும் ஒரே வகை தனிமங்களையும், வினைச்செயல் தொகுதிகளையும் பெற்றிருக்கும்.
3. எல்லாச் சேர்மங்களையும் ஒரே முறையில் தயாரிக்க இயலும்.
31.
(i) B மற்றும் D அல்கைன்கள் தொகுதியைச் சேர்ந்தவை.
(ii) E மற்றும் F ஹைட்ரோ கார்பன்கள் அல்ல.
32.
அ) சேர்மம் ' A ' என்பது எத்தனாயிக் அமிலம் (அசிட்டிக் அமிலம்) - CH3COOH [C2H4O2]
ஆ) சேர்மம் ' B ' உருவாதல் வினையினை எழுதுக.

சேர்மம் ' B ' CH3COOCH2CH3 → எத்தில் எத்தனோயேட்
இ) எஸ்டராக்குதல்
ஏனென்றால் எத்தில் எத்தனோயேட் என்பது ஒரு எஸ்டர் ஆகும்.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards