10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 19/08/2019
உயிரினங்களின் அமைப்பு நிலைகள்
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
முயல்களின் ஒவ்வொரு சிறுநீரகமும் பல ________ ல் ஆக்கப்பட்டவை.
நியூரான்கள்
நெப்ரான்கள்
கார்டெக்ஸ்
எபிடைமிஸ்
2.
அட்டை _________ நீளம் வரை வளரக் கூடியது.
35 செ.மீ
45 செ.மீ
25 செ.மீ
20 செ.மீ
3.
அட்டைகளில் விந்தணுக்கள் _________ பகுதியில் சேமித்து வைக்கப்படுகிறது.
விந்து முதிர்ச்சிப்பை
விந்து வெளிச்செலுத்தும் நாளம்
விந்தகம்
வெளியேற்றும் குழாய்
4.
அட்டைகளில் _________ இணை நெப்ரீடியத் துளைகள்.
18
15
17
12
5.
அட்டையின் இடப்பெயர்ச்சி _____ மூலம் நடைபெறுகிறது.
முன் ஒட்டுறுப்பு
பக்கக் கால்கள்
சீட்டாக்கள்
தசைகளின் சுருக்கம் மற்றும் நீள்தல்
6.
அட்டையின் உடலின் _______ யானது 26வது கண்டத்தின் முதுகுப்புற மையப் பகுதியில் திறக்கிறது.
7.
முயலின் நடுமூளை _______ கோளங்களைக் கொண்டுள்ளது.
8.
முயலின் தண்டுவட நரம்புகளின் எண்ணிக்கை ______.
9.
_______ கண்டத்தின் மாறுபாட்டால் அட்டையின் பின் ஒட்டுறுப்பு உருவாகியுள்ளது.
10.
CNS–ன் விரிவாக்கம் என்ன?
11.
அட்டையின் உடலில் எத்தனை இணை விந்தகங்கள் உள்ளன?
12.
அட்டைகளின் மேல் சாதாரண உப்பினை கொட்டினால் அவை இறந்துவிடுவதேன்?
13.
சைலேஷ் தன் வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்த்து வருகிறான். அவற்றில் சில முயல்களும் உள்ளன. ஒரு நாள் முயல்களுக்கு உணவளிக்கும் போது அவற்றின் பற்கள் வித்தியாசமாக இருப்பதை கவனிக்கிறான். இது குறித்து அவனுடைய தாத்தாவிடம் கேட்கிறான். அந்த வித்தியாசத்திற்கு என்ன காரணம் என்று ஊகிக்க முடிகிறதா ? விவரி.
14.
முயலின் சுவாசக் குழாயில் குருத்தெலும்பு வளையங்கள் காணப்படுவது ஏன் ?
15.
முயலின் இதயத்தை படத்துடன் விவரி.
16.
அட்டையின் இதய அமைப்புக்கேற்ப அதன் சுற்றோட்ட மண்டலம் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது ?
17.
அண்டம்
18.
நான்கு கால்வாய்கள்
19.
இந்திய அட்டை
20.
தாடை
21.
ஹிருடின்
22.
மருத்துவ அறிவியலில் ஹிருடின் பயன்படுத்தப்படுகிறதா?
23.
முயலின் மூளையில் உள்ள பாதுகாப்பு சவ்வுகளை பற்றி எழுதுக.
24.
கிளைடடெல்லத்தின் முக்கியத்துவம் யாது?
1.
(b)
நெப்ரான்கள்
2.
(a)
35 செ.மீ
3.
(a)
விந்து முதிர்ச்சிப்பை
4.
(c)
17
5.
(a)
முன் ஒட்டுறுப்பு
6.
( )
மலத்துளை
7.
( )
பார்வைக்
8.
( )
37
9.
( )
இறுதி ஏழு
10.
மைய நரம்பு மண்டலம். (Central Nervous System)
11.
அட்டையின் உடலில் பதினொன்று இணை விந்தகங்கள் உள்ளன.
12.
(i) அட்டையின் தோல் மூலம் சுவாசம் நடைபெறுகிறது. சுவாசம், பரவல் முறையில் நடைபெறுகிறது.
(ii) நீரில் கரைந்துள்ள ஆக்சிஜன் தோல் மூலம் இரத்த உடற்குழி திரவத்தால் பரவுகிறது.
(iii) உப்பைக் கொட்டுவதினால் உப்பு, நீரை உறிஞ்சிவிடுகிறது. மேலும் வாயு பரிமாற்றம் தடையாகிறது. இதனால், அட்டையின் உடல் உலர்ந்து அது இறந்து விடுகின்றது.
13.
1. முயலுக்கு கோரைப் பற்கள் கிடையாது.
2. முயலின் வெட்டும் பற்களுக்கும், முன் கடைவாய் பற்களுக்கும் இடையேயான இடைவெளிப் பகுதி டயாஸ்டீமா அல்லது பல் இடைவெளி என அழைக்கப்படுகிறது.
3. மெல்லும் போதும் அரைக்கும் போதும் உணவை கையாளுவதற்கு இந்த பல் இடைவெளி பயன்படுகிறது.
4. பற்கள் கடினமான, எலும்பு போன்ற அமைப்புகள், இவை உணவுப் பொருட்களை வெட்டுவதற்கும், மெல்லுவதற்கும் அரைப்பதற்கும் பயன்படுகிறது.
5. முயல், தன் வாழ்நாளில் இரு தொகுதி பற்களை பெறுகிறது.
6. இவ்வாறு ஒரு விலங்கின் வாழ்நாளில் இரு தொகுதி பற்கள் காணப்படும் நிலை “இரு முறை தோன்றும் பல்லமைப்பு” என்று பெயர்.
7. பாலுட்டிகளில் நான்கு வகைப் பற்கள் காணப்படுகின்றன. அவை
i. வெட்டும் பற்கள்
ii. கோரைப்பற்கள்
iii. முன் கடைவாய் பற்கள்
iv. பின் கடைவாய் பற்கள்
8. முயலின் பல்வாய்ப்பாடு 1 x 2/1, C x 0/0, PM x 3/2, M x 3/3 அல்லது 2033/1033
14.
மூச்சுக்குழாயின் வழியே காற்று எளிதாகச் சென்று வரும் வகையில் அதன் சுவர்கள் குருத்தெலும்பு வளையங்களால் தாங்கப்படுகின்றன.
15.
(i)முயலின் சுற்றோட்ட மண்டலம் இரத்தம், இரத்தக் குழாய்கள் மற்றும் இதயம் ஆகியவற்றைக் கொண்டது. இதயம் பேரிக்காய் வடிவத்தில் மார்பறையினுள் இரு நுரையீரல்களுக்கும் இடையில் அமைந்துள்ளது. இதயம் பெரிகார்டியம் என்ற இரட்டைச் சவ்வுகளால் ஆன உறையால் சூழப்பட்டுள்ளது.
(ii) இதயம் இரு ஆரிக்கிள்கள் மற்றும் இரு வென்ட்ரிக்கிள்கள் என நான்கு அறைகளைக் கொண்டது. வலது மற்றும் இடது ஆரிக்கிள்கள், ஆரிக்கிள் இடைத் தடுப்புச் சுவரால் பிரிக்கப்பட்டுள்ளன. இதே போல், வலது மற்றும் இடது வென்ட்ரிக்கிள்கள், வென்ட்ரிக்கிள் இடைத் தடுப்புச் சுவரால் பிரிக்கப்பட்டுள்ளன.
(iii) வலது ஆரிக்குலோ - வென்ட்ரிக்குலார் துளை மூலம் வலது வென்ட்ரிக்கிள் திறக்கிறது. இத்துளை மூவிதழ் வால்வினால் காக்கப்படுகிறது. இடது ஆரிக்கிள், இடது வென்ட்ரிக்குலார் துளை மூலம் திறக்கிறது. இத்துளையை ஈரிதழ் வால்வு அல்லது மிட்ரல் வால்வு காக்கிறது. நுரையீரல் வளைவு மற்றும் பெருந்தமனி திறக்கும் இடங்களில் அரைச்சந்திர வால்வு உள்ளன.
(iv) இரு பெருஞ்சிரைகள் (முன்கேவல் சிரைகள்) மற்றும் ஒரு கீழ்ப்பெருஞ்சிரை (பின்கேவல் சிரை) மூலம் உடலின் அனைத்து பாகங்களிருந்தும் ஆக்சிஜன் நீக்கம் பெற்ற இரத்தத்தை வலது ஆரிக்கிள் பெறுகிறது.
(v) இடது ஆரிக்கிள், நுரையீரல் சிரைகள் மூலம் நுரையீரல்களிலிருந்து ஆக்சிஜனேற்றப்பட்ட இரத்தத்தைப் பெறுகிறது. வலது வென்ட்ரிக்கிளிலிருந்து நுரையீரல் வளைவு கிளம்பி, ஆக்சிஜன் குறைந்த இரத்தத்தை நுரையீரல்களுக்கு எடுத்துச் செல்கிறது. இடது வென்ட்ரிக்கிளிலிருந்து சிஸ்டமிக் வளைவு கிளம்பி, ஆக்சிஜன் மிகுந்த இரத்தத்தை உடலின் அனைத்து பாகங்களுக்கும் அனுப்புகிறது.
16.
அட்டையின் சுற்றோட்ட மண்டலம்:
1. இரத்த உடற்குழி மூலம் அட்டையில் சுற்றோட்டம் நடைபெறுகிறது.
2. உண்மையான இரத்தக் குழாய்கள் இல்லை
3. இரத்தக்குழாய்களுக்குப் பதிலாக இரத்தம் போன்ற திரவத்தால் நிரப்பப்பட்ட இரத்த உடற்குழிக் கால்வாய்கள் அமைந்துள்ளன.
4. இந்த உடற்குழி திரவமானது ஹீமோகுளோபினைக் கொண்டுள்ளது.
5. காற்றோட்ட மண்டலத்தில் நான்கு நீண்ட கால்வாய்கள் உள்ளன.
6. ஒரு கால்வாய் உணவுப் பாதையின் மேல் புறமாகவும், மற்றொரு கால்வாய் பாதையின் கீழ் புறமாகவும் அமைந்துள்ளது.
7. மற்ற இரு கால்வாய்களும் உணவுப் பாதையின் இரு பக்கங்களிலும் அமைந்துள்ளன.
8. இவ்விரு கால்வாய்களும் உட்புறம் வால்வுகளைக் கொண்டு, இதயம் போன்று செயல்படுகின்றன. நான்கு கால்வாய்களும் கீழ்புறத்தில் 26வது கண்டத்தில் ஒன்றாக இணைகின்றன.
17.
பாலிக்கிள்கள்
18.
உடற்குழி திரவம்
19.
ஹிருடினேரியா கிரானுலோசா
20.
பாப்பில்லா
21.
புரதம்
22.
ஆம், இவை இரத்த உறைதலைத் தடுத்து இரத்த ஓட்டத்தை விரைவுபடுத்துவதில் செயல்திறன் மிக்கவை.
23.
மூளை மண்டையோட்டினுள் அமைந்துள்ளது. இது மூன்று சவ்வுகளால் சூழப்பட்டுள்ளது. வெளிச்சவ்வு டியூராமேட்டர் எனவும், உட்சவ்வு பயாமேட்டர் எனவும், இடைச்சவ்வு அரக்னாய்டு உறை எனவும் அழைக்கப்படுகிறது.
24.
அட்டையின் இனப்பெருக்க காலத்தினால் கூட்டை உருவாக்குவதற்காக 9 முதல் 11 ஆவது கண்டம் வரையில் தற்காலிகமாக கிளைடெல்லம் உருவாகிறது.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards