10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 20/01/2020
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
ஒரு பொருளானது ஒரு லென்சிலிருந்து 50 செ.மீ ல் வைக்கப்படும்போது லென்சிற்கு முன்னால் 10 செ.மீ தொலைவில் மாய பிம்பம் உருவாகிறது. லென்சின் குவியதூரம் யாது? இது விரிக்கும் லென்சா? குவிக்கும் லென்சா?
2.
ஒரு 6A மின்னோட்டம் உலோகக் கம்பியின் வழியாக பாய்கிறது. 2 நிமிடங்கள் மின்னோட்டம் பாய்ந்தால் ஏற்படும் மின்சுமை யாது?
3.
ஒரு மின்சலவைப் பெட்டி அதிகபட்ச வெப்பத்தை வெளிவிடும்போது 420 வாட் மின்திறனை நுகர்கிறது. குறைந்த பட்ச வெப்பத்தை வெளிவிடும் போது 180 வாட் மின் திறனை நுகர்கிறது. அதற்கு 220 வோல்ட் மின்னழுத்தம் கொடுக்கப்பட்டால் இரு நிலைகளிலும் அதன் வழியே பாயும் மின்னோட்டத்தின் அளவுகளை கணக்கிடு.
4.
1 கிகி நிறையுடைய பந்து ஒன்று 10 மீ.வி-1 திசைவேகத்தில் தரையின் மீது விழுகிறது. மோதலுக்கு பின் ஆற்றல் மாற்றமின்றி, அதே வேகத்தில் உயரச் செல்கிறது எனில் அப்பந்தில் ஏற்படும் உந்த மாற்றத்தினை கணக்கிடுக.
5.
வெப்ப சமநிலை என்றால் என்ன?
6.
ராதா நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளான். மருத்துவர் அவளை மாத்திரை எடுத்துக் கொள்ளுமாறு கூறினார்.ஷீலாவும் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவரே.மருத்துவர் ஷீலாவை இன்சுலின் ஊசியினை தினமும் போட வேண்டும் என கூறினார். மருத்துவர்கள் செய்தது சரியா? நீ என்ன நினைக்கிறாய்.
7.
சடுதி மாற்றம் வரையறு.
8.
உயிர் சிதைவடையும் பொருட்களினால் சூழ்நிலை மண்டலம் பாதிக்கப்படுமா? காரணம் கூறு.
9.
கார்பன் டை ஆக்சைடின் (CO2) கிராம் மூலக்கூறு நிறையை கண்டுபிடி.
10.
இருப்பால் தன்மை கொண்ட மலர்களில் உள்ள மகரந்தத்தினை நீக்கிவிட்டால் அந்த மலரால் விதைகளை உருவாக்க முடியுமா?
11.
ராமன் தோட்டத்திற்கு சென்றான். ஆல மரத்தில் தண்டுப்பகுதி ஒவ்வொரு வருடமும் பருமனாக மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால் தென்னைமரம் இவ்வாறாக பருமனாக மாறவில்லை. ஏன் என யோசிக்கிறான். உங்களால் இதற்கு விளக்கம் கூற முடியுமா?
12.
கணினி உன்னுடைய படிப்பிற்கு எம்முறைகளிலும் உதவிபுரிகிறது?
13.
’A’ என்பது நீல நிறப் படிக உப்பு. இதனைச் சூடுபடுத்தும் போது நீல நிறத்தை இழந்து ‘B’ ஆக மாறுகிறது. B-இல் நீரைச் சேர்க்கப்படும் போது ‘B’ மீண்டும் ’A’ ஆக மாறுகிறது. ’A’ மற்றும் ‘B’ யினை அடையாளம் காண்க.
14.
X- கதிர் படங்களை அடிக்கடி எடுக்கக்கூடாது காரணங்களை எழுதுக.
15.
அர்ஜூன் பத்தாம் வகுப்பு படிக்கிறான். அவனுக்கு காய்ச்சல் வந்ததால் மருத்துவரை சந்திக்கச் செல்கிறான். அவன் மருத்துவமனைக்குச் சென்ற போது, அட்டையால் தீவிரமாக கடிக்கப்பட்ட ஒரு நோயாளி சிகிச்சை பெறுவதைக் காண்கிறான். மிகவும் கொடூரமாக இருப்பதைக் கண்ட அர்ஜூன், மருத்துவரிடம் அட்டை மனிதனின் தோலில் ஒட்டும்போதே, அது கடிப்பதை ஏன் உணர முடிவதில்லை என வினவுகிறான். அதற்கு மருத்துவர் அளித்த விடை என்னவாக இருக்கும் ?
1.
கொடுக்கப்பட்டவை:
பொருளின் தொலைவு v =-50 செ.மீ
பொருளின் தொலைவை விட பிம்பத்தின் தொலைவு குறைவு எனில் மாய பிம்பம் உருவாகும். இது ஒரு குழிலென்சு.
எனவே, பிம்பத்தின் தொலைவு =-10 செ.மீ
கண்டறிய
லென்சின் குவிய தொலைவு=?
தீர்வு:
\(\cfrac { 1 }{ f } =\cfrac { 1 }{ v } -\cfrac { 1 }{ u } \)
\(\frac { 1 }{ f } =\frac { -1 }{ 10 } -\left( \frac { 1 }{ -50 } \right) \)
\(\cfrac { 1 }{ f } =\cfrac { -1 }{ 10 } +\cfrac { 1 }{ 50 } \)
\(\cfrac { 1 }{ f } ={ \cfrac { -50+10 }{ 500 } =\cfrac { -40 }{ 500 } }\)
\(f=\cfrac { -500 }{ 40 } =-12.5\) செ.மீ
2.
கொடுக்கப்பட்டவை:
கம்பியின் வழியே பாயும் மின்னோட்டம், I =6A
காலம், t =2 நிமிடங்கள்
=2 x 60=120 விநாடிகள்
கண்டறிய:
கம்பியின் வழியே பாயும் மின்சுமை Q =?
I =\(\frac { Q }{ t } \)
(அல்லது) Q =I x t =6 x 120=720 C
∴ மின்சுமை Q=720 C
3.
மின்சலவைப் பெட்டி அதிகபட்ச வெப்பநிலையில் நுகரும் மின்திறன் (P1) = 420 வாட்
மின்சலவைப் பெட்டி குறைந்தபட்ச வெப்பநிலையில் நுகரும் மின்திறன் (P2) = 180 வாட்
கொடுக்கப்படும் மின்னழுத்தம் (V) = 220 V
மின்னோட்டத்தின் அளவுகள் = ?
(i)\(\begin{aligned} \begin{aligned} \mathrm{P}_1 & =\mathrm{I}_1 \mathrm{~V} \Rightarrow \mathrm{I}_1=\frac{\mathrm{P}_1}{\mathrm{~V}} \end{aligned} \end{aligned}\)
420 = I1 (220); I1 = 1.9 A
(ii) \(\begin{aligned} \begin{aligned} \mathrm{P}_2 & =\mathrm{I}_2 \mathrm{~V} \Rightarrow \mathrm{I}_2=\frac{\mathrm{P}_2}{\mathrm{~V}} \\ \end{aligned} \end{aligned}\)
180 = I2 (220)
I2 = \(\frac{180}{220}\)= 0.81A
I2 = 0.81 A
4.
m = 1கிகி ; v = 10 மீ.வி-1
மோதலுக்கு பின் அதே வேகத்தில் பந்து உயரச் செல்வதால் உந்தம் mv - லிருந்து - mv க்கு மாற்றமடைகிறது. ஆகவே உந்த மாற்றம்
உந்த மாற்றம் = இறுதி உந்தம் - தொடக்க உந்தம்
= - mv - mv
= -2 mv = - 2 \(\times\) 1 \(\times\) 10
= - 20 கிகி மீ.வி-1
5.
(i) இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருள்களுக்கிடையே எந்த வெப்ப ஆற்றல் பரிமாற்றமும் இல்லை எனில் அந்தப் பொருட்கள் வெப்பச் சமநிலையில் உள்ளன என்று பொருள்.
(ii) வெப்பநிலை வேறுபாட்டினால் வெப்ப ஆற்றல் ஒரு பொருளிலிருந்து மற்றொரு பொருளுக்குப் பரவுகிறது.
(iii) ஒரே வெப்பநிலையில் உள்ள இரண்டு பொருட்கள் வெப்ப சமநிலையில் உள்ளது எனவும் வரையறுக்கலாம்.
6.
ஷீலா இன்சுலின் சார்ந்த நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.அவருடைய உடலில் கணையத்தில் உள்ள பீட்டா செல்கள் அழிந்துவிட்டதால் போதுமான இன்சுலின் சுரக்கவில்லை.எனவே இரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கிறது.
ராதா இன்சுலின் சாராத நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். கணையத்தால் சுரக்கப்படுகின்ற இன்சுலின் அளவு போதுமானதாக உள்ளது. ஆனால் அதன் செயல்பாடு குறைவாக உள்ளது.இன்சுலின் இலக்கு செல்கள் அதற்கு பதில்வினை புரிவதில்லை. இது செல்களுக்குள் குளுக்கோஸ் செல்வதை அனுமதிப்பதில்லை. எனவே மாத்திரை எடுத்துக் கொள்ள சொன்னார்.
7.
ஒரு உயிரினத்தின் DNA வின் நியூக்ளியோடைடு வரிசையில் திடீரென ஏற்படும், பாரம்பரியத்துக்கு உட்படும் மாற்றமே சடுதிமாற்றம் எனப்படும்.
8.
ஆம் பாதிக்கப்படும்.
(i) உயிர் சிதைவடையக் கூடிய பொருட்கள் சிதைவடியும் வாயுக்களையும் வெளியேற்றுகின்றன.
(ii) அவற்றின் பொருட்களில் கொசு போன்ற உயிரினங்கள் வாழ்க்கையை நடத்துகின்றன. அவை சில நோய்களை உண்டாக்குகின்றன.
(iii) உயிரிகள் சிதைவடையாத சுழற்சியுடன் ஒப்பிடுகையில் மிகக்குறைந்த அளவே பாதிப்பை ஏற்படுத்துகிறது.
9.
CO2 = 1(C)+2(O)=1(12)+2(16)
= 12 +32
CO2 ன் கிராம் மூலக்கூறு நிறை = 44 கி
10.
விதைகளை உருவாக்க முடியும். மகரந்தச்சேர்க்கை காற்று, பூச்சிகள் மூலமாக நடைபெற முடியும். இந்த காரணிகளால் மகரந்தச்சேர்க்கை நடைபெற்று கருவுறுதல் நடைபெற்று விதைகள் உருவாக முடியும்.
11.
(i) ஆலமரமானது இருவித்திலை தாவரம், வாஸ்குலார் தொகுப்பில் கேம்பியம் திசு காணப்படுகிறது. இந்த கேம்பியம் திசு இரண்டாம் நிலை வளர்ச்சியில் ஈடுபடுவதால் ஒவ்வொரு நாளும் இதன் தண்டுப்பகுதி வளர்கிறது. சைலம் மற்றும் புளோயம் தடிமனாக வளர்ந்து கொண்டே இருக்கும்.
(ii) தென்னை மரமானது ஒருவித்திலைத் தாவரம். இங்கு இரண்டாம் நிலை வளர்ச்சி ஏற்படுவதில்லை. எனவே அது பருமனாக காணப்படுவதில்லை
12.
(i) கணினி புதிய கருத்துக்களை வெளிக் கொணரவும், புதிய கொள்கைகளில் ஆழமாக செல்வதற்கும் பல வழிகளில் CD - ரோம் or DVD போன்றவற்றின் மூலமாக உதவி செய்கிறது.
(ii) கலந்துரையாடல் பயிற்சிகளுக்கும் வழி வகுக்கிறது.
(iii) பாடங்களை எளிய முறையில் புரிந்து கொள்ளும் வகையில் காட்சி தொடர்பு சாதனங்களின் மூலமும், அசைவூட்டல் மூலமாகவும், சித்திரங்களின் மூலமாகவும், நாங்கள் கற்றுக் கொள்ள உதவிபுரிகின்றது.
13.
A என்பது நீல நிறப் படிக உப்பு.
A \(\Rightarrow\) காப்பர் சல்பேட் பென்டாஹைட்ரேட் (CuSO4 . 5H2O).
'A' யை சூடுபடுத்தும் போது நீல நிறத்தை இழந்து 'B' ஆக மாறுகிறது.

14.
1. நாம் பயன்படுத்தும் X-கதிர்கள் குறைவான செறிவுடையவை.
2. நம் உடலுக்கு பெரிதாக தீங்கு விளைவிக்காதவை. X - கதிர்கள் தோராயமாக காமா கதிர்களுக்கு சமமான ஆற்றல் கொண்டவை.
3. எனவே அக்கதிர்களை தொடர்ந்து பயன்படுத்தும் பொழுது நம் உடலில் உள்ள செல்களை அழிக்க நேரிடும்.
4. இது புற்றுநோயை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம் கொண்டதாகிவிடும்.
15.
அட்டை கடிக்கும்போது விருந்தோம்பிகளின் தோல்களில் மயக்க தன்மை கொண்ட திரவத்தை உட்செலுத்துகிறது. இதனால் கடிக்கும் போது வலி ஏற்படாது.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards