10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil நாகரிகம், நாடு, சமூகம் - கவிதை பேழை (செய்யுள்) -முத்தொள்ளாயிரம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil அறம்,தத்துவம், சிந்தனைகவிதை பேழை (செய்யுள்) -அக்கறை Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil உயிரின்ஓசை - துணைப்பாடம் -பிருமம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil அறம், தத்துவம், சிந்தனை - கவிதை பேழை (செய்யுள்) -தேம்பாவணி * Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil கலை, அழகியல், புதுமை - உரைநடை உலகம் -பன்முகக் கலைஞர் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil மணற்கேணி - இலக்கணம் - இலக்கணம் -பொது Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 20/01/2020
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
கழிவு நீர் சுத்திகரிக்கும் முறையை விளக்குக.
2.
மனித விந்துவின் அமைப்பை படத்துடன் விவரி.
3.
0.001 M செறிவுள்ளஹைட்ரோ குளோரிக் அமிலத்தின் கரைசலின் pH மதிப்பை காண்க.
4.
500 Hz அதிர்வெண்ணை உடைய ஒலி மூலமானது, 30 மீவி-1 வேகத்தில் கேட்குநரை நோக்கி நகர்கிறது. காற்றில் ஒலியின் வேகம் 330 மீவி-1 எனில் கேட்குநரால் உணரப்படும் ஒலியின் அதிர்வெண் என்ன?
5.
6.
7.
8.
மாறாத வெப்பநிலையில் உள்ள வாயுவின் அழுத்தத்தை நான்கு மடங்கு அதிகரிக்கும்போது, அவ்வாயுவின் பருமன் 20 cc (V1 cc) லிருந்து V2 cc ஆக மாறுகிறது எனில், பருமன் V2 cc-ஐ கணக்கிடுக.
9.
ராக்கெட் ஏவுதலை விளக்குக.
10.
விசையின் சமன்பாட்டை நியூட்டனின் இரண்டாம் விதி மூலம் தருவி.
1.
வழக்கமான கழிவுநீர் சுத்திகரிப்பு முறை கீழ்க்கண்ட படிநிலைகளில் கையாளப்படுகிறது. அவையாவன: வடிகட்டுதல், காற்றேற்றம், படிவு அகற்றுதல், மற்றும் நீர் மறுசுழற்சி.
(i) வடிகட்டுதல்:
வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் உருவாகும் கழிவு நீரில் உள்ள திடப்பொருட்களும் மண்ணும் இம்முறையில் வடிகட்டிப் பிரிக்கப்படுகிறது.
(ii) காற்றேற்றம்:
வடிகட்டப்பட்ட கழிவு நீரானது காற்றேற்றம் செய்வதற்காக அதற்குரிய தொட்டிக்கு அனுப்பப்படுகிறது. இந்நிலையில் நுண்ணுயிரிகள் காற்றின் உதவியுடன் உயரிய சிதைவடைதலுக்கு உட்படுத்தப்பட்டு நீக்கப்படுகிறது.
(iii) வீழ்படிவு செயல் முறை:
இம்முறையில் நீரில் மிகுந்த நிலையில் உள்ள திண்மப் பொருட்கள் நீரினடியில் வீழ்படிவாக சென்று சேருகின்றன. இவ்வாறு சேகரமாகும் வீழ்படிவுகள் சேறு போன்று காணப்படும். இது பதிவு என்று குறிப்பிடப்படுகிறது.
(iv) படிவு அகற்றுதல்:
தொட்டிகளில் சேகரமாகும் படிவுகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் பாதுகாப்பான முறையில் அகற்றப்படுகின்றன.
(v) கிருமி நீக்குதல்:
குளோரினேற்றம் மற்றும் புற ஊதா கதிர்கள் மூலம் இந்நீர் சுத்திகரிக்கப்பட்டு நோயை உண்டாக்கக் கூடிய நுண்ணுயிரிகள் நீக்கம் செய்யப்படுகின்றன.
(vi) நீர் மறுசுழற்சி:
இவ்வாறு சுத்திகரிக்கப்பட்ட நீர் வீடு உபயோகத்திற்கும் தொழிற்சாலை பயன்பாட்டுக்காகவும் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது.
2.
i) விந்து செல்லானது தலை, நடுப்பகுதி மற்றும் வால் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
ii) விந்து செல்லின் நீண்ட தலைப்பகுதி சுருங்கிய உட்கருவைக் கொண்டுள்ளது.
iii) தொப்பி போன்ற முன் முனைப்பகுதி அக்ரோசோம் என்று அழைக்கப்படுகிறது.
iv) கருவுறுதலின் போது விந்துவானது அண்டத்தினுள் நுழைவதற்குத் தேவையான ஹயலுரானிடேஸ் என்னும் நொதியை அக்ரோசோம் கொண்டுள்ளது.
v) தலையையும் நடுப்பகுதியையும் இணைக்கின்ற குறுகிய கழுத்துப் பகுதியானது சென்ட்ரியோலை உள்ளடக்கியுள்ளது.
vi) மைட்டோகாண்ட்ரியாவால் ஆன நடுப்பகுதி வால்பகுதி நகர்வதற்குத் தேவையான ஆற்றலை அளிக்கிறது.
vii) விந்துவின் நகர்வானது கருவுறுதலுக்கு அவசியமாகிறது.
3.
HCl என்பது வலிமை மிகுந்த அமிலம் என்பதால் முழுவதும் அயனியாக மாறும் கீழ்கண்டவாறு.
HCI(aq)➝H+(aq)+CI-(aq)
மேற்கண்ட செயலில் ஒரு மோல் HCl ஒரு மோல் H+ அயனிகளை தரும். ஆகையால், H+ அயனியின் செறிவானது ஹைட்ரோ குளோரிக் (HCl) அமில செறிவுக்கு சமம். (0.001 M அல்லது 1.0 x 10-3 மோல் லி-1.)
pH = -log10[H+] = -log1010-3
= -(-3 x log1010)
= -(-3 x 1) = 3
pH = 3
4.
ஓய்வு நிலையில் உள்ள கேட்குநரை நோக்கி,ஒலி மூலம் நகரும்போது, தோற்ற அதிர்வெண்ணுக்கானச் சமன்பாடு
\(n'=\left( \frac { V }{ V-{ V }_{ s } } \right) n\)
\(n'=\left( \frac { 330 }{ 330-30 } \right) \times 500\)
= 550 Hz
5.
6.
7.
8.
தொடக்க அழுத்தம் (P1) = P
இறுதி அழுத்தம் (P2) = 4 P
தொடக்க பருமன் (V1) = 20 cc = 20 செ.மீ3
இறுதி பருமன் (V2) = ?
பாயில் விதியின் படி,
PV = மாறிலி
P1V1 = P2V2
\({ v }_{ 2 }=\frac { { P }_{ 1 } }{ { P }_{ 2 } } \times { v }_{ 1 }\)
\(=\frac { P }{ 4P } \times { 20 }\) செ.மீ3
V2 = 5 செ.மீ3
9.
1. ராக்கெட் ஏவுதலில் நியூட்டனின் மூன்றாம் விதி மற்றும் நேர்க்கோட்டு உந்த அழிவின்மை விதி, இவை இரண்டும் பயன்படுகின்றன.
2. ராக்கெட்டுகளில் உந்து கலனில் (Propellant tank) எரிபொருள்கள் (திரவ அல்லது திட) நிரப்பப்படுகின்றன.
4. அவை எரியூட்டப்பட்டதும், வெப்ப வாயுக்கள் ராக்கெட்டின் வால் பகுதியில் இருந்து அதிக திசைவேகத்தில் வெளியேறுகின்றன.
5. அவை மிக அதிக உந்தத்தை உருவாக்குகின்றன.
6. இந்த உந்தத்தை சமன் செய்ய, அதற்கு சமமான எதிர் உந்துவிசை எரிகூடத்தில் (combustion chamber) உருவாகி, ராக்கெட் மிகுந்த வேகத்துடன் முன்னோக்கி பாய்கிறது.
7. ராக்கெட் உயர பயணிக்கும் போது அதில் உள்ள எரிபொருள் முழுவதும் எரியும் வரை அதன் நிறை படிப்படியாக குறைகிறது.
8. உந்த அழிவின்மை விதியின் படி நிறை குறைய குறைய, அதன் திசைவேகம் படிப்படியாக அதிகரிக்கிறது.
9. ஒரு குறிப்பிட்ட உயரத்தில் ராக்கெட்டானது புவியின் ஈர்ப்பு விசையினை தவிர்த்து விட்டு செல்லும் வகையில் அதன் திசைவேக மதிப்பு உச்சத்தை அடைகிறது.
10. இது விடுபடு வேகம் (escape speed) எனப்படுகிறது.
10.
பொருள் ஒன்றின் மீது செயல்படும் விசையானது அப்பொருளின் உந்த மாறுபாட்டு வீதத்திற்கு நேர்தகவில் அமையும்.
மேலும் இந்த உந்த மாறுபாடு விசையின் திசையிலேயே அமையும். இவ்விதி விசையின் எண்மதிப்பை அளவிட உதவுகிறது.
எனவே இதை ‘விசையின் விதி’ என்றும் அழைக்கலாம்.
விசைக்கான சமன்பாட்டை கீழ்க்கண்டவாறு தருவிக்கலாம்.
m நிறை மதிப்புடைய பொருள் ஒன்று u என்ற ஆரம்ப திசைவேகத்தில் நேர்க்கோட்டு இயக்கத்தில் உள்ளதென கொள்வோம்.
t என்ற கால இடைவெளியில் F என்ற சமன்செய்யப்படாத புற விசையின் தாக்கத்தால், அதன் வேகம் v என்று மாற்றமடைகிறது.
பொருளின் ஆரம்ப உந்தம் Pi = mu
இறுதி உந்தம் Pf = mv
உந்தமாறுபாடு \(\Delta\)p = Pf – Pi = mv – mu
நியூட்டனின் இரண்டாம் இயக்க விதிப்படி
விசை F \(\propto\) உந்த மாற்றம் / காலம்
F \(\propto\) (mv – mu) /t
F = Km (v - u)/t
K என்பது விகித மாறிலி ; K = 1 (அனைத்து அலகு முறைகளிலும்) எனவே
F = (mv – mu)/t …. (1)
முடுக்கம் = திசை வேகமாற்றம்/ காலம்;
a = (v – u)/t எனவே
F = m × a … (2)
விசை = நிறை \(\times\) முடுக்கம்
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil கூட்டாஞ்சோறு - இலக்கணம் - தொகைநிலை தொடர்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil பண்பாடு - கவிதை பேழை (செய்யுள்) -முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil உயிரின்ஓசை - இலக்கணம் - தொகாநிலை தொடர் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil இயற்கை, சுற்றுசூழல், அறிவியல் - கவிதை பேழை (செய்யுள்) -மேகம் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards