10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Social Science ECO - Industrial Clusters in Tamilnadu - New Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Social Science ECO - Government and Taxes - New Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Social Science ECO - Food Security and Nutrition - New Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Social Science ECO - Globalization and Trade - New Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Social Science ECO - Gross Domestic Product and its Growth : an Introduction - New Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Social Science CIV - India's International Relations - New Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 20/01/2020
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
புற்று நோய்க்கான தடைக்காப்பு சிகிச்சை முறையை கூறு.
2.
பின்வரும் வினைகளை முழுமையாக்குக.
(i) \(2Al+3{ H }_{ 2 }O\rightarrow ?+3{ H }_{ 2 }\uparrow \)
(ii) \(2Al+2NaOH+2{ H }_{ 2 }O\rightarrow ?+3{ H }_{ 2 }\uparrow \)
(iii) \(2Al+6{ H }_{ 2 }SO_{ 4 }\rightarrow { Al }_{ 2 }\left( { SO }_{ 4 } \right) _{ 3 }+6{ H }_{ 2 }O+?\)
3.
பின்வரும் தனிமங்களை அதன் அணு உருவளவைப் பொறுத்து ஏறுவரிசையில் எழுதுக.
Rb,Li,K,Na
4.
உட்கலப்பு-வரையறு.
5.
ரூதர்ஃபோர்டு-வரையறு.
6.
பீர்பால் சகானி பற்றி கூறு.
7.
எத்தனாலின் பயன்களை எழுதுக.
8.
ஹைட்ரோ கார்பன்கள் என்பது யாது?
9.
செயல்பாட்டின் அடிப்படையில் நரம்பு செல்லினை வகைப்படுத்து.
10.
ஆட்டோகேமி - வரையறு.
11.
எதிரொலியின் பயன்பாடுகளைக் கூறுக.
12.
மெட்டதிஸிஸ் வினை என்பது யாது?
13.
மும்மடிக்கரைசல் என்றால் என்ன?
14.
நாடித்துடிப்பு - வரையறு.
15.
காட்சி தொடர்பு சாதனங்களைப் பற்றி எழுதுக.
16.
மீயொலியை உணரும் ஏதேனும் மூன்று விலங்குகளைக் கூறுக?
17.
ஒரு கடத்தியின் அளவை தடிமனாக்கினால் அதன் மின் தடையின் மதிப்பு என்னவாகும்?
18.
பாயில் விதியைக் கூறுக.
19.
வானம் ஏன் நீலநிறமாகத் தோன்றுகிறது?
20.
பெரிய வாகனங்களில் திருகுமறைகளை (nuts) சுழற்றி இறுக்கம் செய்ய நீளமான கைப்பிடிகள் கொண்ட திருகுக்குறடு (spanner) பயன்படுத்தப்படுவது ஏன்?
21.
செயல்படும் திசை சார்ந்து விசையினை எவ்வாறு பிரிக்கலாம்?
22.
நிறப்பிரிகை வரையறு.
23.
கதிரியக்கத்தின் SI அலகினை எழுதுக.
24.
பசுங்கணிகத்தின் அமைப்பை விளக்கு.
25.
அணு மற்றும் மூலக்கூறுக்கிடையே உள்ள வேறுபாடுகளை பட்டியலிடுக.
1.
உயிரியல் தூதுகள் மாற்றிகளான இண்டர் பெரான்கள் தடைக்காப்பு மண்டலத்தைத் தூண்டுவதன் மூலம் கட்டிகளை அழிக்கின்றன.
2.
(i) \(2Al+3{ H }_{ 2 }O\rightarrow { Al }_{ 2 }{ O }_{ 3 }+3{ H }_{ 2\uparrow }\)
(ii) \(2Al+2NaOH+2{ H }_{ 2 }O\rightarrow 2Na{ AlO }_{ 2 }+3{ H }_{ 2 }\uparrow \)
(iii) \(2Al+6{ H }_{ 2 }SO_{ 4 }\rightarrow { Al }_{ 2 }\left( { SO }_{ 4 } \right) _{ 3 }+6{ H }_{ 2 }O+{ 3SO }_{ 2 }\)
3.
Li < Na < K < Rb
4.
நெருங்கிய தொடர்புடைய மற்றும் ஒரே இனத்தை சார்ந்த உயிரினங்களை 4 முதல் 6 தலைமுறைகளுக்கு கலப்பு செய்வதே உட்கலப்பு முறையாகும்.
5.
(i) ரூதர்ஃபோர்டு(Rd) : இது கதிரியக்கத்தின் மற்றுமோர் அலகாகும். கதிரியக்கப் பொருளானது ஒரு வினாடியில் வெளியிடபப்டும் கதிரியக்கச் சிதைவின் அளவு 106 எனில் அது ஒரு ரூதர்ஃபோர்டு என வரையறுக்கப்படுகிறது.
(ii) ஒரு ரூதர்ஃ போர்டு(Rd) = ஒரு வினாடி நேரத்தில் 106 சிதைவுகளைத் தரும் கதிரியக்கத் தனிமத்தின் அளவு.
6.
இவர் 'இந்திய தொல் தாவரவியலின் தந்தை' என அழைக்கப்படுகிறார். இவர் தனது ஆய்வைத் தொல் தாவரவியலின் இரண்டு வேறுபட்ட வகைகளில் மேற்கொண்டார்.
i) பேலியோஸோயிக் பெருந்தாவரங்களின் உள்ளமைப்பு மற்றும் புற அமைப்பியல் பற்றியது.
ii) இந்திய கோண்டுவானா தாவரங்கள் பற்றியும் ஆய்வு மேற்கொண்டார்.
7.
(i) மருத்துவமனைகளில் காயங்களைத் துடைத்து எடுக்கும் கிருமித்தடுப்பானாக பயன்படுகிறது.
(ii) வாகனங்களிலுள்ள குளிர்விப்பானில் தண்ணீர் உறைவதைத் தடுப்பதில் பயன்படுகிறது.
(iii) காயங்களில் கிருமி தொற்று ஏற்படாமல் பாதுகாக்கிறது.
8.
கார்பன் மற்றும் ஹைட்ரஜன் மட்டுமே இணைந்து உருவாகும் சேர்மங்கள் ஹைட்ரோ கார்பன்கள் ஆகும்.
9.
(i) உணர்ச்சி அல்லது உட்செல் நரம்பு செல்கள்.
(ii) இயக்க அல்லது வெளிச்செல் நரம்பு செல்கள்.
(iii) சங்கம நரம்பு செல்கள்
10.
ஒரு மலரிலுள்ள மகரந்தத்தாள் அதே மலரில் உள்ள சூலக முடியை அல்லது அதே தாவரத்தில் உள்ள வேறொரு மலரின் சூலக முடியைச் சென்றடைவது தன் மகரந்தச்சேர்க்கை எனப்படும்.
எ.கா. ஹைபிஸ்கஸ்
11.
(i) சில விலங்குகள் வெகு தொலைவில் இருக்கும்போது தங்களுக்குள் தொடர்பு கொள்ளவும், ஒலி சமிக்ஞைகளை அனுப்பி அதிலிருந்து வரும் எதிரொலி மூலம் எதிரிலுள்ள பொருட்களைக் கண்டறியவும் பயன்படுகிறது.
(ii) எதிரொலித் தத்துவம் மகப்பேறியியல் துறையில் அல்ட்ராசோனோகிராபி கருவி பயன்படுகிறது. இதைப் பயன்படுத்தி தாயின் கருப்பையில் உள்ள கருவின் வளர்ச்சியினை ஆராய்ந்தறியப் பயன்படுகிறது. இந்தக் கருவி மிகப் பாதுகாப்பானது. ஏனெனில் இதில் தீங்கு விளைவிக்கும் கதிர்கள் எதுவும் பயன்படுத்தப்படுவதில்லை.
(iii) ஊடகங்களில் ஒலியின் திசைவேகத்தைக் கண்டறியவும் எதிரொலி பயன்படுகிறது.
12.
இரண்டு சேர்மங்கள் வினைபுரியும் பொழுது அவற்றின் அயனிகள் பரிமாறிக் கொள்ளப்படுமானால் அவ்வினை இரட்டை இடப்பெயர்ச்சி அல்லது மெட்டதிஸிஸ் வினை எனப்படுகிறது.
13.
ஒரு கரைப்பானில் இரு கரைபொருட்கள் கரைக்கப்பட்டுள்ள கரைசல் மூன்று கூறுகளைக் கொண்டிருந்தால் அது மும்மடிக் கரைசல் என அழைக்கப்படும்.
14.
(i) இதயத் துடிப்பின் போது இரத்தமானது தமனிகளுக்குள் உந்தித் தள்ளப்படுகிறது.
(ii) இரத்தம் ஒவ்வொரு முறையும் தமனிகளுக்குள் உந்தப்படும் போது தமனிகள் விரிவடைவதை நாடித்துடிப்பு என்கிறோம்.
(iii) இயல்பான நாடித்துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 70-90 முறைகள் ஆகும்.
15.
படங்கள் வழியாக குறிப்பிட்ட கருத்தினை நமக்கு எளிதில் புரிய வைப்பது காட்சித் தொடர்பு சாதனங்கள் ஆகும். உதாரணமாக நிழற்படங்கள், ஒலி, ஒளிப்படங்கள், வரைபடங்கள், அசைவூட்டப்படங்கள் போன்ற அனைத்தையும் கணினியின் உதவியுடன் எளிதாகச் செய்ய முடியும். காட்சித் தொடர்பு சாதனத்துக்குத் திரைப்படம் ஒரு சிறந்த சான்றாகும்.
16.
நாய், வௌவால் மற்றும் டால்பின் போன்றவற்றால் மீயொலியை உணர முடியும்.
17.
ஒரு கடத்தியின் மின்தடையானது (R) அதன் நீளத்திற்கு (L) நேர்தகவிலும் குறுக்கு வெட்டு பரப்பிற்கு (A) எதிர்தகவில் அமையும்.
\(R \propto \frac{L}{A}\)
ஆகவே கடத்தியின் அளவை தடிமனாக்கினால் அதன் மின்தடையின் மதிப்பு குறையும்.
18.
மாறா வெப்பநிலையில், ஒரு குறிப்பிட்ட நிறையுடைய வாயுவின் அழுத்தம் அவ்வாயுவின் பருமனுக்கு எதிர்த்தகவில் அமையும்.
P α \(\frac{1}{V}\)
19.
1. சூரிய ஒளியானது வளிமண்டலத்தின் வழியாகச் செல்லும் போது ராலே சிதறல் விதிப்படி குறைந்த அலைநீளம் உடைய நீல நிறமானது அதிக அலைநீளம் கொண்ட சிவப்பு நிறத்தைவிட அதிகமாக சிதறல் அடைகிறது.
2. இதனால் வானம் நீல நிறமாகத் தோன்றுகிறது.
20.
திருகுக்குறடு நீளமான கைப்பிடியை கொண்டதாக இருந்தால் சிறிதளவே திருப்புத்திறன் விசையை செலுத்தி பயன்பாட்டை எளிதாக்கலாம்.
விசையின் திருப்புத்திறன் \(\tau\) = F x d
21.
விசைகளை அவை செயல்படும் திசை சார்ந்து
1. ஒத்த இணைவிசைகள்
2. மாறுபட்ட இணைவிசைகள் என்று வகைப்படுத்தலாம்.
22.
வெள்ளொளிக் கற்றையானது, கண்ணாடி, நீர் போன்ற ஒளிபுகும் ஊடகத்தில் ஒளிவிலகல் அடையும் போது அதில் உள்ள நிறங்கள் தனித்தனியாக பிரிகை அடைகின்றன.
இந்நிகழ்வு நிறப்பிரிகை எனப்படும்.
23.
பெக்கரல்
24.
பச்சைய நிறமிகளை (Chlorophyll) கொண்டுள்ள கணிகம் பசுங்கணிகம் 2 - 10 மைக்ரோமீட்டர் விட்டமும் 1 - 2 மைக்ரோமீட்டர் தடிமனும் கொண்ட ஒரு நீள் உருண்டை வடிவ செல் நுண்ணுறுப்பாகும்.
(i) உறை: பசுங்கணிகம் இடைவெளியுடன் கூடிய உள் மற்றும் வெளிச்சவ்வுகளால் சூழப்பட்டுள்ளது.
(ii) ஸ்ட்ரோமா: சவ்வின் உட்புறம் மேட்ரிக்ஸ் என அழைக்கப்படும் ஸ்ட்ரோமா பகுதி உள்ளது. இதில் புரதச் சேர்க்கைக்கு தேவையான DNA, 70s ரைபோசோம் மற்றும் பிற மூலக்கூறுகள் உள்ளன.
(iii) தைலக்காய்டு: ஸ்ட்ரோமாவில் இடைவெளியுடன் கூடிய பை போன்ற தட்டு வடிவ அமைப்பு காணப்படுகிறது. இதற்கு தைலக்காய்டு என்று பெயர். பல தைலக்காய்டுகள் ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்ட நாணயம் போன்று உள்ளது. இது கிரானம் என்று அழைக்கப்படுகிறது.
(iv) கிரனா: பல கிரானாக்கள் ஒன்றோடொன்று கிரானா லேமெல்லா அல்லது ஸ்ட்ரோமா லேமெல்லாவால் இணைக்கப்பட்டுள்ளது. தைலக்காய்டில் ஒளிச்சேர்க்கைக்கான நிறமிகள் உள்ளன.
25.
| அணு | மூலக்கூறு |
|---|---|
| ஒரு தனிமத்தின் மிகச்சிறிய பகுதி அணு ஆகும். | தனிமம் அல்லது சேர்மத்தின் மிகச்சிறிய பகுதி மூலக்கூறு ஆகும். |
| மந்தவாயுக்களைத் தவிர ஏனைய அணுக்கள் தனித்த நிலையில் இருப்பதில்லை. | மூலக்கூறுகள் தனித்த நிலையில் இருக்கும். |
| ஒரு மந்த வாயுக்களைத் தவிர ஏனைய அணுக்கள் வினைத்திறன் மிக்கவை. | மூலக்கூறுகள் வினைத்திறன் குறைந்தவை |
| அணுக்களில் வேதிப்பிணைப்புகள் இல்லை எ.கா : He ,Al |
மூலக்கூறுகளில் வேதிப்பிணைப்புகள் உள்ளன. எ.கா : HNO3 ,CaCo3 |
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Social Science CIV - India's Foreign Policy - New Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Social Science CIV - State Government - New Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Social Science CIV - Central Government - New Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Social Science CIV - Indian Constitution - New Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards