10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 15/11/2019
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
நுண்நோக்கிகள் என்றால் என்ன? அவற்றின் வகைகள் யாவை?
2.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய இரண்டு உணவுப்பொருள்களுக்கு உதாரணம் தருக.
3.
மாலாவின் கன்னத்தில் மிகப்பெரிய வடு ஒன்று காணப்பட்டது. அது தன்னுடைய கல்லூரி நாட்களில் அவள் ஒரு தீவிபத்தினை சந்திக்க நேர்ந்ததால் ஏற்பட்டது. மேலும் தன் கன்னத்திலும் வடுவினை நினைத்து வருத்தப்பட்டாள். மேலும் அவள் தன்னுடைய மருத்துவரிடம் ஆலோசனை கேட்டாள். மருத்துவரும், ''தாங்கள் இந்த வடுவினை நினைத்து வருத்தப்பட வேண்டாம். இது பெறப்பட்ட பண்பாகும்.'' எனக் கூறி அனுப்பி விட்டார்.
(அ) பெறப்பட்ட பண்பு என்றால் என்ன?
(ஆ) மரபுப் பண்பு என்றால் என்ன?
4.
கீழ்க்கண்ட மூலக்கூறுகளின் இருந்து வேற்றணு மூலக்கூறுகளை கண்டறிந்து அவற்றை அணுக்கட்டு எண்களின்படி வகைப்படுத்துக.
C6H12O6,P4,NH3,HCl,N2,CO,O3,NH4Cl,CaCO3,O2,SO2
5.
EEG என்றால் என்ன?
6.
பின்வருவனவற்றுள் நிறைவுற்ற மற்றும் நிறைவுறா இரட்டை, முப்பிணைப்பு கொண்ட சேர்மங்களை குறிப்பிடு.
(i) C5H12
(ii) C2H2
(iii) C3H8
(iv) C4H8
7.
வரையறு ஓரலகு விசை.
8.
மும்மடிக்கரைசல் என்றால் என்ன?
9.
மாதவிடாயின் போது மாதவிடாய் சுகாதாரம் எவ்வாறு பராமரிக்கப்படுகிறது?
10.
ஸ்பிரைட்டு (SPRITE) என்றால் என்ன?
11.
வெப்பப்படுத்துதலின் விளைவாக திடப்பொருளின் பருமன் அதிகரித்தால்
உண்மை வெப்ப விரிவு
பரப்பு வெப்ப விரிவு
பரும வெப்ப விரிவு
உண்மை வெப்ப விரிவு
12.
காடுகள் பாதுகாப்புச் சட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு _______ ஆகும்.
1952
1958
1978
1980
13.
குழந்தை வளர்ச்சி ஹார்மோன் அதிகமாக சுரத்தல் காரணமாக ______________ வளர்ச்சி அடைவார்கள்.
குள்ளத்தன்மை
அக்ரோமெகலி
அசுரத்தன்மை
மிக்ஸிடிமா
14.
நியூக்ளியான்கள் என்பவை
அணுக்கள்
எலக்ட்ரான் மற்றும் புரோட்டான்கள்
எலக்ட்ரான் மற்றும் நியூட்ரான்கள்
புரோட்டான் மற்றும் நியூட்ரான்கள்
15.
மனித உடலின் மிக நீளமான செல் _________________ ஆகும்.
நியூரான்
நியூரோகிளியா
நரம்பு நாரிழைகள்
சைட்டான்
16.
பின்வருவனவற்றுள் கீடோனை கண்டுபிடி.
CH3COCH3
CH3CHO
CH3COOH
CH3COOCH3
17.
ஒலி அலைகள் தங்கக் கம்பியை கடந்து சுற்றியுள்ள காற்றுக்கு வருகிறது. ஆரம்ப அலைநீளம் (\(\lambda \)) ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்பு யாது?
\(\lambda =\lambda \)
\(\lambda >\lambda \)
\(\lambda <\lambda \)
ஏதுமில்லை
18.
இருமடிக் கரைசலில் உள்ள பகுதிப் பொருட்கள்
ஒன்று
இரண்டு
மூன்று
நான்கு
19.
ஊறுகாயில் உப்பு சேர்க்கப்படுவது _________ காரணமே.
பரவல்
உயிரிமச் சுருக்கம்
உள்ளீர்த்தல்
கடத்தப்படுத்தல்
20.
ஸ்கிராச்சு திருத்தியில் உள்ள பகுதிகள் எத்தனை?
4
2
3
1
21.
X(S) + 2HCl(aq) → XCl2(aq) + H2(g) என்ற ஒற்றை இடப்பெயர்ச்சி வினையில் X என்பது பின்வருவனவற்றுள் எதைக் குறிக்கிறது.
(i) Zn
(ii) Ag
(iii) Cu
(iv) Mg
(i) மற்றும் (ii)
(ii) மற்றும் (iii)
(iii) மற்றும் (iv)
(i) மற்றும் (iv)
22.
புவியில் M நிறை கொண்ட பொருள் ஒன்று புவியின் ஆரத்தில் பாதி அளவு ஆரம் கொண்ட கோள் ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு அதன் நிறை மதிப்பு.
4M
2M
M/4
M
23.
சமன்பாட்டினை சமன் செய்
\(_{ 6 }{ C }^{ 14 }\rightarrow _{ -1 }{ e }^{ 0 }+?\)
24.
"நம்முடைய பல் மற்றும் யானையின் தந்தம் இவை இரண்டும் அமைப்பு ஒத்த உறுப்புகளாகும்." இக்கூற்றினை நியாயப்படுத்து. மேலும் செயல் ஒத்த உறுப்புகள் எவ்வாறு காணப்படுகிறது?
25.
அ] படத்தினை பார்த்து நீ என்ன தெரிந்து கொண்டாய்? கூறு.
ஆ] அதன் வகைகளைக் கூறு.
இ] உதாரணம் தருக.
26.
விணு 50 கி சர்க்கரையை 250 மி.லி சுடுநீரில் கரைக்கிறார். சரத் 50 கி அதேவகை சர்க்கரையை 250 மி.லி குளிர்ந்த நீரில் கரைக்கிறார். யார் எளிதில் சர்க்கரையை கரைப்பார்கள்? ஏன்?
27.
கால்சியம் கார்பனேட்டை வெப்பப் படுத்தும் போது கீழ்கண்டவாறு சிதைவடைகிறது.
CaCO3 ➝ CaO + CO2
அ. இவ்வினையில் எத்தனை மோல்கள் கால்சியம் கார்பனேட் ஈடுபடுகிறது.
ஆ. கால்சியம் கார்பனேட்டின் கிராம் மூலக்கூறு நிறையைக் கணக்கிடு.
இ. இவ்வினையில் எத்தனை மோல்கள் கார்பன் டை ஆக்சைடு வெளிவருகிறது.
28.
அ) HF மூலக்கூறில் உள்ள H மற்றும் F க்கு இடையில் உள்ள பிணைப்பு எது?
ஆ) இப்பிணைப்பை அறிய உதவும் ஆவர்த்தன பண்பு எது?
இ) இப்பண்பு தொடரிலும், தொகுதியிலும் எவ்வாறு வேறுபடுகிறது?
29.
இலையிடைத்திசு (மீசோபில்) பற்றி குறிப்பு எழுதுக.
30.
முகுளத்தின் கீழ்ப்புறத்தில் தொடங்கும் உருளையான அமைப்பு “A”, கீழ்ப்புறமாக நீண்டுள்ளது. இது “B” என்னும் எலும்பு சட்டகத்துக்குள், “C” என்ற உறைகளால் போர்த்தப்பட்டுள்ளது. “A”யிலிருந்து, “D” எண்ணிக்கையிலான இணை நரம்புகள் கிளைத்து வருகின்றன.
i. “A” என்பது எந்த உறுப்பைக் குறிக்கிறது?
ii. அ) “B” எனப்படும் எலும்பு சட்டகம் மற்றும்
ஆ) “C” எனப்படும் உறைகள் ஆகியவற்றின் பெயர்களைக் கூறுக.
iii. “D” என்பது எத்தனை இணை நரம்புகள்?
31.
கிட்டப்பார்வை [அல்லது] மையோபியா குறைபாடு எவ்வாறு சரி செய்யப்படுகிறது? படத்துடன் விவரி.
32.
நவீன ஆவர்த்தன அட்டவணையில் உள்ள தொகுதிகளின் சிறப்பம்சங்களை எழுது.
33.
மூளையின் பாகங்களையும் அவற்றின் பணிகளையும் அட்டவணைப்படுத்து.
34.
ஒலி எதிரொலிப்பின் பயன்பாடுகளை விவரி.
35.
சிஸ்டோல் மற்றும் டையஸ்டோல் வேறுபடுத்துக. இதயத் துடிப்பின் பரவுதலை விளக்குக.
36.
காப்பர் தண்டினை வெப்பப்படுத்தும் போது அதன் குறுக்கு வெட்டுப் பரப்பு 10 மீ2 லிருந்து 11 மீ2 ஆக உயருகிறது. காப்பர் தண்டின் தொடக்க வெப்பநிலை 90 K எனில் அதனுடைய இறுதி வெப்பநிலையைக் கணக்கிடுக. (காப்பரின் பரப்பு வெப்ப விரிவு குணகத்தின் மதிப்பு 0.0021 K-1)
37.
அன்றாட வாழ்வில் pH எவ்வாறு முக்கிய பங்கு வகிக்கிறது.
38.
கதிரியக்கத்தின் SI அலகினை எழுதுக.
1.
(i) நுண்ணோக்கிகள் என்பவை மிக நுண்ணிய பொருள்களைக் காண உதவும் ஒளியியல் கருவியாகும்.
(ii) இவை எளிய நுண்ணோக்கிகள் மற்றும் கூட்டு நுண்ணோக்கிகள் என்று வகைப்படுத்தப்படுகின்றன.
2.
முழு தானியங்கள் சிறு தானியங்கள் (சோளம், கம்பு, கேழ்வரகு) கீரை வகைகள் கோதுமை போன்றவை.
3.
அ) பெறப்பட்ட பண்பு
பண்புகள் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படாத பண்புகள் பெறப்பட்ட பண்புகள் எனப்படும்.
ஆ) மரபுப் பண்பு
பண்புகள் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு கடத்தப்படக்கூடிய பண்புகள் மரபுப் பண்பு எனப்படும்.
4.
| வேற்றணுக்கள் | ஈரணு | மூவணு | பலவணு |
|---|---|---|---|
| HCl | SO2 | NH4Cl | |
| CO | CaCO3 | ||
| C6H12O | |||
| NH3 |
5.
(i) EEG என்பது எலக்ட்ரோ என்செஃப்லோகிராம். இது மூளையில் உண்டாகக் கூடிய மின் அதிர்வுகளை பதிவு செய்யும் கருவி.
(ii) இது மூளையின் செயல்பாட்டில் ஏற்படும் சாதாரண மூளை அலைகளை கண்டுணரவும், மூளையில் ஏற்படும் உடனடி மாற்றங்கள், மூளைக்கட்டி, தலையில் ஏற்படும் காயங்கள், வலிப்பு போன்ற நோய்களை கண்டுணரவும் பயன்படுகிறது.
6.
(i) C5H12 - பென்டேன் நிறைவுற்றது
(ii) C2H2 - ஈத்தைன் நிறைவுறாத முப்பிணைப்பு உடையது
(iii) C3H8 - புரோப்பேன் நிறைவுற்றது
(iv) C4H8 - பியூட்டீன் நிறைவுறாத இரட்டை பிணைப்பு உடையது
7.
1 கிலோகிராம் நிறையுள்ள பொருளொன்றை 1 மீவி-2 அளவிற்கு முடுக்குவிக்க தேவைப்படும் விசையின் அளவு ஒரு நியூட்டன் (1N) ஆகும். இது ஓரலகு விசை என்றழைக்கப்படுகிறது.
8.
ஒரு கரைப்பானில் இரு கரைபொருட்கள் கரைக்கப்பட்டுள்ள கரைசல் மூன்று கூறுகளைக் கொண்டிருந்தால் அது மும்மடிக் கரைசல் என அழைக்கப்படும்.
9.
1. நாப்கின்களை முறையாக. குறிப்பிட்ட இடைவெளிகளில் மாற்றுவதன் மூலமாக கலவிக் கால்வாயில் நுண்ணுயிர்கள் மூலமாக ஏற்படும் தொற்றினையும், பிறப்புறுப்புகளில் உண்டாகும் வியர்வையினையும் தடுக்கலாம்.
2. பிறப்புறுப்புகளை வெந்நீரைக் கொண்டு தூய்மைப்படுத்துவதன் மூலம் மாதவிடாய் நாள்களில் ஏற்படும் தசைப்பிடிப்புகளிலிருந்து தவிர்த்துக் கொள்ளலாம்.
3. இறுக்கமான ஆடைகளைத் தவிர்த்து, தளர்வான ஆடைகளை அணிவதால், பிறப்புறுப்புகளில் காற்றோட்டத்தை பெறுவதன் மூலம் வியர்வை உருவாவதை தடுக்கப்படுகிறது.
10.
ஸ்கிராச்சு சாளரத்தில் பின்னணிக்கு மேல் பகுதியில் உள்ள கணினி மாந்தர்களை ஸ்பிரைட்கள் என்பர். ஸ்கிராச்சு சாளரத்தை திறக்கும் போது ஒரு பூனை ஸ்பிரைட்டாக காட்சியளிக்கும். ஸ்பிரைட்டை தேவைக்கேற்ப மாற்றும் வசதி இந்த மென்பொருளில் உள்ளது.
11.
(c)
பரும வெப்ப விரிவு
12.
(d)
1980
13.
(c)
அசுரத்தன்மை
14.
(d)
புரோட்டான் மற்றும் நியூட்ரான்கள்
15.
(a)
நியூரான்
16.
(a)
CH3COCH3
17.
(b)
\(\lambda >\lambda \)
18.
(b)
இரண்டு
19.
(b)
உயிரிமச் சுருக்கம்
20.
(c)
3
21.
(d)
(i) மற்றும் (iv)
22.
(d)
M
23.
\(_{ 6 }{ C }^{ 14 }\rightarrow _{ -1 }{ e }^{ 0 }+_{ 7 }{ N }^{ 14 }\)
24.
i) நம்முடைய பல் மற்றும் யானையின் தந்தம் இவை இரண்டும் அமைப்பு ஒத்த உறுப்புகள் ஆகும். எனில் இவை இரண்டும் ஒரே மாதிரியான கரு வளர்ச்சி முறை கொண்ட பொதுவான முன்னோர்களிடம் இருந்து மரபு வழியாக உருவான உறுப்புகளாகும். மேலும் பார்க்க வெவ்வேறாகவும் வெவ்வேறு பணிகளை செய்வதற்கேற்ப தகவமைக்கப்பட்டுள்ளன. பொருட்களை கடிக்க நாம் பற்களை பயன்படுத்துகிறோம்.
ii) செயல் ஒத்த உறுப்புகள் பார்க்க ஒரே மாதிரியாகவும், ஒரே மாதிரியான பணிகளையும் செய்கின்றன. ஆனால் அது வெவ்வேறு விதமான தோற்றம் மற்றும் கரு வளர்ச்சி முறைகளை கொண்டவையாக உள்ளன.
25.
அ) இது ஒரு வாஸ்குலார் திசுத் தொகுப்பு.
ஆ) இது சூழ்ந்தமைந்த வாஸ்குலார் கற்றையாகும். இவை இரு வகைப்படும். அவை:
1. சைலம் சூழ் வாஸ்குலார் கற்றை
2. புளோயம் சூழ் வாஸ்குலார் கற்றை
நாம் படத்தில் பார்ப்பது புளோயம் சூழ் வாஸ்குலார் கற்றை. ஏனெனில், புளோயம் கற்றை முழுவதுமாக சூழ்ந்து காணப்படுகிறது.
இ) எ.கா. பாலிபோடியம்
26.
விணு எளிதில் சர்க்கரையை கரைப்பார்.
குளிர்ந்த நீரில் கரைவதை விட சர்க்கரை சுடுநீரில் அதிக அளவில் கரைகிறது.
ஏனெனில் வெப்பநிலை அதிகரிக்கும் போது கரைபொருளின் கரைதிறனும் அதிகரிக்கிறது.
27.
அ) இவ்வினையில் 1 மோல் கால்சியம் கார்பனேட் ஈடுபடுகிறது.
ஆ) கால்சியம் கார்பனேட்டின் கிராம் மூலக்கூறு நிறை (CaCO3) = (Ca x 1) + (C × 1) + (O x 3)
= (40 × 1) + (12 × 1) + (16 × 3)
= 40 + 12 + 48
=100 கி/மோல்
இ) 1 மோல் கார்பன் டை ஆக்சைடு இவ்வினையில் வெளிவருகிறது.
28.
அ) அயனிப் பிணைப்பு
ஆ) எலக்ட்ரான் கவர்தன்மை
இ) தொடரில் இடப்பக்கத்திலிருந்து வலப்பக்கமாக செல்லும் போது எலக்ட்ரான் கவர்தன்மை அதிகரிக்கும்.
தொகுதியில் மேலிருந்து கீழாக இறங்குகையில் எலக்ட்ரான் கவர்தன்மை குறைகிறது.
29.
1. மேல்புறத் தோலுக்கும், கீழ்புறத்தோலுக்கும் இடையே காணப்படும் தளத்திசு இலையிடைத்திசு அல்லது மீசோபில் எனப்படும்.
2. இருவிதையிலைத் தாவர இலையிடைத்திசுக்களில் பாலிசேட் பாரன்கைமா மற்றும் ஸ்பாஞ்சி பாரன்கைமா என இரு வகை செல்கள் உள்ளன.
3. ஒருவிதையிலைத் தாவர இலையிடைத்திசுவில் பாலிசேட் மற்றும் ஸ்பாஞ்சி பாரன்கைமா என வேறுபாடின்றி காணப்படுகிறது.
4. செல் இடைவெளிகளுடன், பசுங்கணிகங்களுடன் கூடிய ஒழுங்கற்ற செல்கள் காணப்படுகின்றன.
5. பசுங்கணிகம் ஒளிச்சேர்க்கைக்கு உதவுகின்றன.
6. ஒழுங்கற்ற செல்கள் வாயுப் பரிமாற்றத்திற்கும் உதவுகின்றன.
30.
(i) A என்பது தண்டுவடமாகும்.
(ii) (அ) 'B' என்பது முள்ளெலும்புத் தொடரினை குறிக்கிறது
(ஆ) 'C' என்பது மெனிஞ்சஸ்
(iii) 'D' 31 இணை நரம்புகள்
31.
கிட்டப்பார்வை(மையோபியா):
(i) மையோபியா என்று அழைக்கப்படும் 'கிட்டப்பார்வை' என்னும் குறைபாடானது விழிக்கோளம் சிறிது நீண்டு விடுவதால் ஏற்படுகிறது.
(ii) இக்குறைபாடு உள்ள மனிதர்களால் அருகில் உள்ள பொருள்களைத் தெளிவாகக் காண முடியாது.
(iii) விழி லென்சின் குவிய தூரம் குறைவதாலும் விழி லென்சிற்கும் விழித் திரைக்கும் இடையே உள்ள தொலைவு அதிகரிப்பதால் இக்குறைபாடு ஏற்படுகிறது.
(iv) இதனால் கண்ணின் சேய்மைப் புள்ளியானது, ஈறிலாத் தொலைவில் அமையலாம், கண்ணின் அண்மை புள்ளியை நோக்கி நகர்ந்து விடுகிறது. இதனால் தொலைவில் உள்ள பொருள்களின் பிம்பங்கள் விழித்திரைக்கு முன்பாக உருவாக்கப்படுகின்றன.
32.
(i) ஆவர்த்தன அட்டவணையில் மேலிருந்து கீழாக வரிசைப்படுத்தப்பட்ட தனிமங்கள், தொகுதிகள் எனப்படும்.
(ii) தனிமங்களின் பொதுவான சிறப்பியல்புகளை வைத்து வெவ்வேறு குடும்பங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
(iii) தொகுதி 3-ன் அங்கமாகத் திகழும், லாந்தனைடு மற்றும் ஆக்டிணைடுகள் உள் இடைநிலைத் தனிமங்கள் என அழைக்கப்படும்.
(iv) பூஜ்ஜியத் தொகுதியைத் தவிர, மற்ற தொகுதிகளில் உள்ள தனிமங்களின் வெளிக்கூட்டில்,ஒத்த எண்ணிக்கை உள்ள எலக்ட்ரான்களும், ஒத்த எண்ணிக்கை உள்ள எலக்ட்ரான்களும், ஒத்த இணைதிறனும் பெற்றிருக்கும். எடுத்துக்காட்டாக,தொகுதி 1 ல் உள்ள தனிமங்கள் வெளி ஆற்றல் மட்டத்தில் ஒரு எலக்ட்ரான் மட்டும் 1S1 பெற்றிருப்பதால் கார உலோகத் தனிமங்களின் இணைதிறன் 1 ஆகும்.
(v) ஒத்தத் தொகுதியில் உள்ள தனிமங்கள் ஒத்த எலக்ட்ரான் அமைப்புகளைப் பெற்று, ஒத்த வேதிப்பண்புகளோடு திகழும்.
(vi) இயல் பண்புகளான, உருகுநிலை கொதிநிலை மற்றும் அடர்த்தி ஆகியன சீராக மாறுபடும்.
(vii) பூஜ்ஜியத் தொகுதித் தனிமங்கள், நிலையான எலக்ட்ரான் அமைப்பை வெளிக்கூட்டில் பெற்றிருப்பதால்வினையுறா தன்மையைப் பெற்றிருக்கும்.
33.
மூளையின் அமைப்பு மற்றும் பணிகள்:
| அமைப்பு | பணிகள் |
|---|---|
| பெரு மூளைப் புறணி (செரிப்ரல் கார்டெக்ஸ்) | உணர்வுகளைப் பெறுதல், தன்னிச்சையான செயல்களைக் கட்டுப்படுத்துதல், சிந்தித்தல், நுண்ணறிவு, விழிப்புணர்வு நிலை, நினைவுத்திறன், முடிவெடுக்கும் திறன், கற்பனைத் திறன், காரண காரியம் ஆராய்தல். |
| தலாமஸ் | கடத்தும் மையமாகச் செயல்படுதல் |
| ஹைப்போதலாமஸ் | உடல் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துதல், தாகம், பசி, சிறுநீர் வெளியேற்றுதல், நரம்பு மண்டலத்திற்கும், நாளமில்லாச் சுரப்பி மண்டலத்திற்கும் இடையே முக்கியமான இணைப்பாகச் செயல்படுதல். |
| சிறுமூளை | உடல் சமநிலை, தசைகளின் தன்னிச்சையான செயல்களைக் கட்டுப்படுத்துதல். |
| பான்ஸ் மற்றும் முகுளம் | உறக்க - விழிப்பு சுழற்சி, இதயத்துடிப்பு, சுவாச மற்றும் செரித்தலைக் கட்டுப்படுத்தும் மையமாகச் செயல்படுதல் |
34.
(i) சில விலங்குகள் வெகு தொலைவில் இருக்கும்போது தங்களுக்குள் தொடர்பு கொள்ளவும், ஒலி சமிக்ஞைகளை அனுப்பி அதிலிருந்து வரும் எதிரொலி மூலம் எதிரிலுள்ள பொருட்களைக் கண்டறியவும் பயன்படுகிறது.
(ii) எதிரொலித் தத்துவம் மகப்பேறியியல் துறையில் அல்ட்ரா சோனா கிராபி கருவியல் பயன்படுகிறது. இதைப் பயன்படுத்தி தாயின் கருப்பையில் உள்ள கருவின் வளர்ச்சியினை ஆராய்ந்தறியப் பயன்படுகிறது. இந்தக் கருவி மிகப் பாதுகாப்பானது. ஏனெனில் இதில் தீங்கு விளைவிக்கும் கதிர்கள் எதுவும் பயன்படுத்தப்படுவதில்லை.
(iii) ஊடகங்களில் ஒலியின் திசைவேகத்தைக் கண்டறியவும் எதிரொலி பயன்படுகிறது.
(iv) இது பொதுவாக வளைந்த (குழிந்த) பரப்புகள் ஆகும்.
(v) ஒலிப் பெருக்கியானது ஒலி எதிரொலிப்பு அட்டையின் குவியப்பகுதியில் இருக்குமாறு பொருத்தப்படுகிறது.
(vi) ஒலிபெருக்கியிலிருந்து வரும் ஒலியானது, ஒலி எதிரொலிப்பு அட்டையால் எதிரொலிக்கப்பட்டு அதிகத் தரத்துடன் பார்வையாளர்களைச் சென்றடைகிறது.
35.
| சிஸ்டோல் | டையஸ்டோல் |
| வெண்ட்ரிகுலார் சிஸ்டோல் நிகழ்வின் போது இடது வெண்ட்ரிக்கிள் சுருங்குவதால் இரத்தம் பெருந்தமனிக்குள் வேகமாக செலுத்தப்படுகிறது. இந்நிகழ்வின்போது ஏற்படும் மிகை அழுத்தம் சிஸ்டோலிக் அழுத்தம் எனப்படும். |
இடது வெண்ட்ரிக்கிள் விரிவடைவதன் காரணமாக அழுத்தம் குறைகிறது. இக்குறை அழுத்தமே டையஸ்டோலிக் அழுத்தம் எனப்படும். |
இதய துடிப்பின் பரவுதல்:
1. சைனோ ஏட்ரியல் கணுவிலிருந்து தூண்டல்கள் அலைகளாகப் பரவி வலது மற்றும் இடது ஏட்ரிய அறைகளை சுருங்கச் செய்வதன் மூலம் இரத்தம் ஆரிக்குலோ வெண்ட்ரிக்குலார் திறப்பின் வழியாக வெண்ட்ரிக்கிள்களுக்கு உந்தித் தள்ளப்படுகிறது.
2. SA கணுவிலிருந்து மின்தூண்டல் அலைகள் ஏட்ரியோ வெண்ட்ரிக்குலார் (AV) கணுவிற்கு பரவுகிறது.
3. ஏட்ரியோ வெண்ட்ரிக்குலார் கற்றை மற்றும் புர்கின்ஜி கற்றைகள் வழி வெண்ட்ரிக்கிள்களுக்கு மின்தூண்டல் அலைகள் பரவி அவற்றை சுருங்கச் செய்கிறது.
36.
பரப்பில் ஏற்படும் மாற்றம் ΔA = 11 - 10 = 1மீ2
உண்மையான பரப்பு Ao = 10 மீ2
தொடக்க வெப்பநிலை T1= 90 K
வெப்ப விரிவு குணகம் αA = 0.0021 K-1
இறுதி வெப்பநிலை T2 = ?
\(\frac{\Delta \mathrm{A}}{\mathbf{A_o}_{}} =\alpha_{A} \Delta \mathrm{T} \)
\(\frac{\mathrm{lm}^{2}}{10 \mathrm{~m}^{2}} =0.0021\left[\mathrm{~T}_{2}-90\right] \)
\(0.1 =0.0021\left[\mathrm{~T}_{2}-90\right] \)
\(\frac{0.1}{0.0021} =\mathrm{T}_{2}-90 \)
\(\mathrm{~T}_{2} =\frac{0.1}{0.0021}+90 \)
\(\mathrm{~T}_{2} =137.61 \mathrm{~K} \)
காப்பர் தண்டின் இறுதி வெப்பநிலை = 137.61 K
37.
i) விலங்குகள் pH சார்ந்துள்ள உணர்வு
1. நமது உடல் 7.0 முதல் 7.8 வரை உள்ள pH எல்லையை சார்ந்த வேலை செய்கிறது.
2. நம் உடலில் உள்ள திரவங்கள் வெவ்வேறு pH மதிப்புகளை கொண்டவை.
3. எடுத்துக்காட்டாக: மனித இரத்தத்தின் pH மதிப்பு 7.35 லிருந்து 7.45 ஆகும்.
4. இந்த மதிப்பிலிருந்து குறைந்தாலோ (அ) அதிகரித்தாலோ, அது நோயை உண்டாக்கும்.
ii) மனித செரிமான மண்டலத்தின் pH மதிப்பு
1. நமது இரைப்பை ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை சுரக்கிறது.
2. இது இரைப்பையை பாதிக்காமல் உணவை செரிக்க உதவுகிறது.
3. சரியான செரிமானம் இல்லாதபோது இரைப்பையானது கூடுதலான அமிலத்தைச் சுரந்து வலியையும், எரிச்சலையும் ஏற்படுத்துகிறது.
4. இத்திரவத்தின் தோராயமான pH மதிப்பு 2.0 ஆகும்
iii) மண்ணின் pH மதிப்பு
சிட்ரிக் அமிலம் கொண்ட பழங்கள் சற்று காரத்தன்மை உள்ள மண்ணிலும், நெல் அமிலத்தன்மை கொண்ட மண்ணிலும், கரும்பு நடுநிலைத்தன்மை கொண்ட மண்ணிலும் வளரும்.
iv) pH மாற்றம் - பற்சிதைவுக்கு காரணம்:
மனித உமிழ்நீரின் pH மதிப்பு 6.5 - 7.5 வரை உள்ளது.
நமது பற்களின் மேற்பரப்பு படலமானது கால்சியம் பாஸ்பேட்டால் ஆனது. உமிழ்நீரின் pH 5.5 க்கும் கீழே குறையும்பொழுது பற்களின் மேற்பரப்பு படலம் (எனாமல்) பாதிக்கப்படுகிறது. இது பற்சிதைவு எனப்படுகிறது.
பொதுவாக நாம் பயன்படுத்தும் பற்பசைகள் காரத்தன்மை கொண்டவை.
இவை கூடுதல் அமிலத்தன்மையை நடுநிலையாக்கம் செய்து பற்சிதைவைத் தடுக்கின்றன.
(v) மழை நீரின் pH மதிப்பு:
(i) மழைநீரின் pH மதிப்பு ஏறக்குறைய 7 ஆகும்.
(ii) இது நடுநிலைத்தன்மை கொண்டது. ஆனால் சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு போன்ற மாசுக்கள் மழைநீரில் கரைந்து அதன் pH மதிப்பை 7 - ல் இருந்து குறைப்பதால் அமில மழை ஏற்படுகிறது.
(iii) இந்த அமில மழைநீர் ஆறுகளில் சேரும்பொழுது அவற்றின் pH குறைந்து, நீர்வாழ் உயிர்களின் வாழ்வு பாதிக்கப்படுகிறது.
38.
பெக்கரல்
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards