10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 08/11/2019
மரபியல்
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
v வடிவ குரோமோசோம்கள் ______ எனப்படும் .
மெட்டாசென்ட்ரிக்
அக்ரோசென்ட்ரிக்
சப்மெட்டாசென்ட்ரிக்
டீலோசென்ட்ரிக்
2.
பன்மய நிலையில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குரோமோசோம்களை இழத்தல்______ என அழைக்கப்படுகிறது.
நான்மய நிலை
அன்யூபிளாய்டி
யூபிளாய்டி
பல பன்மய நிலை
3.
மனிதனில் காணப்படும் குரோமோசோம்களின் எண்ணிக்கை ______.
22 ஜோடி ஆட்டோசோம்கள் மற்றும் 1 ஜோடி அலோசோம்கள்
22 ஆட்டோசோம்கள் மற்றும் 1 அல்லோசோம்
46 ஆட்டோசோம்கள்
46 ஜோடி ஆட்டோசோம்கள் மற்றும் 1 ஜோடி அல்லோசோம்
4.
ஒகசாகி துண்டுகளை ஒன்றாக இணைப்பது ______.
ஹெலிகேஸ்
டி.என்.ஏ பாலிமெரேஸ்
ஆர்.என்.ஏ பிரைமர்
டி.என்.ஏ லிகேஸ்
5.
செல் பகுப்படையும் போது, ஸ்பின்டில் நார்கள் குரோமோசோமுடன் இணையும் பகுதி ____.
குரோமோமியர்
சென்ட்ரோசோம்
சென்ட்ரோமியர்
குரோமோனீமா
6.
எந்நிகழ்ச்சியின் காரணமாக 9:3:3:1 உருவாகிறது?
பிரிதல்
குறுக்கே கலத்தல்
சார்பின்றி ஒதுங்குதல்
ஒடுங்கு தன்மை
7.
ஒரு ஜீன் அல்லது குரோமோசோம் ஆகியவற்றின் அமைப்பு அல்லது அளவுகளில் ஏற்படக்கூடிய பரம்பரையாகத் தொடரக்கூடிய மாற்றங்கள் _______ என அழைக்கப்படுகின்றன.
8.
ஒரு டி.என்.ஏ இரண்டு______ இழைகளால் ஆனது.
9.
ஒவ்வொரு செல்லின் உட்கருவில் காணப்படும் மெல்லிய நூல் போன்ற அமைப்புகள்_______ என அழைக்கப்படுகின்றன.
10.
ஒரு குறிப்பிட்ட பண்பின் (ஜீனின்) வெளித்தோற்றம் ________ எனப்படும்.
11.
மெண்டலின் ஒரு ஜோடி வேறுபட்ட பண்புகள்________ என அழைக்கப்படுகின்றது.
12.
இருபண்புக் கலப்பு
13.
டவுன் நோய்க் கூட்டு அறிகுறி
14.
அல்லோசோம்கள்
15.
இருமய நிலை
16.
ஆட்டோசோம்கள்
17.
சார்பின்றி ஒதுங்குதலின் விதி.
18.
பாரம்பரியம் மற்றும் வேறுபாடு வரையறு.
19.
20.
ஒகசாகி துண்டுகள் என்றால் என்ன?
21.
அல்லோசோம்கள் என்றால் என்ன?
22.
சடுதி மாற்றம் பற்றி விரிவாக எழுது.
23.
டி.என்.ஏ அமைப்பு எவ்வாறு உருவாகியுள்ளது? டி.என்.ஏ வின் உயிரியல் முக்கியத்துவம் யாது?
24.
டி.என்.ஏ இரட்டிப்பாதலில் பங்குபெறும் நொதிகள் யாவை?
25.
சடுதிமாற்றம் வரையறு.
26.
டி.என்.ஏ இரட்டிப்பாதல் என்றால் என்ன?
27.
கேரியோடைப் என்றால் என்ன?
28.
புன்னட் கட்டம் என்றால் என்ன?
1.
(a)
மெட்டாசென்ட்ரிக்
2.
(b)
அன்யூபிளாய்டி
3.
(a)
22 ஜோடி ஆட்டோசோம்கள் மற்றும் 1 ஜோடி அலோசோம்கள்
4.
(d)
டி.என்.ஏ லிகேஸ்
5.
(c)
சென்ட்ரோமியர்
6.
(c)
சார்பின்றி ஒதுங்குதல்
7.
( )
சடுதி மாற்றம்
8.
( )
பாலிநியுக்ளியோடைடு
9.
( )
குரோமோசோம்கள்
10.
( )
புறத்தோற்ற பண்பு (பீனோடைப்)
11.
( )
அல்லீல்கள்
12.
9:3:3:1
13.
டிரைசோமி 21
14.
23வது ஜோடி குரோமோசோம்கள்
15.
2n
16.
22 ஜோடி குரோமோசோம்கள்
17.
ஒரே சமயத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வேறுபட்ட ஜோடி பண்புகள் பாரம்பரியமாகும் போது, இவற்றைக் கட்டுப்படுத்தும் ஜீன் அல்லது காரணிகள் ஒரு ஜோடி மற்றொரு ஜோடியுடன் சார்பின்றி ஒதுங்குகின்றன. இதனால்தான் புதிய பண்புகள் தோன்றுகிறது.
18.
| பாரம்பரியம் | வேறுபாடு |
| ஒரு தலைமுறையிலிருந்து அடுத்து தலைமுறைக்குப் பண்புகள் கடத்தப்படுவது பாரம்பரியம் எனப்படும். | வேறுபாடு என்பது ஒரே சிற்றினத்தைச் சார்ந்த உயிரிகளிடையே மற்றும் ஒத்த பெற்றோரிடமிருந்து உருவாகும் சந்ததிகளுக்கிடையே உள்ள மாறுபாடுகளைப் குறிப்பதாகும். |
19.
20.
டி.என்.ஏ இரட்டிப்பாதலில் மற்றோர் இழையிலிருந்து உருவாக்கப்படும் டி.என்.ஏவின் சிறிய பகுதிகள் ஒகசாகி துண்டுகள் என அழைக்கப்படுகிறது.
21.
1. மனிதனில் உள்ள குரோமோசோம்களில் 23வது ஜோடி குரோமோசோம் அல்லோசோம்கள் எனப்படுகிறது.
2. இவை பால் குரோமோசோம்கள் என்றும் அழைக்கப்படுகிறது.
3. பெண் இனச் செல்களில் 22 + XX அமைப்பைப் பெற்றிருக்கும்.
4. ஆண் இனச் செல்களில் 22 + XY அமைப்பைப் பெற்றிருக்கும்.
22.
(1) 1901 ஆம் ஆண்டு ஹயூகோ டீ விரிஸ் என்பவர். 'சடுதி மாற்றம்' என்ற சொல்லை அறிமுகப்படுத்தினார்.
(2) பரம்பரையாகத் தொடரக்கூடிய, திடீரென ஓர் உயிரியின் மரபுப் பொருளில் (DNA) திடீரென ஏற்படும் மாற்றம் 'சடுதி மாற்றம்' எனப்படும்.
(3) சடுதி மாற்றம் இரண்டு வகைப்படும் அவை குரோமோசோம் சடுதி மாற்றம் மற்றும் ஜீன் 'சடுதி மாற்றம்'.
(I) குரோமோசோம் சடுதி மாற்றம்:
குரோமோசோம் அமைப்பு அல்லது எண்ணிக்கையில் ஏற்படும் திடீர் மாற்றம் குரோமோசோம் சடுதி மாற்றம் என அழைக்கப்படுகின்றன. இதன் விளைவாக கீழ்க்கண்ட நிலைகள் தோன்றலாம்.
(II) குரோமோசோம் அமைப்பில் ஏற்படும் மாற்றங்கள்:
பொதுவாக, செல் பகுப்பின் பொது ஏற்படும் தவறுகளால் குரோமோசோம் அமைப்பில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. குரோமோசோம்களில் ஏற்படும் நீக்கமடைதல், இரட்டிப்பாதல், தலை கீழ் மாற்றம் மற்றும் இடம்பெயர்தல் ஆகியவற்றின் விளைவாக ஜீன்களின் எண்ணிக்கை மற்றும் அமைப்பில் மாற்றம் ஏற்படுகிறது.
(III) குரோமோசோம் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்கள்
இவை, ஒரு செல்லில் இடம் பெற்றுள்ள குரோமோசோம் எண்ணிக்கை அதிகரித்தல் அல்லது குறைதல் ஆகியவற்றை உள்ளடிக்கியது. இது பன்மய நிலை (பிளாய்டி) எனப்படுகிறது. பன்மயநிலை இரு வகைப்படும்.
அ) யூபிளாய்டி
ஆ) அன்யூபிளாய்டி
(IV) யூபிளாய்டி
உயிரிகள் வழக்கமான இருமய (2n) குரோமோசோம்களை விட அதிக எண்ணிக்கையில் பெற்றுள்ள நிலை யூபிளாய்டி எனப்படும். ஒரு உயிரி மூன்று ஒற்றைமய குரோமோசோம் தொகுப்புகளைப் பெற்றிருந்தால் அது மும்மய நிலை (3n) எனப்படும். மும்மயத் தாவரங்கள் மற்றும் விலங்குகள் பொதுவாக மலட்டுத்தன்மை உடையவை. ஒரு உயிரி நான்கு ஒற்றைமயத் தொகுப்புகளைப் பெற்றிருந்தால் அது நான்மய நிலை, பெரும்பாலும் அளவில் பெரிய மற்றும் பூக்களை விளைவிக்கும்.
(v) அன்யூபிளாய்டி
தொகுப்பில் உள்ள ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட குரோமோசோம்களை இழத்தல் அல்லது கூடுதலாகப்பெறுதல் ஆன்யூ பிளாய்டி எனப்படும். இது மூன்று வகைப்படும். மோனோசாமி
(2n -1), டிரைசோமி (2n +1) மற்றும் நல்லிசோமி (2n -2) அன்யூபிளாய்டி நிலைக்கான பொதுவாக அறியப்பட்ட எடுத்துக்காட்டு மனிதனில் ஏற்படும் டவுன் நோய்க் கூட்டு அறிகுறி (syndrome).
(VI) டவுன் நோய்க் கூட்டு அறிகுறி
இந்த நிலை முதன்முதலாக லாங்க்டன் டவுன் என்ற மருத்துவரால் 1866 ஆம் ஆண்டு அடையாளம் காணப்பட்டது. இது 21வது குரோமோசோமில் ஒரு கூடுதல் நகல் குரோமோசோம் (21வது டிரைசோமி) உள்ள மரபியல் நிலை ஆகும். மனவளர்ச்சிக் குறைபாடு, தாமதமான வளர்ச்சி, நடத்தை சார்ந்த பிரச்சனைகள், பலவீனமான தசை அமைப்பு, பார்வை மாற்று கேட்கும் குறைபாடு ஆகியவை பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் காணப்படும் சில நினைவுகள்.
(VII) ஜீன் அல்லது புள்ளி சடுதிமாற்றம்
ஒரு ஜீனின் நியூக்ளியோடைடு வரிசையில் ஏற்படும் மாற்றங்கள் ஜீன் சடுதிமாற்றம் எனப்படும். இது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நைட்ரஜன் காரங்களில் ஏற்படும் பதிலீடு செய்தல், நீக்கமடைதல், இடைசேர்தல் அல்லது தலைகீழாதால் ஆகியவற்றை உள்ளடக்கியது. ஜீன்களில் ஏற்படும் மாற்றம் ஒரு உயிரியின் இயல்புக்கு மாறான புரத உற்பத்திக்கு வழிவகுக்கிறது.
23.
டி.என்.ஏ. மாதிரி
1. டி.என்.ஏ என்பது மில்லியன் கணக்கான நியூக்ளியோடைடுகளை உள்ளடக்கிய மிகப்பெரிய மூலக்கூறு ஆகும்.
2. எனவே இது பாலி நியூக்ளியோடைடு (poly- பல) எனவும் அழைக்கப்படுகிறது.
3. ஒவ்வொரு நியூக்ளியோடைடுகளும் மூன்று கூறுகளை உள்ளடக்கியது.
4. ஒரு சர்க்கரை மூலக்கூறு = டியோக்சிரைபோஸ் சர்க்கரை
5. ஒரு நைட்ரஜன் காரம்
டி.என்.ஏவில் உள்ள நைட்ரஜன் காரங்கள் இருவகைப்படும் அவை
அ) பியூரின்கள் (அடினைன் மற்றும் குவானைன்)
ஆ) பிரிமிடின்கள் (சைட்டோசின் மற்றும் தைமின்)
6. ஒரு பாஸ்பேட் தொகுதி
நியூக்ளியோசைடு மற்றும் நியூக்ளியோடைடு
நியூக்ளியோசைடு = நைட்ரஜன் + சர்க்கரை
நியூக்ளியோடைடு = நியூக்ளியோசைடு + பாஸ்பேட்
7. இடம்பெற்றுள்ள பியூரின்கள் மற்றும் பிரிமிடின்களுக்கு ஏற்ப நியூக்ளியோடைடுகள் உருவாகின்றன.
8. டி.என்.ஏ மூலக்கூறு இரண்டு பாலிநியூக்ளியோடைடு இழைகளால் ஆனது.
9. இந்த இழைகள் இரட்டைச் சுருள் அமைப்பை உருவாக்குகின்றன. இவ்விழைகள் ஒன்றுக்கொன்று எதிர் இணை இயல்புடன் எதிரெதிர் திசைகளில் செல்கின்றன.
10. மையத்தில் உள்ள நைட்ரஜன் காரங்கள், சர்க்கரை - பாஸ்பேட் தொகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுதிகள் டி.என்.ஏவின் முதுகெலும்பாக உள்ளன.
11. நைட்ரஜன் காரங்கள் இணைவுறுதல், எப்பொழுதும் ஒரு குறிப்பிட்ட விதத்திலேயே அமைகிறது. அவை எப்பொழுதும் ஹைட்ரஜன் பிணைப்புகளால் இணைக்கப்படுகின்றன.
12. அடினைன் (A) தைமினுடன் (T) இரண்டு ஹைட்ரஜன் பிணைப்புகளால் இணைக்கப்பட்டுள்ளது (A = T)
13. சைட்டோசின் (C) குவானைனுடன் (G) மூன்று ஹைட்ரஜன் பிணைப்புகளால் இணைக்கப்பட்டுள்ளது. (C ☰ G)
14. இத்தகைய இணைவுறுதல் நிரப்பு கார இணைவுறுதல் என்று அழைக்கப்படுகிறது.
15. ஹைட்ரஜன் காரங்களுக்கு இடையேயான ஹைட்ரஜன் பிணைப்பு டி.என்.ஏ விற்கு நிலைப்புத் தன்மையைத் தருகிறது.
16. இரட்டைச் சுருள் அமைப்பின் ஒவ்வொரு சுற்றும் 34A° (3.4nm) அளவிலானது. ஒரு முழு சுற்றில் பத்து கார இணைகள் உள்ளன.
17. இரட்டைச் சுருளில் உள்ள நியூக்ளியோடைடுகள் பாஸ்போ-டை-எஸ்டர் பிணைப்புகளால் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன.
டிஎன்.ஏவின் முக்கியத்துவம்:
1. இது மரபியல் தகவல்களை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குக் கடத்துகிறது.
2. இது புரதங்கள் உருவாக்கத்திற்குத் தேவையான தகவல்களைப் பெற்றுள்ளது.
3. ஒரு உயிரினத்தின் வளர்ச்சி சார் மற்றும் வாழ்வியல் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துகிறது.
24.
டி.என்.ஏ பாலிமரேஸ், டி.என்.ஏ லிகேஸ், ஹெலிகேஸ் மற்றும் டோபோ ஐசோமேரேஸ்.
25.
திடீரென ஓர் பரம்பரையாக தொடரக்கூடிய உயிரியல் மரபுப் பொருளில் (DNA) திடீரென ஏற்படும் மாற்றம் சடுதிமாற்றம் எனப்படும்.
26.
டி.என்.ஏ இரட்டிப்பாதல் என்பது டி.என்.ஏ மூலக்கூறு தன் அமைப்பை ஒத்த நகல்களை உருவாக்குவதாகும்.
27.
ஓர் உயிரினத்தின் செல் உட்கருவில் உள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை, அளவு மற்றும் வடிவம் கேரியோடைப் எனப்படும்.
28.
புன்னட் கட்டம் என்பது மரபியல் கலப்பின் ஜீனோடைப் எவ்வாறு உருவாகிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் வரைபட முறையாகும்.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards