10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 12/09/2019
நரம்பு மண்டலம்
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
ஒருவர் விபத்தின் காரணமாக உடல் வெப்ப நிலை, நீர்ச்சமநிலை மற்றும் பசி எடுத்தல் ஆகியவற்றுக்கான கட்டுப்பாட்டினை இழந்திருக்கிறார். அவருக்கு கீழுள்ளவற்றுள் மூளையின் எப்பகுதி பாதிப்படைந்ததால் இந்நிலை ஏற்பட்டுள்ளது?
முகுளம்
பெருமூளை
பான்ஸ்
ஹைபோதலாமஸ்
2.
கீழுள்ளவற்றுள் நரம்புச் செல்களில் காணப்படாதது
நியூரிலெம்மா
சார்கோலெம்மா
ஆக்ஸான்
டெண்ட்ரைட்டுகள்
3.
வாந்தியெடுத்தலைக் கட்டுப்படுத்தும் மையம் ______.
முகுளம்
வயிறு
மூளை
ஹைப்போதலாமஸ்
4.
ரேன்வீர் கணுக்கள் காணப்படும் இடம் ______.
தசைகள்
ஆக்சான்கள்
டெண்ட்ரைட்டுகள்
சைட்டான்
5.
இருமுனை நியூரான்கள் காணப்படும் இடம் ________.
கண் விழித்திரை
பெருமூளைப் புறணி
வளர் கரு
சுவாச எபிதீலியம்
6.
மனித மூளையில் கடத்து மையமாக செயல்படும் பகுதி ______.
7.
தானியங்கு நரம்பு மண்டலத்தில் உள்ள_________ மற்றும் _______ ஒன்றுக்கொன்று எதிராக செயல்படுகின்றன.
8.
செல் உடலத்தை நோக்கி தூண்டல்களைக் கொண்டு செல்பவை ______ .
9.
புறச் சூழ்நிலையில் ஏற்படும் மாற்றத்தால் ஒரு விலங்கினம் வெளிப்படுத்தும் விளைவு _______ எனப்படும்.
10.
______ நியூரான்களில் தூண்டல்கள் மிக துரிதமாக கடத்தப்படும்.
11.
நமது உடலில் உள்ளவற்றுள் ______ என்பது மிக நீளமான செல்லாகும்.
12.
மைலின் உறை உள்ள மற்றும் மைலின் உறையற்ற நரம்பு நாரிழைகள்.
13.
இச்சைச் செயல் மற்றும் அனிச்சைச் செயல்.
14.
நியூரான்கள் அவற்றின் அமைப்பின் அடிப்படையில் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது என்று விளக்குக.
15.
நம் உடலில் அதிகமான அளவு காணப்படும் நீளமான “L” செல்கள் ஆகும். “L”செல்களில் நீண்ட கிளைத்த பகுதி”M” என்றும், குறுகிய கிளைத்த பகுதிகள் ”N” என்றும் அழைக்கப்படும். இரண்டு “L” செல்களுக்கிடையேயான இடைவெளி பகுதி “O” என்று அழைக்கப்படும். இந்த இடைவெளிப் பகுதியில் வெளியிடப்படும் வேதிப்பொருளான “P” நரம்புத் தூண்டலை கடத்த உதவுகிறது.
i. “L” செல்களின் பெயரை கூறுக.
ii. “M” மற்றும் ”N” என்பவை யாவை?
iii. “O” என்னும் இடைவெளி பகுதியின் பெயர் என்ன?
iv. “P” எனப்படும் வேதிப் பொருளின் பெயரை கூறுக.
16.
முகுளத்தின் கீழ்ப்புறத்தில் தொடங்கும் உருளையான அமைப்பு “A”, கீழ்ப்புறமாக நீண்டுள்ளது. இது “B” என்னும் எலும்பு சட்டகத்துக்குள், “C” என்ற உறைகளால் போர்த்தப்பட்டுள்ளது. “A”யிலிருந்து, “D” எண்ணிக்கையிலான இணை நரம்புகள் கிளைத்து வருகின்றன.
i. “A” என்பது எந்த உறுப்பைக் குறிக்கிறது?
ii. அ) “B” எனப்படும் எலும்பு சட்டகம் மற்றும்
ஆ) “C” எனப்படும் உறைகள் ஆகியவற்றின் பெயர்களைக் கூறுக.
iii. “D” என்பது எத்தனை இணை நரம்புகள்?
1.
(d)
ஹைபோதலாமஸ்
2.
(b)
சார்கோலெம்மா
3.
(a)
முகுளம்
4.
(b)
ஆக்சான்கள்
5.
(a)
கண் விழித்திரை
6.
( )
தலாமஸ்
7.
( )
பரிவு , எதிர்ப்பரிவு மண்டலம்
8.
( )
டெண்ட்ரைட்டு
9.
( )
தூண்டல்
10.
( )
மையலின் உறையுடன் கூடிய நரம்பு செல்கள்
11.
( )
நியூரான்
12.
| வ. எண் | மைலின் உறையுடன் கூடிய நரம்பு நாரிழை | மைலின் உறையற்ற நரம்பு நாரிழை |
|---|---|---|
| 1. | இதற்கு மைலின் உறையுடைய அல்லது ஆக்ஸான் நியூரான் என்று பெயர். | இதற்கு மைலின் உறையற்ற அல்லது சாம்பல் நிற ஆக்ஸான் என்று பெயர். |
| 2. | இது மூளையின் வெண்மை நிறப்பகுதியில் காணப்படும். | இது மூளையின் சாம்பல் நிற பகுதியில் காணப்படும். |
| நியூரான் மைலின் உறையால் போர்த்தப்பட்டிருக்கும். | நியூரான் மைலின் உறையால் போர்த்தப்பட்டு இருக்காது. |
13.
| எண் | இச்சைச் செயல் | அனிச்சை செயல் |
|---|---|---|
| 1. | செயல்கள் நம் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டது. | செயல்கள் நம் கட்டுப்பாட்டுக்கு உட்படாதது. |
| 2. | இச்சைச் செயல்கள் மூளைக்கு கட்டுப்பட்டது. | அனிச்சை செயல் தண்டுவடத்திற்கு கட்டுப்பட்டது. |
| 3 | இது தசை இயக்கத்திற்கு காரணமாக உள்ளது. | அனிச்சைச் செயல் தசை இயக்கம் அல்லது சில சுரப்பிகளின் சுரப்பிக்கு காரணமாக உள்ளது. |
14.

நியூரான்களின் வகைகள்:
அமைப்பின் அடிப்படையில் நியூரான்கள் மூன்று வகைப்படும்.
அவை
(i) ஒருமுனை நியூரான்கள்:
இவ்வகை நியூரான்களில் ஒருமுனை மட்டுமே சைட்டானில் இருந்து கிளைத்து காணப்படும். இதுவே ஆக்சான் மற்றும் டெண்ட்ரைட்டாக செயல்படும்.
வளர் கருவின் ஆரம்ப நிலையில் மட்டும் காணப்படும். முதிர் உயிரிகளில் காணப்படாது.
(ii) இருமுனை நியூரான்கள்:
சைட்டானிலிருந்து இரு நரம்புப் பகுதிகள் இருபுறமும் இணைக்கப்பட்டிருக்கும். ஒன்று ஆக்சானாகவும் மற்றொன்று டெண்ட்ரைட்டாகவும் செயல்படும்.
கண்ணின் விழித்திரையிலும், நாசித்துளையில் உள்ள ஆல்ஃபேக்டரி எபீதிலியத்திலும் காணப்படும்.
iii) பலமுனை நியூரான்கள்:
சைட்டானிலிருந்து பல டெண்ட்ரைட்டுகள் கிளைத்து ஒரு முனையிலும், ஆக்சான் ஒரு முனையிலும் காணப்படும்.
மூளையின் புறப்பரப்பான பெருமூளைப் புறணியில் காணப்படும்.
15.
(i) 'L' - நரம்பு செல் (அ) நியூரான்
(ii) “M” ஆக்சான் மற்றும் ”N’ டெண்ட்ரைட்டுகள்
(iii) “O” சினாப்ஸ்
(iv) “P” அசிட்டைல்கோலின்
16.
(i) A என்பது தண்டுவடமாகும்.
(ii) (அ) 'B' என்பது முள்ளெலும்புத் தொடரினை குறிக்கிறது
(ஆ) 'C' என்பது மெனிஞ்சஸ்
(iii) 'D' 31 இணை நரம்புகள்
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards