10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 30/09/2019
ஒளியியல்
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
நுட்பமான உணர் உறுப்பு _____
2.
ஒளிசிதறல் ______ மற்றும் ______ யைப் பொருத்தது.
3.
ஊடகத்தின் ஒளிவிலகல் எண் ஒளியின் _____ சார்ந்தது.
4.
படுகின்ற ஒளிக்கற்றையின் ஆற்றலும் சிதறலடைந்த கற்றையின் ஆற்றலும் சமமாக இருந்தால் அது ______ சிதறல் எனப்படும்.
5.
ஒளி செல்லும் பாதை _______ என்று அழைக்கப்படுகிறது.
6.
சேய்மைப்புள்ளி என்பது யாது?
7.
டிண்டால் ஒளிச்சிதறல் என்றால் என்ன?
8.
ஒளிவிலகல் என்றால் என்ன?
9.
வானம் ஏன் நீலநிறமாகத் தோன்றுகிறது?
10.
ராலே சிதறல் விதியைக் கூறுக.
11.
நிறப்பிரிகை வரையறு.
12.
ஸ்நெல் விதியைக் கூறுக.
13.
குவிலென்சு மற்றும் குழிலென்சு - வேறுபடுத்துக.
14.
கடலின் நீலநிறம்
15.
ஊதா ஒளி
16.
| 1) | ரெட்டினா | அ) | கண்ணில் ஒளிக்கதிர் செல்லும் பாதை |
| 2) | கண் பாவை | ஆ) | சேய்மைப் புள்ளி விழியை நோக்கி நகர்தல் |
| 3) | சிலியரித் தசைகள் | இ) | அண்மைப்புள்ளி விழியை விட்டு விலகிச் செல்லுதல் |
| 4) | கிட்டப்பார்வை | ஈ) | விழித்திரை |
| 5) | தூரப்பார்வை | உ) | விழி ஏற்பமைவுத்திறன் |
17.
குவிலென்சு ஒன்றினால் தோற்றுவிக்கப்படும் பிம்பங்களுக்கான விதிகளை கதிர்படங்களுடன் விளக்குக.
18.
ஒளியின் ஏதேனும் ஐந்து பண்புகளைக் கூறுக.
19.
கார்ட்டீசியன் குறியீட்டு மரபினைக் குறிப்பிடுக.
20.
ஆந்தை போன்ற இரவு நேரப் பறவைகளின் கண்களில் உள்ள கார்னியா மற்றும் கண் பாவை ஆகியவை அளவில் பெரியதாக உள்ளன. இவ்வமைப்பு அவற்றுக்கு எவ்வாறு உதவுகின்றன?
21.
ஒளியின் பாதை ______
கதிர்கள்
புள்ளி
வரிகள்
கற்றை
22.
சொல் அகராதியில் உள்ள சிறிய எழுத்துகளைப் படிப்பதற்கு உகந்த லென்சு எது?
5 செ.மீ குவிய தூரம் கொண்ட குவி லென்சு
5 செ.மீ குவிய தூரம் கொண்ட குழி லென்சு
10 செ.மீ குவிய தூரம் கொண்ட குவி லென்சு
10 செ.மீ குவிய தூரம் கொண்ட குழி லென்சு
23.
விழி ஏற்பமைவுத் திறன் குறைபாட்டைச் சரி செய்ய உதவுவது
குவி லென்சு
குழி லென்சு
குவி ஆடி
இரு குவிய லென்சு
24.
ஒரு லென்சின் திறன் -4D எனில் அதன் குவியத் தொலைவு
4 மீ
-4.0 மீ
-0.25 மீ
-2.5 மீ
25.
ஒரு குவி லென்சானது, மிகச்சிறிய மெய்பிம்பத்தை முதன்மைக் குவியத்தில் உருவாக்கினால், பொருள் வைக்கப்பட்டு இடம் ______
முதன்மைக் குவியம்
ஈறிலாத் தொலைவு
2f
f க்கும் 2f க்கும் இடையில்
26.
பொருளின் அளவிற்கு சமமான, தலைகீழான மெய்ப்பிம்பம் கிடைக்க பொருள் வைக்கப்பட வேண்டிய தொலைவு
f
ஈறிலாத் தொலைவு
2f
f க்கும் 2f க்கும் இடையில்
27.
கூற்று : சூரியன் மறையும்போது அது சிகப்பாகத் தோன்றுகிறது.
காரணம் : ஒளிச்சிதறல் அலைநீளத்திற்கு நேர் விகிதத்தில் இருக்கும்.
(அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம்.
(ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால்,காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமன்று.
(இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியன்று.
(ஈ) கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.
28.
கூற்று : வானம் நீலநிறமாகத் தோன்றுவது நீலநிற ஒளிச்சிதறலால் ஏற்படுகிறது.
காரணம் : கண்ணுக்குப் புலனாகும் ஒளியில் நீலநிறம் குறைந்த அலைநீளமுடையது.
(அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம்.
(ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால்,காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமன்று.
(இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியன்று.
(ஈ) கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.
29.
கூற்று: ஊடகத்தின் ஒளிவிலகல் எண் அதிகமாக இருந்தால் (அடர்வு மிகு ஊடகம்), அந்த ஊடகத்தில் ஒளியின் திசைவேகம் குறைவாக இருக்கும்.
காரணம்: ஊடகத்தின் ஒளிவிலகல் எண், ஒளியின் திசைவேகத்திற்கு எதிர்த்தகவில் இருக்கும்.
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம்
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கமன்று.
இ) கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியன்று.
ஈ) கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.
1.
( )
கண்
2.
( )
துகளின் அளவு மற்றும் தன்மை
3.
( )
அலைநீளத்தைச்
4.
( )
மீட்சிச்
5.
( )
ஒளிக்கதிர்
6.
(i) கண் ஒன்றினால், எவ்வளவுத் தொலைவில் உள்ளப் பொருள்களைத் தெளிவாகக் காண முடிகிறதோ, அப்புள்ளி சேய்மைப்புள்ளி என்று அழைக்கப்படுகிறது.
(ii) பொதுவாக, சேய்மைப் புள்ளியானது ஈறிலாத் தொலைவில் அமைந்திருக்கும்.
7.
ஒரு கூழ்மக் கரைசலில் உள்ள கூழ்மத்துகளால், ஒளிக்கதிர்கள் சிதறடிக்கப்படுகின்ற நிகழ்வு டிண்டால் ஒளிச்சிதறல் அல்லது டிண்டால் விளைவு எனப்படும்.
8.
ஒளிக்கதிரொன்று ஓர் ஒளி புகும் ஊடகத்தில் இருந்து மற்றோர் ஒளிபுகும் ஊடகத்திற்குச் சாய்வாகச் செல்லும் போது, ஒளிக்கதிர் தன் பாதையில் இருந்து விலகிச் செல்கிறது. ஒளிக்கதிரின் பாதையில் ஏற்படும் இந்த விலகல் 'ஒளிவிலகல்' எனப்படுகிறது.
9.
1. சூரிய ஒளியானது வளிமண்டலத்தின் வழியாகச் செல்லும் போது ராலே சிதறல் விதிப்படி குறைந்த அலைநீளம் உடைய நீல நிறமானது அதிக அலைநீளம் கொண்ட சிவப்பு நிறத்தைவிட அதிகமாக சிதறல் அடைகிறது.
2. இதனால் வானம் நீல நிறமாகத் தோன்றுகிறது.
10.
1. ஓர் ஒளிக்கதிர் சிதறலடையும் அளவானது, அதன் அலைநீளத்தின் நான்மடிக்கு எதிர்த்தகவில் இருக்கும்.
2. சிதறல் அளவு 'S' ∝ \(\frac { 1 }{ { \lambda }^{ 4 } } \)
11.
வெள்ளொளிக் கற்றையானது, கண்ணாடி, நீர் போன்ற ஒளிபுகும் ஊடகத்தில் ஒளிவிலகல் அடையும் போது அதில் உள்ள நிறங்கள் தனித்தனியாக பிரிகை அடைகின்றன.
இந்நிகழ்வு நிறப்பிரிகை எனப்படும்.
12.
ஒளிக்கதிர் ஓர் ஊடகத்திலிருந்து, மற்றோர் ஊடகத்திற்கு செல்லும் போது படுகோணத்தின் சைன் மதிப்பிற்கும், விலகு கோணத்தின் சைன் மதிப்பிற்கும் இடையே உள்ள தகவு ஆனது அவ்விரு ஊடகங்களின் ஒளிவிலகல் எண்களின் தகவுக்கு சமம்.
இவ்விதி ஸ்நெல்விதி எனப்படும்
\(\frac { \sin i }{ \sin r } =\frac { { \mu }_{ 2 } }{ { \mu }_{ 1 } } \).
13.
| குவிலென்சு | குழிலென்சு |
| மையத்தில் தடித்தும் ஓரத்தில் மெலிந்தும் காணப்படும் | மையத்தில் மெலிந்தும் ஓரத்தில் தடித்தும் காணப்படும் |
| இது குவிக்கும் லென்சு | இது விரிக்கும் லென்சு |
| பெரும்பாலும் மெய்ப்பிம்பங்களைத் தோற்றுவிக்கும் | மாயப்பிம்பங்களைத் தோற்றுவிக்கும் |
| தூரப்பார்வை குறைபாட்டைச் சரிசெய்யப் பயன்படுகிறது | கிட்டப்பார்வை குறைபாட்டைச் சரிசெய்யப் பயன்படுகிறது. |
14.
ஒளிச்சிதறல்
15.
உயர் அதிர்வெண்
16.
| 1 | 2 | 3 | 4 | 5 |
| ஈ | அ | உ | ஆ | இ |
17.
விதி: 1
ஒளிக்கதிரானது, ஒரு குவிலென்சு அல்லது குழிலென்சின் ஒளியியல் மையத்தின் வழியாகச் செல்லும் போது விலகலடையாமல் அதே பாதையில் செல்கிறது.

விதி: 2
முதன்மை அச்சுக்கு இணையாக வரும் ஒளிக்கதிர்கள், குவிலென்சின் மீது படும்போது முதன்மைக்குவியத்தில் குவிக்கப்படும். குழிலென்சின் மீது படும்போது முதன்மைக் குவியத்திலிருந்து விலகலடைந்து செல்வது போல் தோன்றும்.

விதி: 3
முதன்மைக்குவியம் வழியாகச் சென்று குவிலென்சின் மீது விழும் ஒளிக்கதிர்களும், முதன்மைக் குவியத்தை நோக்கிச் சென்று குழிலென்சின் மீது விழும் ஒளிக்கதிர்களும் விலகலடைந்த பிறகு முதன்மை அச்சுக்கு இணையாகச் செல்லும்.

முதன்மைக் குவியத்தின் வழியாக அல்லது முதன்மைக் குவியத்தை நோக்கி ஒளிக்கதிர் செல்லுதல்
18.
1. ஒளி என்பது ஒருவகை ஆற்றல்.
2. ஒளி எப்போதும் நேர்க்கோட்டில் செல்கிறது.
3. ஒளி பரவுவதற்கு ஊடகம் தேவையில்லை, வெற்றிடத்தின் வழியாகக் கூட ஒளிக்கதிர் செல்லும்.
4. காற்றில் அல்லது வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம் C = 3 \(\times\) 108 மீவி-1.
5. ஒளியானது அலை வடிவில் செல்வதால் அது அலைநீளம் (\(\lambda\)) மற்றும் அதிர்வெண்(v) ஆகிய பண்புகளைப் பெற்றிருக்கும். இவை C = v\(\lambda\) என்ற சமன்பாட்டின் மூலம் தொடர்புபடுத்தப்படுகிறது.
6. ஒளியின் வெவ்வேறு நிறங்கள் வெவ்வேறு அலைநீளங்களையும், அதிர்வெண்களையும் பெற்றிருக்கும்.
7. கண்ணுறு ஒளியில் ஊதா நிறம் குறைந்த அலை நீளத்தையும், சிவப்பு நிறம் அதிக அலை நீளத்தையும் கொண்டிருக்கும்.
8. ஒளியானது இரு வேறு ஊடகங்களின் இடைமுகப்பை அடையும் போது, அது பகுதியளவு எதிரொளிக்கும், பகுதியளவு விலகல் அடையும்.
19.
(i) பொருள் எப்போதும் லென்சிற்கு இடப்பக்கம் வைக்கப்பட வேண்டும்.
(ii) அனைத்து தொலைவுகளும், ஒளியியல் மையத்திலிருந்தே அழைக்கப்பட வேண்டும்.
(iii) படுகதிரின் திசையில் மேற்கொள்ளப்படும் அளவீடுகளை நேர்குறியாகக் கொள்ள வேண்டும்.
(iv) படுகதிரின் திசைக்கு எதிர்த்திசையில் மேற்கொள்ளப்படும் அளவீடுகளை எதிர்குறியாகக் கொள்ள வேண்டும்.
(v) முதன்மை அச்சுக்குச் செங்குத்தாக மேல் நோக்கி அளக்கப்படும் அளவுகளை நேர்குறியாகக் கொள்ள வேண்டும்.
(vi) முதன்மை அச்சுக்குச் செங்குத்தாகக் கீழ்நோக்கி அளக்கப்படும் அளவுகளை எதிர்குறியாகக் கொள்ள வேண்டும்.
20.
இந்த பண்பானது பார்க்கும் தூரம் மற்றும் பரப்பளவு அதிகமாக கிடைக்கிறது. மேலும் இரவு நேரங்களில் அதிக அளவு ஒளி கிடைக்க பயன்படுகிறது.
எனவே ஆந்தை போன்ற இரவு நேரப் பறவைகளின் கண்களின் கார்னியா மற்றும் கண்பாவை ஆகியவை அளவில் பெரியதாக உள்ளன.
21.
(a)
கதிர்கள்
22.
(a)
5 செ.மீ குவிய தூரம் கொண்ட குவி லென்சு
23.
(d)
இரு குவிய லென்சு
24.
(c)
-0.25 மீ
25.
(b)
ஈறிலாத் தொலைவு
26.
(c)
2f
27.
கூற்று சரியானது. ஆனால் காரணம் சரியன்று.
28.
கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம்.
29.
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்குச் சரியான விளக்கம்.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards