10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil நாகரிகம், நாடு, சமூகம் - கவிதை பேழை (செய்யுள்) -முத்தொள்ளாயிரம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil அறம்,தத்துவம், சிந்தனைகவிதை பேழை (செய்யுள்) -அக்கறை Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil உயிரின்ஓசை - துணைப்பாடம் -பிருமம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil அறம், தத்துவம், சிந்தனை - கவிதை பேழை (செய்யுள்) -தேம்பாவணி * Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil கலை, அழகியல், புதுமை - உரைநடை உலகம் -பன்முகக் கலைஞர் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil மணற்கேணி - இலக்கணம் - இலக்கணம் -பொது Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 23/09/2019
தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
காப்பரின் மின்னாற் தூய்மையாக்களில் பயன்படும் நேர்மின்வாய், எதிர்மின்வாய் மற்றும் மின்பகுளியை எழுதுக.
2.
பின்வரும் வினைகளை முழுமையாக்குக.
(i) \(2Al+3{ H }_{ 2 }O\rightarrow ?+3{ H }_{ 2 }\uparrow \)
(ii) \(2Al+2NaOH+2{ H }_{ 2 }O\rightarrow ?+3{ H }_{ 2 }\uparrow \)
(iii) \(2Al+6{ H }_{ 2 }SO_{ 4 }\rightarrow { Al }_{ 2 }\left( { SO }_{ 4 } \right) _{ 3 }+6{ H }_{ 2 }O+?\)
3.
அயனியாக்கும் ஆற்றல் தொகுதி மற்றும் தொடரில் எவ்வாறு மாறுபடுகிறது?
4.
அயனியாக்கும் ஆற்றல் என்றால் என்ன?
5.
தனிம வரிசை அட்டவணையில் இடமிருந்து வலமாக செல்லும்போது அணு ஆரம் குறைகிறது. உன் விடையை நியாயப்படுத்து.
6.
பின்வரும் இணைகளில் இருந்து சிறியதைத் தேர்ந்தெடு.
(i) Mg, Ca
(ii) Al, Si
(iii) Cl, Br
7.
H2 மூலக்கூறில் இரண்டு ஹைட்ரஜன் அணுக்களுக்கு இடையில் உள்ள தூரம் \(0.74\mathring { A } \) இதன் சகப்பிணைப்பு ஆரத்தை கணக்கிடு.
8.
அணு ஆரம்-வரையறு.
9.
18-வது தொகுதி தனிமங்கள் ஏன் வினைபுரியும் தன்மை அற்றவையாக உள்ளன?
10.
ஆவர்த்தன பண்பு என்றால் என்ன?
11.
12.
துரு என்பது என்ன? துரு உருவாகுவதன் சமன்பாட்டை தருக.
13.
A என்பது வெள்ளியின் வெண்மை கொண்ட உலோகம். A ஆனது ‘O2 ’ உடன் 800° C யில் வினைபுரிந்து B யை உருவாக்கும். A யின் உலோகக் கலவை விமானத்தின் பாகங்கள் செய்ய பயன்படும். A மற்றும் B என்ன?
14.
A என்பது செம்பழுப்பு உலோகம். இது ‘O2’ உடன் வினையுற்று < 1370 K வெப்பநிலையில், B என்ற கருமையான சேர்மத்தை உருவாக்கும். > 1370 K வெப்பநிலையில் A யானது சிவப்பு நிற C ஐ உருவாக்கும் எனில் A,B,C என்னவென்று வினைகளுடன் விளக்குக.
15.
ஊது உலையில் உருக்கிப்பிரித்தலை விவரி.
1.
(i) நேர்மின்வாய் : மாசு கலந்த காப்பர்.
(ii) எதிர்மின்வாய் : தூய மெல்லிய காப்பர் தகடு.
(iii) மின்பகுளி: கந்தக அமிலம் கலந்த காப்பர் சல்பேட்.
2.
(i) \(2Al+3{ H }_{ 2 }O\rightarrow { Al }_{ 2 }{ O }_{ 3 }+3{ H }_{ 2\uparrow }\)
(ii) \(2Al+2NaOH+2{ H }_{ 2 }O\rightarrow 2Na{ AlO }_{ 2 }+3{ H }_{ 2 }\uparrow \)
(iii) \(2Al+6{ H }_{ 2 }SO_{ 4 }\rightarrow { Al }_{ 2 }\left( { SO }_{ 4 } \right) _{ 3 }+6{ H }_{ 2 }O+{ 3SO }_{ 2 }\)
3.
(i) தொடரில் அணு ஆரம் இடது புறத்திலிருந்து வலது புறமாக செல்கையில் குறைவதால் எலக்ட்ரானை நீக்க அதிக ஆற்றல் தேவைப்படும். ஆகவே தொடரில் அயனியாக்கும் ஆற்றல் அதிகரிக்கின்றது.
(ii) தொகுதியில் மேலிருந்து கீழாக செல்கையில் அணுவின் உருவளவு அதிகரிப்பதால் அயனியாக்கும் ஆற்றல் மிகச் சிறிதளவே தேவைப்படும் ஆகவே, தொகுதியில் அயனியாக்கும் ஆற்றல் குறைகின்றது.
4.
அடி ஆற்றல் நிலையில் உள்ள நடுநிலைத் தன்மை உடைய தனித்த வாயு நிலை அணு ஒன்றின் இணைதிறன் கூட்டிலிருந்து இலகுவாகப் பிணைக்கப்பட்டுள்ள ஒரு எலக்ட்ரானை நீக்கி நேர்மின் அயனியாக மாற்றுவதற்கு தேவைப்படும் குறைந்தபட்ச ஆற்றல் அயனியாக்கும் ஆற்றல் (அ) அயனியாக்கும் என்தால்பி என வரையறுக்கப்படுகிறது.
5.
(i) தொடரின் இடது புறத்திலிருந்து வலது புறமாக செல்கையில் ஆற்றல் மட்டம் மாறுவதில்லை.
(ii) ஆனால், புரோட்டானின் எண்ணிக்கை அதிகரித்து செல்லும்.
(iii) அதிகரிக்கும் நேர்மின் சுமைக்கு ஏற்ப எலக்ட்ரான் மீதுள்ள கவர்ச்சி விசை அதிகரிப்பதால் அணுவின் உருவளவு குறைகிறது.
6.
(i) Mg
(ii) Si
(iii) Cl
7.
\(d=(H-H)=0.74\mathring { A } \)
\(\therefore r(H)=\cfrac { d\left( H-H \right) }{ 2 } =\cfrac { 0.74 }{ 2 } \mathring { A } =0.37\mathring { A } \)
8.
ஒரு அணுவின் ஆரம் என்பது அதன் அணுக்கருவின் மையத்திற்கும் இணைதிற எலக்ட்ரான் உள்ள வெளிக்கூட்டிற்கும் இடையேயான தூரம் என வரையறுக்கப்படுகிறது.
9.
நிலையான எலக்ட்ரான் அமைப்பை தன்னுடைய இணைதிறன் கூட்டில் பெற்றுள்ளதால் வினைபுரியும் தன்மை அற்றவையாக உள்ளன.
10.
தனிம வரிசை அட்டவணையில் உள்ள தனிமங்களின் பண்புகள் குறிப்பிட்ட சீரான இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரே மாதிரியிருக்கும் நிகழ்வு.
11.
12.
துரு என்பது நீரேறிய ஃபெரிக் ஆக்சைடு [Fe2O3. xH2O] ஆகும்.
இரும்பு புறப்பரப்பில் ஈரக்காற்றுடன் வினைபுரிந்து செம்பழுப்பு நிற நீரேறிய ஃபெரிக் ஆக்சைடை உருவாக்குவது துரு எனப்படும்.
4 Fe + 3 O2 + xH2O2 → 2Fe2O3. x H2O (துரு)
13.
A + O2 \(\xrightarrow{800^{\circ} \mathrm{C}}\) B
வெள்ளியின் வெண்மை நிற உலோகம்
உலோகக் கலவை விமானத்தின் பாகம் செய்ய பயன்படும்
i) A என்பது அலுமினியம் (Al)
ii) 4 Al + 3 O2 \(\xrightarrow{800^{\circ} \mathrm{C}}\) 2 Al2 O3
(B \(\Rightarrow\) அலுமினியம் ஆக்சைடு)
| A | அலுமினியம் (Al) |
| B | அலுமினியம் ஆக்சைடு (Al2O3) |
14.

i) A \(\Rightarrow\) காப்பர் (Cu)
ii) 2 Cu + O2 \(\xrightarrow{<1370 \mathrm{~K}}\) 2 CuO
B \(\Rightarrow\) குப்ரிக் ஆக்சைடு
iii) 4 Cu + O2 \(\overrightarrow{>1370K}\) 2Cu2O
C \(\Rightarrow\) குப்ரஸ் ஆக்சைடு
| A | காப்பர் (Cu) |
| B | குப்ரிக் ஆக்சைடு CuO |
| C | குப்ரஸ் ஆக்சைடு Cu2O |
15.
ஊது உலையில் உருக்கிப்பிரித்தல்:
வறுக்கப்பட்ட தாது, கல்கரி, சுண்ணாம்புக்கல் இவற்றை 8 : 4 : 1 என்ற விகிதத்தில் எடுத்துக் கொண்டு, உலையின் மேலுள்ள கிண்ணக்கூம்பு அமைப்பு வழியாக, செலுத்தப்படுகிறது. உலையில் மூன்று முக்கிய பகுதிகள் உள்ளன.
அ) கீழ்ப்பகுதி (எரிநிலை மண்டலம்):
இந்தப் பகுதியின் வெப்பநிலை 1500°C ஆகும்
வெப்பக்காற்றுடன் தாதுக்கூளம் சேரும் போது, ஆக்சிஜனுடன் எரிந்து CO2 வாக மாறுகிறது.
C + O2 \(\overset { 1500^{ ° }C }{ \underset { \Delta}{ \longrightarrow } } \) CO2 + வெப்ப ஆற்றல்
இவ்வினையிலிருந்து வெப்ப ஆற்றல் வெளியாவதால் வெப்ப உமிழ்வினை எனப்படும்.
ஆ) நடுப்பகுதி அல்லது உருக்கு மண்டலம்:
இப்பகுதி 1000oC வெப்பநிலையில் உள்ளது. இங்கு CO2 ஆனது CO ஆக ஒடுக்கமடைகிறது.
CO2 + C \(\overset { 1000^{ ° }C }{ \underset { \Delta}{ \longrightarrow } } \)2 CO - வெப்ப ஆற்றல்
சுண்ணாம்புக்கல் சிதைந்து, கால்சியம் ஆக்சைடையும், CO2வையும் தரும்.
CaCO3 \(\overset { 1000^{ ° }C }{ \underset { \Delta}{ \longrightarrow } } \) CaO + CO2 – வெப்ப ஆற்றல்
மேற்கண்ட இருவினைகளில், வெப்பம் உட்கவரப்படுவதால் வெப்ப கொள்வினைகள் ஆகும். கால்சியம் ஆக்சைடு மணலுடன் சேர்ந்து கால்சியம் சிலிகேட் எனும் கசடாகிறது.
CaO + SiO2 \(\rightarrow\) CaSiO3
இ) மேற்பகுதி (ஒடுக்கும் மண்டலம்):
இப்பகுதியில் 400oC வெப்பநிலையில் ஃபெரிக் ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு மூலம் இரும்பாக ஒடுக்கம் அடைகிறது.
Fe2O3 + 3CO \(\xrightarrow{400^{\circ} \mathrm{C}}\) 2 Fe + 3 CO2 ↑
கசடை நீக்கிய பிறகு, உருகிய இரும்பானது, உலையின் அடியில் சேகரிக்கப்படுகிறது. இவ்விரும்பு மீண்டும் உருக்கப்பட்டு விதவித அச்சுக்களில் வார்க்கப்படுவதால், இது வார்ப்பிரும்பு எனப்படும்.

10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil கூட்டாஞ்சோறு - இலக்கணம் - தொகைநிலை தொடர்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil பண்பாடு - கவிதை பேழை (செய்யுள்) -முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil உயிரின்ஓசை - இலக்கணம் - தொகாநிலை தொடர் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil இயற்கை, சுற்றுசூழல், அறிவியல் - கவிதை பேழை (செய்யுள்) -மேகம் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards