10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 12/08/2019
தாவர உள்ளமைப்பியல் மற்றும் தாவர செயலியல்
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
தாவர வேரின் வெளிப்புற அடுக்கு ________ ஆகும்
எபிபிளாஸ்மா
புறணி
புறத்தோல்
ஸ்டீல்
2.
புரோட்டோசைல இடைவெளி என்பது ஒரு ________ ஆகும்
தடித்தல்
சைலம் அடுக்குதல்
இடைவெளி
எக்ஸார்க் சைலம்
3.
சைலம் சூழ் வாஸ்குலார் கற்றை ________ வகை வாஸ்குலார் தொகுப்பு ஆகும்.
சூழ்ந்தமைந்த வாஸ்குலார் கற்றை
ஒருங்கமைந்தவை
ஒன்றிணைந்த வாஸ்குலார் கற்றை
ஆரப்போக்கு அமைந்தவை
4.
ஒளிச்சேர்க்கையின் போது எந்த நிலையில் ஆக்ஸிஜன் உற்பத்தியாகிறது?
ATP யானது ADP யாக மாறும் போது
CO2 நிலை நிறுத்தப்படும் போது
நீர் மூலக்கூறுகள் பிளக்கப்படும் போது
இவை அனைத்திலும்
5.
6.
_________ எனப்படுவது சைலமும் புளோயமும் அடுத்தடுத்து வெவ்வேறு ஆரங்களில் அமைந்துள்ள ஒரு வகையாகும்.
7.
தாவரத்தின் புறத்தோலில் காணப்படும் பல சிறிய துளைகள் ________ எனப்படும்.
8.
ஆக்ஸிசோம்கள் _________ என்றும் அழைக்கப்படுகின்றன
9.
இருவித்திலை தாவர இலையில் உள்ள ஸ்பாஞ்சி பாரன்கைமா செல்கள் ________ நடைபெற உதவுகிறது
10.
இருவித்திலைத் தாவர வேரில் அகத்தோலின் ஆரச் சுவர்களிலும் உட்புற கிடைமட்ட சுவர்களிலும் _________ காணப்படுகிறது.
11.
புறணியின் கடைசி அடுக்கு _________ எனப்படும்.
12.
குகர்பிட்டா தாவரத்தில் உள்ள வாஸ்குலார் திசுத் தொகுப்பு _________ ஆகும்.
13.
செல்லின் ATP உற்பத்தி தொழிற்சாலை_____.
14.
கிளைக்காலிசிஸ் நடைபெறும் இடம்____.
15.
புறணி இதனிடையே உள்ளது ________
16.
திசு அமைப்பு
17.
தரச அடுக்கு
18.
இருள் வினை
19.
சைலம்
20.
கேம்பியம்
21.
காஸ்பேரியன் பட்டைகள் என்பன யாவை?
22.
வாஸ்குலார் திசுத் தொகுப்பினை வகைப்படுத்து.
23.
கார்போஹைட்ரேட்டானது ஆக்ஸிகரணமடைந்து ஆல்கஹாலாக வெளியேறும் நிகழ்வின் பெயர் என்ன?
24.
ஒளிச்சேர்க்கைக்கு தேவையான கார்பன் எதிலிருந்து பெறப்படுகிறது?
25.
ராமன் தோட்டத்திற்கு சென்றான். ஆல மரத்தில் தண்டுப்பகுதி ஒவ்வொரு வருடமும் பருமனாக மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால் தென்னைமரம் இவ்வாறாக பருமனாக மாறவில்லை. ஏன் என யோசிக்கிறான். உங்களால் இதற்கு விளக்கம் கூற முடியுமா?
26.
ஒளிச்சேர்க்கையின் போது இருள் வினைக்கு முன்பு ஏன் ஒளி வினை நடைபெற வேண்டும்?
27.
ஒளிச்சேர்க்கை என்றால் என்ன? இது செல்லில் எங்கு நடைபெறுகிறது?
28.
மலரும் தாவரங்களில் காணப்படும் மூன்று வகையான திசுத் தொகுப்புகளை குறிப்பிடுக.
29.
ஒளிச்சேர்க்கையில் சூரிய ஒளியின் பங்கினை விளக்கு.
30.
ஒளிச்சேர்க்கையின் ஒளிசார்ந்த செயல் எவ்வாறு ஒளிசாராத செயலிலிருந்து வேறுபடுகிறது. இந்நிகழ்ச்சியில் ஈடுபடும் மூலப்பொருள்கள் யாவை? இறுதிப் பொருட்கள் யாவை? இவ்விரு நிகழ்ச்சிகளும் பசுங்கணிகத்தில் எங்கு நடைபெறுகின்றன?
1.
(a)
எபிபிளாஸ்மா
2.
(c)
இடைவெளி
3.
(a)
சூழ்ந்தமைந்த வாஸ்குலார் கற்றை
4.
(c)
நீர் மூலக்கூறுகள் பிளக்கப்படும் போது
5.
(d)
6.
( )
ஆரப்போக்கு அமைந்த வாஸ்குலார் கற்றை
7.
( )
புறத்தோல் துளை
8.
( )
F1 துகள்கள்
9.
( )
வாயுப்பரிமாற்றம்
10.
( )
காஸ்பேரியன் பட்டைகள்
11.
( )
அகத்தோல்
12.
( )
இருபக்க ஒருங்கமைந்தவை
13.
( )
மைட்டோகாண்ட்ரியா
14.
( )
சைட்டோபிளாசம்
15.
( )
எபிபிளமா மற்றும் அகத்தோல்
16.
சாக்ஸ்
17.
அகத்தோல்
18.
கால்வின்
19.
உணவு கடத்துதல்
20.
நீரைக் கடத்துதல்
21.
(i) புறணியின் கடைசி அடுக்கு அகத்தோலாகும். இது ஒரு வரிசையில் அமைந்த நெருக்கமான பீப்பாய் வடிவ செல்களால் ஆனது. இதன் ஆரச்சுவர்களிலும் உட்புற கிடைமட்ட சுவர்களிலும் காஸ்பேரியன் பட்டைகள் காணப்படுகின்றன.
(ii) சூபெரின் என்ற பொருளால் ஆன, பட்டைகள் காஸ்பேரியன் பட்டைகள் எனப்படுகின்றன.
22.
(i) ஆரப்போக்கு அமைந்தவை
(ii) ஒன்றிணைந்தவை
(iii) சூழ்ந்தமைந்தவை
23.
கார்போஹைட்ரேட்டானது ஆக்ஸிகரணமடைந்து ஆல்கஹாலாக வெளியேறும் நிகழ்வின் பெயர் காற்றில்லா சுவாசம் (நொதித்தல்) ஆகும்.
24.
ஒளிச்சேர்க்கைக்கு தேவையான கார்பன் வளிமண்டலத்தில் உள்ள கார்பன்-டை-ஆக்ஸைடிலிருந்து (CO2) கிடைக்கிறது.
25.
(i) ஆலமரமானது இருவித்திலை தாவரம், வாஸ்குலார் தொகுப்பில் கேம்பியம் திசு காணப்படுகிறது. இந்த கேம்பியம் திசு இரண்டாம் நிலை வளர்ச்சியில் ஈடுபடுவதால் ஒவ்வொரு நாளும் இதன் தண்டுப்பகுதி வளர்கிறது. சைலம் மற்றும் புளோயம் தடிமனாக வளர்ந்து கொண்டே இருக்கும்.
(ii) தென்னை மரமானது ஒருவித்திலைத் தாவரம். இங்கு இரண்டாம் நிலை வளர்ச்சி ஏற்படுவதில்லை. எனவே அது பருமனாக காணப்படுவதில்லை
26.
1. இருள் வினைக்கு உள்நுழையும் பொருட்களான ATP மற்றும் NADPH + H+ ஒளி வினையின் மூலமே உருவாக்கப்படுகிறது.
2. ஒளிச்சார்ந்த வினையில் உண்டான ATP மற்றும் NADPH + H+ உதவியுடன் CO2 ஆனது கார்போஹைட்ரேட்டாக ஒடுக்கமடைகிறது.
3. எனவே இருள் வினைக்கு முன் ஒளிவினை நடைபெற வேண்டும்.
27.
தற்சார்பு ஊட்ட உயிரிகளான ஆல்காக்கள், தாவரங்கள், பச்சை நிறமிகளைக் கொண்ட பாக்டீரியங்கள் போன்றவை சூரிய ஒளி ஆற்றலை பயன்படுத்தி கார்பன் - டை - ஆக்ஸைடு மற்றும் நீரின் உதவியால் தமக்கு வேண்டிய உணவைத் தாமே தயாரித்துக் கொள்ளும் நிகழ்ச்சி ஒளிச்சேர்க்கை எனப்படும்.
இது செல்லில் பசுங்கணிகங்களில் நடைபெறுகிறது.
28.
1. தோல் திசுத்தொகுப்பு அல்லது புறத்தோல் திசுத்தொகுப்பு
2. அடிப்படை அல்லது தளத்திசுத் தொகுப்பு
3. வாஸ்குலார் திசுத்தொகுப்பு
29.
ஒளிச்சேர்க்கையின் முழு நிகழ்ச்சியும் பசுங்கணிகத்தின் உள்ளே நடைபெறுகிறது. ஒளி சார்ந்த வினை அல்லது ஒளி வினை பசுங்கணிகத்தின் கிரானாவிலும், ஒளி சாரா வினை அல்லது இருள்வினை பசுங்கணிகத்தின் ஸ்ட்ரோமாவிலும் நடைபெறுகிறது.
1. ஒளி சார்ந்த வினை அல்லது ஒளிவினை (ஹில் வினை)
இது ராபின் ஹில் (1939) என்பவரால் முதன்முதலில் கண்டறியப்பட்டது. இந்நிகழ்வு சூரிய ஒளியின் முன்னிலையில் தைலக்காய்டு சவ்வில் நடைபெறுகிறது. ஒளிச்சேர்க்கை நிறமிகள் சூரிய ஆற்றலை ஈர்த்து ATP மற்றும் NADPH2 வை உருவாக்குகின்றன. இவை இரண்டும் இருள்வினைக்குப் பயன்படுகின்றன.
2. ஒளிசாரா வினை அல்லது இருள்வினை (உயிர்பொருள் உற்பத்தி நிலை)
இந்நிகழ்ச்சியின் போது ஒளிச்சார்ந்த வினையில் உண்டான ATP மற்றும் NADPH2 உதவியுடன் CO2 ஆனது கார்போஹைட்ரேட்டாக ஒடுக்கமடைகிறது. இது பசுங்கணிகத்தின் ஸ்ட்ரோமா பகுதியில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சி கால்வின் சுழற்சி எனவும் அழைக்கப்படுகிறது. இதற்கு சூரிய ஒளி தேவை இல்லை. கால்வின் சுழற்சியில் காற்றிலிருந்து CO2 ம் ஒளி வினையின் மூலம் உண்டான ATP மற்றும் NADPH2 ம் உள்நுழைகிறது.
30.
அ) ஒளிச்சார்ந்த செயல் மற்றும் ஒளிச்சாரா செயலின் வேறுபாடு:
| வ.எண் | ஒளிச்சார்ந்த வினை | ஒளிச்சாராத வினை |
| 1) | சூரிய ஒளியின் முன்னிலையில் நடைபெறுகிறது | சூரிய ஒளித் தேவை இல்லை |
| 2) | ஒளி வினை பசுங்கணிகத்தின் கிரானாவில் நடைபெறுகிறது | இருள் வினை பசுங்கணிகத்தின் ஸ்ட்ரோமா பகுதியில் நடைபெறுகிறது |
| 3) | ஒளிச்சேர்க்கை நிறமிகள் சூரிய ஆற்றலை ஈர்த்து ATP மற்றும் NADPH + H+ வை உருவாக்குகின்றன | ஒளிச்சார்ந்த வினையில் உண்டான ATP மற்றும் NADPH + H+ உதவியுடன் CO2 ஆனது கார்போஹைட்ரேட்டாக ஒடுக்கப்படுகிறது |
ஆ) இந்நிகழ்ச்சியில் ஈடுபடும் மூலப்பொருட்கள்:
| வ.எண் | வினைகள் | மூலப்பொருள்கள் | இறுதிப் பொருட்கள் |
| 1) | ஒளிச்சார்ந்த வினை | நீர், சூரிய ஒளி ஒளிச்சேர்க்கை நிறமிகள் | ATP, NADPH + H+, O2, H2O |
| 2) | ஒளிச்சாராத வினை | CO2,ATP,NADPH + H+ | குளுக்கோஸ் |
இ) நடைபெறும் இடம்:
ஒளிச்சார்ந்த வினை - பசுங்கணிகத்தின் கிரானாவில் நடைபெறுகிறது
ஒளிச்சாராத வினை - பசுங்கணிகத்தின் ஸ்ட்ரோமா பகுதியில் நடைபெறுகிறது
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards