10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil நாகரிகம், நாடு, சமூகம் - கவிதை பேழை (செய்யுள்) -முத்தொள்ளாயிரம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil அறம்,தத்துவம், சிந்தனைகவிதை பேழை (செய்யுள்) -அக்கறை Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil உயிரின்ஓசை - துணைப்பாடம் -பிருமம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil அறம், தத்துவம், சிந்தனை - கவிதை பேழை (செய்யுள்) -தேம்பாவணி * Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil கலை, அழகியல், புதுமை - உரைநடை உலகம் -பன்முகக் கலைஞர் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil மணற்கேணி - இலக்கணம் - இலக்கணம் -பொது Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 08/11/2019
தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள்
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
கீழ்கண்டவற்றுள் தலைமைச் சுரப்பி என கருதப்படுவது எது?
பீனியல் சுரப்பி
பிட்யூட்டரி சுரப்பி
தைராய்டு சுரப்பி
அட்ரினல் சுரப்பி
2.
கீழுள்ளவற்றுள் எது நாளமுள்ளச் சுரப்பியாகவும், நாளமில்லாச் சுரப்பியாகவும் செயல்படுகிறது?
கணையம்
சிறுநீரகம்
கல்லீரல்
நுரையீரல்
3.
கீழுள்ளவற்றுள் நாளமுள்ளச் சுரப்பியை அடையாளம் காணவும்.
பிட்யூட்டரி சுரப்பி
அட்ரினல் சுரப்பி
உமிழ் நீர் சுரப்பி
தைராய்டு சுரப்பி
4.
அவினா முளைக்குருத்து உறை ஆய்வு _______ என்பவரால் மேற்கொள்ளப்பட்டது.
டார்வின்
N ஸ்மித்
பால்
F.W வெண்ட்
5.
பின்வருவனவற்றுள் எந்த ஹார்மோன் இயற்கையாக தாவரங்களில் காணப்படவில்லை?
2, 4 D
GA 3
ஜிப்ரல்லின்
IAA
6.
தைராய்டு சுரப்பியின் வளர்ச்சி மற்றும் பணிகளை _______ கட்டுப்படுத்துகிறது.
7.
நுனி ஆதிக்கத்தின் மீது எதிர்மறை விளைவு கொண்ட ஹார்மோன் ______ ஆகும்.
8.
ஜிப்ரல்லின்கள் _____ தாவரங்களில் தண்டு நீட்சியடைவதைத் தூண்டுகின்றன.
9.
இலைத்துளையை மூடச் செய்யும் ஹார்மோன் _____.
10.
தாவர உறுப்புகளின் உதிர்தல் மற்றும் கனி பழுப்பதை துரிதப்படுத்தும் வாயு நிலை ஹார்மோன் _____ ஆகும்.
11.
ADH
12.
வளர்ச்சி ஹார்மோன்
13.
பாராதார்மோன்
14.
இன்சுலின்
15.
தைராக்சின்
16.
மிக்ஸிடிமா - வரையறு.
17.
பிட்யூட்டரி சுரப்பியின் கதுப்புகள் யாவை?
18.
தைராய்டு ஹார்மோன்கள் ஏன் “ஆளுமை ஹார்மோன்கள்” என்று அழைக்கப்படுகின்றன?
19.
பாராதைராய்டு ஹார்மோனின் பணிகள் யாவை?
20.
நாளமுள்ளச் சுரப்பிக்கும், நாளமில்லாச் சுரப்பிக்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக.
21.
வேதியியல் தூதுவர்கள் என்பவை யாவை?
22.
23.
செயற்கை ஆக்சின்கள் என்பவை யாவை? எ.கா. தருக.
24.
ஆன்டி டையூரிட்டிக் ஹார்மோன் (ADH) மற்றும் இன்சுலின் குறைவாகச் சுரப்பதால் உண்டாகும் நிலைகள் யாவை? இவை இரண்டும் எவ்வாறு வேறுபடுகிறது?
25.
ஈஸ்ட்ரோஜன்கள் எங்கு உற்பத்தியாகின்றன? மனித உடலில் இவற்றின் பணிகள் யாவை?
26.
ஜிப்ரல்லின்களின் வாழ்வியல் விளைவுகளை எழுதுக.
27.
சஞ்சய் தேர்வறையில் அமர்ந்திருந்தான் தேர்வு துவங்கும் முன், அவனுக்கு அதிகப்படியான வியர்வையும், இதயத்துடிப்பும் காணப்பட்டன. இந்நிலை அவனுக்கு ஏன் ஏற்படுகிறது?
28.
பின்வருவனவற்றில் என்ன நடைபெறும் என எதிர்பார்க்கிறாய்?
அ. ஜிப்ரல்லினை நெல் நாற்றுகளில் தெளித்தால்
ஆ. அழுகிய பழம் பழுக்காத பழத்துடன் சேர்த்து வைக்கப்பட்டால்
இ. வளர்ப்பு ஊடகத்தில் சைட்டோகைனின் சேர்க்கப்படாத போது
1.
(b)
பிட்யூட்டரி சுரப்பி
2.
(a)
கணையம்
3.
(c)
உமிழ் நீர் சுரப்பி
4.
(d)
F.W வெண்ட்
5.
(a)
2, 4 D
6.
( )
தைராய்டைத் தூண்டும் ஹார்மோன் (TSH)
7.
( )
சைட்டோகைனின்கள்
8.
( )
நெல்
9.
( )
அப்சிசிக் அமிலம்
10.
( )
எத்திலின்
11.
டயாபடீஸ் இன்சிபிடஸ்
12.
அக்ரோமேகலி
13.
டெட்டனி
14.
டயாபடீஸ் மெல்லிடஸ்
15.
எளிய காய்டர்
16.
இது பெரியவர்களில் தைராய்டு ஹார்மோன் குறைவாக சுரப்பதால் ஏற்படுகிறது. இதன் காரணமாக குறைவான மூளை செயல்பாடு, முகம் உப்பிய அல்லது வீங்கிய தோற்றம், உடல் எடை அதிகரிப்பு ஆகியவை தோன்றும்.
17.
(i) முன்புறக் கதுப்பு அடினோ ஹைப்போபைசிஸ்
(ii) பின்புறக் கதுப்பு நியூரோ ஹைப்போபைசிஸ்
18.
உடல், மனம் மற்றும் ஆளுமை வளர்ச்சிக்கு தைராய்டு ஹார்மோன் இன்றியமையாதது. அதனால் இது "ஆளுமை ஹார்மோன்" என்று அழைக்கப்படுகிறது.
19.
மனித உடலில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துகிறது. இரத்தத்தில் கால்சியம் அளவை பராமரிப்பதற்காக எலும்பு, சிறுநீரகம் மற்றும் குடல் ஆகியவற்றில் செயலாற்றுகிறது.
20.
நாளமுள்ளச் சுரப்பி
1. நாளங்கள் இல்லை
2. இவற்றின் சுரப்புகள் ஹார்மோன்கள் எனப்படும்.
3. இரத்தத்தின் மூலம் உடலில் பரவுகிறது.
i. பிட்யூட்டரி சுரப்பி
ii. தைராய்டு சுரப்பி
iii. பாரா தைராய்டு சுரப்பி
iv. கணையம் (லாங்கர்ஹான் திட்டுகள்)
v. அட்ரினல் சுரப்பி (கார்டக்ஸ் மற்றும் மெடுல்லா)
vi. இனப்பெருக்க சுரப்பிகள் (விந்தகம் மற்றும் அண்டச் சுரப்பி)
vii. தைமஸ் சுரப்பி
நாளமில்லாச் சுரப்பி
1. நாளங்கள் உண்டு
2. உமிழ்நீர் சுரப்பிகள், பால் சுரப்பிகள் மற்றும் வியர்வை சுரப்பிகள்
3. உமிழ்நீர் சுரப்பியைத் தவிர மற்ற இரண்டு சுரப்பிகள் உடலின் வெளிப்புறத்தில் உள்ளன.
21.
செய்திப் பரிமாற்றத்திற்கு உதவும் சேர்மம் வேதியியல் தூதுவர்கள் என அழைக்கப்படுகின்றன. ஹார்மோன்கள் வேதியியல் தூதுவர்களாக செயல்புரிகின்றன. இவை சுரப்பிகள் (நாளமில்லா சுரப்பிகள்) மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன.
22.
23.
ஆக்சின்களை ஒத்த பண்புகளைக் கொண்ட செயற்கையாகத் தயாரிக்கப்படும் ஆக்சின்கள் செயற்கை ஆக்சின்கள் என அழைக்கப்படுகின்றன.
எடுத்துக்காட்டு: 2,4-D (2, 4 டைகுளோரோ பீனாக்சி அசிட்டிக் அமிலம்)
24.
| ஆன்டி டையூரிட்டிக் ஹார்மோன் (ADH) | இன்சுலின் |
| ADH குறைவாகச் சுரப்பதால் டயாபீடிஸ் இன்சிபிடஸ் ஏற்படுகிறது. | இன்சுலின் குறைவாகச் சுரப்பதால் டயாபீடிஸ் மெலிடஸ் ஏற்படுகிறது |
| ADH குறைவாகச் சுரப்பதால் நீர் மீள உறிஞ்சப்படுவது குறைவதால் அதிகப்படியான சிறுநீர் வெளியேற்றும் நிலை (பாலியூரியா) உண்டாகிறது. | இன்சுலின் குறைவாகச் சுரப்பதால் சிறுநீரில் அதிகப்படியான குளுக்கோஸ் வெளியேறுகிறது. (கிளைக்கோசூரியா). |
25.
ஈஸ்ட்ரோஜன், வளர்ச்சியுறும் அண்டத்தின் கிராஃபியன் செல்களினால் சுரக்கப்படுகின்றன.
ஈஸ்ட்ரோஜனின் பணிகள்:
1. இது பருவமடைதலின் உடல் மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
2. அண்ட செல் உருவாக்கத்தைத் துவக்குகிறது.
3. அண்ட ஃபாலிக்கின் செல்கள் முதிர்வதைத் தூண்டுகிறது.
4. இரண்டாம் நிலை பால்பண்புகள் (மார்பக வளர்ச்சி, குரலில் ஏற்படும் மாற்றம் போன்றவை) வளர்ச்சியடைவதை ஊக்குவிக்கிறது.
26.
1. தாவரங்களின் மீது ஜிப்ரல்லின்களை தெளிக்கும்போது, அது கணுவிடைப் பகுதியின் அசாதாரணமான நீட்சியைத் தூண்டுகிறது. (எ.கா) மக்காச் சோளம் மற்றும் பட்டாணி.
2. நெருங்கிய இலையடுக்கம் கொண்ட தாவரங்களின் மீது ஜிப்ரல்லின்களைத் தெளிக்கும் போது, திடீரென தண்டு நீட்சியடைவதும் அதன் தொடர்ச்சியாக மலர்தலும் நிகழ்கின்றன. இதற்கு போல்டிங் (bolting) என்று பெயர்.
3. ஜிப்ரல்லின்கள் இருபாலினைந்த தாவரங்களில் (ஓரில்லத் தாவரங்களில்) ஆண் மலர்கள் தோன்றுவதை ஊக்குவிக்கின்றன (வெள்ளரி).
4. ஜிப்ரல்லின்கள் உருளைக் கிழங்கின் உறக்க நிலையை நீக்குகின்றன.
5. விதைகளற்ற கனிகளைத் (கருவூறாக் கனிகள் - கருவுறுதல் நடைபெறாமலேயே கனிகள் உருவாதல்) தூண்டுவதில் ஆக்சின்களை விட ஜிப்ரல்லின்கள் திறம் மிக்கவை (எ.கா) தக்காளி.
27.
இந்நிலை அவனுக்கு அட்ரினலின் சுரப்பதால் ஏற்படுகிறது. தேர்வு பயத்தின் காரணமாக அட்ரினலின் சுரந்து அதிகப்படியான வியர்வை, அதிகரித்த இதயத்துடிப்பு, மூச்சுவீதம் அதிகரித்தல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.
28.
அ) ஜிப்ரல்லினை நெல் நாற்றுகளில் தெளித்தால்:
ஜிப்ரல்லினை நெல் நாற்றுகளில் தெளிக்கும் போது, அது போல்டிங்கைத் தூண்டுகிறது. இது விதை உற்பத்தியைத் தூண்டும் இயற்கை வழி முயற்சி ஆகும்.
ஆ) அழுகிய பழம் பழுக்காத பழத்துடன் சேர்த்து வைக்கப்பட்டால்
அழுகிய பழம் பழுக்காத பழத்துடன் சேர்த்து வைக்கப்பட்டால், அழுகிய பழத்தில் இருந்து உற்பத்தியாகும் எத்திலின் பழுக்காத பழத்தினை முதிர்ச்சி அடைய செய்து விரைவாகப் பழுக்கத் தூண்டும்.
இ) வளர்ப்பு ஊடகத்தில் சைட்டோகைனின் சேர்க்கப்படாத போது;
வளர்ப்பு ஊடகத்தில் சைட்டோகைனின் சேர்க்கப்படாத போது, செல்பகுப்பு, வளர்ச்சி உருவத்தோற்றவியல் முதலியவற்றை காண இயலாது.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil கூட்டாஞ்சோறு - இலக்கணம் - தொகைநிலை தொடர்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil பண்பாடு - கவிதை பேழை (செய்யுள்) -முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil உயிரின்ஓசை - இலக்கணம் - தொகாநிலை தொடர் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil இயற்கை, சுற்றுசூழல், அறிவியல் - கவிதை பேழை (செய்யுள்) -மேகம் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards