10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil நாகரிகம், நாடு, சமூகம் - கவிதை பேழை (செய்யுள்) -முத்தொள்ளாயிரம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil அறம்,தத்துவம், சிந்தனைகவிதை பேழை (செய்யுள்) -அக்கறை Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil உயிரின்ஓசை - துணைப்பாடம் -பிருமம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil அறம், தத்துவம், சிந்தனை - கவிதை பேழை (செய்யுள்) -தேம்பாவணி * Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil கலை, அழகியல், புதுமை - உரைநடை உலகம் -பன்முகக் கலைஞர் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil மணற்கேணி - இலக்கணம் - இலக்கணம் -பொது Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 30/09/2019
தாவர மற்றும் விலங்கு ஹார்மோன்கள்
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
எந்த ஹார்மோன் உற்பத்திக்கு அயோடின் அவசியமாகிறது? நாம் உட்கொள்ளும் உணவில் அயோடின் குறைவாக இருப்பதால் ஏற்படும் விளைவுகள் யாவை?
2.
தைராய்டு ஹார்மோன்கள் ஏன் “ஆளுமை ஹார்மோன்கள்” என்று அழைக்கப்படுகின்றன?
3.
பிட்யூட்டரி சுரப்பியின் பின் கதுப்பில் சுரக்கும் ஹார்மோன்கள் யாவை? அவை எந்த திசுக்களின் மேல் செயல்படுகின்றன?
4.
பாராதைராய்டு ஹார்மோனின் பணிகள் யாவை?
5.
நாளமுள்ளச் சுரப்பிக்கும், நாளமில்லாச் சுரப்பிக்கும் உள்ள வேறுபாடுகளை எழுதுக.
6.
வேதியியல் தூதுவர்கள் என்பவை யாவை?
7.
தாவரங்களில் இலை மற்றும் கனி உதிர்தலைத் தடைசெய்ய நீ என்ன செய்வாய்? தகுந்த காரணங்களுடன் கூறுக.
8.
அப்சிசிக் அமிலத்தின் ஏதேனும் இரண்டு வாழ்வியல் விளைவுகளைத் தருக.
9.
10.
செயற்கை ஆக்சின்கள் என்பவை யாவை? எ.கா. தருக.
1.
1. தைராய்டு ஹார்மோன் உற்பத்திக்கு அயோடின் அவசியமாகிறது.
2. நாம் உட்கொள்ளும் உணவில் அயோடின் குறைவாக இருந்தால் எளிய காய்டர் (தைராய்டு பெருக்கம்) ஏற்படும்.
2.
உடல், மனம் மற்றும் ஆளுமை வளர்ச்சிக்கு தைராய்டு ஹார்மோன் இன்றியமையாதது. அதனால் இது "ஆளுமை ஹார்மோன்" என்று அழைக்கப்படுகிறது.
3.
சுரக்கப்படும் ஹார்மோன்:
அ) வாசோபிரஸ்ஸின் அல்லது ஆன்டிடையூரிட்டிக் ஹார்மோன் (ADH)
சிறுநீரக குழல்களில் நீர் மீள உறிஞ்சப்படுதலை அதிகரிக்கிறது. இதன் காரணமாக சிறுநீர் மூலம் வெளியேற்றப்படும் நீர் இழப்பைக் குறைக்கிறது. எனவே இது ஆன்டிடையூரிட்டிக் ஹார்மோன் (சிறுநீர் பெருக்கெதிர் ஹார்மோன்) எனப்படுகிறது. ADH குறைவாக சுரப்பதால், நீர் மீள உறிஞ்சப்படுவது குறைவதால் அதிகப்படியான சிறுநீர் வெளியேற்றும் நிலை (பாலியூரியா) உண்டாகிறது. இக்குறைபாடு டயாபடீஸ் இன்சிபிடஸ் எனப்படும்.
ஆ) ஆக்ஸிடோசின்
பெண்களின் குழந்தைப்பேற்றின் போது கருப்பையை சுருக்கியும், விரிவடையச் செய்தும், குழந்தைப்பேற்றுக்குப் பிறகு பால் சுரப்பிகளில் பாலை வெளியேற்றுவதற்கும் காரணமாகிறது.
4.
மனித உடலில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துகிறது. இரத்தத்தில் கால்சியம் அளவை பராமரிப்பதற்காக எலும்பு, சிறுநீரகம் மற்றும் குடல் ஆகியவற்றில் செயலாற்றுகிறது.
5.
நாளமுள்ளச் சுரப்பி
1. நாளங்கள் இல்லை
2. இவற்றின் சுரப்புகள் ஹார்மோன்கள் எனப்படும்.
3. இரத்தத்தின் மூலம் உடலில் பரவுகிறது.
i. பிட்யூட்டரி சுரப்பி
ii. தைராய்டு சுரப்பி
iii. பாரா தைராய்டு சுரப்பி
iv. கணையம் (லாங்கர்ஹான் திட்டுகள்)
v. அட்ரினல் சுரப்பி (கார்டக்ஸ் மற்றும் மெடுல்லா)
vi. இனப்பெருக்க சுரப்பிகள் (விந்தகம் மற்றும் அண்டச் சுரப்பி)
vii. தைமஸ் சுரப்பி
நாளமில்லாச் சுரப்பி
1. நாளங்கள் உண்டு
2. உமிழ்நீர் சுரப்பிகள், பால் சுரப்பிகள் மற்றும் வியர்வை சுரப்பிகள்
3. உமிழ்நீர் சுரப்பியைத் தவிர மற்ற இரண்டு சுரப்பிகள் உடலின் வெளிப்புறத்தில் உள்ளன.
6.
செய்திப் பரிமாற்றத்திற்கு உதவும் சேர்மம் வேதியியல் தூதுவர்கள் என அழைக்கப்படுகின்றன. ஹார்மோன்கள் வேதியியல் தூதுவர்களாக செயல்புரிகின்றன. இவை சுரப்பிகள் (நாளமில்லா சுரப்பிகள்) மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன.
7.
தாவரங்களில் இலை மற்றும் கனி உதிர்தலைத் தடை செய்ய ஆக்சினைத் தெளிக்க வேண்டும் ஏனெனில் ஆக்சின்கள் உதிர்தல் அடுக்கு உருவாதலை தடை செய்கின்றன.
8.
அப்சிசிக் அமிலத்தின் வாழ்வியல் விளைவுகள்:
i) ABA உதிர்தல் நிகழ்வை (இலைகள், மலர்கள் மற்றும் கனிகள் ஆகியவை கிளைகளிலிருந்து தனித்து உதிர்ந்து விடுவது) ஊக்குவிக்கிறது.
ii) நீர் இறுக்கம் மற்றும் வறட்சிக் காலங்களில் ABA இலைத்துளையை மூடச் செய்கிறது.
9.
10.
ஆக்சின்களை ஒத்த பண்புகளைக் கொண்ட செயற்கையாகத் தயாரிக்கப்படும் ஆக்சின்கள் செயற்கை ஆக்சின்கள் என அழைக்கப்படுகின்றன.
எடுத்துக்காட்டு: 2,4-D (2, 4 டைகுளோரோ பீனாக்சி அசிட்டிக் அமிலம்)
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil கூட்டாஞ்சோறு - இலக்கணம் - தொகைநிலை தொடர்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil பண்பாடு - கவிதை பேழை (செய்யுள்) -முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil உயிரின்ஓசை - இலக்கணம் - தொகாநிலை தொடர் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil இயற்கை, சுற்றுசூழல், அறிவியல் - கவிதை பேழை (செய்யுள்) -மேகம் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards