10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 14/09/2019
அறிவியல் காலாண்டு
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
லென்சிற்கும் குவியத்திற்கும் இடையேயான தொலைவு
குவிய தொலைவு
முக்கிய அச்சு
வளைவு ஆரம்
மையம்
2.
மின் உருகு இழை
குறைந்த உருகுநிலை கொண்டது
உயர் மின்தடையுடையது
தாழ் மின்தடையுடையது
அ மற்றும் ஆ
3.
பொருளானது வெப்பப்படுத்தும்போது அல்லது குளிர்விக்கப்படும் போது நீள் விரிவு ______ ல் ஏற்படும் மாற்றம்.
நீளம்
பரப்பு
பருமன்
அடர்த்தி
4.
__________________ ஹார்மோன் குறைவாக சுரப்பதால் குழந்தைகளுக்கு குள்ளத்தன்மை ஏற்படுகிறது.
வளர்ச்சி
பாலிக்கிள்களைத் தூண்டும்
கொனடோட்ராபிக்
அட்ரினல் கொனடோட்ராபிக்
5.
பின்வருவனவற்றுள் ஒத்த அணு மூலக்கூறுகளை எது?
N2
NH3
HCl
N2O
6.
இது ஒரு வெக்டர் அளவு
வேகம்
உந்தம்
தொலைவு
நீளம்
7.
இயக்க நிலையில் உள்ள பொருள் இயங்கும் திசையிலிருந்து மாறாமல், திசை மாற்றத்தினை எதிர்க்கும் பண்பு
விசை
உந்தம்
திசையில் நிலைமம்
நியூட்டனின் விதி
8.
முன் பிட்யூட்டரி சுரக்கும் __________ எனவும் ஹார்மோன், பால் உற்பத்தியைத் தூண்டுகிறது.
ஆக்ஸிடாசின்
புரோலாக்டின்
புரோஜெஸ்டிரான்
ஈஸ்ட்ரோஜென்
9.
ஒரு குவி லென்சானது, மிகச்சிறிய மெய்பிம்பத்தை முதன்மைக் குவியத்தில் உருவாக்கினால், பொருள் வைக்கப்பட்டு இடம் ______
முதன்மைக் குவியம்
ஈறிலாத் தொலைவு
2f
f க்கும் 2f க்கும் இடையில்
10.
இதயத்தின் இதயம் என அழைக்கப்படுவது ____
SA கணு
AV கணு
பர்கின்ஜி இழைகள்
ஹிஸ் கற்றைகள்
11.
ஒரு பொருளை வெப்பப்படுத்தினாலோ அல்லது குளிர்வித்தாலோ அப்பொருளின் நிறையில் ஏற்படும் மாற்றம் _____.
நேர்க்குறி
எதிர்க்குறி
சுழி
இவற்றில் எதுவுமில்லை
12.
ஒரு கிலோகிராம் எடை என்பது ______ ற்கு சமமாகும்.
9.8 டைன்
9.8 \(\times\) 104 N
98 \(\times\) 104 டைன்
980 டைன்
13.
மெலடோனின் என்பது யாது?
14.
செயல்பாட்டின் அடிப்படையில் நரம்பு செல்லினை வகைப்படுத்து.
15.
கேஸ்ட்ருலாவாக்கம் என்றால் என்ன?
16.
சிறுநீரக இனப்பெருக்க மண்டலம் பற்றி கூறு.
17.
ஒரு கடத்தியின் அளவை தடிமனாக்கினால் அதன் மின் தடையின் மதிப்பு என்னவாகும்?
18.
விழி ஏற்பமைவுத் திறன் என்றால் என்ன?
19.
நிறை – எடை, இவற்றை வேறுபடுத்துக.
20.
இருவித்திலை தாவர இலையின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தினை படத்துடன் விவரி.
21.
கீழ்கண்டவற்றின் மூலக்கூறு நிறையைக் காண்க.
1) H2O
2) CO2
3) Ca3(PO4)2
22.
நியூட்டனின் இயக்கத்திற்கான விதிகளை விளக்குக.
23.
1 கிகி நிறையுடைய பந்து ஒன்று 10 மீ.வி-1 திசைவேகத்தில் தரையின் மீது விழுகிறது. மோதலுக்கு பின் ஆற்றல் மாற்றமின்றி, அதே வேகத்தில் உயரச் செல்கிறது எனில் அப்பந்தில் ஏற்படும் உந்த மாற்றத்தினை கணக்கிடுக.
24.
கார்ட்டீசியன் குறியீட்டு மரபினைக் குறிப்பிடுக.
25.
நீள்வெப்ப விரிவு குணகம் வரையறு.
26.
மெக்னீசியம்,சல்பைட்டில் உள்ள Mg மற்றும் Sன் நிறை விகிதம் 3:4 Mg மற்றும் S அணுக்களின் விகித எண்கள் என்ன?
27.
ஒரு மின் தூக்கியில் 20 kg நிறையுடைய ஒரு பொருள் சுருள் தராசு மூலம் தொங்கவிடப்படுகிறது. கீழ்கண்ட நிலைகளில் எடை என்னவாக இருக்கும்?
(i) மின்தூக்கி 2 m/s2 முடுக்கத்துடன் மேலே உயரும்போது
(ii) அதே முடுக்கம் 2 ms-2 ல் மின்தூக்கி இறங்கும்போது
(iii) மின்தூக்கி மாறா திசைவேகம் 2 ms-1 உடன் இறங்கும்போது g =10ms-2.
28.
சஞ்சய் தேர்வறையில் அமர்ந்திருந்தான் தேர்வு துவங்கும் முன், அவனுக்கு அதிகப்படியான வியர்வையும், இதயத்துடிப்பும் காணப்பட்டன. இந்நிலை அவனுக்கு ஏன் ஏற்படுகிறது?
29.
ஆந்தை போன்ற இரவு நேரப் பறவைகளின் கண்களில் உள்ள கார்னியா மற்றும் கண் பாவை ஆகியவை அளவில் பெரியதாக உள்ளன. இவ்வமைப்பு அவற்றுக்கு எவ்வாறு உதவுகின்றன?
1.
(a)
குவிய தொலைவு
2.
(d)
அ மற்றும் ஆ
3.
(a)
நீளம்
4.
(a)
வளர்ச்சி
5.
(a)
N2
6.
(b)
உந்தம்
7.
(c)
திசையில் நிலைமம்
8.
(b)
புரோலாக்டின்
9.
(b)
ஈறிலாத் தொலைவு
10.
(a)
SA கணு
11.
(c)
சுழி
12.
(c)
98 \(\times\) 104 டைன்
13.
மெலடோனின் என்னும் ஹார்மோன் பினியல் சுரப்பியில் சுரக்கிறது. இந்த ஹார்மோன் காலத்தூதுவர்கள் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் உடல் முழுமைக்கும் இரவு நேரத்தினை உணர்த்தும் பணியை இந்த ஹார்மோன் மேற்கொள்கிறது.
14.
(i) உணர்ச்சி அல்லது உட்செல் நரம்பு செல்கள்.
(ii) இயக்க அல்லது வெளிச்செல் நரம்பு செல்கள்.
(iii) சங்கம நரம்பு செல்கள்
15.
மறு சீரமைப்பின் மூலம் பிளாஸ்டுலாவானது முதன்மை கருக்கோள அடுக்கு செல்களை உள்ளடக்கிய (புறப்படை, இடைப்படை, அகப்படை) கேஸ்ட்ருலாவாக மாற்றமடைவது கருக்கோளமாதல் என்று அழைக்கப்படுகிறது.
16.
இது கழிவு நீக்க மற்றும் இனப்பெருக்க மண்டலங்களை உள்ளடக்கியது. கருநிலையில் உள்ள போது இவ்விரு மண்டலங்களும் தனித்தனியே வளர்ச்சியடைகின்றன. ஆனால் முதிர் உயிரியில் இம்மண்டலங்கள் ஒன்றிணைந்து, சிறுநீரக இனப்பெருக்க மண்டலம் என்ற ஒரே மண்டலமாகிறது.
17.
ஒரு கடத்தியின் மின்தடையானது (R) அதன் நீளத்திற்கு (L) நேர்தகவிலும் குறுக்கு வெட்டு பரப்பிற்கு (A) எதிர்தகவில் அமையும்.
\(R \propto \frac{L}{A}\)
ஆகவே கடத்தியின் அளவை தடிமனாக்கினால் அதன் மின்தடையின் மதிப்பு குறையும்.
18.
அருகில் உள்ள மற்றும் தொலைவில் உள்ள பொருள்களைத் தெளிவாகக் காண்பதற்கு ஏற்ப விழி லென்சு தன்னை மாற்றி அமைத்துக் கொள்ளும் தன்மை, ‘விழி ஏற்பமைவுத் திறன்’ எனப்படுகிறது.
19.
| நிறை | எடை |
|---|---|
| நிறை என்பது பொருட்களின் அடிப்படை பண்பாகும் | ஒரு பொருள் மீது செயல்படும் ஈர்ப்பு விசையின் மதிப்பு அப்பொருளின் எடை ஆகும். |
| இதன் அலகு கிலோகிராம் | இதன் அலகு நியூட்டன் |
| இடத்திற்கு இடம் மாறுபடாது. | இடத்திற்கு இடம் எடையின் மதிப்பு மாறுபடும். |
20.
இரு வித்திலைத் தாவர இலையின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் கீழ்கண்ட பகுதிகள் உள்ளன.
(i) மேல்புறத்தோல்:
ஓரடுக்கு நெருக்கமான பாரன்கைமா செல்களால் ஆனது. மேல்புறத் தோலின் வெளிப்புறத்தில் கியூட்டிகிள் படலம் உள்ளது. இலைத்துளைகள் குறைவான எண்ணிக்கையில் காணப்படுகின்றன.
(ii) கீழ்புறத்தோல்:
வெளிப்புறத்தில் கியூட்டிகிளுடன் ஓரடுக்கு நெருக்கமான பாரன்கைமா செல்களால் ஆன அடுக்கு காணப்படுகிறது. இதில் பல இலைத்துளைகள் உள்ளன. ஒவ்வொரு இலைத்துளையும் பசுங்கணிகத்துடன் கூடிய இரண்டு காப்பு செல்களால் சூழப்பட்டுள்ளது. இலைத்துளைகள் நீராவிப்போக்கு நடைபெற உதவி புரிகின்றன.
(iii) இலையிடைத்திசு:
மேல்புறத் தோலுக்கும் கீழ்புறத் தோலுக்கும் இடையே காணப்படும் தளத்திசு இலையிடைத்திசு அல்லது மீசோபில் எனப்படும். இதில் பாலிசேட் பாரன்கைமா மற்றும் ஸ்பாஞ்சி பாரன்கைமா என இரு வகை செல்கள் உள்ளன .
அ. பாலிசேட் பாரன்கைமா:
மேல்புறத்தோலுக்கு கீழே காணப்படுகிறது. நெருக்கமாக அமைந்த நீளமான செல்கள், அதிக பசுங்கணிகங்களுடனும் காணப்படுகிறது. இச்செல்கள் ஒளிச் சேர்க்கை பணியை மேற்கொள்கின்றன.
ஆ. ஸ்பாஞ்சி பாரன்கைமா:
இவ்வடுக்கு பாலிசேட் பாரன்கைமாவிற்கு கீழே உள்ளது. இதில் கோள வடிவ அல்லது உருளையான அல்லது ஒழுங்கற்ற வடிவம் கொண்ட செல்கள் நெருக்கமின்றி செல் இடைவெளிகளுடன் அமைந்துள்ளன. இது வாயு பரிமாற்றத்திற்கு உதவுகிறது.
வாஸ்குலார் கற்றைகள்:
வாஸ்குலார் கற்றைகள் மைய நரம்பில் மற்றும் பிற நரம்புப் பகுதிகளில் அமைந்துள்ளது. வாஸ்குலார் கற்றைகள், ஒன்றிணைந்தவை, ஒருங்கமைந்தவை மற்றும் மூடியவை. ஒவ்வொரு வாஸ்குலார் கற்றையைச் சுற்றிலும் பாரன்கைமாவால் ஆன கற்றை உறை உள்ளது. வாஸ்குலார் கற்றையில் சைலம் மேல்புறத்தோலை நோக்கியும், புளோயம் கீழ்புறத்தோலை நோக்கியும் அமைந்துள்ளது.
21.
1. H2O
H ன் அணு நிறை = 1, O -ன் அணு நிறை = 16
H2O ன் மூலக்கூறு நிறை = (1 x 2) + (16 x 1) = 2 + 16
H2O ன் மூலக்கூறு நிறை = 18 கி
2. CO2
C ன் அணு நிறை = 12, O - ன் அணு நிறை = 16
CO2 ன் மூலக்கூறு நிறை = (12 x 1) + (16 x 2)
= 12 + 32
CO2 ன் மூலக்கூறு நிறை = 44 கி
3. Ca3(PO4)2
Ca ன் அணு நிறை = 40, P -ன் அணு நிறை = 30,
O ன் அணு நிறை = 16
Ca3(PO4)2 ன் மூலக்கூறு நிறை = (40 x 3) + [30 + (16 x 4)] x 2
= 120 + (94 x 2)
= 120 + 188
Ca3(PO4)2 ன் மூலக்கூறு நிறை = 308 கி.
22.
நியூட்டனின் முதல் விதி:
ஒவ்வொரு பொருளும் புறவிசை ஏதும் செயல்படாத வரையில், தமது ஓய்வு நிலையிலோ அல்லது சீராக இயங்கிக் கொண்டிருக்கும் நேர்க்கோட்டு நிலையிலோ தொடர்ந்து இருக்கும்.
நியூட்டனின் இரண்டாவது இயக்க விதி:
பொருள் ஒன்றின் மீது செயல்படும் விசையானது அப்பொருளின் உந்த மாறுபாட்டு வீதத்திற்கு நேர்தகவில் அமையும். மேலும் இந்த உந்த மாறுபாடு விசையின் திசையிலேயே அமையும்.
நியூட்டனின் மூன்றாம் இயக்க விதி:
ஒவ்வொரு விசைக்கும் சமமான எதிர்விசை உண்டு. விசையும் எதிர்விசையும் எப்போதும் இரு வேறு பொருள்கள் மீது செயல்படும்.
23.
m = 1கிகி ; v = 10 மீ.வி-1
மோதலுக்கு பின் அதே வேகத்தில் பந்து உயரச் செல்வதால் உந்தம் mv - லிருந்து - mv க்கு மாற்றமடைகிறது. ஆகவே உந்த மாற்றம்
உந்த மாற்றம் = இறுதி உந்தம் - தொடக்க உந்தம்
= - mv - mv
= -2 mv = - 2 \(\times\) 1 \(\times\) 10
= - 20 கிகி மீ.வி-1
24.
(i) பொருள் எப்போதும் லென்சிற்கு இடப்பக்கம் வைக்கப்பட வேண்டும்.
(ii) அனைத்து தொலைவுகளும், ஒளியியல் மையத்திலிருந்தே அழைக்கப்பட வேண்டும்.
(iii) படுகதிரின் திசையில் மேற்கொள்ளப்படும் அளவீடுகளை நேர்குறியாகக் கொள்ள வேண்டும்.
(iv) படுகதிரின் திசைக்கு எதிர்த்திசையில் மேற்கொள்ளப்படும் அளவீடுகளை எதிர்குறியாகக் கொள்ள வேண்டும்.
(v) முதன்மை அச்சுக்குச் செங்குத்தாக மேல் நோக்கி அளக்கப்படும் அளவுகளை நேர்குறியாகக் கொள்ள வேண்டும்.
(vi) முதன்மை அச்சுக்குச் செங்குத்தாகக் கீழ்நோக்கி அளக்கப்படும் அளவுகளை எதிர்குறியாகக் கொள்ள வேண்டும்.
25.
ஓரலகு வெப்பநிலை உயர்வால் பொருளின் நீளத்தில் ஏற்படும் மாற்றத்திற்கும் ஓரலகு நீளத்திற்கும் உள்ள தகவு, நீள் வெப்ப விரிவு குணகம் என அழைக்கப்படும். இதன் SI அலகு கெல்வின்-1.
26.
மெக்னீசியம் சல்பைட்டின் வாய்ப்பாடு = MgS
Mg மற்றும் Sன் நிறை விகிதம் = 3:4
3 கி மெக்னீசியத்தில் உள்ள அணுக்களின் எண்ணிக்கை = \(\cfrac { { N }_{ A } }{ 24 } \times 3=\cfrac { { N }_{ A } }{ 8 } \)
4 கி S -ல் உள்ள அணுக்களின் எண்ணிக்கை
= \(\cfrac { { N }_{ A } }{ 32 } \times 4=\cfrac { { N }_{ A } }{ 8 } \)
Mg மற்றும் S-அணுக்களின் எண்களின் விகிதம்
= \(\cfrac { { N }_{ A } }{ 8 } :\cfrac { { N }_{ A } }{ 8 } \)
= 1:1
27.
கொடுக்கப்பட்டவை:
ஒரு பொருளின் நிறை m =20 kg
கண்டறிய:
தோற்ற எடை R =?
(i) முடுக்கம் 2 m/s2 உடன் மின்தூக்கி மேலேறும்போது
(ii) முடுக்கம் 2 m/s2 உடன் மின்தூக்கி கீழிறங்கும்போது
(iii) மாறா திசைவேகம் 2 ms-1 உடன் மின்தூக்கி கீழிறங்கும்போது
(i) மேலேறும்போது R= m (g + a)
R=20[10+2] = 240 N
= 24 kg எடை
(ii) கீழிறங்கும்போது R =m (g-a)
= 20 (10 - 2)
= 20 x 8 = 160 N
(iii) மாறா திசைவேகத்தில் a =0
R = mg= 20 x 10 = 200 N = 20 kg எடை
28.
இந்நிலை அவனுக்கு அட்ரினலின் சுரப்பதால் ஏற்படுகிறது. தேர்வு பயத்தின் காரணமாக அட்ரினலின் சுரந்து அதிகப்படியான வியர்வை, அதிகரித்த இதயத்துடிப்பு, மூச்சுவீதம் அதிகரித்தல் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்துகிறது.
29.
இந்த பண்பானது பார்க்கும் தூரம் மற்றும் பரப்பளவு அதிகமாக கிடைக்கிறது. மேலும் இரவு நேரங்களில் அதிக அளவு ஒளி கிடைக்க பயன்படுகிறது.
எனவே ஆந்தை போன்ற இரவு நேரப் பறவைகளின் கண்களின் கார்னியா மற்றும் கண்பாவை ஆகியவை அளவில் பெரியதாக உள்ளன.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards