10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 08/11/2019
தாவரங்கள் மற்றும் விலங்குகளில் இனப்பெருக்கம்
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
கீழ்க்கண்டவற்றுள் எது IUCD ?
காப்பர் – டி
மாத்திரைகள் (Oral Pills)
கருத்தடை திரைச்சவ்வு
அண்டநாளத் துண்டிப்பு
2.
விந்து உருவாக்கத்திற்கு ஊட்டமளிக்கும் பெரிய நீட்சியடைந்த செல்கள்_____.
முதல்நிலை விந்து வளர் உயிரணு
செர்டோலி செல்கள்
லீடிக் செல்கள்
ஸ்பெர்மட்டோகோனியா
3.
விந்துவை உற்பத்தி செய்யக்கூடிய அடர்த்தியான, முதிர்ந்த மிகவும் சுருண்ட தனித்த நாளம் இவ்வாறு அழைக்கப்படுகிறது?
எபிடிடைமிஸ்
விந்து நுண்நாளங்கள்
விந்து குழல்கள்
விந்துப்பை நாளங்கள்
4.
மூடிய விதையுடைய தாவரங்களில் (ஆஞ்சியோஸ்பெர்ம்கள்) ஆண் கேமீட் எவ்வகை செல்லிலிருந்து உருவாகிறது ?
உற்பத்தி செல்
உடல் செல்
மகரந்தத்தூள் தாய் செல்
மைக்ரோஸ்போர்
5.
காற்றின் மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறும் மலர்களில் காணப்படும் பண்புகள்_____.
காம்பற்ற சூல்முடி
சிறிய மென்மையான சூல்முடி
வண்ண மலர்கள்
பெரிய இறகு போன்ற சூல்முடி
6.
மலரின் இன்றியமையாத பாகங்கள் _____
புல்லிவட்டம், அல்லிவட்டம்
புல்லிவட்டம், மகரந்தத்தாள் வட்டம்
அல்லிவட்டம், சூலக வட்டம்
மகரந்தத்தாள் வட்டம், சூலக வட்டம்
7.
இலைகள் மூலம் இனப்பெருக்கம் செய்யும் தாவரம் _________.
வெங்காயம்
வேம்பு
இஞ்சி
பிரையோஃபில்லம்
8.
புரோலாக்டின் _______ ஆல் உற்பத்தி செய்யப்படுகிறது.
9.
குழந்தை பிறப்பிற்குப் பின் பால் சுரப்பிகளால் சுரக்கப்படும் முதல் சுரப்பு ______ எனப்படும்.
10.
கருவுறுதலுக்குப் பின் ______ நாட்களில் கரு பதித்தல் நடைபெறுகிறது.
11.
பிளனேரியாவில் நடைபெறும் பாலிலா இனப்பெருக்கம் ______ ஆகும்.
12.
இருவித்திலை தாவரத்தில் கருவுறுதல் நடைபெறும்போது சூல்பையில் உள்ள செல்களின் எண்ணிக்கை ______.
13.
கரு பதித்தல்
14.
கர்ப்ப காலம்
15.
குழந்தை பிறப்பு
16.
துண்டாதல்
17.
மொட்டு விடுதல்
18.
பிளத்தல்
19.
கருவுறுதலின் முக்கியத்துவம் யாது?
20.
ஆட்டோகேமி - வரையறு.
21.
இனச்செல் உருவாக்கம் என்றால் என்ன?
22.
கொடுக்கப்பட்டுள்ள படத்தில் A, B, C மற்றும் D ஆகிய பாகங்களை அடையாளம் காணவும்.

23.
கொலஸ்ட்ரம் (சீம்பால்) என்றால் என்ன? பால் உற்பத்தியானது ஹார்மோன்களால் எவ்வாறு ஒழுங்குபடுத்தப்படுகிறது?
24.
மூவிணைவு -வரையறு
25.
பிளனேரியாவை துண்டு துண்டாக வெட்டினால் என்ன நிகழும் ?
26.
அண்டத்தின் அமைப்பை படத்துடன் விளக்குக.
27.
பூக்கும் தாவரத்திலுள்ள சூலகத்தின் அமைப்பை விளக்குக.
28.
பூக்கும் தாவரத்தில் உள்ள மகரந்தத்தூள் முளைத்து மகரந்தக் குழாயை உருவாக்குகிறது. இது இரண்டு ஆண் கேமீட்டுகளை எடுத்துச்செல்கிறது. அண்ட செல்லுடன் கருவுறுதல் நடைபெறுவதற்கு ஒரே ஒரு ஆண் கேமீட் மட்டும் போதுமானதெனில், இரண்டு ஆண் கேமீட் ஏன் எடுத்துச் செல்லப்படுகிறது ?
1.
(a)
காப்பர் – டி
2.
(b)
செர்டோலி செல்கள்
3.
(a)
எபிடிடைமிஸ்
4.
(a)
உற்பத்தி செல்
5.
(d)
பெரிய இறகு போன்ற சூல்முடி
6.
(d)
மகரந்தத்தாள் வட்டம், சூலக வட்டம்
7.
(d)
பிரையோஃபில்லம்
8.
( )
பிட்யூட்டரி சுரப்பி
9.
( )
கொலஸ்ட்ரம் (சீம்பால்)
10.
( )
6 முதல் 7
11.
( )
இழப்பு மீட்டல்
12.
( )
ஏழு
13.
கருவுற்ற முட்டை எண்டோமெட்ரியத்தில் பதித்தல்
14.
கருவுறுதலுக்கும் குழந்தை பிறப்பிற்கும் இடைப்பட்ட கால அளவு
15.
கருப்பையிலிருந்து குழந்தை வெளியேற்றம்
16.
ஸ்பைரோகைரா
17.
ஈஸ்ட்
18.
அமீபா
19.
i) சூற்பையைத் தூண்டி, கனியை உருவாக்குகிறது.
ii) புதிய பண்புகள் தோன்றக் காரணமாகிறது.
20.
ஒரு மலரிலுள்ள மகரந்தத்தாள் அதே மலரில் உள்ள சூலக முடியை அல்லது அதே தாவரத்தில் உள்ள வேறொரு மலரின் சூலக முடியைச் சென்றடைவது தன் மகரந்தச்சேர்க்கை எனப்படும்.
எ.கா. ஹைபிஸ்கஸ்
21.
i) ஆண்களில் விந்துவும், பெண்களில் அண்டமும் முட்டை உருவாதல் என்பது இனச்செல் உருவாக்கம் என்று அழைக்கப்படுகிறது.
ii) இது விந்து செல் உருவாக்கம் (விந்து உருவாதல்) மற்றும் அண்டசெல் உருவாக்கம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
iii) இதன் மூலம் ஒற்றைமய செல்களை உடைய இனச்செல்கள் உருவாக்கப்படுகின்றன.
22.
A - எக்ஸைன்
B - இன்டைன்
C - உற்பத்திச்செல்
D - உடல் உட்கரு
23.
1. குழந்தை பிறப்பிற்கு பிறகு முதல் 2 நாட்களிலிருந்து 3 நாட்களுக்குள் மார்பகங்களால் சுரக்கப்படும் பால் சீம்பால் (கொலஸ்ட்ரம்) எனப்படும்.
2. முன்புற பிட்யூட்டரி சுரக்கும் புரோலாக்டின் என்னும் ஹார்மோன் பால் சுரப்பியின் நுண்குழல்களிலிருந்து பால் உற்பத்தியை தூண்டுகிறது. பின் பிட்யூட்டரியின் ஹார்மோனான ஆக்ஸிடோசின் பால் வெளியேறுதலைத் தூண்டுகிறது.
24.
1. தாவரங்களில் கருவுறுதல் நடைபெறும் போது உற்பத்தி செல் பகுப்படைந்து இரண்டு ஆண் இனச் செல்களை உருவாக்குகிறது.
2. ஓர் ஆண் இனச்செல் அண்டத்துடன் இணைந்து இரட்டைமய சைகோட்டைத் தோற்றுவிக்கிறது.
3. மற்றோர் ஆண் இனச் செல் இரட்டைமய உட்கருவுடன் இணைந்து முதன்மைக் கருவூண் உட்கருவைத் தோற்றுவிக்கிறது. இது மும்மய உட்கரு ஆகும்.
4. இந்த மும்மய உட்கரு தோற்றுவிக்கப்படுவது மூவிணைவு எனப்படும்.
25.
பிளனேரியாவை சிறுசிறு துண்டுகளாக வெட்டினால் ஒவ்வொரு சிறு துண்டும் ஒரு பிளனேரியாவைத் தோற்றுவிக்கும்.
26.
i) முதிர்ச்சியடைந்த அண்டம் அல்லது முட்டையானது கோள வடிவமானது.
ii) அண்டமானது கருவுணவு அற்றது. இது அதிகளவு சைட்டோபிளாசத்தையும், உட்கருவையும் கொண்டுள்ளது.
iii) அண்டமானது மூன்று சவ்வுகளால் சூழப்பட்டுள்ளது.
iv) பிளாஸ்மா படலமானது உட்புற மெலிந்த சோனா பெலுசிடா மற்றும் வெளிப்புற தடித்த கரோனா ரேடியேட்டாவாலும் சூழப்பட்டுள்ளது.
v) கரோனா ரேடியேட்டா ஃபாலிக்கிள் செல்களால் ஆனது.
vi) அண்டத்தின் மேற்புற படலத்தின் சவ்வு விட்டலின் சவ்வு என்றழைக்கப்படுகிறது.
vii) அண்டத்தின் மேற்பரப்பிற்கும் இடைப்பட்ட திரவம் நிரம்பிய இடைவெளி பெரிவிட்டலின் இடைவெளி என்று அழைக்கப்படுகிறது.
27.
1. சூலின் முக்கியமான பகுதி சூல் திசு ஆகும்.
2. இது இரண்டு சூல் உறைகளால் சூழப்பட்டுள்ளது.
3. மேல் பகுதியில் சூல் உறை இணையாமல் அமைந்த இடைவெளியானது சூல் துளை ஆகும்.
4. சூலானது சூழ் அறையினுள் சிறிய காம்பின் மூலம் ஒட்டிக் கொண்டுள்ளது. இதற்கு சூல் கம்பு என்று பெயர். சூலின் அடிப்பகுதி சூல் அடி எனப்படும்.
5. கருப்பையினுள் உள்ள சூல் திசுவினுள் ஏழு செல்களும் எட்டு உட்கருக்களும் அமைந்துள்ளன.
6. சூல் துளையின் அருகில் உள்ள மூன்று கருப்பை செல்கள், அண்டசாதனத்தை உருவாக்குகின்றன.
7. அடிப்பகுதியில் உள்ள மூன்று உட்கருக்களும் எதிர்த் துருவ செல்களாக உள்ளன.
8. மையத்தில் உள்ள ஒரு செல் துருவ செல்லாகவும் உள்ளது.
9. அண்ட சாதனமானது ஓர் அண்ட செல்லையும் இரண்டு பக்கவாட்டு செல்களையும் கொண்டுள்ளது.
10. இந்த பக்கவாட்டு செல்கள் சினைமுட்கள் (synergids) என அழைக்கப்படுகின்றன.
28.
1. ஓர் ஆண் இனச்செல் அண்டத்துடன் இணைந்து இரட்டைமய சைகோட்டைத் (2n) தோற்றுவிக்கிறது.
2. மற்றோர் ஆண் இனச் செல் இரட்டைமய உட்கருவுடன் இணைந்து முதன்மை கருவூண் உட்கருவினைத் தோற்றுவிக்கிறது.
3. இது மும்மய உட்கரு ஆகும். இந்த கருவூண், உருவாகும் கருவிற்கு ஊட்டமளிக்கிறது.
4. எனவே இரண்டு ஆண் கேமீட்டுகளை எடுத்துச் செல்கிறது.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards