10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil நாகரிகம், நாடு, சமூகம் - கவிதை பேழை (செய்யுள்) -முத்தொள்ளாயிரம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil அறம்,தத்துவம், சிந்தனைகவிதை பேழை (செய்யுள்) -அக்கறை Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil உயிரின்ஓசை - துணைப்பாடம் -பிருமம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil அறம், தத்துவம், சிந்தனை - கவிதை பேழை (செய்யுள்) -தேம்பாவணி * Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil கலை, அழகியல், புதுமை - உரைநடை உலகம் -பன்முகக் கலைஞர் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil மணற்கேணி - இலக்கணம் - இலக்கணம் -பொது Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 08/10/2019
Term 1 இயக்க விதிகள்
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
பயணத்தின் போது தலைக்கவசம் அணிவதும் இருக்கைப்பட்டை அணிவதும் நமக்கு பாதுகாப்பான பயணத்தை அளிக்கும். இக்கூற்றினை நியூட்டனின் இயக்க விதிகள் கொண்டு நியாயப்படுத்துக.
2.
கன உந்து (Heavy vehicle) ஒன்றும் இரு சக்கர வாகனம் ஒன்றும் சம இயக்க ஆற்றலுடன் பயணிக்கின்றன. கன உந்தின் நிறையானது இரு சக்கர வாகன நிறையினை விட நான்கு மடங்கு அதிகம் எனில், இவைகளுக்கிடையே உள்ள உந்த வீதத்தைக் கணக்கிடுக.
3.
8 கிகி மற்றும் 2 கிகி நிறையுடைய இரு பொருள்கள் வழுவழுப்பாக உள்ள பரப்பில் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டுள்ளன. அவை 15N அளவிலான கிடைமட்ட விசை கொண்டு நகர்த்தப்படுகின்றன எனில், 2 கிகி நிறையுடைய பொருள் பெரும் விசையினை கணக்கிடுக.
4.
இரு கோள்களின் நிறை விகிதம் முறையே 2 : 5 அவைகளின் ஆர விகிதம் முறையே 4 : 7 எனில், அவற்றின் ஈர்ப்பு முடுக்கம் விகிதத்தைக் கணக்கிடுக.
5.
இயந்திரப்பணியாளர் ஒருவர் 40 செ.மீ கைப்பிடி நீளம் உடைய திருகுக்குறடு கொண்டு 140 N விசை மூலம் திருகு மறை ஒன்றை கழற்றுகிறார். 40 N விசை கொண்டு அதே திருகு மறையினை கழற்ற எவ்வளவு நீள கைப்பிடி கொண்ட திருகுக்குறடு தேவை?
6.
1 கிகி நிறையுடைய பந்து ஒன்று 10 மீ.வி-1 திசைவேகத்தில் தரையின் மீது விழுகிறது. மோதலுக்கு பின் ஆற்றல் மாற்றமின்றி, அதே வேகத்தில் உயரச் செல்கிறது எனில் அப்பந்தில் ஏற்படும் உந்த மாற்றத்தினை கணக்கிடுக.
7.
இரு பொருட்களின் நிறை விகிதம் 3:4. அதிக நிறையுடைய பொருள் மீது விசையொன்று செயல்பட்டு 12 மீ.வி-2 மதிப்பில் அதை முடுக்குவித்தால், அதே விசை கொண்டு மற்ற பொருளை முடுக்குவிக்க தேவைப்படும் முடுக்கம் யாது?
8.
2000 கிகி உடைய ஒரு மகிழ்வுந்து 20 ms-1 ல் பயணம் செய்கிறது. அது கான்கிரீட் சுவரில் மோதி 0.05 வினாடிகளில் தாக்குகிறது. மகிழ்வுந்தின் மீது செலுத்தப்பட்ட கணத்தாக்கின் அளவு யாது?
9.
10 kg எடையுள்ள விசையானது 2 விநாடிகளுக்கு ஒரு நிறையுள்ள பொருள்மீது செயல்படுகிறது. திசைவேகம் 10 ms-1 ஐக் கொடுக்கிறது. எனில் பொருளின் நிறையை கிகி-ல் கூறு. [g =9.8 ms-1]
10.
2 கிகி நிறையுள்ள ஒரு பொருள் 40 ms-1 சீரான திசைவேகத்தில் ஓய்வில் உள்ள மற்றொரு பொருள் மீது மோதுகிறது. இருபொருள்களும் 20 ms-1 திசைவேகத்தில் சேர்ந்து நகர்கின்றன. மற்றொரு பொருளின் நிறையைக் காண்க.
1.
நியூட்டனின் முதல் விதிப்படி, புறவிசை செயல்படாத நிலையில் இயக்கத்திலுள்ள ஒரு பொருள் தொடர்ந்து அதே திசையில் இயக்க நிலையிலேயே இருக்கும். வேகமாகச் செல்லும் இரு சக்கர வண்டி திடீரென்று நிறுத்தப்பட்டால் அதில் அமர்ந்திருப்பவர் தொடர்ந்து அதே திசையில் இயக்கம் பெற்றவராகவே இருப்பார். இதன் காரணமாக, வாகன ஓட்டி எறிபொருள் போன்று வீசப்படுவார்.
நியூட்டனின் இரண்டாவது இயக்க விதியின்படி, பொருள் ஒன்றின் மீது செலுத்தப்படும் விசையால் தோற்றுவிக்கப்படும் முடுக்கம் பொருளின் நிறையைப் பொறுத்தது. மோதல் ஏதும் ஏற்படும் பொழுது, வாகனத்தின் முன்பக்கம் உள்ள காற்றுத் தடுப்பான் கண்ணாடியின் மீது வேகமாக சென்று மோதாமல், மோதல் நேரத்தை நீட்டித்து கணத்தாக்கு விசையின் விளைவைக் குறைப்பதற்கு பெல்ட் உதவுகிறது.
தலை, முதலாவது தரையை வந்தடைந்து தலையில் அதிகமாக காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதைத் தவிர்க்க தலைக்கவசம் மிகவும் அவசியம்.
2.
கன உந்து (Heavy vehicle) - ன் இயக்க ஆற்றல் = \(\frac { 1 }{ 2 } \)m1v12
இரு சக்கர வாகனத்தின் இயக்க ஆற்றல் = \(\frac { 1 }{ 2 } \)m2v22
\(\frac { 1 }{ 2 } \)m1v12 = \(\frac { 1 }{ 2 } \)m2v22 = K எனக் கொள்வோம்.
\(v_{1}=\sqrt{\frac{2 K}{m_{1}}} \) மற்றும் \( v_{2}=\sqrt{\frac{2 K}{m_{2}}}\)
இரண்டு வாகனங்களின் உந்தம்
\(\mathrm{p}_{1}=\mathrm{m}_{1} \mathrm{v}_{1}=\mathrm{m}_{1} \sqrt{\frac{2 \mathrm{~K}}{\mathrm{~m}_{1}}}=\sqrt{2 \mathrm{~m}_{1} \mathrm{~K}} \)
\(\mathrm{p}_{2}=\mathrm{m}_{2} \mathrm{v}_{2}=\mathrm{m}_{2} \sqrt{\frac{2 \mathrm{~K}}{\mathrm{~m}_{2}}}=\sqrt{2 \mathrm{~m}_{2} \mathrm{~K}}\)
உந்த விகிதம்
\(\frac{p_{1}}{p_{2}}=\frac{\sqrt{2 m_{1} \mathrm{~K}}}{\sqrt{2 m_{2} \mathrm{~K}}}\)
ஆனால்,\(\mathrm{m}_{1}=4 \mathrm{~m}_{2}\)
\(=\frac{\sqrt{2 \times 4 m_2 K}}{\sqrt{2 m_2 K}}=\frac{\sqrt{4}}{1}=\frac{2}{1}\)
உந்த விகிதம் = 2 : 1
3.
ஒன்றோடொன்று தொடர்பு கொண்டுள்ள இரு பொருள்கள் ஒரே முடுக்கத்தை பெற்றிருக்கும்.
\(F=\frac{m_{2}}{m_{1}+m_{2}}\)\(\times\)செலுத்தப்பட்ட விசை
\(\begin{aligned} F=\frac{2}{8+2} \times 15 \end{aligned}\)
\(\begin{aligned}
F=\frac{2}{10} \times 15
\end{aligned}\)
F = 3N
2 கிகி நிறையுடைய பொருள் பெரும் விசை 3N
4.
இரு கோள்களின் நிறை விகிதம் M1 : M2 = 2 : 5
ஆர விகிதம் R1 : R2 = 4 : 7
ஈர்ப்பு முடுக்க விகிதம் g1 : g2 = ?
g = \(\frac { GM }{ { R }^{ 2 } } \)
g1 = \(\frac { GM_1 }{ { R }_{ 1 }^{ 2 } } ;{ g }_{ 2 }=\frac { GM_2 }{ { R }_{ 2 }^{ 2 } } \)
\(\frac{\mathrm{g}_1}{\mathrm{~g}_2}=\frac{\frac{\mathrm{GM}_1}{\mathrm{R}_1{ }^2}}{\frac{\mathrm{GM}_2}{\mathrm{R}_2{ }^2}} \Rightarrow \frac{\mathrm{g}_1}{\mathrm{~g}_2}=\frac{\mathrm{M}_1}{\mathrm{M}_2} \times \frac{\mathrm{R}_2{ }^2}{\mathrm{R}_1{ }^2}\)
\(= \frac { 2 \times 7 \times 7 } { 5 \times 4 \times 4 } = \frac { 49 }{ 40 }\)
g1 : g2 = 49 : 40
5.
F1 =140 N
d1 = 40 செ.மீ = 40 \(\times\) 10-2 மீ
F2 =40 N
d2 = ?
விசையின் திருப்புத்திறனின் மதிப்பு (\( \tau \)) = F \(\times\) d
= 140 \(\times\) 40 \(\times\) 10-2 = 56 Nm
40 N விசை கொண்டு அதே திருகு மறையினை கழற்ற, 56 Nm விசையின் திருப்புத்திறன் தேவைப்படுகிறது.
F1 \(\times\) d1 = F2 \(\times\) d2
56 = F2 \(\times\) d2
56 = 40 \(\times\) d2
d2 = 56/40 = 1.4 மீ
= d2 = 56/40 = 1.4 மீ
1.4 மீ நீளம் கொண்ட திருகுக்குறடு தேவை.
6.
m = 1கிகி ; v = 10 மீ.வி-1
மோதலுக்கு பின் அதே வேகத்தில் பந்து உயரச் செல்வதால் உந்தம் mv - லிருந்து - mv க்கு மாற்றமடைகிறது. ஆகவே உந்த மாற்றம்
உந்த மாற்றம் = இறுதி உந்தம் - தொடக்க உந்தம்
= - mv - mv
= -2 mv = - 2 \(\times\) 1 \(\times\) 10
= - 20 கிகி மீ.வி-1
7.
நிறை விகிதம் = 3 : 4
m1 : m2 = 3 : 4
முடுக்கம் a2 = 12 மீ.வி-2
F = ma
F1 = m1a1 = 3a1
F2 = m2a2 = 4 x 12 = 48 N
F = F1 = F2
3a1= 48
a1 = \(\frac{48}{3}\) = 16 மீ.வி-2
தேவைப்படும் முடுக்கம் = 16 மீ.வி-2.
8.
கொடுக்கப்பட்டவை:
மகிழ்வுந்தின் நிறை m =2000 kg
மகிழ்வுந்தின் வேகம் v =20 ms-1
காலம் t =0.05 s
கண்டறிய:
கணத்தாக்கு =?
கணத்தாக்கு =F x t
விசை =m x a
a =\(\frac { v }{ t } =\frac { 20 }{ 0.05 } \)=400 ms-2
F =ma =2000 x 400
=8 x 105 N
கணத்தாக்கு =F x t
⇒ 8 x 105 x 0.5 =4 x 104 Ns
மகிழ்வுந்தின் மீது சுவரினால் செலுத்தப்படும் கணத்தாக்கின் அளவு =4 x 104 Ns.
9.
கொடுக்கப்பட்டவை:
விசை F =10 kg wt =10 x 9.8=98 N
காலம் t =2 s
திசைவேகம் v =10 ms-1
கண்டறிய:
நிறை m =?
F =ma =\(\frac { v }{ t } \)
a =\(\frac { 10 }{ 2 } \)=5 ms-2
∴ m=\(\frac { F }{ a } =\frac { 98 }{ 5 } \)=19.6 kg
m=19.6 kg
10.
கொடுக்கப்பட்டவை:
முதல் பொருளின் நிறை m1=2 kg
முதல் பொருளின் தொடக்க திசைவேகம் u1=40 ms-1
இரண்டாம் பொருளின் தொடக்க திசைவேகம் u2=0
முதல் பொருளின் இறுதி திசைவேகம் =v1
இரண்டாம் பொருளின் இறுதி திசைவேகம் =v2
எனவே v1=v2=20 ms-1
கண்டறிய:
இரண்டாம் பொருளின் நிறை m2=?
உந்தம் மாறா விதிப்படி,
m1u1 + m2u2 = m1v1 + m2v2
2 x 40 + m2 x 0 = 2 x 20 + 20 m2
m2=\(\frac{40}{20}\)=2 kg
இரண்டாம் பொருளின் நிறை m2=2 kg
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil கூட்டாஞ்சோறு - இலக்கணம் - தொகைநிலை தொடர்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil பண்பாடு - கவிதை பேழை (செய்யுள்) -முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil உயிரின்ஓசை - இலக்கணம் - தொகாநிலை தொடர் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil இயற்கை, சுற்றுசூழல், அறிவியல் - கவிதை பேழை (செய்யுள்) -மேகம் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards