10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil நாகரிகம், நாடு, சமூகம் - கவிதை பேழை (செய்யுள்) -முத்தொள்ளாயிரம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil அறம்,தத்துவம், சிந்தனைகவிதை பேழை (செய்யுள்) -அக்கறை Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil உயிரின்ஓசை - துணைப்பாடம் -பிருமம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil அறம், தத்துவம், சிந்தனை - கவிதை பேழை (செய்யுள்) -தேம்பாவணி * Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil கலை, அழகியல், புதுமை - உரைநடை உலகம் -பன்முகக் கலைஞர் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil மணற்கேணி - இலக்கணம் - இலக்கணம் -பொது Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 12/09/2019
தாவரங்களின் கடத்துதல் மற்றும் விலங்குகளின் சுற்றோட்டம்
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
பின்வருவனவற்றுள் இரத்தத்தின் இயைபு தொடர்பாக சரியானது எது?
பிளாஸ்மா = இரத்தம் + லிம்ஃபோசைட்
சீரம் = இரத்தம் + ஃபைப்ரினோஜன்
நிணநீர் = பிளாஸ்மா + RBC + WBC
இரத்தம் = பிளாஸ்மா + RBC + WBC + இரத்ததட்டுகள்
2.
இதயத்தின் இதயம் என அழைக்கப்படுவது ____
SA கணு
AV கணு
பர்கின்ஜி இழைகள்
ஹிஸ் கற்றைகள்
3.
விபத்து காரணமாக ‘O’ இரத்த வகையைச் சார்ந்த ஒருவருக்கு அதிக இரத்த இழப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் அவருக்கு எந்த இரத்த வகையை மருத்துவர் செலுத்துவார்?
‘O’ வகை
‘AB’ வகை
A அல்லது B வகை
அனைத்து வகை
4.
இரத்த ஓட்டத்தின் சரியான வரிசை எது?
வெண்ட்ரிக்கிள் ⟶ ஏட்ரியம் ⟶ சிரை ⟶ தமனி
ஏட்ரியம் ⟶ வெண்ட்ரிக்கிள் ⟶ சிரை ⟶ தமனி
ஏட்ரியம் ⟶ வெண்ட்ரிக்கிள் ⟶ தமனி ⟶ சிரை
வெண்ட்ரிக்கிள் -⟶ சிரை ⟶ ஏட்ரியம் ⟶ தமனி
5.
மனித இதயத்தின் சுவர் எதனால் ஆனது?
எண்டோகார்டியம்
எபிகார்டியம்
மையோகார்டியம்
மேற்கூறியவை அனைத்தும்
6.
இதயத் தசைகளுக்கு இரத்தத்தை அளிக்கும் இரத்தக் குழாய் எது ?
7.
இரத்தம் சிவப்பு நிறமாக இருப்பதேன்?
8.
மனித இதயத்தை மூடியிருக்கும் இரட்டை அடுக்குகளாலான பாதுகாப்பு உறையின் பெயரைக் கூறுக.
9.
நீராவிப்போக்கு ஒரு தேவையான தீங்கு செயல் விளக்குக.
10.
இடது வெண்ட்ரிக்கிள் சுவரானது மற்ற அறைகளின் சுவர்களை விட தடிமனாக இருப்பது ஏன்?
11.
மனித இதயத்தின் அமைப்பு மற்றும் செயல்படும் விதத்தினை விவரி.
12.
இரத்தத்தின் பணிகளைப் பட்டியலிடுக.
1.
(d)
இரத்தம் = பிளாஸ்மா + RBC + WBC + இரத்ததட்டுகள்
2.
(a)
SA கணு
3.
(a)
‘O’ வகை
4.
(c)
ஏட்ரியம் ⟶ வெண்ட்ரிக்கிள் ⟶ தமனி ⟶ சிரை
5.
(d)
மேற்கூறியவை அனைத்தும்
6.
கரோனரி தமனி
7.
ஹீமோகுளோபின் என்ற நிறமி இருப்பதால்.
8.
பெரிகார்டியம்.
9.
(i) நீராவிப்போக்கின் மூலம் நீர் மற்றும் தனிமங்கள் வேரிலிருந்து மற்ற பாகங்களுக்கு கடத்தப்படுகின்றன.
(ii) ஆனால் அதிகப்படியான நீராவிப்போக்கு தாவரங்களைச் உலர செய்வதுடன், இலைகள் வாடிப்போவதுடன், நீரும் வெளியேறுவதால் நீராவிப்போக்கு ஒரு தேவையான தீங்கு செயல்.
10.
இதயத்திலிருந்து அதிக விசையுடன் இரத்தத்தை உந்தி செலுத்துவதால் வலது, இடது வெண்ட்ரிக்கிளின் சுவர்கள் தடித்துக் காணப்படுகின்றன.
11.
அமைப்பு
1. இதயம் இரண்டு அடுக்குகளால் ஆன பெரிகார்டியல் உறையால் சூழப்பட்டுள்ளது.
2. மனித இதயம் நான்கு அறைகளைக் கொண்டது.
3. மெல்லிய தசைகளால் ஆன மேல் அறைகள் இரண்டும் ஆரிக்கிள்கள் அல்லது ஏட்ரியங்கள் (ஒருமை - ஏட்ரியம்) என்றும் தடித்த தசையால் ஆன கீழ் அறைகள் இரண்டும் வெண்ட்ரிக்கிள்கள் என்றும் அழைக்கப்படும்.
4. இவ்வறைகளைப் பிரிக்கின்ற இடைச்சுவர் 'செப்டம்' எனப்படும்.
5. இதயத்தின் கீழ் அறைகள் வெண்ட்ரிக்கிள்கள் எனப்படும். வலது மற்றும் இடது வெண்ட்ரிக்குலார் தடுப்புச் சுவரால் பிரிக்கப்பட்டுள்ளன.
6. வலது வெண்ட்ரிக்கிளிலிருந்து உருவான நுரையீரல் பொதுத்தமனி, வலது மற்றும் இடது நுரையீரல் தமனிகளாகப் பிரிவடைகிறது.
7. இடது வெண்ட்ரிக்கிளிலிருந்து பெருந்தமனி தோன்றுகிறது. உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ஆக்சிஜன் மிகுந்த இரத்தத்தினை பெருந்தமனி அளிக்கின்றது.
8. கரோனரி தமனி இதயத் தசைகளுக்கு இரத்தத்தை அளிக்கிறது.
9. இதயம் மூன்று விதமான வால்வுகளைக் கொண்டது.
வால்வுகள்
இதய வால்வுகள் தசையால் ஆன சிறு மடிப்புகள் ஆகும். இவை இரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்கு உதவுகின்றன. இரத்தமானது ஒரே திசையில் செல்வதையும் மற்றும் பின்னோக்கி வருவதை தடுக்கவும் உதவுகிறது. இதயம் மூன்று விதமான வால்வுகளைக் கொண்டது.
i) வலது ஏட்ரியோவெண்ட்ரிக்குலார் வால்வு:
1. இது வலது ஆரிக்கிள் மற்றும் வலது வெண்ட்ரிக்கிள்களுக்கு இடையில் அமைந்துள்ளது.
2. முக்கோண வடிவிலான மூன்று மெல்லிய இதழ் தசை மடிப்புகளால் ஆனதால் இது மூவிதழ் வால்வு என்று அழைக்கப்படுகிறது. வால்வின் இதழ் முனைகள் கார்டா டென்டினே என்ற தசை நீட்சிகளால் வெண்ட்ரிக்கிளின் பாப்பில்லரித் தசைகளோடு பொருத்தப்பட்டுள்ளன.
ii) இடது ஏட்ரியோவெண்ட்ரிக்குலார் வால்வு:
1. இது இடது ஆரிக்கிள் மற்றும் இடது வெண்ட்ரிக்கிள்களுக்கு இடையில் அமைந்துள்ளது.
2. இது இரண்டு செதில் போல அமைந்துள்ளதால், ஈரிதழ் வால்வு அல்லது மிட்ரல் வால்வு என்றும் அழைக்கப்படுகிறது.
iii) அரைச்சந்திர வால்வுகள்:
இதயத்திலிருந்து வெளியேறும் முக்கியத் தமனிகளில் (பெருந்தமனி, நுரையீரல், தமனி) உள்ள அரைச்சந்திர வால்வுகள் வெண்ட்ரிக்கிளுக்குள் இரத்தம் பின்னோக்கி செல்வதைத் தடுக்கின்றன.
செயல்படும் விதம்
1. இதயம் உடலின் பல பகுதிகளிலிருந்து சிரைகளின் மூலம் இரத்தத்தை பெறும். குறிப்பாக மேல், கீழ் பெருஞ்சிரைகள் மற்றும் நுரையீரல் சிரைகள் இதயத்தை நோக்கி இரத்தத்தை செலுத்துகின்றன.
2. இவ்விதம் இதயத்தின் வலது ஏட்ரிய அறை ஆக்ஸிஜன் நீக்கப்பட்ட இரத்தத்தையும் இடது ஏட்ரிய அறை நுரையீரலிலிருந்து ஆக்ஸிஜன் பெற்ற இரத்தத்தையும் பெறும்.
3. இரு ஏட்ரிய அறைகளும் சுருங்கும் வேளையில் முறையே இரத்தம் வலது, இடது வெண்ட்ரிக்கிள்களை அடையும்.
4. வலது வெண்ட்ரிக்கிளிலிருந்து நுரையீரல் முக்கிய தமனி இரத்தத்தை ஆக்ஸிஜன் பெறுவதற்கென நுரையீரல்களுக்கு எடுத்து செல்லும். இடது வெண்ட்ரிக்கிளிலிருந்து ஓர் பெருந்தமனி தோன்றியுள்ளது.
5. இத்தமனியிலிருந்து - கரோனரி தமனிகளும் உடல் சுற்றுக்கான தமனிகளும் தோன்றியுள்ளன.
12.
இரத்தத்தின் பணிகள்:
1. சுவாச வாயுக்களைக் கடத்துகிறது (ஆக்சிஜன் மற்றும் CO2)
2. செரிமானம் அடைந்த உணவுப் பொருட்களை அனைத்து செல்களுக்கும் கடத்துகிறது.
3. ஹார்மோன்களைக் கடத்துகிறது.
4. நைட்ரஜன் கழிவுப்பொருட்களான, அமோனியா, யூரியா, யூரிக் அமிலம் போன்றவற்றைக் கடத்துகிறது.
5. நோய்த்தாக்குதலிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது.
6. உடலின் வெப்பநிலை மற்றும் pH - ஐ ஒழுங்குபடுத்தும் தாங்கும் ஊடகமாக செயல்படுகிறது.
7. உடலின் நீர்ச் சமநிலையைப் பராமரிக்கிறது.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil கூட்டாஞ்சோறு - இலக்கணம் - தொகைநிலை தொடர்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil பண்பாடு - கவிதை பேழை (செய்யுள்) -முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil உயிரின்ஓசை - இலக்கணம் - தொகாநிலை தொடர் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil இயற்கை, சுற்றுசூழல், அறிவியல் - கவிதை பேழை (செய்யுள்) -மேகம் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards