10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 05/11/2019
வேதிவினைகளின் வகைகள்
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
நைட்ரஜன் மற்றும் ஹைட்ரஜன் இணைந்து அம்மோனியா உருவாகும் வினை _______________ வினைக்கு உதாரணம்.
வெப்பச்சிதைவு
சேர்க்கை வினை
வீழ்ப்படிவாக்கல்
இடப்பெயர்ச்சி
2.
இந்த வினையானது _________________
வெப்ப உமிழ் வினை
வெப்பக் கொள் வினை
(அ) மற்றும் (ஆ)
இவற்றுள் எதுவுமில்லை
3.
தூளாக்கப்பட்ட CaCO3; கட்டியான CaCO3 விட தீவிரமாக வினைபுரிகிறது. காரணம்
அதிக புறப்பரப்பளவு
அதிக அழுத்தம்
அதிக செறிவினால்
அதிக வெப்பநிலை
4.
5.
பின்வருவனவற்றுள் எது “தனிமம் + தனிமம் → சேர்மம்" வகை அல்ல.
C(s)+ O2(g) → Co2(g)
2K(s) + Br2(l) → 2KBr(s)
2CO(g) + O2(g) → 2CO2(g)
4Fe(s) + 3O2(g) → 2Fe2O3(s)
6.
Na2SO4(aq) + BaCl2(aq) → BaSO4(s) ↓ + 2 NaCl(aq) என்ற வேதிச்சமன்பாடு பின்வருவனவற்றுள் எவ்வகை வினையைக் குறிக்கிறது?
நடுநிலையாக்கல் வினை
எரிதல் வினை
வீழ்படிவாதல் வினை
ஒற்றை இடப்பெயர்ச்சி வினை
7.
ஹைட்ரஜன் (H+) அயனி நீரில் கரைவதால் உருவாகும் அயனி _______ என்று அழைக்கப்படுகிறது.
8.
தொகுப்பு வினைகளில் உருவாகும் வினை விளைப்பொருள்களின் எண்ணிக்கை __________.
9.
மனித இரத்தத்தின் பொதுவான pH மதிப்பு ________.
10.
பனிக்கட்டி உருகுதல் செயலில் நிகழும் சமநிலை__________ என்று அழைக்கப்படுகிறது.
11.
அமிலம் மற்றும் காரத்திற்கு இடையேயான வினை ________ என்று அழைக்கப்படுகிறது.
12.
ஒரு வேதிவினை நடைபெறும்போது நிகழ்வதென்ன?
13.
pH அளவு கோல் என்பது யாது?
14.
LPG என்பது யாது?
15.
ஒளிச்சிதைவு என்றால் என்ன?
16.
வேதிவினை வேகம் - வரையறு.
17.
மீள் மற்றும் மீளா வினைகளை வேறுபடுத்துக.
18.
வெப்பநிலையை உயர்த்தும் பொழுது ஒரு வினையின் வேகம் அதிகரிக்கிறது. ஏன்?
19.
பொட்டாசியம் குளோரைடு நீர்க்கரைசலை சில்வர் நைட்ரேட் நீர்க்கரைசலுடன் சேர்க்கும் பொழுது வெண்மைநிற வீழ்படிவு உண்டாகிறது. இவ்வினையின் வேதிச் சமன்பாட்டை தருக.
20.
வேதிச்சமநிலை என்றால் என்ன? அதன் பண்புகள் யாவை?
21.
வெப்பச்சிதைவு வினைகள் என்பது யாவை?
22.
காப்பர் சல்பேட் கரைசலை கலக்குவதற்கு நிக்கல் கரண்டியை பயன்படுத்தலாமா? உனது கூற்றை நியாயப்படுத்துக.
23.
பாறை உப்பு
24.
மார்பிள்
25.
நீற்றுச் சுண்ணாம்பு
26.
சுட்ட சுண்ணாம்பு
27.
CaCO3
1.
(b)
சேர்க்கை வினை
2.
(b)
வெப்பக் கொள் வினை
3.
(a)
அதிக புறப்பரப்பளவு
4.
(c)
5.
(c)
2CO(g) + O2(g) → 2CO2(g)
6.
(c)
வீழ்படிவாதல் வினை
7.
( )
ஹைட்ரோனியம் அயனி
8.
( )
ஒன்று
9.
( )
7.4 (7.35 - 7.45)
10.
( )
இயற்பியல் சமநிலை
11.
( )
நடுநிலையாக்கல் வினை
12.
(i) ஒரு வேதிவினையில் ஈடுபடும் மூலக்கூறுகளின் அணுக்கள் அல்லது தனிமங்கள் மாற்றியமைக்கப்பட்டு புதிய மூலக்கூறுகள் உருவாகின்றன.
(ii) அணுக்களுக்கிடையேயான பிணைப்புகள் உடைந்து புதிய வேதிப்பிணைப்புகள் உருவாகின்றன.
(iii) பிணைப்பு உடையும் பொழுது ஆற்றல் உறிஞ்சப்படுகிறது. அதேபோன்று பிணைப்பு உருவாகும் போது ஆற்றல் வெளிப்படுகிறது(உமிழப்படுகிறது).
13.
pH அளவுகோல் ஒரு கரைசலின் ஹைட்ரஜன் அயனிச் செறிவை அளக்க உதவும் ஒரு அளவீடாகும்.
14.
LPG என்பது திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயு, இது புரோப்பேன், பியூட்டேன் புரப்பிலீன் போன்ற ஹைட்ரோகார்பன் வாயுக்களின் கலவையாகும்.
15.
சிதைவு வினையானது ஒளியால் நிகழ்ந்தால் அது ஒளிச்சிதைவு வினை எனப்படுகிறது.
16.
ஒரு வேதிவினையின் வேகம் என்பது ஓரலகு நேரத்தில் ஏதாவது ஒரு வினைபடுபொருள் அல்லது விளைபொருள்களின் அளவு அல்லது செறிவில் ஏற்படும் மாற்றமாகும்.
வேகம் = \(-\frac { d\left[ A \right] }{ dt } =+\frac { d\left[ B \right] }{ dt } \)
17.
| மீள் வினை | மீளா வினை | |
|---|---|---|
| அ) | தகுந்த சூழ்நிலையில் முன்னோக்கு மற்றும் பின்னோக்கு வினைகள் நடைபெறும். | முன்னோக்கு வினை மட்டுமே நடைபெறும் |
| ஆ) | முன்னோக்கு மற்றும் பின்னோக்கு வினைகள் ஒரே நேரத்தில் நடைபெறும். | ஒரே திசையில் மட்டுமே நடைபெறும் வினை முன்னோக்கு வினையாகும். |
| இ) | வினையானது சமநிலை அடையும். | வினையானது சமநிலை அடையாது. |
| ஈ) | வினைபடு பொருள்கள் முழுவதும் வினைவிளை பொருள்களாக மாற இயலாது. | வினைபடு பொருள்கள் முழுவதும் வினைவிளை பொருள்களாக மாறக் கூடியது. |
| உ) | இவ்வினை மெதுவாக நடைபெறும். | வேகமாக நடைபெறும். |
18.
வெப்பம் அதிகரிக்கும் பொழுது வினைபடு பொருள்களின் பிணைப்புகள் எளிதில் உடைந்து அதிக வினைபடு பொருள்களை அயனிகளாக மாற்றி வினையின் வேகத்தை அதிகரிக்கிறது.
19.
KCl(aq) + AgNO3(aq) ⟶ AgCl(s) ↓ + KNO3(aq)
AgCl வெள்ளை வீழ்படிவாக நீர்க்கரைசலான KNO3 - ல் கிடைக்கிறது.
20.
(i) வேதிச்சமநிலை என்பது ஒரு மீள்வேதிவினையின் வினைப்படுபொருள் மற்றும் வினை விளைப் பொருளின் செறிவில் எந்த மாற்றமும் நிகழாத நிலை ஆகும்.
சமநிலையின் பண்புகள்:
(i) வேதிச்சமநிலையில் முன்னோக்கு வினையின் வேகமும், பின்னோக்கு வினையின் வேகமும் சமம்.
(ii) நேரத்தை பொறுத்து அழுத்தம், செறிவு, நிறம், அடர்த்தி, பாகுநிலை போன்றவை மாறாது.
(iii) வேதிச்சமநிலை என்பது ஒரு இயங்கும் சமநிலை. ஏனெனில், முன்னோக்கு வினையும் பின்னோக்கு வினையும் தொடர்ந்து நிலையாக நடந்து கொண்டிருக்கும்.
(iv) இயற்பியல் சமநிலையில், அனைத்து நிலைமைகளும் மாறாத கனஅளவைப் பெறுகின்றன.
21.
1. ஒரு சேர்மம் வெப்பத்தை உட்கொண்டு சிதைவுற்று இரண்டு (அ) அதற்கு மேற்பட்ட எளிய மூலக்கூறுகளாக சிதைவுறும் வினை வெப்பச் சிதைவு வினை எனப்படும்.
2. மெர்குரி II ஆக்சைடு வெப்பத்தினால் சிதைவுற்று மெர்குரி மற்றும் ஆக்சிஜன் வாயுவாக மாறுகிறது.
3. இவ்வினை சேர்மத்திலிருந்து தனிமம் / தனிமம் சிதைவடைதல் என்ற வகையைச் சார்ந்தது.

4. கால்சியம் கார்பனேட்டை வெப்பப்படுத்தும்போது சிதைவுற்று கால்சியம் மற்றும் கார்பன் டை ஆக்சைடாக மாறுகிறது.
5. இவ்வினை சேர்மத்திலிருந்து சேர்மம் / சேர்மம் என்ற வகையைச் சார்ந்தது.

வெப்பச் சிதைவு வினைகளில் பிணைப்புகளை உடைப்பதற்கு வெப்பம் தரப்படுகிறது.
இது போன்ற வெப்பத்தை உறிஞ்சும் வினைகளை "வெப்பக்கொள் வினைகள்" எனலாம்.
22.
1. பயன்படுத்தக் கூடாது, ஏனெனில் நிக்கல், காப்பரை விட அதிக வினைதிறன் கொண்டது.
2. எனவே நிக்கல், காப்பரை இடப்பெயர்ச்சி செய்து நிக்கல் சல்பேட்டையும், காப்பரையும் தரும்.
Ni(s) + CuSO4(aq) \(\rightarrow\) NiSO4(aq) + Cu(s)
23.
NaCl
24.
CaCO3
25.
Ca(OH)2
26.
CaO
27.
CaO + CO2
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards