10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil நாகரிகம், நாடு, சமூகம் - கவிதை பேழை (செய்யுள்) -முத்தொள்ளாயிரம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil அறம்,தத்துவம், சிந்தனைகவிதை பேழை (செய்யுள்) -அக்கறை Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil உயிரின்ஓசை - துணைப்பாடம் -பிருமம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil அறம், தத்துவம், சிந்தனை - கவிதை பேழை (செய்யுள்) -தேம்பாவணி * Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil கலை, அழகியல், புதுமை - உரைநடை உலகம் -பன்முகக் கலைஞர் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil மணற்கேணி - இலக்கணம் - இலக்கணம் -பொது Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 26/09/2019
வேதிவினைகளின் வகைகள்
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
அமில மழை என்றால் என்ன?
2.
சேர்க்கை வினைக்கும் சிதைவு வினைக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை அட்டவணைப்படுத்துக.
3.
நீரின் அயனிப்பெருக்கம் என்றால் என்ன?
4.
கட்டியான கால்சியம் கார்பனேட்டைவிட தூளாக்கப்பட்ட கால்சியம் கார்பனேட் ஹைட்ரோகுளோரிக் அமிலத்துடன் மிக விரைவாக வினைபுரியும். ஏன்?
5.
மெட்டதிஸிஸ் வினை என்பது யாது?
6.
ஒளிச்சிதைவு என்றால் என்ன?
7.
வெப்பக்கொள் வினைகள் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
8.
மீள் மற்றும் மீளா வினைகளை வேறுபடுத்துக.
9.
சேர்க்கை அல்லது கூடுகை வினை வரையறு, வெப்பஉமிழ் சேர்க்கை வினைக்கு எடுத்துக்காட்டு தருக.
10.
வெப்பநிலையை உயர்த்தும் பொழுது ஒரு வினையின் வேகம் அதிகரிக்கிறது. ஏன்?
1.
(i) மழை நீரின் pH மதிப்பு ஏறக்குறைய 7 ஆகும்.
(ii) இது, மழைநீர் நடுநிலைத் தன்மையானது மற்றும் தூய்மையானது என்பதைக் குறிக்கிறது.
(iii) வளிமண்டலக் காற்று சல்பர் டை ஆக்ஸைடு நைட்ரஜன் ஆக்சைடுகள் ஆகிய வாயுக்களால் மாசுபடும் பொழுது அவை மழைநீரில் கரைந்து pH மதிப்பை 7 ஐ விடக் குறையச் செய்கின்றன.
(iv) இவ்வாறு மழைநீரின் pH 7 ஐ விட குறையும்பொழுது, அம்மழை அமிலமழை எனப்படுகிறது.
2.
| சேர்க்கை வினைகள் | சிதைவு வினைகள் |
|---|---|
| ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வினைப்படுபொருட்கள் சேர்ந்து ஒற்றை விளை பொருளைத் தரும். | ஒற்றை வினைப்படு பொருள், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விளை பொருளாக சிதைக்கப்படுகிறது. |
| ஆற்றல் உமிழப்படுகிறது. | ஆற்றல் உறிஞ்சப்படுகிறது. |
| வினைபடு பொருள்கள் தனிமங்களாகவோ, சேர்மங்களாகவோ இருக்கலாம். | வினைபடு பொருள் ஒற்றை சேர்மமாகும். |
3.
ஹைட்ராக்சில் மற்றும் ஹைட்ரோனியம் அயனியின் செறிவுகளின் பெருக்குத் தொகையே நீரின் அயனிப்பெருக்கம்.
Kw = [H3O+] [OH-]
4.
தூளாக்கப்பட்ட கால்சியம் கார்பனேட்டில் புறப்பரப்பளவு அதிகமாக இருப்பதால் வினை வேகமாக நிகழ்கிறது.
5.
இரண்டு சேர்மங்கள் வினைபுரியும் பொழுது அவற்றின் அயனிகள் பரிமாறிக் கொள்ளப்படுமானால் அவ்வினை இரட்டை இடப்பெயர்ச்சி அல்லது மெட்டதிஸிஸ் வினை எனப்படுகிறது.
6.
சிதைவு வினையானது ஒளியால் நிகழ்ந்தால் அது ஒளிச்சிதைவு வினை எனப்படுகிறது.
7.
வெப்பச் சிதைவு வினைகளில் பிணைப்புகளை உடைப்பதற்கு வெப்பம் தரப்படுகிறது. இதுபோன்ற வெப்பத்தை உறிஞ்சும் வினைகளை வெப்பக் கொள் வினைகள் என்கிறோம்.
8.
| மீள் வினை | மீளா வினை | |
|---|---|---|
| அ) | தகுந்த சூழ்நிலையில் முன்னோக்கு மற்றும் பின்னோக்கு வினைகள் நடைபெறும். | முன்னோக்கு வினை மட்டுமே நடைபெறும் |
| ஆ) | முன்னோக்கு மற்றும் பின்னோக்கு வினைகள் ஒரே நேரத்தில் நடைபெறும். | ஒரே திசையில் மட்டுமே நடைபெறும் வினை முன்னோக்கு வினையாகும். |
| இ) | வினையானது சமநிலை அடையும். | வினையானது சமநிலை அடையாது. |
| ஈ) | வினைபடு பொருள்கள் முழுவதும் வினைவிளை பொருள்களாக மாற இயலாது. | வினைபடு பொருள்கள் முழுவதும் வினைவிளை பொருள்களாக மாறக் கூடியது. |
| உ) | இவ்வினை மெதுவாக நடைபெறும். | வேகமாக நடைபெறும். |
9.
1. இரண்டு (அ) அதற்கு மேற்பட்ட வினைபடு பொருள்கள் இணைந்து ஒரு சேர்மம் உருவாகும் வினை சேர்க்கை வினை (அ) கூடுகை வினை ஆகும்
2. இதனை "தொகுப்பு வினை" அல்லது "இயைபு வினை” என்றும் அழைக்கலாம்.
S(s) + O2(g) ⟶ SO2(g)
3. திட கந்தகம் (சல்பர்) ஆக்சிஜனுடன் வினைபுரிந்து கந்தக டைஆக்சைடாக மாறும்பொழுது புதிய பிணைப்பு உருவாகிறது. அப்பொழுது அதிக ஆற்றல் வெப்பமாக உமிழப்படுகிறது.
10.
வெப்பம் அதிகரிக்கும் பொழுது வினைபடு பொருள்களின் பிணைப்புகள் எளிதில் உடைந்து அதிக வினைபடு பொருள்களை அயனிகளாக மாற்றி வினையின் வேகத்தை அதிகரிக்கிறது.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil கூட்டாஞ்சோறு - இலக்கணம் - தொகைநிலை தொடர்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil பண்பாடு - கவிதை பேழை (செய்யுள்) -முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil உயிரின்ஓசை - இலக்கணம் - தொகாநிலை தொடர் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil இயற்கை, சுற்றுசூழல், அறிவியல் - கவிதை பேழை (செய்யுள்) -மேகம் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards