10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 28/09/2019
மத்திய அரசு
10ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
வயது வந்தோர் வாக்குரிமை என்றால் என்ன?
2.
லோக்சபா உறுப்பினர் ஆவதற்கான காரணங்கள் யாவை?
3.
இந்திய நாடாளுமன்றம் எத்தனை பிரிவுகளாக பிரிக்கலாம்? அவை யாவை?
4.
பாராளுமன்ற உறுப்பினராய் இல்லாதவர் கூட அமைச்சராக நியமிக்கப்படலாம். எவ்வாறு?
5.
பிரதம அமைச்சர் எவ்வாறு நியமிக்கப்படுகிறார்?
6.
துணைக் குடியரசுத் தலைவரின் செயல்பாடுகள் யாவை?
7.
துணைக்குடியரசுத் தலைவர் - தேர்ந்தெடுக்கும் முறை மற்றும் பதவிக்காலம் பற்றி எழுதுக.
8.
துணைக் குடியரசுத் தலைவருக்கான தகுதிகள் யாவை?
9.
குடியரசுத் தலைவரின் சிறப்பு அதிகாரங்கள் யாவை?
10.
இந்திய அரசின் தலைமை வழக்குரைஞரின் சிறப்பு அதிகாரங்கள் இரண்டினைப் பட்டியலிடுக.
11.
நிதி மசோதா என்றால் என்ன?
12.
மக்களவையின் சபாநாயகர் பற்றி குறிப்பு வரைக.
13.
உச்சநீதிமன்ற நீதிபதி ஆவதற்கான தகுதிகள் யாவை?
14.
நடுவண் அரசின் அமைச்சர்கள் தரநிலைகளின் படி எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளனர்?
15.
இந்தியக் குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
1.
மக்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதில் 'வயது வந்தோர் வாக்குரிமை' பின்பற்றப்படுகிறது. வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்ட 18 வயது நிரம்பிய இந்தியக் குடிமக்கள் அனைவரும் தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க தகுதியுடையவர் ஆவார்.
2.
(i) அவர்/அவள் உறுப்பினராக தகுதிகள் இந்தியக் குடிமகனாய்/குடிமகளாய் இருத்தல் வேண்டும்.
(ii) அவர்/அவள் 25 வயதிற்கு குறைவுடையவராய் இருத்தல் கூடாது.
(iii) அவரது பெயர் நாட்டின் ஏதாவது ஒரு பகுதியின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருத்தல் வேண்டும்.
(iv) அவர் அரசு அலுவலகத்தில் ஊதியம் பெறும் பணியில் இருத்தல் கூடாது.
(v) அவர் மனநிலை சரியில்லாதவராகவோ அல்லது பெற்ற கடனை திருப்பி தர இயலாதவராகவோ இருத்தல் கூடாது.
3.
இந்திய நாடாளுமன்றம் மூன்று பகுதிகளைக் கொண்டது. அவை
(i) குடியரசுத் தலைவர்
(ii) இராஜ்ய சபை
(iii) லோக்சபை
4.
(i) பாராளுமன்ற உறுப்பினராய் இல்லாதவர் கூட அமைச்சராக நியமிக்கப்படலாம்.
(ii) ஆனால் அவர் 6 மாதங்களுக்குள் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுதல் வேண்டும்.
(iii) அமைச்சர்கள் தனிப்பட்ட முறையிலும் ஒட்டு மொத்தமாகவும் மக்களவைக்கு பொறுப்புடையவர்களாவர்.
5.
(i) மக்களவையின் பெரும்பான்மைக் கட்சியின் தலைவரை பிரதம அமைச்சராக குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.
(ii) மற்ற அமைச்சர்களை பிரதம அமைச்சரின் ஆலோசனையின்படி குடியரசுத் தலைவர் நியமிக்கிறார்.
6.
துணைக்குடியரசுத் தலைவரின் செயல்பாடுகள் :
(i) அவர் மாநிலங்களவையின் நடவடிக்கைகளை முறைப்படுத்துகிறார்.
(ii) அவர் மாநிலங்களவையின் கட்டளைகளை தீர்மானிக்கிறார்.
(iii) அவர் மாநிலங்களவையின் தீர்மானம் அல்லது கேள்விக்காக அனுமதிப்பதை முடிவு செய்கிறார்.
(iv) மிகப்பெரிய பிரச்னையின் போது அவையின் நடவடிக்கைகளை அவர் ஒத்திவைக்கவும் அல்லது முடிவுக்கு கொண்டு வரவும் செய்கிறார்.
(v) பல்வேறு குடிமக்களுக்கு அதனுடைய செயல்பாடுகள் தொடர்பாக அவர் வழிமுறைகளை வழங்குகிறார்.
7.
மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படாமல் குடியரசுத் தலைவர் போல மறைமுகத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார். பாராளுமன்றம் இரு அவைகளின் உறுப்பினர்களை உள்ளடக்கிய வாக்காளர் குழுமத்தின் மூலம் இவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இவரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள்.
8.
(i) அவர்/அவள் இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.
(ii) அவர்/அவள் 35 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும்.
(iii) அவர்/அவள் மத்திய அரசிலோ / அல்லது உள்ளாட்சி அமைப்புகளிலோ ஊதியம் பெறும் பதவியில் இருத்தல் கூடாது.
(iv) அவர்/அவள் இராஜ்ய சபை உறுப்பினராவதற்காக மற்ற தகுதிகளைப் பெற்றிருத்தல் வேண்டும்.
9.
பிரிவு 361(1)-ன்படி குடியரசுத் தலைவர் மற்றும் ஒரு மாநிலத்தின் ஆளுநர் தன்னுடைய பணி மற்றும் அதிகாரத்தை செய்ய வேண்டும் என எண்ணுவதிலும், செயல்படுத்துவதிலும் எந்த நீதிமன்றத்திற்கும் பதில் அளிக்க வேண்டிய அவசியமில்லை.
10.
1. இவர் குடியரசுத் தலைவரால் குறிப்பிடப்பட்ட சட்ட விவகாரங்கள் மீது இந்திய அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவார்.
2. நாடாளுமன்ற இரு அவைகளின் செயல்முறைகளிலும் பேசுவதற்கும் பங்குகொள்வதற்கும் இவருக்கு உரிமை உண்டு.
11.
நிதி மசோதாவின் திருத்தம் செய்யவோ அல்லது நிராகரிக்கவோ மாநிலங்களவைக்கு அதிகாரம் இல்லை.
மக்களவையில் மட்டுமே நிதி மசோதாவினை அறிமுகப்படுத்த முடியும்.
இம்மசோதா மாநிலங்களவையில் ஒப்புதலுடன் சட்டமாக மாறும்.
12.
சபாநாயகர் :
(i) மக்களவையை தலைமை ஏற்று நடத்துபவர் சபாநாயகர் ஆவர்.
(ii) அவர் மக்களவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
(iii) மக்களவை கலைக்கப்பட்டாலும் புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கும் வரை அவர் பதவியில் நீடிப்பார்.
(iv) பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டு கூட்டத்திற்கு தலைமை வகிப்பவர் சபாநாயகர் ஆவார்.
(v) அவர் ஒரு மசோதாவை நிதி மசோதாவை அல்லது இதர மசோதாவா என தீர்மானிக்கும் அதிகாரம் பெற்றுள்ளார்.
13.
உச்ச நீதிமன்ற நீதிபதிக்கான தகுதிகள் :
1. அவர் இந்தியக் குடிமகனாய் இருத்தல் வேண்டும்.
2. அவர் ஐந்து ஆண்டுகள் உயர் நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்திருத்தல் வேண்டும்.
(அல்லது)
3. அவர் பத்து ஆண்டுகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக செயலாற்றியிருத்தல் வேண்டும்.
4. அவர் குடியரசுத் தலைவர் கருத்தின்படி சிறப்புமிக்க சட்ட வல்லுநராய் இருத்தல் வேண்டும்.
14.
மத்திய அமைச்சர் மூன்று தரநிலைகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
மத்திய அமைச்சர்களின் வகைகள் :
(i) கேபினெட் அல்லது ஆட்சிக்குழு அமைச்சர்கள்.
(ii) இராசாங்க அமைச்சர்கள்
(iii) துணை அமைச்சர்கள்
15.
1. இந்தியக் குடியரசுத் தலைவர், ஒற்றை மாற்று வாக்குமூலம் விகிதாச்சார பிரதிநிதித்துவத்தின்படி வாக்காளர் குழுமத்தால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
2. வாக்காளர் குழுமம் என்பது மாநிலங்களவை மற்றும் மக்களவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், அனைத்து மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், தேசிய தலைநகர் டெல்லி மற்றும் புதுச்சேரியின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ஆகியோரை உள்ளடக்கியதாகும்.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards