10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 08/11/2019
CIV - மாநில அரசு
10ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
கீழ்க்காணும் எந்த மாநிலங்கள் பொதுவான உயர் நீதிமன்றத்தைப் பெற்றுள்ளன?
தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம்
கேரளா மற்றும் தெலுங்கானா
பஞ்சாப் மற்றும் ஹரியானா
மகாராஷ்டிரா மற்றும் குஜராத்
2.
இந்தியாவில் முதன்முதலில் உயர் நீதிமன்றங்கள் தொடங்கப்பட்ட இடங்கள்
கொல்கத்தா, மும்பை, சென்னை
டெல்லி மற்றும் கொல்கத்தா
டெல்லி, கொல்கத்தா, சென்னை
கொல்கத்தா, சென்னை, டெல்லி
3.
4.
சட்ட மேலவை என்பது ____.
5 ஆண்டுகள் பதவிக்காலம் கொண்டது
6 ஆண்டுகள் பதவிக்காலம் கொண்டது
நிரந்தர அவை ஆகும்
4 ஆண்டுகள் பதவிக்காலம் கொண்டது
5.
மாநில அமைச்சரவையின் தலைவர்
முதலமைச்சர்
ஆளுநர்
சபாநாயகர்
பிரதம அமைச்சர்
6.
மாநில முதலமைச்சரை நியமிப்பவர்.
சட்டமன்றம்
ஆளுநர்
குடியரசுத் தலைவர்
சட்டமன்ற சபாநாயகர்
7.
ஆளுநர் யாரை நியமனம் செய்வதில்லை?
முதலமைச்சர்
மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர்
மாநில தலைமை வழக்குரைஞர்
உயர் நீதிமன்ற நீதிபதிகள்
8.
ஆங்கிலோ - இந்தியன் வகுப்பினரிலிருந்து ஒரு பிரதிநிதியை சட்டமன்றத்திற்கு யார் நியமிக்கிறார்?
குடியரசுத் தலைவர்
ஆளுநர்
முதலமைச்சர்
சட்டமன்ற சபாநாயகர்
9.
மாநில சபாநாயகர் ஒரு _____.
மாநிலத் தலைவர்
அரசின் தலைவர்
குடியரசு தலைவரின் முகவர்
மேற்கண்ட எதுவுமில்லை
10.
மாநில ஆளுநரை நியமிப்பவர்.
பிரதமர்
முதலமைச்சர்
குடியரசுத் தலைவர்
தலைமை நீதிபதி
11.
தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை _______
12.
மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையக் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ________ ஆல் மட்டுமே பணிநீக்கம் செய்ய முடியும்.
13.
_________ மாநிலங்களில் உள்ள பல்கலைக் கழகங்களின் வேந்தராக செயல்படுகிறார்.
14.
________ தமிழகத்தின் முதல் பெண் ஆளுநர் ஆவார்.
15.
ஆளுநர் தனது இராஜினாமா கடிதத்தை _______ இடம் கொடுக்கிறார்.
16.
ஆயுதப் படையினர்
17.
மேலவை உறுப்பினர்
18.
அமைச்சரவை
19.
முதலமைச்சர்
20.
ஆளுநர்
21.
ஆட்கொணர் பேராணை என்றால் என்ன?
22.
23.
ஆளுநராக நியமிக்கப்படுவதற்கான தகுதிகள் என்ன?
24.
மாநில ஆளுநரின் முக்கியத்துவம் யாது ?
25.
இந்திய மாநிலங்களிருந்து ஜம்மு - காஷ்மீர் எவ்வாறு வேறுபடுகிறது?
26.
உயர் நீதிமன்றத்தின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரி.
27.
அமைச்சரவையின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை ஆய்க.
28.
சட்டமன்றத்தின் பணிகளை சுருக்கமாக விவாதிக்க.
29.
முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரி.
1.
(c)
பஞ்சாப் மற்றும் ஹரியானா
2.
(a)
கொல்கத்தா, மும்பை, சென்னை
3.
(c)
4.
(c)
நிரந்தர அவை ஆகும்
5.
(a)
முதலமைச்சர்
6.
(b)
ஆளுநர்
7.
(d)
உயர் நீதிமன்ற நீதிபதிகள்
8.
(b)
ஆளுநர்
9.
(d)
மேற்கண்ட எதுவுமில்லை
10.
(c)
குடியரசுத் தலைவர்
11.
( )
234
12.
( )
குடியரசுத் தலைவர்
13.
( )
ஆளுநர்
14.
( )
எம். பாத்திமா பீவி
15.
( )
குடியரசுத் தலைவர்.
16.
தீர்ப்பாயங்கள்
17.
மானியங்களுக்கு வாக்களிக்க முடியாது.
18.
சட்டமன்றத்திற்குப் பொறுப்பானவர்கள்.
19.
அரசாங்கத்தின் தலைவர்
20.
மாநில அரசின் தலைவர்
21.
சட்டத்திற்கு புறம்பாக தடுத்து வைத்திருக்கும் ஒருவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த ஆட்கொணர் பேராணை வெளியிடப்படுகிறது. இது சட்டத்திற்கு புறம்பாக கைது செய்யப்பட்டு மறைத்து வைத்தலை தடுக்கிறது.
22.
23.
ஆளுநரின் தகுதிகள் :
ஆளுநர் பதவிக்கு தேவையான தகுதிகள் பின்வருவன.
1. அவர் இந்தியக் குடிமகனாக இருத்தல் வேண்டும்.
2. 35 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும்.
3. நாடாளுமன்ற உறுப்பினராகவோ அல்லது சட்டமன்ற உறுப்பினராகவோ இருத்தல் கூடாது. அவ்வாறு இருப்பின் அவர் ஆளுநராக பதவியேற்கும் பொழுது தாமாகவே அப்பதவி காலியாகிவிடும்.
4. அவர், இலாபம் தரும் எந்தத் தொழிலிலும் ஈடுபடக்கூடாது.
24.
1. மாநில நிர்வாகத்தின் அரசியலமைப்புத் தலைவர் ஆளுநர் ஆவார்.
2. மாநில நிர்வாகத்தின் அனைத்து அதிகாரங்களையும் ஆளுநருக்கு வழங்குகிறது
3. ஆளுநர் சட்ட மன்றத்தைக் கூட்டவும், சட்டமன்றத்தைக் கலைக்கவும் உரிமை பெற்றுள்ளார்.
5. மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்படும் ஒவ்வொரு மசோதாவும் ஆளுநர் கையொப்பம் இட்டால் மட்டுமே சட்டமாகும்.
25.
(i) ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் ஜம்மு காஷ்மீர் அரசியலமைப்பு 1957ம் ஆண்டு நவம்பர் 17ம் நாள் ஏற்கப்பட்டு 1957-ஆம் ஆண்டு நவம்பர் 26-ம் நாள் நடைமுறைக்கு வந்தது. இந்திய மாநிலங்களுக்கிடையே இந்திய அரசியலமைப்பு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை வழங்குகிறது.
(ii) இந்தியாவில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் மட்டும் தனியான அரசியலமைப்பைப் பெற்றுள்ளது. இந்திய அரசியலமைப்பின் வழிகாட்டும் நெறிமுறைகள் மற்றும் அடிப்படை உரிமைகள் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு பொருந்தாது.
(iii) இந்திய அரசியலமைப்பு நீக்கிய அடிப்படை உரிமைகளில் ஒன்றான சொத்துரிமை ஜம்மு காஷ்மீரில் இன்னும் நடைமுறையில் உள்ளது.
26.
தனக்கேயுரிய நீதிவரையறை
1. சென்னை, பம்பாய், கல்கத்தா நீதிமன்றங்கள் தங்களுக்கான நீதிவரையறை அதிகாரங்களுடன் மேல் முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் அதிகாரங்களையும் பெற்றுள்ளன. அதே வேளையில் மற்ற நீதிமன்றங்கள் பெரும்பாலும் மேல் முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் அதிகாரங்களை மட்டுமே பெற்றுள்ளன.
2. முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள், உயில், திருமணம் சார்ந்த வழக்குகள் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் ஆகியவற்றை மட்டும் நேரடியாக விசாரிக்கும் அதிகாரங்களை இவை பெற்றுள்ளன.
3. மாகாண நீதிமன்றங்கள் தன் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ரூபாய் 2000 மற்றும் அதற்கு மேற்பட்ட தொகை மதிப்புடைய குற்றவியல் வழக்குகளை தனக்கே உரிய நீதிவரையறையை பயன்படுத்தி விசாரிக்க முடியும்.
மேல்முறையீட்டு நீதி வரையறை
1. உயர் நீதிமன்றங்கள் தங்களிடம் வரும் மேல்முறையீட்டு வழக்குகளையும் கீழ் நீதிமன்றங்களிலிருந்து வரும் மேல் முறையீட்டு வழக்குகளையும் (உரிமையியல், குற்றவியல்) விசாரிக்கின்றன.
2. நாட்டின் இராணுவ தீர்ப்பாயங்களின் கீழ்வரும் ஆயுதம் சார்ந்த வழக்குகளை விசாரிக்க இவைகளுக்கு அதிகாரம் இல்லை,
பேராணை அதிகாரங்கள்:
இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 226, அடிப்படை உரிமைகளுக்காக மட்டுமின்றி மற்ற நோக்கங்களுக்காகவும் பேராணைகளை வெளியிடும் அதிகாரங்களை உயர்நீதிமன்றங்களுக்கு வழங்குகிறது. அவை
1. ஆட்கொணர்வு நீதிப் பேராணை
2. கட்டளையுறுத்தும் நீதிப் பேராணை
3. தடையுறுத்தும் நீதிப் பேராணை
4. தகுதி வினவும் நீதிப் பேராணை
5. ஆவணக் கேட்பு பேராணை
மேற்பார்வை அதிகாரம்
1. இராணுவ நீதிமன்றங்களைத் தவிர மற்ற அனைத்து சார்பு நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களின் பணிகளை மேற்பார்வையிடும் அதிகாரத்தை உயர்நீதிமன்றம் பெற்றுள்ளது.
2. கீழ் நீதிமன்றங்களில் கொடுக்கப்பட்ட அதிகாரங்களை திரும்ப பெறும் அதிகாரம்.
3. பொதுச்சட்டங்கள் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட படிவங்கள் மூலம் பயிற்சி மற்றும் நடவடிக்கைகளை ஒழுங்கு படுத்த ஓர் ஆணையை வெளியிடச் செய்தல்.
4. பரிந்துரைக்கப்பட்ட முறைகளில் கீழ் நீதிமன்றங்கள் புத்தகங்கள், பதவிகள், கணக்குகளைப் பராமரித்தல்.
5. ஷெரிப், எழுத்தர்கள், அலுவலர்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் ஆகியோருக்கான கட்டணத்தைச் செலுத்துதல் போன்றவை குறித்துத் தீர்மானித்தல்.
ஆவணங்களின் பாதுகாப்புப் பெட்டகம்
உயர்நீதி மன்றத்தால் வழங்கப்பட்ட அனைத்து முடிவுகள் மற்றும் தீர்ப்புகள் அச்சடிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. இதனால் உயர்நீதிமன்றம் பதிவேடுகளின் நீதிமன்றமாக செயல்படுகிறது.
27.
அமைச்சரவையின் அதிகாரங்கள் மற்றும் பணிகள்:
1. மாநில அரசிற்கான கொள்கைகளை உருவாக்கி அவற்றை திறம்பட நடைமுறைப்படுத்துகிறது.
2. சட்டமன்ற நிகழ்ச்சிகளை முடிவு செய்து எல்லா முக்கியமான மசோதாக்களுக்கும் ஆதரவளிக்கிறது.
3. நிதிக் கொள்கையைக் கட்டுப்படுத்துவதுடன் மாநில பொது நலனுக்கான வரிக்கொள்கையை முடிவு செய்கிறது.
4. முக்கியமான துறைத் தலைவர்களின் நியமனங்களைச் செய்கிறது.
5. மற்ற மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
6. மாநிலத்திற்கான செலவுகளைச் சமாளிக்க திட்ட அறிக்கையை உருவாக்குகிறது.
7. ஒரு மசோதா சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் போது அது சாதாரண மசோதாவா அல்லது நிதி மசோதாவா என்று தீர்மானிக்கிறது.
8. அமைச்சரவையின் ஒவ்வொரு அமைச்சரின் பணிகளைக் கட்டுப்படுத்தி, கண்காணித்து ஒருங்கிணைக்கின்றது.
9. ஆண்டு வரவு செலவு திட்டம் (Budget) அமைச்சரவையால் இறுதி செய்யப்படுகிறது.
28.
சட்டமன்ற அதிகாரங்கள்:
1. அரசியலமைப்பின்படி மாநிலப் பட்டியலிலுள்ள அனைத்துத் துறைகள் மீதும் சட்டமன்றம் சட்டத்தை இயற்றலாம். பொதுப்பட்டியலிலும் சட்டமன்றம் சட்டம் இயற்றலாம்.
2. ஆனால், அதே சட்டத்தை நடுவண் அரசு இயற்றும் பொழுது, மாநில அரசின் சட்டம் செயலற்றதாகி விடும்.
3. மத்திய நாடாளுமன்ற நடைமுறையைப் போன்றே மாநிலச் சட்டமன்றத்தின் மசோதாவும் சட்டமாக நிறைவேறுகிறது.
நிதி அதிகாரங்கள்:
1. சட்டமன்றம் மாநிலத்தின் நிதி நிலையைக் கட்டுப்படுத்துகிறது.
2. சட்டமன்றக் கீழவையானது மேலவையைக் காட்டிலும் பண நடவடிக்கைகளில் அதிக அதிகாரம் பெற்றுள்ளது.
3. பண மசோதா கீழவையில் மட்டுமே அறிமுகப்படுத்த முடியும். கீழவையின் அனுமதியின்றி புதிய வரிகள் விதிக்க முடியாது.
நிர்வாகத் துறையின் மீது கட்டுப்பாடுகள்:
1. அமைச்சரவையானது சட்ட மன்றத்திற்குப் பொறுப்பானது.
2. சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்க வேண்டும்.
3. அமைச்சரவைக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டால் அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவர்.
29.
அமைச்சரவை தொடர்பானவை:
1. முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் அமைச்சர்களை நியமிக்கிறார்.
2. அமைச்சர்களுக்குத் துறைகளை ஒதுக்கீடு செய்கிறார்.
3. தனது அமைச்சரவையை மாற்றியமைக்கிறார்.
4. அமைச்சரவைக் கூட்டத்தைத் தலைமை ஏற்று நடத்தி முடிவுகளை எடுக்கிறார்.
5. அமைச்சர்கள் அனைவரையும் கட்டுப்படுத்தி, வழிநடத்தி, இயக்கி, அவர்களது நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறார்.
ஆளுநர் தொடர்பானவை:
கீழ்க்காணும் அலுவலர்களின் நியமனங்கள் தொடர்பாக ஆளுநருக்கு ஆலோசனை வழங்குகிறார்.
1. மாநில அரசு வழக்குரைஞர்
2. மாநில தேர்தல் ஆணையர்
3. அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மாநில திட்டக் குழுத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
4. மாநில நிதிக்குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
சட்டமன்றம் தொடர்பானவை:
1. சட்டமன்ற கூட்டத் தொடரை ஆரம்பிக்கவும் ஒத்திவைக்கவும் ஆளுநருக்கு முதலமைச்சர் ஆலோசனை வழங்குகிறார்.
2. சட்டமன்றத்தில் அரசின் கொள்கைகளை அறிவிக்கிறார்.
3. சட்டமன்றத்தில் மசோதாக்களை அறிமுகப்படுத்துகிறார்.
4. எந்நேரத்திலும் சட்டமன்றத்தைக் கலைக்க ஆளுநருக்குப் பரிந்துரை செய்கிறார்.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards