10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 05/09/2019
இந்தியா – காலநிலை மற்றும் இயற்கைத் தாவரங்கள்
10ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
யுனெஸ்கோவின் (UNESCO) உயிர்க்கோளப் பாதுகாப்பு பெட்டகத்தின் ஒரு அங்கமாக இல்லாதது _____.
நீலகிரி
அகத்திய மலை
பெரிய நிக்கோபார்
கட்ச்
2.
சேஷாசலம் உயிர்க்கோள பெட்டகம் அமைந்துள்ள மாநிலம்_____ .
தமிழ்நாடு
ஆந்திரப் பிரதேசம்
மத்தியப் பிரதேசம்
கர்நாடகா
3.
மேற்கத்திய இடையூறுகளால் மழைப்பொழிவைப் பெறும் பகுதி ______.
தமிழ்நாடு
கேரளா
பஞ்சாப்
மத்தியப் பிரதேசம்
4.
நாம் பருத்தி ஆடைகளை ________ காலத்தில் அணிகிறோம்.
கோடைக்காலம்
குளிர்க்காலம்
மழைக்காலம்
வடகிழக்கு பருவக்காற்று காலம்
5.
வானிலையியல் ஒரு _______ அறிவியலாகும்
வானிலை
சமூக
அரசியல்
மனித
6.
'புலிகள் பாதுகாப்புத் திட்டம்' என்றால் என்ன?
7.
இந்தியாவில் சதுப்புநிலக் காடுகள் காணப்படும் இடங்களைக் குறிப்பிடுக.
8.
’பருவமழை வெடிப்பு’ என்றால் என்ன?
9.
பருவக் காற்று குறித்து ஒரு சிறு குறிப்பு எழுதுக
10.
மலைப்பகுதிகள் சமவெளிகளை விட குளிரானவை
11.
மேற்கு கடற்கரைச் சமவெளி குறுகலானது.
12.
இந்திய காடுகள் பற்றி விவரிக்கவும்.
13.
இந்திய நில வரைபடத்தில் கீழ்க்கண்ட இடங்களைக் குறிக்கவும்.
1. தென்மேற்கு பருவக்காற்று வீசும் திசை.
2. வடகிழக்கு பருவக்காற்று வீசும் திசை.
3. அதிக மழை பெரும் பகுதிகள்.
4. மலைக் காடுகள்.
5. பன்னா உயிர்க்கோள பெட்டகம்.
6. அகத்தியர் மலை உயிர்க்கோளப் பெட்டகம்.
1.
(d)
கட்ச்
2.
(b)
ஆந்திரப் பிரதேசம்
3.
(c)
பஞ்சாப்
4.
(a)
கோடைக்காலம்
5.
(a)
வானிலை
6.
1. "புலிகள் பாதுகாப்புத் திட்டம்" இந்தியாவில் 1973 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
2. புலிகளை பாதுகாக்கவும் அதன் எண்ணிக்கையை அதிகரிக்கவும் புலிகள் பாதுகாப்பகங்கள் தொடங்கப்பட்டன.
3. இத்திட்டத்தின் மூலம் புலிகளின் எண்ணிக்கை 60 சதவீதம் உயர்ந்துள்ளது.
7.
1. கங்கை, பிரம்மபுத்திரா டெல்டா பகுதிகள் (உலகின் மிகப்பெரிய சதுப்பு நிலக் காடுகள்)
2. மகாநதி, கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகளின் டெல்டா பகுதிகளில் இவ்வகைக் காடுகள் காணப்படுகின்றன.
8.
1. தென்மேற்கு பருவக்காற்றின் இடி மற்றும் மின்னலுடன் கூடிய துவக்கம் (தென்னிந்தியாவில்) 'பருவமழை வெடிப்பு' எனப்படுகிறது.
2. இக்காற்று இந்தியாவின் தென் முனையை அடையும் பொழுது இரண்டு கிளைகளாகப் பிரிகிறது.
9.
1. பருவங்களுக்கேற்றவாறு தங்களது திசைகளை மாற்றிக்கொண்டு வீசும் கோள் காற்றுகளைப் பருவக்காற்று என்கிறோம்.
2. இந்தியாவின் காலநிலையைப் பாதிக்கும் மிக முக்கியமான காரணி பருவக்காற்றாகும்.
3. இக்காற்று கோடைக் காலத்தில் தென்மேற்கு திசையிலிருந்து வடகிழக்கை நோக்கியும், குளிர்காலத்தில் வடகிழக்கு திசையிலிருந்து தென்மேற்கு நோக்கியும் வீசுகிறது.
4. இந்தியாவிற்கு மழைப்பொழிவினைத் தரும் பருவக்காற்றுகள், தென்மேற்குப் பருவக்காற்று மற்றும் வடகிழக்குப் பருவக் காற்று என்பனவாகும்.
10.
காரணம்: புவிப்பரப்பிலிருந்து உயரே செல்ல செல்ல வளிமண்டலத்தில் ஒவ்வொரு 1000 மீட்டர் உயரத்திற்கும் 6.5°என்ற அளவில் வெப்பநிலை குறைகிறது. எனவே சமவெளிப் பகுதிகளைக் காட்டிலும் மலைப்பகுதிகள் குளிராக உள்ளன.
11.
காரணம்: கடற்கரை ஓரமாக உள்ள உப்பங்கழிகளும் (காயல்கள்), உப்பங்கழிகளை ஒட்டிய மணல் மேடுகளும், ஏரிகளும், மேலும் வண்டல் படிவுகள் இல்லாமையும் காரணமாகும்.
12.
அயன மண்டல பசுமைமாறாக் காடுகள்:
1. ஆண்டு மழைப்பொழிவு 200 செ.மீட்டருக்கும் மேலும் ஆண்டு வெப்பநிலை 22°C க்கு அதிகமாகவும் உள்ள பகுதிகளில் இவ்வகைக் காடுகள் காணப்படுகின்றன.
2. கேரளா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, அந்தமான் நிக்கோபர் தீவுகள், அசாம், மேற்குவங்காளம், நாகலாந்து, திரிபுரா, மிசோரம், மணிப்பூர் மற்றும் மேகாலயா ஆகிய பகுதிகளில் இவ்வகைக் காடுகள் காணப்படுகின்றன.
3. ரப்பர், எபனி, ரோஸ்மரம், தென்னை, மூங்கில், சின்கோனா, சிடார் போன்ற மரங்கள் இங்கு காணப்படுகின்றன.
அயன மண்டல இலையுதிர்க் காடுகள்:
1. ஆண்டு சராசரி மழைப்பொழிவு சுமார் 100 செ.மீ முதல் 200 செ.மீ வரையுள்ள பகுதிகளில் இக்காடுகள் காணப்படுகின்றன.
2. இக்காடுகளிலுள்ள மரங்கள் வசந்த காலத்திலும் கோடைகாலத்தின் முற்பகுதியிலும் வறட்சியின் காரணமாக இலைகளை உதிர்த்து விடுகின்றன. எனவே இக்காடுகள் இலையுதிர்க் காடுகள் என அழைக்கப்படுகின்றன.
3. இமயமலைக்கு அருகில் உள்ள பஞ்சாப் முதல் அசாம் வரையிலான பகுதிகள் வடசமவெளிகள், மத்திய இந்தியா மற்றும் தென் இந்தியா போன்ற பகுதிகளில் இக்காடுகள் காணப்படுகின்றன.
4. தேக்கு, சால், சந்தனமரம், ரோஸ்மரம், குசம், மாகு, பாலாங், ஆம்லா, மூங்கில், சிசம் மற்றும் படாக் போன்ற பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மரங்கள் இக்காடுகளில் வளர்கின்றன.
அயன மண்டல வறண்ட காடுகள்:
1. ஆண்டு மழைப்பொழிவு 50 செ.மீ முதல் 100 செ.மீ வரை உள்ள பகுதிகளில் அயன மண்டல வறண்ட காடுகள் காணப்படுகின்றன. இவை ஒரு இடைநிலை வகைக் காடுகளாகும்.
2. இக்காடுகளில் இலுப்பை, ஆலமரம், பலா, மஞ்சக்கடம்பு, கருவேலம் மற்றும் மூங்கில் ஆகியவை முக்கிய மரவகைகளாகும்.
முட்புதர் காடுகள்:
1. பாலைவன மற்றும் அரைப் பாலைவனத் தாவரங்களை "முட்புதர் காடுகள்" என்றும் அழைப்பர்.
2. இவை ஆண்டு சராசரி மழைப்பொழிவு 50 செ.மீட்டருக்கு குறைவாகவும், அதிக வெப்பமும் குறைவான ஈரப்பதமும் கொண்ட பகுதிகளில் காணப்படுகின்றன.
3. கருவேல மரம், ஈச்சமரம் போன்ற மரங்கள் இக்காடுகளில் வளர்கின்றன.
மலைக்காடுகள்:
1. உயரம் மற்றும் மழையளவின் அடிப்படையில் இதனை பருவக்காற்று காடுகள் என்று அழைக்கலாம்.
2. கிழக்கு இமயமலைக் காடுகள், வட கிழக்கு இந்திய மாநிலங்களிலுள்ள இமயமலைச் சரிவுகளில் காணப்படுகின்றன. இவை 200 செ.மீட்டருக்கும் அதிகமான மழைப் பொழிவைப் பெறுகின்றன.
3. மேலும் இவை பசுமை மாறாக் காடுகள் வகையை சார்ந்தவை.
4. மேற்கு இமயமலைக்காடுகள் ஜம்மு-காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் மிதமான மழைப்பொழிவுள்ள பகுதிகளில் காணப்படுகின்றன.
அல்பைன் காடுகள்:
1. சுமார் 2400 மீட்டருக்கு மேல் உள்ள இமயமலைகளின் உயரமான பகுதிகளில் இவ்வகைக் காடுகள் காணப்படுகின்றன,
2. இவை ஊசியிலை மரங்களைக் கொண்டுள்ளன. கிழக்கு இமயமலைப் பகுதியில் இவ்வகையான காடுகள் பரந்த அளவில் உள்ளன.
அலையாத்திக்காடுகள்:
1. இக்காடுகள் டெல்டாக்கள், பொங்கு முகங்கள் மற்றும் கடற்கழிமுகப் பகுதிகளில் காணப்படுகின்றன.
2. இவை ஓதங்களின் ஆதிக்கத்திற்கு உள்ளாவதால் சதுப்பு நிலக்காடுகள் மற்றும் டெல்டா காடுகள் எனவும் அழைக்கப்படுகின்றன.
3. இவ்வகை ஓதக்காடுகள் 'மாங்குரோவ் காடுகள்' என்றும் அழைக்கப்படுகின்றன.
13.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards