10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 20/01/2020
10ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
i) தாங்கியிருப்பு
ii) நியாய விலை கடைகள் விவரி.
2.
வரிவிதிப்புக் கொள்கைகளை விவரி.
3.
தமிழகத்தில் தொழில் விஸ்தரிப்புக்கு திறவுகோலாக செயல்படும் முகமைகள் யாவை? அவற்றை விளக்குக.
4.
வெள்ளப் பெருக்கிற்கு முன், வெள்ளப் பெருக்கின்போது மற்றும் வெள்ளப் பெருக்கிற்கு பின் நாம் செய்ய வேண்டியது என்ன?
5.
1857 ஆம் ஆண்டு நடந்த கிளர்ச்சியின் தோல்விக்கான காரணங்கள் பற்றி விரிவாக விளக்கவும்.(அ) 1857 பெருங்கலகம் தோல்வியடைய காரணங்களை ஆராய்க.
6.
இந்தியாவின் பொதுத் தகவல் தொடர்பு அமைப்பு பற்றி விரிவாக எழுதவும்.
7.
பெர்லின் சுவர் வீழ்ச்சி பற்றி விரிவாக எழுதுக
8.
GDP யின் துறை வாரியான பங்களிப்பு (2018-19) பற்றி வரைபடத்தில் விவரி.
9.
இந்தியாவின் மக்கள் பரவல் மற்றும் மக்களடர்த்தியை விவரிக்க.
10.
ஹுக்ளி ஆற்று பகுதியில் சணல் தொழிலகங்கள் செறிந்து காணப்படுவதற்கான காரணிகளை விளக்குக.
11.
சட்டமன்றத்தின் பணிகளை சுருக்கமாக விவாதிக்க.
12.
13.
இந்திய காடுகள் பற்றி விவரிக்கவும்.
14.
15.
கங்கை ஆற்று வடிநிலம் குறித்து விரிவாக எழுதுக.
16.
19ஆம் நூற்றாண்டில் சீர்திருத்த இயக்கங்கள் நடைபெறுவதற்கு இட்டுச் சென்ற சூழ்நிலைகளை விவாதிக்கவும்.
17.
அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை பற்றி எழுதுக.
18.
ஐரோப்பியக்குழுமம் எவ்வாறு ஐரோப்பிய ஒன்றியமானது என்ற வரலாற்றை எடுத்தியம்புக.
19.
உலகப் போர்களுக்கிடைப்பட்ட காலத்தில் (1919-39) இந்தியாவில் காலனிய நீக்கச் செயல்பாடுகள் எவ்வாறு நடைபெற்றன என்பதைக் குறித்து வரிசையாக விவரிக்க முயற்சி செய்யவும்
20.
1.
i) தாங்கியிருப்பு
1) தாங்கியிருப்பு என்பது உணவு தானியங்களான கோதுமை மற்றும் அரிசி இந்திய உணவுக்கழகத்தின் மூலம் அரசாங்கத்தால் வாங்கப்படுகிறது.
2) உபரி உற்பத்தி இருக்கும் மாநிலங்களில் விவசாயிகளிடமிருந்து கோதுமை மற்றும் அரிசியை FCI வாங்குகிறது.
3) விவசாயிகளுக்கு அவர்களின் பயிர்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட விலை வழங்கப்படுகிறது.
4) இந்த விலை குறைந்தபட்ச விலை என்று அழைக்கப்படுகிறது.
5) வாங்கிய உணவு தானியங்கள் களஞ்சியங்களில் சேமிக்கப்படுகின்றன.
ii) நியாய விலை கடைகள்
1) தற்போது 33,222 நியாய விலைக் கடைகள் 1.98 கோடி குடும்பங்களுக்கு சேவை புரிகிறது.
2) 33,222 நியாய விலைக் கடைகளில் 31,232 கடைகள் கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படுகின்றன.
3) 1,394 கடைகள் பெண்கள் சுய உதவிக் குழுக்களால் நடத்தப்படுகின்றன.
4) 596 கடைகள் பெண்கள் சுய உதவிக் குழுக்களால் நடத்தப்படுகின்றன.
5) நியாய விலைக் கடைகள் வாழ்விடங்களுக்கு அருகிலேயே அமைந்திருப்பது அவசியம்.
6) புதிய நியாய விலை கடைகளைத் திறக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
2.
வரிவிதிப்புக் கொள்கைகள்:
சமத்துவ விதி:
1. வரி ஒரு கட்டாயக் கட்டணம் என்பதால், வரி முறையை வடிவமைப்பதில் சமத்துவம் என்பது முதன்மை என்பதை அனைத்து பொருளாதார வல்லுநர்களும் ஒப்புக்கொள்கிறார்கள்.
2. சமத்துவ கோட்பாடு கூறுகையில், பணக்காரர்கள் ஏழைகளைவிட அரசாங்கத்திற்கு அதிக வரி வருவாயை செலுத்த வேண்டும். ஏனென்றால் ஏழைகளை விட பணக்காரர்களுக்கு அதிக வரி செலுத்தும் திறன் உள்ளது.
உறுதி விதி:
ஒவ்வொரு வரி செலுத்துவோரும் ஒரு வருடத்தில் எவ்வளவு வரித்தொகையை அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டும் என்பதைக் கணக்கிட ஒவ்வொரு அரசாங்கமும் வரி முறையை முன் கூட்டியே அறிவிக்க வேண்டும்.
சிக்கன மற்றும் வசதி விதி:
1. இந்த இரண்டு விதிகளும் தொடர்புடையவை. வரி செலுத்துவோர் என்ற வகையில், நமது கணக்குகளைச் செயலாக்குவதற்கும் வரி செலுத்துவதற்கும் ஒரு செலவு செய்யப்படுகிறது.
2. எடுத்துக்காட்டாக கணக்காளர்கள் மற்றும் தணிக்கையாளர்களுக்கு சம்பளம் வழங்குதலாகும்.
உற்பத்தித் திறன் மற்றும் நெகிழ்ச்சி வரி:
1. அரசாங்கம் போதுமான வரி வருவாயைப் பெறக்கூடிய வரிகளை தேர்வு செய்ய வேண்டும். வேறு வார்த்தைகளில் கூறுவதனால், இது நிறைய வரிகளுக்குப் பதிலாக அதிக வரி அதிக வருவாயைப் பெறக் கூடிய சில வரிகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
2. மேலும் அவை ஒவ்வொன்றும் ஒரு சிறிய வரி வருவாயைப் பெறுகின்றன.
3. இது உற்பத்தித் திறன் வரியாகும்.
3.
அ. தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (SIPCOT - State Industries Promotion Corporation of Tamil Nadu), 1971.
தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (SIPCOT) என்பது 1970 இல் தொழில் முன்னேற்றத்திற்காக நிறுவப்பட்டு தொழிற் தோட்டங்களை அமைத்தது.
ஆ. தமிழ்நாடு மாநில சிறு தொழில் வளர்ச்சிக் கழகம் (TANSIDCO - Tamil Nadu Small Industries Development Corporation), 1970.
1. தமிழ்நாடு மாநில சிறு தொழில் வளர்ச்சிக் கழகம் (TANSIDCO) என்பது 1970 இல் தமிழக அரசால் நம் மாநிலத்தில் சிறு தொழில் முன்னேற்றத்திற்காக நிறுவப்பட்ட ஒரு அரசு நிறுவனமாகும்.
2. சிறு தொழிற்பிரிவின் புதிய நிறுவனங்களுக்கு மானியம் மற்றும் தொழில்நுட்ப உதவிகளையும் இந்த நிறுவனம் செய்கிறது.
இ. தமிழ்நாடு தொழில் துறை மேம்பாட்டு கழகம் (TIDCO - Tamil Nadu Industrial Development Corporation), 1965.
நம் மாநிலத்தில் தொழில் தோட்டங்களை நிறுவுவதற்கும் தொழிற்சாலைகளை மேம்படுத்துவதற்கும் உதவும் மற்றுமொரு அரசு நிறுவனமாகும்.
ஈ. தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் - வரையறுக்கப்பட்டது (TIIC - Tamil Nadu Industrial investment Corporation Ltd), 1949.
1. புதிய தொழில் பிரிவுகளை நிறுவுவதற்கும் தற்போதுள்ள தொழில் பிரிவுகளை பெருக்குவதற்கும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகமானது குறைந்த அளவிலான நிதி உதவியைச் செய்கிறது.
2. அனைத்து வகையான தொழில் நிறுவனங்களுக்கும் இது உதவுகிறது.
உ. தமிழ்நாடு சிறு தொழில் கழகம் - வரையறுக்கப்பட்டது (TANSI - Tamil Nadu Small Industries Corporation Ltd), 1965.
தொழில் மற்றும் வணிக நிறுவனங்களால் அமைப்புத் துறையில் நிறுவப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வரும் சிறு தொழில் அமைப்புகளை 1965இல் தமிழ்நாடு சிறுதொழில் கழகமானது (TANSI) தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டது.
4.
வெள்ளப்பெருக்கிற்கு முன்:
சேவை மையங்கள் மற்றும் வெளியேறும் வழிகளைத் தெரிந்து வைத்திருத்தல், அவசரகால தொலைபேசி எண்களையும், செய்திகளையும் தெரிந்து வைத்திருத்தல், முக்கிய பொருட்களை மடித்தும் சுருட்டியும் உயரமான பகுதிகளில் வைத்தல்.
வெள்ளப்பெருக்கின் போது:
குழந்தைகள் மற்றும் வயதானவர்களை வேகமாகவும், பாதுகாப்பாகவும், வீடுகளிலிருந்து உயரமான பகுதிகளுக்கு வெளியேற்றுவதை உறுதிசெய்தல், அனைத்து மின்சார சாதனங்கள் மற்றும் எரிவாயு சாதனங்களை அணைத்து வைத்தல், தாமதமின்றி வெளியேறுதல், நீரின் வழியாக வாகனங்களைச் செலுத்தாமலும், மின் கம்பிகள், மின் திறன் செலுத்தும் மின் வடக்கம்பிகள், மற்றும் வெள்ளங்களுக்கு தொலைவில் இருத்தல்.
வெள்ளப்பெருக்கிற்குப் பின்:
மீண்டும் வீடுகளுக்குச் செல்வதை உறுதி செய்தல், வீட்டிற்குள் நுழையும் முன் அனைத்து மின்சார உபகரணங்களையும் அணைத்து, மீண்டும் அவற்றை உபயோகப்படுத்தும் மின் சரியாக உள்ளனவா? என உறுதி செய்ய வேண்டும். பழுதுபட்ட பொருட்களை அப்புறப்படுத்துவதற்கு முன் அதற்கேற்ற உடையினை அணிவது அவசியம் ஆகும்.
5.
1. 1857ஆம் ஆண்டு நடந்த கிளர்ச்சி முறையாக ஒருங்கிணைக்கப்படவில்லை. சரியாக திட்டமிடப்படவில்லை. அது தானாக நடந்தது.
2. ஆனால் தில்லி முற்றுகையிடப்பட்ட பிறகு அண்டை மாநிலங்களின் ஆதரவைப் பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
3. ஒரு சில இந்திய மாநிலங்களைத் தவிர, இந்தக் கிளர்ச்சியில் பங்கேற்க இந்திய இனவரசர்களிடம் பொதுவாக ஆர்வம் குறைந்து காணப்பட்டது.
4. காலனி அரசுக்கு விசுவாசமாக அல்லது ஆங்கிலேய அதிகாரத்தை அறிந்து அச்சப்பட்டு இந்திய அரசர்களும், ஜமீன்தாரர்களும் ஒதுங்கியிருந்தனர்.
5. கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களும் குறைந்த அளவே ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கிடைத்தும் அல்லது கிடைக்காமலும் இருந்தனர்.
6. ஆங்கில அறிவு பெற்ற நடுத்தர வகுப்பும் கிளர்ச்சிக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.
7. மத்திய தலைமை இல்லாததும் கிளர்ச்சி தோல்வியடைய முக்கிய காரணமாக அமைந்தது.
8. ஆங்கிலேய அரசுக்கு எதிராக சண்டையிட்ட பல்வேறு சக்திகளை ஒன்றிணைக்க பொதுவான செயல்திட்டம் ஏதுமில்லாமல் போனது.
9. இந்தியர்களுக்கு போதிய ஆயுதங்கள் கிடைக்கவில்லை.
10. முறையான அமைப்பாற்றல் இல்லை.
11. இந்திய வீரர்களிடையே ஒழுக்கம் இல்லை.
12. உதவியாளர்களாலேயே காட்டிக் கொடுக்கப்பட்டனர்.
13. ஆங்கில இராணுவம் கிளர்ச்சியைக் கடுமையாக ஒடுக்கியது.
6.
பொதுத் தகவல் தொடர்பு:
1) பொதுத் தகவல் தொடர்பு என்பது ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் தகவல்களை பெறுவதாகும். இது கல்வி மற்றும் பொழுது போக்கு அம்சங்களை வழங்கும் சிறந்த வழியாகும்.
2) பல்வேறு தேசியக் கொள்கைகள் மற்றும் திட்டங்களைப் பற்றி மக்கள் மத்தியில் விழிப்புணர்வை உருவாக்க பொது தகவல் தொடர்பு பயன்படுகிறது.
3) பொது தகவல் தொடர்பு அமைப்பானது அச்சு ஊடகங்கள் மற்றும் மின்னணு ஊடகங்கள் என்னும் இரண்டு முறைகளில் மக்களுக்கு தகவல்களை வழங்குகிறது.
மின்னணு ஊடகங்கள்:
1) இந்திய வானொலி ஒளிபரப்பு சேவை மும்பை வானொலி ஒளிபரப்பு சேவை மும்பை வானொலி சங்கம் மூலமாக 1923 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
2) இது 1936 ஆம் ஆண்டு அகில இந்திய வானொலி என்றும் 1957 ஆம் ஆண்டு முதல் ஆகாச வாணி என்றும் பெயர் மாற்றம் செய்து அழைக்கப்பட்டு வருகிறது.
3) இது கல்வி செய்திகள் மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது.
தொலைக்காட்சி: தொலைக்காட்சி ஒளிபரப்பு ஊடகம் மக்களுக்கு மிகவும் பயனுள்ள பல்வேறு தகவல்களை ஒளி -ஒலி காட்சி மூலமாக வழங்கும் சிறந்த ஊடகமாக உருவெடுத்துள்ளது.
இணையம்:
1) இணையம் என்பது வலையமைப்பு நெறி முறைகளை பயன்படுத்தும் கணினி மூலம் இணைக்கப்பட்ட உலகளாவிய ஒரு தகவல் பரிமாற்ற வலையமைப்பு ஆகும்.
2) செய்தி உருவாக்கம் எண்ணங்கள் வேலைவாய்ப்பு மற்றும் இதர செய்திகளை நேரடியாக பகிர்ந்து கொள்ள பயன்படும் ஒரு சமூக ஊடகமாகவும் பயன்படுகிறது.
செய்தித்தாள் ஊடகம்:
1) செய்தித்தாள் எல்லோராலும் பயன்படுத்தப்படும் சக்தி வாய்ந்த அச்சு ஊடகத்தின் கீழ்வரும் ஒரு தகவல் தொடர்பு சாதனமாகும்.
2) இந்தியாவில் உள்ளூர் தேசிய மற்றும் சர்வதேச அளவில் செய்திகளை அளிக்கக் கூடிய பல செய்தித்தாள்கள் உள்ளன.
7.
(i) ஜெர்மானிய மேற்கு (ஜெர்மானியக் கூட்டுக் குடியரசு) கிழக்குப் (ஜெர்மானிய ஜனநாயகக் குடியரசு) பிரிவுகள் வேறுபட்ட வாழ்க்கைத் தரத்தில் எதிரொலித்தன.
(ii) மார்ஷல் திட்டத்தின் துணையால் மேற்கு பெர்லினின் பொருளாதாரம் செழித்தோங்கியது.
(iii) அதற்கு பதிலாக கிழக்கு பெர்லினின் பொருளாதார வளர்ச்சியில் ரஷ்யா போதிய அக்கறை கொண்டிருக்கவில்லை.
(iv) மேலும் கிழக்கு பெர்லினில் மக்களாட்சியோ, சுதந்திரமோ இல்லாததால் மக்களுக்கு பெரும் சிரமம் இருந்தது.
(v) இதனால் கிழக்கு பெர்லின் மக்கள் மேற்கு பெர்லினுக்கு நகர்ந்து செல்ல முயன்றனர் மேற்கு பெர்லினிலோ ரஷ்யா தன்மீது எந்த நேரத்திலும் படையெடுத்து வரக்கூடும் என்ற அச்சம் நிலவியது
(vi) இச்சூழலில் 1961 - ல் கிழக்கு ஜெர்மனி ஒரு சுவரை எழுப்பி கிழக்கு பெர்லின் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளுக்கும் மேற்கு பெர்லினுக்கும் இருந்த தொடர்பை நிறுத்தியது
(vii) காவல் கோபுரங்கள் எழுப்பப்பட்டு பயங்கர ஆயுதங்களின் துணையோடு கடுமையான கண்காணிப்பு பணியில் மூலம் கிழக்கிலிருந்து மக்கள் நுழைவது தவிர்க்கப்பட்டு வந்தது
(viii) ரஷ்யாவின் கட்டுப்பாட்டு 1980களின் நடுவில் வலுவிழக்கத் துவங்கிய நிலையில் இச்சுவரின் இருபுறமும் 9 நவம்பர், 1949ம் ஆண்டில் துவக்கத்தில் காஸா முனை தவிர்த்து எகிப்து, பாலஸ்தீன் எல்லை வரை நீண்ட நெகேவ் பகுதியை (பாலைவன பகுதியாகவும், அரைகுறை பாலைவனப் பகுதியாகவும் திகழும் தெற்கு இஸ்ரேலியப் பகுதி) இஸ்ரேலியர்கள் தங்கள் வசப்படுத்தினர்
(ix) இஸ்ரேலுடன் அரபு நாடுகள் தனித்தனியாக 1947 ஆம் ஆண்டின் பிப்ரவரி முதல் ஜூன் வரை ஏற்படுத்திக் கொண்ட அமைதி உடன்படிக்கைகளின் கீழ் இஸ்ரேலுக்கும் அதன் பக்கத்துக்கு நாடுகளுக்குமிடையே தற்காலிகமான எல்லை நிர்ணயம் செய்யப்பட்டது
(x) இஸ்ரேலைப் பொறுத்த வரையில் இக்கால கட்டத்தில் நிகழ்ந்த போர்கள் யாவும் அதன் சுதந்திரவேட்கையின் வெளிப்பாடாகவும்,சுதந்திர போராகவும் நினைவு கொள்ளப்பட்டது
(xi) அரேபியர்களைப் பொறுத்தமட்டில் பலரும் இப்போர்களினால் அகதிகளாக இடம்பெயர வேண்டிய இருந்ததால் அது நக்பா (பேரழிவு) என அழைக்கப்பட்டது
(xii) அரேபியர்களின் எதிர்ப்பை மீறி இஸ்ரேலுக்கு உடனடியாக ஐ.நா சபையின் உறுப்பினர் அந்தஸ்து வழங்கப்பட்டது. இதன் மூலம் ஐக்கிய அமெரிக்க நாடு போன்ற மேற்கத்திய சக்திகளுக்கு அவர்கள் வழங்கிய ஆயுதங்களும் நீதிக்கும் மாற்றாக விசுவாசத்தை வெளிப்படுத்தவே இஸ்ரேல் வலுவாக கட்டியெழுப்பப்பட்டது என்று உறுதியாகிறது
(xiv) 1989இல் கூடிய மக்கள் கூட்டம் அதை தகர்க்கத் துவங்கியது. ஜெர்மனி 3 அக்டோபர் 1990 அன்று முறையாக இணைக்கப்பட்டது. பெர்லின் சுவர் ஒரு கட்டுமானத் தடை என்பதை தாண்டிய ஒரு விஷயமாகும்.
(xv) அது முதலாளித்துவத்திற்கும், பொதுவுடமைக்கும் இடையே இருந்த பிளவை அடையாளப்படுத்தக்கூடிய ஒன்று.
(xvi) பெர்லின் சுவரின் வீழ்ச்சியைத் தொடர்ந்து 26 டிசம்பர் 1991இல் சோவியத் நாடும் வீழ்ந்து பனிப்போர் காலத்தை முடிவுக்கு கொண்டு வந்தது.
8.
GDP-யின் துறை வாரியான, பங்களிப்பு
(2018-19) (% பங்கு)
9.
மக்கள்தொகை பரவல்:
1. 'மக்கள் தொகைப் பரவல்' என்பது புவியின் மேற்பரப்பில் மக்கள் எவ்விடைவெளியில் உள்ளார்கள் என்பதைக் குறிக்கிறது. இப்பரவல் வளங்களின் பரவலுக்கேற்ப சீரற்று காணப்படுகிறது.
2. நிலப்பரப்பு, காலநிலை, மண், நீர் பரப்புகள், கனிம வளங்கள், தொழிலகங்கள், போக்குவரத்து மற்றும் நகரமயமாக்கல் ஆகியவை நாட்டின் மக்கள் தொகைப் பரவலைப் பாதிக்கும் முக்கியக் காரணிகளாகும்.
3. தொழில் மையங்கள் மற்றும் செழிப்பான வேளாண் பிரதேசங்கள் போன்ற பகுதிகளில் மக்கள் தொகை செறிவுமிக்கதாக காணப்படுகிறது.
4. மலைப்பிரதேசங்கள். வறண்ட நிலப்பகுதிகள், வனப்பகுதிகள், தொலைதூரப்பகுதிகள் போன்ற பகுதிகளில் மக்கள் தொகை குறைவாகவும், மக்களற்றும் காணப்படுகிறது.
5. உத்திரப்பிரதேசம் மாநிலம் இந்தியாவில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட மாநிலமாகும். சிக்கிம் மிகக்குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலமாகும். யூனியன் பிரதேசங்களிடையே புதுடெல்லி அதிக மக்கள் தொகையுடன் காணப்படுகிறது.
மக்களடர்த்தி
1. மக்களடர்த்தி என்பது சராசரியாக ஒரு சதுரகிலோ மீட்டர் பரப்பளவில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடுகிறது. 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி இந்தியாவின் சராசரி மக்களடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 382 ஆகும்.
2. உலகின் மக்களடர்த்தி மிகுந்த பத்து நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் மிக அதிக மக்களடர்த்தியைக் கொண்ட மாநிலமாக பீகாரும் மிகக்குறைந்த மக்களடர்த்தியைக் கொண்ட மாநிலமாக அருணாச்சல பிரதேசமும் உள்ளன.
3. யூனியன் பிரதேசங்களில் புதுடெல்லி அதிக மக்களடர்த்தியைக் கொண்டதாகவும், அந்தமான் நிக்கோபர் தீவுகள் குறைந்த மக்களடர்த்தியைக் கொண்டதாகவும் உள்ளன.
10.
ஹுக்ளி ஆற்று பகுதியில் சணல் தொழிலகங்கள் செறிந்து காணப்படுவதற்கான காரணிகள்:
1. ஹுக்ளி ஆற்றுப் பகுதியில் சணல் பயிரிட உகந்த காலநிலை, மண்வளம் மற்றும் நீர்ப்பாசன வசதி போதுமான அளவு உள்ளது.
2. சணல், குறைவான விலையில் கிடைக்கக்கூடிய ஒரு இழைப்பயிர். இம்மூலப்பொருள் ஹுக்ளி ஆற்றுப்பகுதிகளில் அதிகமாகப் பயிரிடப்படுகின்றது.
3. ஆலைக்குத் தேவையான மலிவான தொழிலாளர்கள் மேற்கு வங்காளம், பீகார், ஒடிசா போன்ற மாநிலங்களிலிருந்து கிடைக்கின்றனர்.
4. சாலைப்போக்குவரத்து, ரயில் போக்குவரத்து ஹுக்ளி ஆற்றுப்பகுதியோடு இணைக்கப்பட்டுள்ளன.
5. கொல்கத்தா துறைமுகம் அருகில் அமைந்துள்ளதால் குறைந்த செலவில் பொருட்களை துறைமுகத்திற்கு எடுத்துச் செல்லவும், ஏற்றுமதி செய்யவும் வசதியாக உள்ளது.
6. வங்கிகள் மற்றும் காப்புறுதி நிறுவனங்கள் போன்ற வசதிகளையும் இப்பகுதி பெற்றுள்ளது.
7. தொழிற்சாலைக்குத் தேவையான நீர் ஹுக்ளி நதியிலிருந்து கிடைக்கிறது.
11.
சட்டமன்ற அதிகாரங்கள்:
1. அரசியலமைப்பின்படி மாநிலப் பட்டியலிலுள்ள அனைத்துத் துறைகள் மீதும் சட்டமன்றம் சட்டத்தை இயற்றலாம். பொதுப்பட்டியலிலும் சட்டமன்றம் சட்டம் இயற்றலாம்.
2. ஆனால், அதே சட்டத்தை நடுவண் அரசு இயற்றும் பொழுது, மாநில அரசின் சட்டம் செயலற்றதாகி விடும்.
3. மத்திய நாடாளுமன்ற நடைமுறையைப் போன்றே மாநிலச் சட்டமன்றத்தின் மசோதாவும் சட்டமாக நிறைவேறுகிறது.
நிதி அதிகாரங்கள்:
1. சட்டமன்றம் மாநிலத்தின் நிதி நிலையைக் கட்டுப்படுத்துகிறது.
2. சட்டமன்றக் கீழவையானது மேலவையைக் காட்டிலும் பண நடவடிக்கைகளில் அதிக அதிகாரம் பெற்றுள்ளது.
3. பண மசோதா கீழவையில் மட்டுமே அறிமுகப்படுத்த முடியும். கீழவையின் அனுமதியின்றி புதிய வரிகள் விதிக்க முடியாது.
நிர்வாகத் துறையின் மீது கட்டுப்பாடுகள்:
1. அமைச்சரவையானது சட்ட மன்றத்திற்குப் பொறுப்பானது.
2. சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்க வேண்டும்.
3. அமைச்சரவைக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டால் அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவர்.
12.
13.
அயன மண்டல பசுமைமாறாக் காடுகள்:
1. ஆண்டு மழைப்பொழிவு 200 செ.மீட்டருக்கும் மேலும் ஆண்டு வெப்பநிலை 22°C க்கு அதிகமாகவும் உள்ள பகுதிகளில் இவ்வகைக் காடுகள் காணப்படுகின்றன.
2. கேரளா, கர்நாடகா, மகாராஷ்ட்ரா, அந்தமான் நிக்கோபர் தீவுகள், அசாம், மேற்குவங்காளம், நாகலாந்து, திரிபுரா, மிசோரம், மணிப்பூர் மற்றும் மேகாலயா ஆகிய பகுதிகளில் இவ்வகைக் காடுகள் காணப்படுகின்றன.
3. ரப்பர், எபனி, ரோஸ்மரம், தென்னை, மூங்கில், சின்கோனா, சிடார் போன்ற மரங்கள் இங்கு காணப்படுகின்றன.
அயன மண்டல இலையுதிர்க் காடுகள்:
1. ஆண்டு சராசரி மழைப்பொழிவு சுமார் 100 செ.மீ முதல் 200 செ.மீ வரையுள்ள பகுதிகளில் இக்காடுகள் காணப்படுகின்றன.
2. இக்காடுகளிலுள்ள மரங்கள் வசந்த காலத்திலும் கோடைகாலத்தின் முற்பகுதியிலும் வறட்சியின் காரணமாக இலைகளை உதிர்த்து விடுகின்றன. எனவே இக்காடுகள் இலையுதிர்க் காடுகள் என அழைக்கப்படுகின்றன.
3. இமயமலைக்கு அருகில் உள்ள பஞ்சாப் முதல் அசாம் வரையிலான பகுதிகள் வடசமவெளிகள், மத்திய இந்தியா மற்றும் தென் இந்தியா போன்ற பகுதிகளில் இக்காடுகள் காணப்படுகின்றன.
4. தேக்கு, சால், சந்தனமரம், ரோஸ்மரம், குசம், மாகு, பாலாங், ஆம்லா, மூங்கில், சிசம் மற்றும் படாக் போன்ற பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மரங்கள் இக்காடுகளில் வளர்கின்றன.
அயன மண்டல வறண்ட காடுகள்:
1. ஆண்டு மழைப்பொழிவு 50 செ.மீ முதல் 100 செ.மீ வரை உள்ள பகுதிகளில் அயன மண்டல வறண்ட காடுகள் காணப்படுகின்றன. இவை ஒரு இடைநிலை வகைக் காடுகளாகும்.
2. இக்காடுகளில் இலுப்பை, ஆலமரம், பலா, மஞ்சக்கடம்பு, கருவேலம் மற்றும் மூங்கில் ஆகியவை முக்கிய மரவகைகளாகும்.
முட்புதர் காடுகள்:
1. பாலைவன மற்றும் அரைப் பாலைவனத் தாவரங்களை "முட்புதர் காடுகள்" என்றும் அழைப்பர்.
2. இவை ஆண்டு சராசரி மழைப்பொழிவு 50 செ.மீட்டருக்கு குறைவாகவும், அதிக வெப்பமும் குறைவான ஈரப்பதமும் கொண்ட பகுதிகளில் காணப்படுகின்றன.
3. கருவேல மரம், ஈச்சமரம் போன்ற மரங்கள் இக்காடுகளில் வளர்கின்றன.
மலைக்காடுகள்:
1. உயரம் மற்றும் மழையளவின் அடிப்படையில் இதனை பருவக்காற்று காடுகள் என்று அழைக்கலாம்.
2. கிழக்கு இமயமலைக் காடுகள், வட கிழக்கு இந்திய மாநிலங்களிலுள்ள இமயமலைச் சரிவுகளில் காணப்படுகின்றன. இவை 200 செ.மீட்டருக்கும் அதிகமான மழைப் பொழிவைப் பெறுகின்றன.
3. மேலும் இவை பசுமை மாறாக் காடுகள் வகையை சார்ந்தவை.
4. மேற்கு இமயமலைக்காடுகள் ஜம்மு-காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் மிதமான மழைப்பொழிவுள்ள பகுதிகளில் காணப்படுகின்றன.
அல்பைன் காடுகள்:
1. சுமார் 2400 மீட்டருக்கு மேல் உள்ள இமயமலைகளின் உயரமான பகுதிகளில் இவ்வகைக் காடுகள் காணப்படுகின்றன,
2. இவை ஊசியிலை மரங்களைக் கொண்டுள்ளன. கிழக்கு இமயமலைப் பகுதியில் இவ்வகையான காடுகள் பரந்த அளவில் உள்ளன.
அலையாத்திக்காடுகள்:
1. இக்காடுகள் டெல்டாக்கள், பொங்கு முகங்கள் மற்றும் கடற்கழிமுகப் பகுதிகளில் காணப்படுகின்றன.
2. இவை ஓதங்களின் ஆதிக்கத்திற்கு உள்ளாவதால் சதுப்பு நிலக்காடுகள் மற்றும் டெல்டா காடுகள் எனவும் அழைக்கப்படுகின்றன.
3. இவ்வகை ஓதக்காடுகள் 'மாங்குரோவ் காடுகள்' என்றும் அழைக்கப்படுகின்றன.
14.
15.
கங்கை ஆற்று வடிநிலம்:
1. கங்கையாற்றின் தொகுப்பு 8,61,404 ச.கி.மீ பரப்பளவில் பாயும் இந்தியாவின் மிகப்பெரிய வடிகால் அமைப்பைக் கொண்டதாகும்.
2. கங்கைச் சமவெளியில் பல நகரங்கள் ஆற்றங்கரையையொட்டி அமைந்துள்ளன.
3. கங்கைச் சமவெளி அதிக மக்களடர்த்தி கொண்டதாகும்.
4. கங்கை ஆறு உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள கங்கோத்ரி பனியாற்றிலிருந்து பாகிரதி என்னும் பெயருடன் உற்பத்தியாகிறது.
5. இந்நதியின் நீளம் சுமார் 2525 கி.மீ ஆகும்.
6. வடபகுதியிலிருந்து கோமதி, காக்ரா, கண்டாக், கோசி மற்றும் தென்பகுதியிலிருந்து யமுனை, சோன், சாம்பல் போன்ற துணையாறுகள் கங்கையுடன் இணைகின்றன.
7. வங்கதேசத்தில், கங்கை நதி பத்மா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
8. கங்கை மற்றும் பிரம்மபுத்திரா ஆறுகள் சேர்ந்து உலகிலேயே மிகப்பெரிய டெல்டாவை உருவாக்கி பின் வங்காள விரிகுடாவில் கலக்கின்றன.
16.
19ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் சமூகம் மற்றும் சமயத்தில் பல சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலை நாட்டுக் கல்வியினால் மக்கள் மேற்கத்திய கருத்துக்களான பகுத்தறிதல் , சமத்துவம் , சுதந்திரம் , தேசியம் மற்றும் மனிதாபிமானம் போன்ற கருத்துகளால் மிகவும் கவரப்பட்டனர் .
இவர்கள் மீது கிறிஸ்துவ மதத்தின் தாக்கமும் ஏற்பட்டது.
இராஜா ராம்மோகன் ராய் பங்கிம் சந்திர சட்டர்ஜி, K.C.சென் போன்ற சீர்திருத்தவாதிகள் மக்களுக்கு உற்சாகமூட்டினார்.
மேற்கத்திய தாராள சிந்தனையில் பரவியதும் சமூக பண்பாட்டு விழிப்புணர்வு தோன்றியது.
இந்தியா பண்பாட்டில் இருந்த குறைகளை களைந்து இந்தியாவின் பழம்பெரும் கலாச்சார புகழை மீண்டும் கொண்டுவர விரும்பினார்.
அவர்கள் பல்வேறு சமூக மற்றும் சமய சீர்திருத்த இயக்கங்களைத் தோற்றுவித்தனர்.
இதன் மூலம் இந்தியா சமுதாயத்திலிருந்து குறைகளை களைய முற்பட்டனர்.
இத்தகைய சூழலில் தோன்றிய சமூக சமய சீர்திருத்த இயக்கங்கள் இந்தியாவின் மறுமலர்ச்சி இயக்கங்கள் என அழைக்கப்பட்டன.
17.
நீதிப்பேராணை :
நீதிமன்ற முத்திரையுடன் நீதிமன்றத்தால் வெளியிடப்படும் கட்டளை அல்லது ஆணை நீதிப்பேராணை எனப்படும். இது சில சட்டங்களை நிறைவேற்றாமல் தடைசெய்ய, நீதிமன்றத்தால் வெளியிடப்படும் ஆணையாகும்.
உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்கள் இரண்டுமே ஐந்து வகையான நீதிப்பேராணைகளை வெளியிட அதிகாரம் பெற்றுள்ளன.
ஐந்து வகையான நீதிப்பேராணைகள்:
1. ஆட்கொணர்வு நீதிப் பேராணை,
2. கட்டளையுறுத்தும் நீதிப்பேராணை,
3. தடையுறுத்தும் நீதிப்பேராணை,
4. ஆவணக் கேட்பு நீதிப் பேராணை,
5. தகுதிமுறை வினவும் நீதிப் பேராணை.
ஆட்கொணர்வு நீதிப்பேராணை:
சட்டத்திற்குப் புறம்பாக ஒருவர் கைது செய்யப்படுவதிலிருந்து இது பாதுகாக்கிறது.
கட்டளையுறுத்தும் நீதிப்பேராணை :
மனுதாரர் சட்ட உதவியுடன் தனது மனு தொடர்பான பணியினைச் சம்பந்தப்பட்ட துறையிலிருந்து நிறைவேற்றிக் கொள்ள முடியும்.
தடையுறுத்தும் நீதிப்பேராணை:
ஒரு கீழ் நீதிமன்றம் தனது, சட்ட எல்லையைத் தாண்டி செயல்படுவதைத் தடுக்கிறது.
ஆவணக் கேட்பு நீதிப்பேராணை:
உயர்நீதிமன்றம், ஆவணங்களை நியாயமான பரிசீலனைக்கு தளத்திற்கோ அல்லது உரிய அதிகாரிக்கோ அனுப்பச் செய்ய கீழ் நீதிமன்றங்களுக்கு இடும் ஆணையாகும்.
தகுதிமுறை வினவும் நீதிப்பேராணை:
இப்பேராணை சட்டத்திற்குப் புறம்பாக, தகாத முறையில் அரசு அலுவலகத்தைக் கைப்பற்றுவதை தடை செய்கிறது.
18.
ஐரோப்பிய குழுமம்:
1. 1949 இல் பத்து நாடுகள் லண்டனில் கூடி ஐரோப்பிய சமூகத்தை உருவாக்க கையொப்பமிட்டன. இதன் தலைமையகம் ஸ்ட்ராஸ்பர்க் நகரில் அமைந்துள்ளது.
2. அதன்மூலம் ஐரோப்பியர்களுக்கிடையே மூண்ட போர்களைத் தவிர்க்கவும், ஒருங்கிணைந்த ஐரோப்பாவைக் கொண்டு சோவியத் நாட்டின் அச்சுறுத்தல்களை எதிர் கொள்ளவும், அமெரிக்க ஐக்கிய நாட்டின் படைகளுக்குச் சமமாக ஒரு படை பலத்தை நிறுவவும், கண்டங்களில் பொருளாதார மற்றும் இராணுவ வளங்களையும் திறன்களையும் முழுவதுமாகப் பயன்படுத்தவும் முடியும் என்று கருதப்பட்டது.
ஐரோப்பிய நிலக்கரி மற்றும் எஃகு சமூகம்:
1. ஐரோப்பிய நிலக்கரி மற்றும் எஃகு சமூகத்தைச் சேர்ந்த ஆறு நாடுகள் கூடி ரோம் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது.
2. அதன் மூலம் ஐரோப்பியப் பொதுச்சந்தையை பிரெஸெல்ஸ் நகரைத் தலைமையகமாகக் கொண்டு ஏற்படுத்தின.
ஐரோப்பிய பொருளாதார சமூகம் :
1. இச்சமூகம் பண்டங்கள், சேவைகள், முதலீடு, தொழிலாளர் போன்றவற்றின் நகர்வை எல்லைகள் கொண்டு நிறுத்துவதை மாற்றியது.
2. சந்தைப் போட்டியைக் கட்டுக்குள் கொண்டுவர முயன்றபோது கொள்கைகளையும் தனியார் ஒப்பந்தங்களையும் புறக்கணித்தது.
3. பொதுவான விவசாயக் கொள்கையையும், பொதுவான வெளிநாட்டு வணிகத்தையும் இவ்வமைப்பு உருவாக்கியது.
ஒற்றை ஐரோப்பியர் சட்டம்:
1. ஒற்றை ஐரோப்பியச் சட்டம் 1987 இல் நடைமுறைக்கு வந்தது. அது ஐரோப்பிய பொருளாதார சமூகத்தின் எல்லைகளை விரிவாக்கி அதற்கு சட்ட வடிவம் கொடுத்தது.
2. மேலும் அது உறுப்பு நாடுகளை வெளியுறவுக் கொள்கையில் அதிகமான ஒத்துழைப்பை நாடியது.
ஐரோப்பிய ஒன்றியம்:
1. 1992ல் கையெழுத்திடப்பட்ட மாஸ்டிரிக்ட் (நெதர்லாந்து) ஒப்பந்தம் ஐரோப்பிய ஒன்றியத்தை ஏற்படுத்தியது.
2. பொதுவான நிதிக் கொள்கையும், பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பணமும் (யூரோ) முதலில் நடைமுறைப்படுத்தப்பட்டு பின்னர் அவற்றை நிர்வகிக்கும் பொது நிறுவனங்களும் திட்டமிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன.
3. தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் 28 உறுப்பு நாடுகள் உள்ளன. அவை பிரெஸெல்ஸ் (பெல்ஜியத்தின்) நகரைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றன.
19.
மாகாணங்களில் இரட்டையாட்சி:
1. இந்தியாவில் காலனிய நீக்கச் செயல்பாடானது 1905 ஆம் ஆண்டு சுதேசி இயக்கத்தோடு துவங்கியது.
2. 1919 இல் இந்திய அரசுச் சட்டம் இரட்டையாட்சி முறையை அறிமுகம் செய்தது.
3. அச்சட்டம் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட மாகாண சட்டசபைகளுக்கும் மாற்று அதிகாரங்களின் பட்டியலின் கீழ் வரும் சில துறைகளை இந்திய அமைச்சர்களே நிர்வகிக்கவும் வழிவகை செய்தது.
4. இந்திய தேசிய காங்கிரஸ் இரட்டையாட்சி தொடர்பான ஏற்பாடுகளை மறுத்ததோடு சட்டசபைகளைப் புறக்கணிக்க முடிவு செய்தது.
தொழில்மயமாக்குதலில் குறைபாடுகள்:
1. உள்நாட்டுத் தொழில்களைப் பொறுத்தமட்டில் தொழில் நுட்பம் சார்ந்த அறிவுரைகளும், கல்வி வழங்குதல், புதிய துறைகள் தொடர்பான முன்னோடித் தொழில் கூடங்களை அரசு தொடங்குதல் போன்ற வடிவங்களில் மட்டுமே அரசு உதவிகள் செய்தது.
2. ஆனால் ஆங்கில நிறுவனங்கள் அரசின் தலையீட்டை எதிர்த்ததால் வெகுவிரைவில் இக்கொள்கையும் கைவிடப்பட்டது.
பொருளாதாரப் பெருமந்தத்தின்போது இந்தியா:
1. உள்நாட்டுத் தொழில்களைப் பொறுத்தமட்டில் தொழில் நுட்பம் சார்ந்த அறிவுரைகளும், கல்வி வழங்குதல், புதிய துறைகள் தொடர்பான முன்னோடித் தொழில் கூடங்களை அரசு தொடங்குதல் போன்ற வடிவங்களில் மட்டுமே அரசு உதவிகள் செய்தது.
2. ஆனால் ஆங்கில நிறுவனங்கள் அரசின் தலையீட்டை எதிர்த்ததால் வெகுவிரைவில் இக்கொள்கையும் கைவிடப்பட்டது.
பொருளாதாரப் பெருமந்தத்தின்போது இந்தியா:
1. 1929 ஆம் ஆண்டு பொருளாதாரப் பெருமந்தம் ஆங்கிலேய வணிக வர்த்தக நடவடிக்கைகளுக்குப் பெரும் சேதத்தை உண்டாக்கும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
2. இங்கிலாந்து பெருமந்தத்தின் தீய விளைவுகளைத் தனது காலனிய நாடுகளின் தோள்களுக்கு மாற்றியது.
3. 1932 இல் நடைபெற்ற ஒட்டாவா பொருளாதார உச்சி மாநாட்டில் பங்கேற்ற நாடுகள் (இந்தியா உட்பட) ஏனைய நாட்டு பொருள்களைக் காட்டிலும் இங்கிலாந்து பொருட்களுக்கு முன்னுரிமை வழங்க ஒப்புக்கொண்டன.
4. இந்திய அரசு பின்பற்றிய அந்நியச் செலவாணி மாற்றுக் கொள்கை காலனி அரசுக்கும் மக்களுக்குமிடையே பதற்றமான நிலை ஏற்படுத்தியது. இது ஆங்கில அரசுக்கு எதிரான அரசியல் போராட்டங்களைத் தீவிரப்படுத்தியது.
இந்திய வேளாண்மையின் மீது பெருமந்தம் ஏற்படுத்திய தாக்கம்:
1. பொருளாதாரப் பெருமந்தத்தினால் வேளாண் உற்பத்திப் பொருட்களின் விலை பாதியாகக் குறைந்தது.
2. ஆனால் விவசாயிகள் நிலத்திற்கு கொடுக்கவேண்டிய குத்தகைத் தொகையில் மாற்றமேதுமில்லை.
3. விலைவாசியில் ஏற்பட்ட மிகப்பெரும் வீழ்ச்சி இந்திய தேசியவாதிகளை உள்நாட்டு பொருளாதாரத்தைப் பாதுகாக்கும் கோரிக்கையை வைக்கத்தூண்டியது.
1935 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம்:
1. 1935 ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டம் உள்ளாட்சி அரசு நிறுவனங்களுக்கு அதிக அதிகாரம் வழங்கியதோடு நேரடித் தேர்தலையும் அறிமுகம் செய்தது.
2. இச்சட்டத்தின் அடிப்படையில் 1937 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் பெரும்பாலான மாகாணங்களில் அகில இந்திய தேசிய காங்கிரஸ் அதிர்வை ஏற்படுத்தும் வெற்றியைப் பெற்றது.
3. இருந்தபோதிலும் காங்கிரஸ் அமைச்சரவையைக் கலந்தாலோசிக்காமல் ஆங்கில அரசு இந்தியாவை இரண்டாம் உலகப்போரில் ஈடுபடுத்தியதால் காங்கிரஸ் அமைச்சரவை ராஜினாமா செய்யும் கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டது.
20.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards