10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 20/01/2020
10ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
இரட்டைமலை சீனிவாசன்
அ) இரட்டைமலை சீனிவாசன் எவ்வாறு பரவலாக அறியப்பட்டார்?
ஆ) அவர் எதற்காகப் போராடினார்?
இ) அவர் எவ்வாறு சிறப்பு செய்யப்பட்டார்?
ஈ) அவர் எழுதிய சுயசரிதையின் பெயர் என்ன?
2.
சைமன் குழு புறக்கணித்தல்
அ) சைமன் குழு எப்போது ஆரம்பிக்கப்பட்டது?
ஆ) சைமன் குழு யார் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது? ஏன்?
இ) காங்கிரஸ் ஏன் சைமன் குழுவை புறக்கணித்தது?
ஈ) சைமன் குழு சென்னைக்கு வந்தபோது எவ்வாறு புறக்கணிக்கப்பட்டது?
3.
உள்நாட்டு கிளர்ச்சி
1. உள்நாட்டு கிளர்ச்சிக்கு ஆதரவு தந்தவர்கள் யார்?
2. முதலாவது உள்நாட்டு கிளர்ச்சி எங்கு வெடித்தது?
3. கிளர்ச்சி நோக்கி ஈர்க்கப்பட்டவர்கள் யார்?
4. கைவினைக் கலைஞர்கள் ஏன் பாதிக்கப்பட்டனர்?
4.
சாந்தலர்களின் எழுச்சி
1. சாந்தலர்கள் யாரால் ஒடுக்கப்பட்டனர்?
2. சாந்தலர்கள் யாரை சார்ந்து வாழ நிர்பந்திக்கப்பட்டனர்?
3. சாந்தலர் கூட்டத்தால் கொல்லப்பட்டவர்கள் யார்?
4. யாருக்கு எதிரான கிளர்ச்சியாக உருவெடுத்தது?
5.
மருது சகோதரர்களின் கலகம்
அ. இரண்டாவது பாளையக்காரர் போர் யாருடைய கூட்டமைப்பால் நடத்தப்பட்டது?
ஆ. கட்டபொம்மனின் சகோதரர்கள் யார்?
இ. மருது சகோதரர்கள் எங்கு அடைக்கலம் கோரினர்?
ஈ. சிவகங்கையை படையெடுத்துச் சென்றவர்கள் யார்?
6.
மறைமலை அடிகள்
அ) மறைமலை அடிகள் விளக்கவுரை எழுதிய சங்க நூல்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
ஆ) இளைஞராக இருந்தபோது மறைமலை அடிகள் பணியாற்றிய பத்திரிகையின் பெயரைக் குறிப்பிடுக.
இ) இந்தித் திணிப்பை அவர் ஏன் எதிர்த்தார்?
ஈ) மறைமலை அடிகளின் வாழ்க்கையின் மீது செல்வாக்குச் செலுத்தியவர்களில் முக்கியமானவர்கள் யாவர்?
7.
பிராமணரல்லாதோர் இயக்கம்
அ) தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் ஏன் உருவாக்கப்பட்டது?
ஆ) பிராமணரல்லாதோர் அறிக்கை என்றால் என்ன?
இ) ஈ.வெ.ரா ஏன் பிராமணரல்லாதோர் இயக்கத்தில் இணைந்தார்?
ஈ) இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்து நீங்கள் அறிந்ததென்ன?
8.
தமிழ்நாட்டில் புரட்சிகர தேசியவாத இயக்கம்
அ) தமிழ்நாட்டை சேர்ந்த சில புரட்சிகர தேசியவாதிகளைப் பட்டியலிடுக.
ஆ) சுப்பிரமணிய பாரதியார் பாண்டிச்சேரிக்கு சென்றது ஏன்?
இ) சில புரட்சிவாதப் பத்திரிகைகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
ஈ) வாஞ்சிநாதன் செய்தது என்ன?
9.
காந்தியடிகளின் ஆக்கபூர்வ திட்டம்
அ) ஆக்கப்பூர்வ திட்டம் என்றால் என்ன?
ஆ) காங்கிரசார் என்ன செய்ய வேண்டும் என்று காந்தியடிகள் அறிவுறுத்தினார்?
இ) இந்து-முஸ்லிம் ஒற்றுமையை ஏற்படுத்த காந்தியடிகள் செய்தது என்ன?
ஈ) தீண்டாமையை ஒழிக்க காந்தியடிகளின் பங்களிப்பு என்ன?
10.
தீரன் சின்னமலை
அ) தீரன் சின்னமலை எப்போது பிறந்தார்?
ஆ) ‘சின்ன மலை’ என்ற பட்டப்பெயரை அவர் எவ்வாறு பெற்றார்?
இ) திப்பு சுல்தானின் திவானின் பெயர் யாது?
ஈ) அவர் எங்கு, ஏன் தூக்கிலிடப்பட்டார்?
1.
அ) தாத்தா
ஆ) சாதிப்படிநிலைகளில் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக நீதி, சமத்துவம், சமூக உரிமைகள் ஆகியவற்றுக்காகப் போராடினார்.
இ) அவருடைய தன்னலமற்ற சேவைக்காக ராவ்சாகிப் (1926), ராவ் பகதூர் (1930), திவான் பகதூர் (1936) ஆகிய பட்டங்களால் சிறப்புச் செய்யப்பட்டார்.
ஈ) ஜீவிய சரித்திர சுருக்கம்.
2.
அ) 1927
ஆ) 1919 ஆம் ஆண்டுச் சட்டத்தின் செயல்பாடுகளைப் பரிசீலனை செய்து சீர்திருத்தங்களைப் பரிந்துரை செய்ய 1927 இந்திய சட்டபூர்வ ஆணையம் ஒன்று சர் ஜான் சைமனின் தலைமையில் அமைக்கப்பெற்றது.
இ) வெள்ளையர்களை மட்டுமே கொண்டிருந்த இக்குழுவில் ஒரு இந்தியர் கூட இடம்பெறாதது இந்தியர்களுக்கு மிகப்பெரும் மனச்சோர்வு ஏற்படுத்தியது. ஆகையால் காங்கிரஸ் சைமன் குழுவை புறக்கணித்தது.
ஈ) 1929 பிப்ரவரி 18இல் சைமன் குழு சென்னைக்கு வந்தபோது பொதுக் கூட்டங்கள், எதிர்ப்பு ஊர்வலங்கள், கடையடைப்பு போன்றவற்றால் எதிர்ப்பு காட்டப்பட்டது. குழுவுக்கு எதிராகக் கறுப்புக் கோடி காட்டப்பட்டது.
3.
1. வட இந்தியாவில் பாதிக்கப்பட்ட கிராம சமூகத்தில் வாழ்ந்த மக்களும் இந்த கிளர்ச்சிக்கு சரிசமமாக ஆதரவு தந்தனர்.
2. வடமேற்கு மாகாணங்கள் மற்றும் அயோத்தியின் பகுதிகளில் இந்த முதலாவது உள்நாட்டு கிளர்ச்சி வெடித்தது.
3. பெரும் எண்ணிக்கையிலான ஜமீன்தாரர்களும் தாலுக்தார்களும் ஆங்கிலேய அரசின் கீழ் பல சலுகைகளை இழந்த காரணத்தால் கிளர்ச்சி நோக்கி ஈர்க்கப்பட்டனர்.
4. ஆங்கிலேயப் பொருட்களால் இந்திய கைவினைப் பொருட்கள் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கான நெசவாளர்கள் வேலை இழந்தனர். ஆங்கிலேயர்களுக்கு எதிரான ஒட்டுமொத்த ஆத்திரமும் கிளர்ச்சியாக வெடித்தது.
4.
1. ரயில்வே கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த ஐரோப்பிய அதிகாரிகள் மற்றும் உள்ளூர் காவலர்களால் சாந்தலர்கள் ஒடுக்கப்பட்டனர்.
2. வெளியாட்களால் வாழ்விடங்களை விட்டு வெளியேற்றப்பட்ட சாந்தலர்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக வட்டிக்குப் பணம் கொடுப்போரைச் சார்ந்து வாழ நிர்பந்திக்கப்பட்டனர்.
3. சாந்தலர் கூட்டத்தால் இரண்டு தரோகாக்கள் (காவல்துறை அதிகாரிகள்) கொல்லப்பட்டனர்.
4. 1855ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இந்தக் கிளர்ச்சி மகஜனங்கள் எதிரான கிளர்ச்சியாக உருவெடுத்தது.
5.
அ. இரண்டாவது பாளையக்காரர் போரானது சிவகங்கையின் மருது பாண்டியர், திண்டுக்கல்லின் கோபால நாயக்கர், மலபாரின் கேரள வர்மா, மைசூரின் கிருஷ்ணப்பா மற்றும் தூண்டாஜி ஆகியோர் அடங்கிய கூட்டமைப்பால் வழிநடத்தப்பட்டது.
ஆ. ஊமைத்துரை மற்றும் செவத்தையா.
இ. மருது சகோதரர்கள் சிவகங்கையில் அடைக்கலம் கோரினர்.
ஈ. கர்னல் அக்னியூவும், கர்னல் இன்னிஸ் சிவகங்கையை நோக்கி படையெடுத்துச் சென்றனர்.
6.
அ) பட்டினப்பாலை மற்றும் முல்லைப்பாட்டு
ஆ) சித்தாந்த தீபிகா
இ) இந்திமொழி அறிமுகம் செய்யப்பட்டால் தமிழ்மொழி பாதிப்புக்குள்ளாகும் என மறைமலை அடிகள் சுட்டிக்காட்டினார்.
ஈ) சுந்தரனார், சோமசுந்தர நாயகர் ஆகிய இருவரும் மறைமலை அடிகள் வாழ்க்கையில் முக்கிய செல்வாக்குச் செலுத்தியவர்கள் ஆவார்.
7.
அ) பிராமனாரல்லதோர்களின் நலன்களை மேம்படுத்துவதற்காகத் தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் (South Indian Liberal Federation) எனும் அமைப்பு உருவாக்கப்பட்டது.
ஆ) அரசு பணியிடங்களில் பிரமணரல்லாதோர்க்கு இட ஒதுக்கீடு மற்றும் பிரதிநிதித்துவ அமைப்புகளில் இடஒதுக்கீடு என்பதே நீதிக்கட்சியின் பிராமணரல்லாதோர் அறிக்கை ஆகும்.
இ) காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டி மாநாட்டில் அவர் சட்ட சபையில் பிரமணரல்லாதோருக்கு பிரதிநித்துவம் வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார். அதை நிராகரித்ததால் அவர் காங்கிரசை விட்டு வெளியேறி சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார்.
ஈ) பள்ளிகளில் இந்தி மொழி கட்டாய பாடமாக அறிமுகம் செய்யப்பட்டது. அதை எதிர்த்து ஈ.வே.ரா. மிகப்பெரிய பரப்புரையை மேற்கொண்டார். அவர் இந்தி எதிர்ப்பு மாநாடு ஒன்றை சேலத்தில் நடத்தினார்.
8.
அ) M.P.T.ஆச்சாரியா, V.V.சுப்ரமணியனார் மற்றும் T.S.S.ராஜன் ஆகியோராவர்.
ஆ) சிறைத் தண்டனையைத் தவிர்ப்பதற்காக சுப்ரமணிய பாரதி பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்திலிருந்து பாண்டிசேரிக்கு இடம்பெயர்ந்தார்.
இ) இந்தியா, விஜயா, சூர்யோதயம்
ஈ) வாஞ்சிநாதன் 1911 ஜூன் 17இல் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரான ராபர்ட் W.D.E. ஆஷ் என்பவரை மணியாச்சி ரயில் சந்திப்பில் சுட்டுக் கொன்றார்.
9.
அ) சௌரி சௌரா நிகழ்வுக்குப் பிறகு ஆர்வலர்களும் மக்களும் அகிம்சை போராட்டம் குறித்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று காந்தியடிகள் உணர்ந்தார். அதன் ஒரு பகுதியாக காதி இயக்க மேம்பாடு, இந்து முஸ்லிம் ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு ஆகியவற்றில் அவர் கவனம் செலுத்தினார்.
ஆ) உங்கள் மாவட்டங்களுக்குச் செல்லுங்கள் கதர், இந்து முஸ்லிம் ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு ஆகியன பற்றிய செய்திகளைப் பரப்புங்கள். இளைஞர்களை ஒன்று திரட்டி அவர்களை சுயராஜ்யத்தின் உண்மையான வீரர்களாக உருமாற்றுங்கள் என்று காந்தியடிகள் காங்கிரசாருக்கு அறிவுறுத்தினார். கதர் உடுப்பதை அவர் கட்டாயமாக்கினார்.
இ) வகுப்புவாத அரசியலில் ஈடுபட்டுள்ள இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் இதயங்களை ஈர்க்கும் வகையில் காந்தி 1924 இல் 21 நாள் உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்.
ஈ) அரிஜனர்களுக்கான பயணம் என்ற நாடு தழுவிய பயணத்தை காந்தியடிகள் மேற்கொண்டார். அரிஜனர் சேவை சங்கத்தை அமைத்து சமூகத்தில் உள்ள பாரபட்சங்களை முழுமையாக அவர் அகற்றுவதற்குப் பணியாற்றத் தொடங்கினார். கல்வி, சுத்தம் மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை மேம்படுத்தவும் ஒடுக்கப்பட்ட மக்களிடையே மதுப் பழக்கத்தை கைவிடவும் அவர் பணியாற்றினார். இதற்காக 1923 இல் இரண்டு உண்ணாவிரதங்களை மேற்கொண்டார். கோயில் நுழைவுப் போராட்டம் என்பது இந்தப் பிரச்சாரத்தின் முக்கியமான பகுதியாகும்.
10.
அ) தீரன் சின்னமலை 1756இல் பிறந்தார்.
ஆ) கொங்குப்பகுதி மைசூர் சுல்தானின் கட்டுப்பாட்டில் இருந்தது. திப்புவின் திவான் முகம்மது அலி என்பவரால் வரி வசூலிக்கப்பட்டது. ஒருமுறை திவான் வசூலிக்கப்பட்ட வரிப்பணத்தோடு மைசூருக்குத் திரும்பி கொண்டிருந்தபோது தீர்த்தகிரி அவரை வழிமறித்து வரிப்பணம் முழுவதையும் பறித்துக்கொண்டார். இவர் முகமது அலியிடம் சிவமலைக்கும் சென்னி மலைக்கும் இடையே இருந்த சின்னமலையே வரிப்பணத்தை பிடுங்கிக் கொண்டதாக சுல்தானுக்குப் போய்ச் சொல் என்று அறிவுறுத்தினார். அதன்பிறகே தீரன் சின்னமலை என்று அவர் அழைக்கப்பட்டார்.
இ) திப்பு சுல்தானின் திவானின் பெயர் முகமது அலி.
ஈ) திப்புவின் இறப்பிற்குப் பிறகு ஒரு கோட்டையை எழுப்பிய தீரன் சின்னமலை அவ்விடத்தைவிட்டு வெளியேறாமல் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடினார். அவர் பிடிபடாமலிருப்பதற்காக கொரில்லா போர் முறைகளைக் கையாண்டார். இறுதியாக அவரையும் அவர் சகோதரர்களையும் கைது செய்தனர் ஆங்கிலேயர்கள். ஆங்கிலேய ஆட்சியை ஏற்க வற்புறுத்தப்பட்ட போது அவர்கள் அதற்கு இணங்க மறுத்தனர். அதனால் 1805 ஜூலை 31 அன்று சங்ககிரி கோட்டையின் உச்சியில் அவர்கள் தூக்கிலிடப்பட்டனர்.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards