10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 20/01/2020
10ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
நுகர்வோர் கூட்டுறவு சங்கங்களின் மூன்று அடுக்குகள் யாவை?
2.
OPEC இலச்சினை எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளது?
3.
இந்தியாவின் மொழி அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்ட முதல் மாநிலம் எது?
4.
சதுப்புநிலத் தாவரங்கள் (Mangroves)
5.
மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்க மையம் (MEPZ) பற்றி எழுதுக.
6.
சி.வை.தாமோதரனார் பதிப்பித்த நூல்களின் பெயர்களை எழுதுக.
7.
ஈ.வெ.ரா. காங்கிரசை விட்டு வெளியேறக் காரணம் என்ன?
8.
ஃபராசி இயக்கம் யாரால் தொடங்கப்பட்டது?
9.
எதற்காக பாளையக்காரர்கள் கம்பெனிக்கு வரி செலுத்த மறுத்தார்கள்?
10.
வேளாண்துறையில் ஊதியங்கள் ஏன் குறைவாக உள்ளன?
11.
கேசவ் சந்திரசென் பற்றி நீ அறிந்தவற்றை எழுதுக
12.
வடகிழக்கு இந்திய மாநிலங்களில் விமானப் பயணம் ஏன் விரும்பத்தக்கதாக உள்ளது?
13.
இந்தியாவில் அதிக பருப்பு உற்பத்தி செய்யும் மாநிலங்கள் யாவை?
14.
பிரிட்டன் போர் - குறிப்பு தருக
15.
தராய் மண்டலம் குறிப்பு தருக.
16.
அஸ்டெக்குகள் - குறிப்பு தருக
17.
காபினெட் மற்றும் காபினெட் குழுக்கள் பற்றி எழுதுக.
18.
வல்லரசுகளுக்கு இடையிலான மோதல்கள் பற்றி நீவீர் அறிந்தது யாது?
19.
அடிப்படைக் கடமைகள் என்றால் என்ன?
20.
’பருவமழை வெடிப்பு’ என்றால் என்ன?
21.
22.
சுவாமி விவேகானந்தரின் ‘செயல்பாட்டாளர்’ சித்தாந்தத்தின் தாக்கமென்ன?
23.
மார்ஷல் திட்டம் என்றால் என்ன?
24.
முதல் உலகப்போருக்குப் பிந்தைய உலகத்தின் மூன்று முக்கிய சர்வாதிகாரிகள் யாவர்?
25.
ஐரோப்பிய போர்க்குணம் வாய்ந்த தேசியவாதத்தின் மூன்று வடிவங்கள் எவை?
1.
1) முதன்மை நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள்.
2) மத்திய நுகர்வோர் கூட்டுறவு கடைகள்
3) மாநில அளவிலான நுகர்வோர் கூட்டமைப்புகள்.
2.
இது 1969 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு சர்வதேச வடிவமைப்புப் போட்டியின் மூலம் இச்சின்னமானது தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆஸ்திரிய வடிவமைப்பாளர் ஸ்வோபோடா இதை வடிவமைத்து போட்டியில் வென்றார். இது இந்த அமைப்பினுடைய பெயரின் வெவ்வேறு எழுத்துக்களை (OPEC) ஒரு வட்டமான வடிவமைப்பில் காணலாம்.
3.
ஆந்திர மாநிலம்
4.
அயன மற்றும் உப அயன கடற்கரைப் பகுதிகள், உள்ள மற்றும் உள்நிலப் பகுதியில் உவர் நீரில் வாழக்கூடிய பசுமைமாறா தாவரங்கள்.
5.
1. மெட்ராஸ் ஏற்றுமதி செயலாக்க மையம் சென்னையில் ஒரு சிறப்புப் பொருளாதார மையமாகும்.
2. மத்திய அரசு அமைத்த நாட்டின் ஏழு ஏற்றுமதி செயலாக்க மையங்களில் இதுவும் ஒன்றாகும்.
3. இது அந்நிய நேரடி முதலீட்டினை ஊக்குவிப்பதற்கும், அந்நிய செலாவணியை ஈட்டுவதற்கும், வட்டாரப் பகுதிகளில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் 1984 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
6.
சி.வை.தாமோதரனார் பதிப்பித்த நூல்கள் தொல்காப்பியம், வீரசோழியம், இறையனார் அகப்பொருள், இலக்கண விளக்கம், கலித்தொகை மற்றும் சூளாமணி ஆகியவை அடங்கும்.
7.
சேரன்மாதேவி குருகுலப் பிரச்சனையும், வகுப்புவாரி பிரதிநிதித்துவம் தொடர்பாக காங்கிரசுக்குள்ளே ஏற்பட்ட கருத்து வேறுபாடும் ஈ.வெ.ரா.வை காங்கிரசை விட்டு வெளியேற வைத்தன.
8.
1. ஹாஜி ஷரியத்துல்லா என்பவரால் 1818ஆம் ஆண்டு ஃபராசி இயக்கம் தொடங்கப்பட்டது. வங்காளத்தின் கிழக்குப் பகுதிகளில் தொடங்கப்பட்ட இவ்வமைப்பின் உறுப்பினர்களை இஸ்லாத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.
2. ஜமீன்தாரர்களுடனும் அடுத்து விவசாயிகள் கிளர்ச்சியை ஒடுக்க முயன்ற ஜமீன்தாரர்களுக்கு சலுகை காட்டிய ஆங்கிலேயருடனும் நேரடி மோதலை மேற்கொள்ள வழிவகுத்தது.
9.
அறுபது தலைமுறையாக நிலத்தின் மீது கொண்டிருந்த உரிமையை முன்வைத்து பல பாளையக்காரர்கள் கம்பெனி அதிகாரிகளுக்கு வரி செலுத்த மறுத்தார்கள்.
10.
1. நிலத்தின் இறுதிநிலை உற்பத்தித் திறன் குறைந்து கொண்டே வருவதால் வேளாண் பணிகளுக்கு தொழிலாளர்களை ஈர்த்துக் கொள்வதில், ஆட்களை ஏற்பதில் பல வரையறைகள் பின்பற்ற நேரிடுகிறது.
2. பெருமளவிலான மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு வேளாண்மையை நம்பியிருப்பதாலும், கூலியை அதிகரிக்க வாய்ப்பில்லாததாலும் வறுமையின் அளவு தொடர்ந்து அதிகரிக்கிறது.
11.
(i) கேசவ் சந்திரசென் கிறிஸ்துவமதத்தால் பெருமளவில் கவரப்பட்ட அவர் கிறிஸ்துவ மதத்தின் சாரத்தை நம்பினர். ஆனால் அம்மதத்தை நிறுவியவர் மேல் அவர் நம்பிக்கை கொள்ளவில்லை
(ii) 1886 இல் பிரம்மசமாஜத்தின் உறுப்பினர்களிடையே பிளவு ஏற்பட்டதால் கேசவ் சந்திர சென் சமாஜத்திலிருந்து விலகி புதிய அமைப்பொன்றை உருவாக்கினார்
12.
1) வடகிழக்கு மாநிலங்களில் விமானப் பயணம் மிகவும் விரும்பத்தக்கது. காரணம் அங்கு உயர்ந்த மலைகள், ஆறுகள், பள்ளத்தாக்குகள், குன்றுகள், அடர்ந்த காடுகள் மற்றும் நிலப்பரப்பு கரடுமுரடாக இருப்பதால் நிலவழி போக்குவரத்து மிகவும் குறைவு.
2) பருவக் காலங்களில் அதிக மழைப் பொழிவினால் ஏற்படும் வெள்ளத்தாலும் நிலச்சரிவினாலும் அங்கு சாலைப் போக்குவரத்து அமைப்பது மிகவும் கடினம்.
3) ஆகையால் வடகிழக்கு மாநிலங்கள் விமானப் போக்குவரத்தையே விரும்புகின்றன.
13.
மத்தியபிரதேசம், உத்திர பிரதேசம், இராஜஸ்தான் மகாராஷ்ட்ரா மற்றும் ஆந்திரப்பிரதேச மாநிலங்கள் பருப்பு உற்பத்தியில் முதன்மை மாநிலங்களாகும்.
14.
(i) பிரிட்டன் போர் - 1940 ஆம் ஆண்டு ஜூலைத் திங்களில் ஜெர்மனி இங்கிலாந்தின் மீதும் படையெடுக்கும் எனும் அச்சம் ஏற்பட்டது
(ii) நீண்ட நெடிய ஆகாய விமானக் குண்டுத் தாக்குதல்களில் மூலம் தனது திட்டங்களை ஒதுக்கொள்ளுமாறு இங்கிலாந்தை வற்புறுத்தி ஹிட்லர் விரும்பினார்
(iii) ஜெர்மனியின் விமானப்படைகள் குறிப்பிட்ட இலக்குகளை, மிக்க குறிப்பாகத் துறைமுகங்கள், விமானத் தளங்கள் தொழிற்சாலைகள் ஆகியவற்றைத் தாக்கத் தொடங்கின. 1940 செப்டம்பர் திங்களில் லண்டன் நகரம் இரக்கமற்ற முறையில் குண்டு வீச்சு இலக்கானது
15.
தராய் மண்டலம் அதிகப்படியான ஈரப்பதம் கொண்ட பகுதியாகவும் காடுகள் வளர்வதற்கும் பல்வேறு விரிவான வனவிலங்குகள் வாழ்வதற்கு ஏற்றதாகவும் உள்ளது.
16.
அஸ்டெக்குகள் நாடு இராணுவமயமான நாடாகும். அவர்கள் இராணுவக் குடியிருப்புகளையும் கோட்டைப் பாதுகாப்புப் படைகளையும் வலைப்பின்னல் போன்ற ராணுவச் சாலைகளையும் கொண்டிருந்தனர். பேரரசில் மேலெழுந்த வாரியாய் அமைதியும், பாதுகாப்புமிருந்தாலும் மக்கள் இரக்கமின்றி ஒடுக்கப்படும் சுரண்டப்பட்டும் இன்னலுக்குள்ளாயினர்.
17.
(i) அமைச்சரவையின் விதையைப் போன்றது முக்கியமான சிறு அமைப்பு காபினெட் என்று அழைக்கப்படுகிறது. இது காபினெட் அமைச்சர்களை மட்டும் உள்ளடக்கியது. இதுவே மாநில அரசின் உண்மையான அங்கீகாரமாக விளங்குகிறது.
(ii) காபினெட் குழுக்கள் எனப்படும். வெவ்வேறு குழுக்கள் மூலம் காபினெட் செயலாற்றுகிறது. காபினெட்டில் இரண்டு வகைகள் உள்ளன. அவை ஒன்று நிரந்தரமானது மற்றொன்று தற்காலிகமானது.
18.
(i) தொழில் வளர்ச்சியில் முதன்மை இடத்தை வகித்தாலும் பரந்து விரிந்த பேரரசைக் கட்டுப்படுத்தினாலும் இங்கிலாந்திற்கு மனநிறைவு ஏற்படவில்லை
(ii) இங்கிலாந்து ஜெர்மனியோடும் அமெரிக்காவோடும் போட்டியிட வேண்டியிருந்தது. ஏனெனில் அந்நாடுகள் விலைமலிவானப் பண்டங்களை உற்பத்தி செய்து அதன் மூலம் இங்கிலாந்தின் சந்தையையும் கைப்பற்றின.
(iii) நாடுகளுக்கிடையிலான இப்போட்டி ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வல்லரசுகளுக்கிடையே அடிக்கடி மோதல்கள் ஏற்படக் காரணமாயிற்று
19.
இந்திய அரசியலமைப்பில் அடிப்படைக் கடமைகள் என்பது முன்னாள் சோவியத் யூனியன் (USSR) அரசியலமைப்பின் ஈர்ப்பால் சேர்க்கப்பட்டதாகும்.
20.
1. தென்மேற்கு பருவக்காற்றின் இடி மற்றும் மின்னலுடன் கூடிய துவக்கம் (தென்னிந்தியாவில்) 'பருவமழை வெடிப்பு' எனப்படுகிறது.
2. இக்காற்று இந்தியாவின் தென் முனையை அடையும் பொழுது இரண்டு கிளைகளாகப் பிரிகிறது.
21.
22.
(i) சுவாமி விவேகானந்தர் பண்பாட்டுத் தேசியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த அவர் இந்து சமூகத்திற்குப் புத்துயிரளிக்க இந்திய இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்தார்.
(ii) விவேகானந்தரின் செயலூக்கம் மிக்க சித்தாந்தம் மேலைக்கல்வி பயின்ற வங்காள இளைஞர்களிடையே அரசியல் மாற்றங்களுக்கான நாட்டத்தை வங்கப்பிரிவினையைத் தொடர்ந்து நடைபெற்ற சுதேசி இயக்கத்தின் போது இளைஞர்களில் பலர் விவேகானந்தரால் ஊக்கம் பெற்றனர்
23.
1. மேற்கு ஐரோப்பிய நாடுகளைத் தன் செல்வாக்கினுள் வைத்துக் கொள்ள அமெரிக்க ஐக்கிய நாடு மார்ஷல் திட்டத்தை உருவாக்கியது.
2. இத்திட்டம் இரண்டாம் உலகப் போரின் பாதிப்புகளில் இருந்து மீண்டு வருவதற்காக அமெரிக்க டாலர்களைப் பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்தது.
24.
1. முசோலினி (இத்தாலி)
2. ஹிட்லர் (ஜெர்மனி)
3. பிராங்கோ (ஸ்பெயின்)
25.
1. ஆரவாரமான நாட்டுப்பற்று - இங்கிலாந்து
2. அதிதீவிரப்பற்று - பிரான்ஸ்
3. வெறிகொண்ட நாட்டுப்பற்று - ஜெர்மனி
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards