10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 08/11/2019
GEO - இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்
10ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
தங்க நாற்கரச் சாலைகள் திட்டம் ______ ல் தொடங்கப்பட்டது.
1998
1991
1997
1999
2.
கீழ்க்கண்டவற்றில் எவை வானுலங்கு ஊர்தியுடன்(ஹெலிகாப்டர்) தொடர்புடையது?
ஏர் இந்தியா
இந்தியன் ஏர்லைன்ஸ்
வாயுதூத்
பவன்ஹான்ஸ்
3.
தேசிய தொலையுணர்வு மையம் அமைந்துள்ள இடம்_______.
பெங்களூரு
சென்னை
புது டெல்லி
ஹைதராபாத்
4.
மனித வள மேம்பாடு __________ மூலம் கணக்கிடப்படுகிறது
மனித வளக் குறியீடு
தனி நபர் குறியீடு
மனித வள மேம்பாட்டுக் குறியீடு
ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டம்(UNDP)
5.
2011 ஆம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி அதிக கல்வியறிவு பெற்ற மாநிலம்_______.
தமிழ்நாடு
கர்நாடகம்
கேரளா
உத்திரப்பிரதேசம்
6.
7.
NHAI
8.
புறநகரப் பரவல்
9.
மேசகான் கப்பல்கட்டும் தளம்
10.
INSAT (இன்சாட்)
11.
எல்லைபுறச் சாலை
12.
பாலின விகிதம் என்றால் என்ன?
13.
மக்கள் தொகை என்றால் என்ன?
14.
பல்தரப்பு வணிகம் நடைபெறும் முக்கிய வணிகத் தொகுதிகளைக் கண்டறிக.
15.
பன்னாட்டு வணிகம் – வரையறு.
16.
தகவல் தொடர்பு என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?
17.
இந்தியாவின் முக்கிய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்துகளைக் குறிப்பிடுக
18.
இரயில் போக்குவரத்தின் நன்மைகள் ஏதேனும் நான்கினை எழுதுக
19.
மனித வள மேம்பாடு என்றால் என்ன?
20.
உள்நாட்டு வணிகம் மற்றும் பன்னாட்டு வணிகம்
21.
சாலை வழிபோக்குவரத்து மற்றும் இரயில் வழிபோக்குவரத்து
22.
தனிநபர் தகவல் தொடர்பு மற்றும் பொதுத் தகவல்தொடர்பு
23.
மக்களடர்த்தி மற்றும் மக்கட்தொகை வளர்ச்சி
24.
இந்தியாவின் சாலைகளை வகைப்படுத்தி விளக்குக.
25.
மனிதவள மேம்பாட்டை அளவிடும் முறையை விளக்குக
26.
இந்தியாவில் செயற்கைக்கோள் தகவல் தொடர்பின் முக்கியத்துவத்தை விளக்குக
27.
இந்தியாவின் முக்கியத் துறைமுகங்கள்.
1.
(d)
1999
2.
(d)
பவன்ஹான்ஸ்
3.
(d)
ஹைதராபாத்
4.
(c)
மனித வள மேம்பாட்டுக் குறியீடு
5.
(c)
கேரளா
6.
(b)
7.
1955
8.
நகரமயமாக்கலின் தாக்கம்
9.
மும்பை
10.
செயற்கைக் கோள் தகவல் தொடர்பு
11.
1960
12.
பாலின விகிதம் என்பது மக்கள் தொகையில் ஆயிரம் ஆண்டுகளுக்கு உள்ள பெண்களின் எண்ணிக்கையை குறிப்பதாகும்.
13.
ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் ஒரு நாட்டில் வசிக்கின்ற மொத்த மக்களின் எண்ணிக்கையே ஒரு நாட்டின் மக்கள் தொகை என்று அழைக்கப்படுகிறது.
14.
1) பல நாடுகளுக்குக்கிடையே நடைபெறும் வணிகம் பல்கிளை வணிகம் எனப்படும்.
2) இவ்வணிகத்தை எளிதாக நடைமுறைப்படுத்திட APEC, ASEAN மற்றும் SAPTA போன்ற வணிக கூட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
3) இதன் மூலம் வணிகம் எளிதாக நடைபெறுகிறது.
4) இம்முறை சிக்கல் ஆனதாக இருந்தாலும் வணிகத்தில் ஈடுபடும் அனைத்து நாடுகளும் வணிக ஒப்பந்தத்தில் கையொப்பமிடும்போது ஒரு சிறந்த வணிகமாக நிலை பெறுகிறது.
15.
பன்னாட்டு வணிகம்:
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளுக்கிடையே நடைபெறும் வணிகம், பன்னாட்டு வணிகம் அல்லது அயல்நாட்டு வணிகம் என அழைக்கப்படுகிறது.
கூறுகள்:
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகியவை பன்னாட்டு வணிகத்தின் இரு கூறுகள் ஆகும்.
வணிகச் சமநிலை:
ஒரு நாட்டின் ஏற்றுமதி மதிப்பிற்கும், இறக்குமதி மதிப்பிற்கும் இடையேயுள்ள வேறுபாடு வணிகச் சமநிலை எனப்படும்.
16.
தகவல் தொடர்பு:
தகவல்கள், எண்ணங்கள் மற்றும் கருத்துகளின் பரிமாற்றத்தையே தகவல் தொடர்பு என்கிறோம். தகவல் தொடர்புத் துறையில், தொழில்நுட்பம் வியக்கத்தக்க வகையில் உள்ளது.
வகைகள்:
i. பொதுத்தகவல் தொடர்பு
ii. தனிமனித தகவல் தொடர்பு
17.
இந்தியாவின் முக்கிய உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து:
தேசிய நீர்வழிப்போக்குவரத்து எண்: 1
இது ஹால்தியா மற்றும் அலகாபாத் இடையே 1620 கி.மீ நீளத்தைக் கொண்டு, கங்கை - பாகிரதி -ஹுக்ளி ஆறுகளுடன் இணைந்து செயல்படுகிறது.
தேசிய நீர்வழிப்போக்குவரத்து எண்: 2
இது பிரம்மபுத்ரா ஆற்றில் துப்ரி மற்றும் காடியாவிற்கு இடையே சுமார் 891 கி.மீ நீளத்தைக் கொண்டுள்ளது.
தேசிய நீர்வழிப்போக்குவரத்து எண்: 3
இந்த நீர்வழி கேரளா மாநிலத்தின் கொல்லம் மற்றும் கோட்டபுரம் இடையே உள்ளது.
24 மணி நேரமும் செயல்பட்டு 205 கி.மீ தொலைவிற்கு போக்குவரத்து வசதியை அளிக்கக்கூடிய இந்தியாவின் முதல் தேசிய நீர்வழிப் போக்குவரத்து இதுவாகும்.
18.
இரயில் போக்குவரத்தின் நன்மைகள்:
1. இரயில் போக்குவரத்து மிக அதிக அளவிலான பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தின் தேவையை பூர்த்தி செய்வதன் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கான பங்கினை அளித்து வருகிறது.
2. இது மக்களை ஒன்றிணைப்பதன் மூலம் தேசிய ஒருமைப்பாட்டை வளர்க்கிறது.
3. வணிகம், சுற்றுலா, கல்வி போன்றவற்றையும் ஊக்குவிக்கிறது.
4. மூலப்பொருட்களைத் தொழிற்சாலைக்கும், தயாரிக்கப்பட்ட தொழிலகப் பொருட்களைச் சந்தைகளுக்கும் கொண்டு செல்ல உதவுகிறது.
19.
மனித வள மேம்பாடு: மனித வள மேம்பாடு என்பது கல்வி, உடல்நலம், அதிகாரம் போன்றவைகளில் மக்களுக்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தும் ஒரு செயல் முறையாகும்.
20.
| உள்நாட்டு வணிகம் | பன்னாட்டு வணிகம் | |
| 1 | ஒரு நாட்டின் எல்லைக்குள் நடைபெறும் வணிகம் உள்நாட்டு வணிகம் என அழைக்கப்படுகிறது. | இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளுக்கிடையே நடைபெறும் வணிகம் பன்னாட்டு வணிகம் என அழைக்கப்படுகிறது. |
| 2 | உள்நாட்டு வணிகத்தில் நிலவழி போக்குவரத்து முக்கியப் பங்காற்றுகிறது. | பன்னாட்டு வணிகத்தில் நீர்வழி மற்றும் வான்வழி போக்குவரத்து முக்கியப் பங்காற்றுகின்றன. |
| 3 | இவ்வணிக முறையில் உள்நாட்டு நாணயம் பயன்படுத்தப்படுகிறது. | இவ்வகை வணிகத்தில் அயல்நாட்டு பணம் பயன்படுத்தப்படுகிறது. |
| 4 | இது உள்ளூர் வணிகம் எனவும் அழைக்கப்படுகிறது. | இது அயல்நாட்டு வணிகம் என்றும் அழைக்கப்படுகிறது. |
21.
| சாலை வழி போக்குவரத்து | இரயில் வழி போக்குவரத்து | |
| 1 | சாலை போக்குவரத்து அனைத்து பிரிவு மக்களாலும் பயன்படுத்தக் கூடிய மலிவான போக்குவரத்து ஆகும். | இந்திய இரயில்வே அமைப்பு நாட்டினுடைய உள்நாட்டு போக்குவரத்திற்கான முக்கிய உயிர் நாடியாக அமைந்துள்ளது. |
| 2 | சாலை வழி குறுகிய மற்றும் நீண்ட தூரத்திற்குப் பயணிகள் மற்றும் சரக்குகளைக் கொண்டு செல்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. |
மிக அதிக அளவிலான பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்தின் தேவையை பூர்த்தி செய்கிறது. |
| 3 | சாலையை அமைப்பது மற்றும் பராமரிப்பது மற்ற போக்குவரத்து முறைகளை விட மலிவானதாகும் | இரயில் வழிப்போக்குவரத்தினை அமைப்பதற்கும், பராமரிப்பதற்கும் அதிகம் செலவாகும். |
| 4 | உலகின் இரண்டாவது நீண்ட சாலை வலைப்பின்னல் அமைப்பை இந்தியா கொண்டுள்ளது. | ஆசியாவில் மிகப்பெரியதும், உலக அளவில் இரண்டாவது பெரியதுமான இரயில்வே அமைப்பை இந்தியா கொண்டுள்ளது. |
22.
| தனிநபர் தகவல் தொடர்பு | பொதுத் தகவல்தொடர்பு |
| தனிநபர்களுக்கிடையேயான தகவல், பரிமாற்றம் தனிநபர் தகவல் தொடர்பு என்று அழைக்கப்படுகிறது. | பொதுத்தகவல் தொடர்பு என்பது ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் தகவல்களைப் பெறுவதாகும். |
| இது அஞ்சல் சேவை, தந்தி, தொலைபேசி, கைப்பேசி, குறுந்தகவல் பிரதிகள், இணையதளம் மற்றும் மின் அஞ்சல் போன்றவைகளை உள்ளடக்கியது ஆகும். | பொதுத்தகவல் தொடர்பு அமைப்பானது வானொலி, தொலைக்காட்சி, இணையம், செய்தித்தாள்கள் ஆகியனவற்றை உள்ளடக்கியது ஆகும். |
| இது பயனாளிகளுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்துகிறது. | இது நேரடித் தொடர்பை ஏற்படுத்துவது இல்லை. |
| தகவல் மற்றும் செய்திகளை பரிமாறிக் கொள்ள உதவுகிறது. | கல்வி, பொழுதுபோக்கு, தேசியக் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. |
23.
| மக்களடர்த்தி வளர்ச்சி | மக்கட்தொகை வளர்ச்சி |
| மக்களடர்த்தி என்பது சராசரியாக ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடுகிறது. | மக்கள் - தொகை வளர்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியில் ஒரு நாட்டின் மக்கள் தொகை எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றத்தை குறிப்பிடுகிறது. |
| இது சராசரியாக ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. |
மக்கள் தொகை வளர்ச்சி சதவீதத்தில் குறிப்பிடப்படுகிறது. |
| மக்களடர்த்தி, நிலத்தோற்றம், காலநிலை, இயற்கைத்தாவரம், மதம், கலாச்சாரம், பொருளாதாரம், போக்குவரத்து, வேலைவாய்ப்புகள் போன்ற பௌதிக மற்றும் சமூகக் காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது. |
பிறப்பு விகிதம், இறப்பு விகிதம் மற்றும் புலம் பெயர்தல் ஆகியவை மக்கள் தொகை வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது. |
| இந்தியாவில் மக்களடர்த்தி மிகுந்த மாநிலம் பீகார் ஆகும். | இந்தியாவில் மக்கள் தொகை மிகுந்த மாநிலம் உத்திரப்பிரதேசம் ஆகும். |
24.
சாலைகளின் வகைகள்:
1. தேசிய நெடுஞ்சாலைகள்
2. மாநில நெடுஞ்சாலைகள்
3. மாவட்டச் சாலைகள்
4. கிராமச் சாலைகள்
5. எல்லைப்புறச் சாலைகள்
6. தங்க நாற்கரச் சாலைகள்
தேசிய நெடுஞ்சாலைகள்
1. தேசிய நெடுஞ்சாலைகள் இந்திய சாலைப் போக்குவரத்தின் மிக முக்கிய அமைப்பாகும். இது நாட்டின் எல்லைகள், மாநிலத் தலைநகரங்கள், முக்கியத் துறைமுகங்கள் இரயில் நிலையங்கள், முக்கிய சுற்றுலா மையங்கள் ஆகியவற்றை இணைக்கின்றன.
2. இச்சாலைகளை மேம்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் இந்திய அரசின் தரைவழி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் பொறுப்பாகும்.
3. இந்தியாவில் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை NH4 ஆகும். இது உத்திரப் பிரதேசத்தில் உள்ள வாரணாசியிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி வரை 2369 கி.மீ நீளத்தைக் கொண்டதாகும்.
4. குறைவான நீளமுடைய தேசிய நெடுஞ்சாலை NH47 A ஆகும். இது எர்ணாகுளத்திலிருந்து 6 கி.மீ தொலைவைக் கொண்ட கொச்சின் துறைமுகத்தை இணைக்கிறது.
மாநில நெடுஞ்சாலைகள்:
1. மாநில நெடுஞ்சாலைகள் பொதுவாக மாநிலத்திலுள்ள முக்கிய மாநகரங்கள், நகரங்கள் மற்றும் மாவட்டத் தலைநகரங்களை, மாநில தலை நகரத்துடனும் தேசிய நெடுஞ்சாலைகளுடனும், அண்டை மாநில நெடுஞ்சாலைகளுடனும் இணைக்கின்றன.
2. இந்த மாநில நெடுஞ்சாலைகள் மாநில பொதுப்பணித்துறையினால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.
மாவட்டச் சாலைகள்:
1. மாவட்ட சாலைகளானது மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளுடன் மாவட்ட மற்றும் வட்டார தலைமை இடங்களை இணைக்கிறது.
2. மாவட்ட சாலைகள் மாநிலத்தின் பொதுப்பணித்துறையால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.
கிராமச்சாலைகள்:
1. கிராமச் சாலைகள் கிராமப்புறங்களை இணைப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன.
2. இவை பல்வேறு கிராமங்களை அருகில் உள்ள நகரங்களுடன் இணைக்கின்றன. இவைகளை கிராமப் பஞ்சாயத்துக்கள் பராமரிக்கின்றன.
எல்லைப்புறச்சாலைகள்:
1. எல்லைப்புறச் சாலைகள் நாட்டின் எல்லைகளில் அமைந்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த சாலைகளாகும்.
2. இவைகள் எல்லைப்புற சாலைகள் நிறுவனத்தால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.
3. இவ்வமைப்பு 1960இல் நிறுவப்பட்டது.
4. இச்சாலைகள் வடக்கு மற்றும் வடகிழக்கு எல்லைப் பகுதிகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.
5. எல்லைப்புறச் சாலை நிறுவனத்தால் உலகிலேயே உயரமான (4270 மீ) எல்லைப்புற சாலை லடாக்கிலுள்ள லேவிலிருந்து சண்டிகர் வரை அமைக்கப்பட்டுள்ளது.
தங்க நாற்கரச்சாலை:
5846 கி.மீ நீளத்தையும் 4 முதல் 6 வழிகளைக் கொண்டதாகவும் உள்ளது. இது வடக்கு தெற்காக இந்தியாவின் நான்கு பெரு நகரங்களான புதுடெல்லி-கொல்கத்தா-சென்னை-மும்பை-புதுடெல்லி ஆகியவைகளை இணைக்கிறது. இத்திட்டம் 1999 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
வட -தென் மற்றும் கிழக்கு-மேற்கு பகுதிகளை இணைக்கும் சாலைகள் :
வடதென் பகுதி இணைக்கும் சாலைகளின் நோக்கம் ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரையும் கன்னியாகுமரியையும் இணைப்பதாகும்
கிழக்கு மேற்கு பகுதி இணைக்கும் வகையில் குஜராத் போர்பந்தரையும் அசாம் மாநிலத்தில் சில்சரையும் இணைப்பதாகும்.
விரைவுச் சாலை :
நன்கு மேம்படுத்தப்பட்ட தரமான பல்வழிப் பாதைகளை கொண்ட அதிவேக போக்குவரத்திற்கான சாலைகள் ஆகும்.
எ.கா: மும்பை - பூனா விரைவுச்சாலை
பன்னாட்டு நெடுஞ்சாலை:
இந்தியா தனது அண்டை நாடுகளுடன் இணக்கமான உறவை மேம்படுத்தும் நோக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளன சாலை பன்னாட்டு நெடுஞ்சாலைகள் ஆகும்.
25.
மனிதவள மேம்பாடு:
டாக்டர் மெகபூப்-உல்-ஹக் என்ற பொருளாதார நிபுணரின் கூற்றுப்படி, மனிதவள மேம்பாடு என்பது கல்வி, உடல்நலம், வருமானம், அதிகாரம் போன்றவைகளில் மக்களுக்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தும் ஒரு செயல் முறையாகும்.
மனிதவள மேம்பாட்டை அளவிடும் முறை:
மனிதவள மேம்பாடு என்பது மூன்று அடிப்படை பரிமாணங்களைக் கொண்ட ஒரு கூட்டுக் குறியீடாகும்.
1) ஆரோக்கியம் - பிறப்பு காலத்தில்-சராசரி வாழ்நாள் மதிப்பீடு.
2) கல்வி -பள்ளி செல்லும் குழந்தைகளின் படிப்பு காலம், வயது வந்தோர் சராசரியாக பள்ளிகளில் கற்கும் காலம்.
3) வருமானம் - நிகர தேசிய வருமானம் மற்றும் தனிநபர் வருமானம்.
மனிதவள மேம்பாட்டுக் குறியீட்டு (HDI) வகைப்பாடு நிர்ணயிக்கப்பட்ட குறியீட்டு புள்ளிகளின் அடிப்படியில் கணக்கிடப்படுகிறது. இது கால்மான விளக்கப் பரவல் குறியீடுகளிலிருந்து பெறப்படுகிறது.
வகைப்பாடு:
1) HDI 0.550 குறைந்த மனிதவள மேம்பாடு
2) HDI 0.550-0.699 மிதமான மனிதவள மேம்பாடு மற்றும்
3) HDI 0.700 - 0.799 உயர் மனிதவள மேம்பாடு.
4) HDI 0.800 அதற்குமேல் மிக அதிக மனிதவள மேம்பாட்டைக் குறிக்கிறது.
26.
இந்தியாவில் செயற்கைக்கோள் தகவல் தொடர்பின் முக்கியத்துவம்:
1. செயற்கை கோளானது தொடர்ச்சியாக மிகப்பெரும் பரப்பிலான படிமம் மற்றும் தகவல்களை அளிப்பதன் மூலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தகவல் தொடர்பு சாதனமாக இந்தியாவில் விளங்குகிறது.
2. செயற்கைக்கோள் படிமங்களைப் பயன்படுத்தி, வானிலை ஆய்வு, வானிலை முன் அறிவிப்பு இயற்கைப் பேரழிவு கண்காணிப்பு போன்ற முக்கியப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
3. 1969 ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் நிறுவப்பட்ட பின்னர், தொலைத்தொடர்பு பரிமாற்றத்தில் செயற்கைக் கோள்கள் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தியுள்ளன.
4. இந்திய செயற்கைக்கோள் தகவல் தொடர்பு அமைப்பு இரண்டு பிரிவுகளைக் கொண்டது.
அ) இந்திய செயற்கைக்கோள் அமைப்பு (INSAT)
ஆ) இந்திய தொலையுணர்வு செயற்கைக்கோள் அமைப்பு (IRS)
5. 1983 இல் நிறுவப்பட்ட இந்திய தேசிய செயற்கைக்கோள் அமைப்பு, தொலைத்தொடர்பு, வானியல் ஆய்வு மற்றும் பல்வேறு திட்டங்களை உள்ளடக்கிய ஒரு பல்நோக்கு திட்ட அமைப்பாக உள்ளது.
6. இன்சாட் வரிசை செயற்கைக் கோள்கள், கைபேசி, தொலைபேசி, வானொலி மற்றும் தொலைக்காட்சிகளுக்கு சமிக்கைகளை அனுப்ப பயன்படுகிறது. மேலும் இது வானிலையைக் கண்டறியவும், ராணுவப் பயன்பாட்டிற்கும் பயன்படுத்தப்படுகிறது.
7. 1983 ஆம் ஆண்டு ஏவப்பட்ட இன்சாட் 18 தகவல் தொடர்பிற்காக ஏவப்பட்ட முதல் இன்சாட் வரிசை செயற்கைக்கோளாகும்.
8. 2018 ஆம் ஆண்டு ஏவப்பட்ட ஜி-சாட் 7A தகவல் தொடர்புக்காக ஏவப்பட்ட சமீபத்திய செயற்கைக்கோளாகும்.
27.

10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards