10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 06/11/2019
GEO - வளங்கள் மற்றும் தொழிலகங்கள்
10ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
_______ மாநிலம் இந்தியாவில் அதிக நிலக்கரி உற்பத்தியைச் செய்கிறது.
ஜார்கண்ட்
நாக்பூர்
இராஜஸ்தான்
கேரளா
2.
______ என்பது அலுமினியத்தின் ஒரு வகையான ஆக்சைடு ஆகும்.
மைக்கா
தாமிரம்
பாக்சைட்
சுண்ணாம்புக்கல்
3.
NALCO என்று அழைக்கப்பட்ட தேசிய அலுமினிய நிறுவனம் _______ ல் தொடங்கப்பட்டது.
1982
1981
1985
1988
4.
தாமிரப்படிவு அதிகமுள்ள மாநிலம் _________ ஆகும்.
இராஜஸ்தான்
கர்நாடகா
கேரளா
உத்திரபிரதேசம்
5.
இந்திய கடற்கரை பகுதி இரும்பு எஃகு தொழிலகங்களுள் ஒன்று அமைந்துள்ள இடம்
கொல்கத்தா
தூத்துக்குடி
கோவா
விசாகப்பட்டினம்
6.
மிக அதிகமாக கிடைக்கக்கூடிய ஆற்றல் வளம் ______.
உயிரி சக்தி
சூரியன்
நிலக்கரி
எண்ணெய்
7.
8.
சூரிய சக்தி
9.
ஓத அலை சக்தி
10.
மைக்கா
11.
கருப்பு தங்கம்
12.
பாக்சைட்
13.
பாக்சைட் பற்றி விளக்கவும்.
14.
இந்தியாவின் முக்கிய எண்ணெய் உற்பத்தி பகுதிகளைக் குறிப்பிடுக
15.
இயற்கை எரிவாயு என்றால் என்ன?
16.
கனிமங்கள் மற்றும் அதன் வகைகள் யாவை?
17.
வளத்தை வரையறுத்து அதன் வகைகளை குறிப்பிடுக.
18.
இந்தியாவின் இரும்பு எஃகு தொழிலகங்கள் பற்றி ஒரு தொகுப்பு எழுதுக.
19.
இந்தியாவில் உள்ள பருத்தி நெசவாலைகளின் பரவல் பற்றி எழுதுக.
20.
இந்தியத் தொழிலகங்கள் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் பற்றி எழுதுக.
21.
மரபுசார் மற்றும் மரபு சாரா எரிசக்தி
22.
வேளாண் சார்ந்த மற்றும் கனிமம் சார்ந்த தொழிலகங்கள்
23.
புதுப்பிக்க இயலும் மற்றும் புதுப்பிக்க இயலா வளங்கள்.
24.
இரும்பு தாது உற்பத்தி மையங்கள்.
1.
(a)
ஜார்கண்ட்
2.
(c)
பாக்சைட்
3.
(b)
1981
4.
(a)
இராஜஸ்தான்
5.
(d)
விசாகப்பட்டினம்
6.
(b)
சூரியன்
7.
(c)
8.
ஆந்திரப் பிரதேசம்
9.
திருவனந்தபுரம்
10.
மின்சாதனப் பொருட்கள்
11.
நிலக்கரி
12.
வானூர்தி
13.
அலுமினியம் பாக்சைட் தாதுவிலிருந்து பெறப்படுகிறது. இத்தாது நீரேற்ற அலுமினிய ஆக்சைட் உள்ள பாறைகளில் காணப்படுகிறது. குறைந்த எடை மற்றும் கடினத்தன்மைக் கொண்ட பண்புகளால் அலுமினியமானது விமானக் கட்டுமானங்களிலும் தானியங்கி இயந்திரங்களிலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
14.
மேற்குக் கடற்கரையிலுள்ள எண்ணெய் வயல்கள்:
1. பாசின் எண்ணெய் வயல்
2. மும்பை ஹை
3. குஜராத் கடற்கரை
4. அங்கலேஸ்வர்
5. காம்பே-லூனி பகுதிகள்
6. அகமதாபாத் - கலோல் பகுதி
கிழக்குக் கடற்கரையிலுள்ள எண்ணெய் வயல்கள்:
1. பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு (அசாம்)
2. திக்பாய்
3. நாகர்காட்டியா
4. மோரான் ஹக்ரிஜன்
5. ருத்ரசாகர் - லாவா
6. சர்மா பள்ளத்தாக்கு
7. அந்தமான், நிகோபாரின் உட்பகுதிகள்
8. மன்னார் வளைகுடா
9. பலேஷ்வர் கடற்கரை
15.
1. இயற்கை எரிவாயு என்பது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் அழிந்து புதையுண்ட தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் அதிக வெப்பம் மற்றும் அழுத்தம் காரணமாக மக்குவதன் மூலம் உண்டாகக்கூடிய ஒரு வாயு ஆகும்.
2. இயற்கை எரிவாயு பொதுவாக பெட்ரோலிய பகுதிகளுடன் இணைந்து காணப்படுகிறது.
3. இது வெப்பப்படுத்தலுக்கும், சமையலுக்கும் மின் உற்பத்திக்கும் வாகனங்களுக்கு எரிபொருளாகவும் விளங்குகிறது
16.
கனிமங்கள்
ஒரு குறிப்பிட்ட வேதியியல் மற்றும் இயற்பியல் பண்புகளைக் கொண்ட உயிருள்ள மற்றும் உயிரற்ற இயற்கை மூலங்கள் கனிமங்கள் ஆகும். இவை புவியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்படுகிறது.
வகைகள்
வேதியியல் மற்றும் இயற்பியல் பண்புகளின் அடிப்படையில் கனிமங்கள் இரண்டு பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன. அவை,
i. உலோகக் கனிமங்கள்
ii. அலோகக் கனிமங்கள்
17.
இயற்கையிலிருந்து பெறப்பட்டு உயிரினங்களால் பயன்படுத்தப்படும் அனைத்து வளங்களும் "இயற்கை வளம்" என்று அழைக்கப்படுகிறது.
வகைகள்:
1. புதுப்பிக்கக் கூடிய வளங்கள்
2. புதுப்பிக்க இயலா வளங்கள்
18.
இந்தியாவின் எஃகு தொழிலகங்கள்:
1. இரும்பு எஃகு தொழிற்சாலைகள் இதன் உற்பத்தி பொருள்களை மற்ற தொழிலகங்களுக்கு தேவையான மூலப்பொருளாக அளிப்பதனால் இது அடிப்படையான உலோகத் தொழிற்சாலை என அழைக்கப்படுகிறது.
2. பொறியியல் கனரக இயந்திரங்கள், எந்திரக் கருவிகள், வாகனங்கள், ரயில் என்ஜின்கள் மற்றும் ரயில்வே உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இரும்பை மூலப்பொருள்களாகப் பயன்படுத்துகின்றன.
3. ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சி இரும்பு எஃகு உற்பத்தியின் அளவைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது.
4. டாடா இரும்பு எஃகு தொழிற்சாலை 1907 ஆம் ஆண்டு 'சாக்சி' என்றழைக்கப்பட்ட ஜாம்ஷெட்பூரில் தொடங்கப்பட்ட முதல் நவீன தொழிற்சாலையாகும்.
5. இரும்பு எஃகு ஆலைகள் ஜார்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் செறிந்து காணப்படுகின்றன.
6. ஜாரியா, ராணிகஞ்ச், பொகாரோ, கரன்புரா ஆகிய நிலக்கரி வயல்களும் மற்றும் மயூர்பஞ்ச், கியோன்சர், புரேனா ஆகிய இரும்புதாது சுரங்கங்களும் ஒன்றுக்கொன்று அருகாமையில் அமைந்திருப்பது இதன் செறிவிற்குக் காரணமாகும்.
7. மேலும் இத்தொழிற்சாலைக்குத் தேவையான டோலமைட், மாங்கனீசு மற்றும் சிலிகான் போன்ற தாது படிவுகள் போதுமான அளவில் கிடைக்கின்றன.
8. இந்தியாவில் 10 பெரிய இரும்பு எஃகுத் தொழிலகங்கள் அமைந்துள்ளன.
9. டாட்டா இரும்பு எஃகு ஆலை, இந்தியா எஃகு நிறுவனம், இந்துஸ்தான் எஃகு நிறுவனங்கள், விஸ்வேஷ்வரையா இரும்பு எஃகு நிறுவனம் மற்றும் சேலம் எஃகு ஆலை ஆகியவை முக்கியமான இரும்பு எஃகுத் தொழிலகங்கள் ஆகும்.
19.
இந்திய பருத்தி நெசவாலைகள்:
1. பருத்தி நெசவாலைகள் நம் நாட்டின் அதிக வேலை வாய்ப்பை அளிக்கும் ஆதாரங்களில் ஒன்றாக உள்ளது.
2. தற்போது இந்தியா, பருத்தி உற்பத்தியில் உலகின் மூன்றாவது பெரிய நாடாகவும் தறிகளிலும், நூற்பு கருவிகளின் எண்ணிக்கையிலும் முதன்மையான நாடாகவும் உள்ளது.
3. தற்போது பருத்தி நெசவாலைகள் இந்தியாவின் மிகப்பெரிய நவீன தொழிலகப் பிரிவாக உள்ளது.
பருத்தி நெசவாலைகளின் பரவல்:
1. மகாராஷ்டிரம், குஜராத், மேற்கு வங்காளம், உத்திரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பருத்தி நெசவாலைகள் செறிந்து காணப்படுகின்றன.
2. தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், கரூர், சென்னை, திருநெல்வேலி, மதுரை, தூத்துக்குடி, சேலம், மற்றும் விருதுநகர் ஆகியன முக்கிய நெசவாலை நகரங்களாகும்.
மும்பை-இந்தியாவின் மான்செஸ்டர்:
1. மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பருத்தி நெசவாலைகள் செறிந்து காணப்படுவதால் மும்பை, இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது.
2. இதற்குக் காரணம் மகாராஷ்டிரா மாநிலத்தில் காணப்படும் கரிசல் மண், ஈரப்பதக்கால நிலை, மும்பைத் துறைமுகம், எளிதில் கிடைக்கும் நீர்மின்சக்தி, சந்தை வசதி மற்றும் சிறந்த போக்குவரத்து வசதி ஆகியனவாகும்.
கோயம்புத்தூர்-தென்னிந்தியாவின் மான்செஸ்டர்
1. தமிழ்நாட்டிலுள்ள கோயம்புத்தூரில் அதிக எண்ணிக்கையிலான பருத்தி நெசவாலைகள் உள்ளன.
2. இதனால் கோயம்புத்தூர் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படுகிறது.
20.
1. மின் பற்றாக்குறை மற்றும் சீரற்ற மின் விநியோகம்.
2. தொழிலகங்கள் நிறுவுவதற்கேற்ற பரந்த நிலப்பரப்பு இல்லாமை
3. கடன் பெறுவதிலுள்ள நடைமுறை சிக்கல்கள்
4. கடனுக்கான அதிக வட்டி விகிதம்
5. மலிவான ஊதியத்திற்கு வேலையாட்கள் கிடைக்காமை
6. ஊழியர்களுக்கான தொழில்நுட்ப மற்றும் தொழிற்முறை பயிற்சிகள் இல்லாமை
7. தொழில்பேட்டைகளுக்கருகில் வசிப்பதற்கு ஏற்ற சூழல் இல்லாமை
21.
| மரபுசார் எரிசக்தி | மரபு சாரா எரிசக்தி | |
| 1 | மரபு சார் எரிசக்தி புதுப்பிக்க இயலாத வளங்களாகும். | மரபு சாரா எரிசக்தி புதுப்பிக்கக் கூடிய வளங்களாகும். |
| 2 | பெரும்பாலான வளங்கள் பயன்பாட்டின்போது மாசுகள் ஏற்படக் காரணமாகின்றன. | பயன்பாட்டின் போது மாசுகள் ஏற்பட வாய்ப்புகளில்லை. |
| 3 | அனல் மின்சக்தி, அணுமின்சக்தி ஆகியன எடுத்துக்காட்டுகளாகும் |
நீர்மின் சக்தி, சூரிய சக்தி, காற்று சக்தி உயிரி சக்தி, ஆகியன முக்கிய எடுத்துக்காட்டுகளாகும் |
22.
| வேளாண் சார்ந்த தொழிலகங்கள் | கனிமம் சார்ந்த தொழிலகங்கள் | |
| 1 | வேளாண் சார்ந்த தொழிலகங்கள் வேளாண் துறையிலிருந்து மூலப் பொருட்களைப் பெறுகின்றன. | இத்தொழில்கள் உலோகம் மற்றும் உலோகமற்ற பொருட்களை மூலப்பொருட்களாக பயன்படுத்துகின்றன. |
| 2 | பருத்தி நெசவாலைகள், சணல் ஆலைகள், பட்டு நெசவாலைகள், சர்க்கரை ஆலைகள், ஆகியன வேளாண் சார்ந்த தொழிலகங்களுக்கு முக்கிய சான்றுகளாகும். | இரும்பு எஃகு தொழிற்சாலைகள், சிமெண்ட் தொழிற்சாலைகள், இரசாயன உரத்தொழிற்சாலைகள் ஆகியன கனிமம் சார்ந்த தொழிலகங்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். |
23.
| புதுப்பிக்க இயலும் வளங்கள் | புதுப்பிக்க இயலா வளங்கள் | |
| 1 | பயன்பாட்டிற்கு பிறகு இயற்கை முறையில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வளங்கள் புதுப்பிக்க இயலும் வளங்கள் ஆகும் | பயன்பாட்டிற்கு பிறகு மீண்டும் (மீட்டுருவாக்கம்) பயன்படுத்த இயலாத வளங்கள் புதுப்பிக்க இயலாத வளங்களாகும். |
| 2 | சூரிய ஆற்றல், காற்று சக்தி, உயிரி வளிமம், ஓத அலை சக்தி, அலை சக்தி போன்றவை புதுப்பிக்கக்கூடிய வளங்கள் ஆகும். | நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை வாயு போன்றவை புதுப்பிக்க இயலா வளங்கள் ஆகும். |
24.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards