10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 09/09/2019
உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்
10ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
இந்திய அரசாங்கம் 1991 இல் ________ ஐ அறிமுகப்படுத்தியது.
உலகமயமாக்கல்
உலக வர்த்தக அமைப்பு
புதிய பொருளாதார கொள்கை
இவற்றில் எதுவுமில்லை
2.
வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கை (FIP) அறிவித்த ஆண்டு
ஜூன் 1991
ஜூலை 1991
ஜூலை-ஆகஸ்ட் 1991
ஆகஸ்ட் 1991
3.
4.
காட் (GATT)-இன் முதல் சுற்று நடைபெற்ற இடம்
டோக்கியோ
உருகுவே
டார்குவே
ஜெனீவா
5.
WTO வில் தற்போதுள்ள உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை
159
164
148
128
6.
பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனம் ________ இல் இரண்டாவது தொழிற்சாலையை நிறுவியது.
7.
_______ ஆல் உலகமயமாக்கல் என்ற பதம் கண்டுபிடிக்கப்பட்டது.
8.
உலக வர்த்தக அமைப்பு ஒப்பந்தம்______ இருந்து அமுலுக்கு வந்தது.
9.
கிழக்கிந்திய கம்பெனி சென்னையில் பலமான தொழிற்சாலைகள் கட்டியமைத்ததை __________ என அழைக்கப்படுகிறது.
10.
ஒரு நல்ல பொருளாதாரம் ______ ன் விரைவான வளர்ச்சிக்காக அறிமுகப்படுத்தப்படுகிறது.
11.
உலகமயமாக்கலின் நேர்மறையான தாக்கங்கள் இரண்டினை எழுதுக.
12.
TRIPs மற்றும் TRIMs - சிறுகுறிப்பு எழுதுக.
13.
"உலக வர்த்தக அமைப்பின்" முக்கிய நோக்கம் என்ன?
14.
“நியாயமான வர்த்தக நடைமுறைகளின்” ஏதாவது இரு கோட்பாடுகளை எழுதுக.
15.
நியாயமான வர்த்தகம் என்றால் என்ன?
16.
உலகமயமாக்கலின் சவால்களை எழுதுக.
17.
பன்னாட்டு நிறுவனங்களின் (MNC) நன்மைகள் மற்றும் தீமைகளை சுருக்கமாக எழுதுக.
1.
(c)
புதிய பொருளாதார கொள்கை
2.
(c)
ஜூலை-ஆகஸ்ட் 1991
3.
(d)
4.
(d)
ஜெனீவா
5.
(b)
164
6.
( )
மசூலிப்பட்டினம்
7.
( )
பேராசிரியர் தியோடோர் லெவிட்
8.
( )
ஜனவரி 1 1995
9.
( )
செயின்ட் ஜார்ஜ் கோட்டை
10.
( )
மூலதன சந்தையின்
11.
உலகமயமாக்கலின் நேர்மறையான தாக்கம் :
(i) ஒரு சிறந்த பொருளாதாரம் மூலதன சந்தையின் விரைவான வளர்ச்சியை அறிமுகப்படுத்துகிறது.
(ii) வாழ்க்கைத் தரம் அதிகரித்துள்ளது.
(iii) உலகமயமாக்கல் வேகமாக வர்த்தகத்தை அதிகரித்து அதனால் அதிக மக்களுக்கு வேலை வாய்ப்புகள் அளிக்கப்படுகிறது.
(iv) புதிய தொழில்நுட்பங்களில் மற்றும் புதிய அறிவியல் ஆராய்ச்சி முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டது.
(v) உலகமயமாக்கல் ஒரு நாட்டின் மொத்த உள் நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும்.
(vi) இது பண்டங்களின் ஓட்டத்தை தாராளமாக அதிகரிக்கவும், வெளிநாட்டு நேரடி முதலீடுகளை (FDI) அதிகரிக்கவும் உதவுகிறது.
12.
(i) அறிவுசார் சொத்துரிமை தொடர்பான வர்த்தக உரிமைகள் (TRIPs-Trade Related Aspects of Intellectual Property Rights) :
அறிவுசார் பண்டங்களின் உரிமைகள் என்பது ஒரு வணிக மதிப்புடன் கூடிய தகவல் என வரையறுக்கலாம். TRIPs ன் கீழ் பண்டங்கள் அல்லது செயல்முறைகள் அனைத்து துறைகளின் தொழில்நுட்பங்களில் எந்தவொரு கண்டுபிடிப்புக்கும் காப்புரிமை வழங்குகிறது.
(ii) வர்த்தக தொடர்புடைய முதலீட்டு நடவடிக்கைகள் (TRIMs - Trade Related Investment Measures) :
உள்நாட்டு தொழில்களின் வளர்ச்சிக்காக தேவையான வசதிகளை வழங்குவதற்கு அந்நாட்டில் செய்யப்படும் வெளிநாட்டு முதலீட்டிற்கு சில நிபந்தனைகள் அல்லது கட்டுப்பாடுகளை அரசு விதிக்கும் என்பதையே TRIMs குறிக்கிறது. என உருகுவே சுற்று உடன்படிக்கை கூறுகிறது.
13.
உலக வர்த்தக அமைப்பின் (WTO) முக்கிய குறிக்கோள்கள் :
1. அயல்நாட்டு வாணிபத்திற்கான விதிகள் அமைத்தல் மற்றும் செயல்படுத்துதல்.
2. வர்த்தக தாராளமயமாக்கலுக்கான பேச்சு வார்த்தை மற்றும் கண்காணிப்பதற்கான ஒரு மன்றத்தை வழங்குதல்.
3. வர்த்தக தகராறுகளைக் கையாளுதல்
4. நிலையான முன்னேற்றம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய இரண்டையும் ஒன்றிணைத்து அறிமுகம் செய்தல்
5. உலக வர்த்தகத்தில் வளர்ந்துவரும் நாடுகளின் ஒரு சிறந்த வளர்ச்சிக்கு பாதுகாப்பாக இருத்தல்
6. முடிவெடுக்கும் செயல்களின் வெளிப்படைத் தன்மையை அதிகரித்தல்
7. முழுவேலை வாய்ப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் பயனுள்ள தேவையை அதிகரித்தல்
14.
(i) பொருளாதார ரீதியில் பின்தங்கிய உற்பத்தியாளர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குதல்.
(ii) வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு.
(iii) நியாயமான வர்த்தக நடைமுறைகள் மற்றும் நியாயமான விலையில் கொடுப்பது.
(iv) குழந்தை தொழிலாளர் மற்றும் கட்டாயத் தொழிலாளர் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.
(v) பாகுபாடு அல்லாத பாலின சமபங்கு மற்றும் சங்க சுதந்திரம் ஆகியவற்றுக்கு அர்ப்பணித்தல்.
15.
நியாயமான வர்த்தகமானது, சிறிய விவசாயிகளை உலகளாவிய சந்தை இடத்தில் ஒரு சுறுசுறுப்பான பகுதியாக வைத்திருப்பதோடு நுகர்வோருக்கு அதிகாரம் அளிக்கவும், கொள்முதல் செய்யவும், அவர்களின் மதிப்பை ஆதரிக்கவும் நோக்கமாகக் கொள்ளும் ஒரு வழிமுறையாக.
16.
உலகமயமாக்கலின் சவால்கள்:
1. உலகமயமாக்கலில் நன்மைகள் அனைத்து நாடுகளுக்கும் தானாக கிடைப்பதில்லை.
2. வளர்ந்துவரும் உலகில் உலகமயமாக்கல், உறுதியற்ற தன்மைக்கு வழிவகுக்கும் என்பது அச்சத்திற்குரியதாகும்.
3. உலகமயமாக்கலினால் உலகளாவிய போட்டி அதிகரித்த தொழில் முறை உலகில், ஊதியங்கள், தொழிலாளர் உரிமைகள், வேலைவாய்ப்பு நடைமுறைகள் ஆகியவற்றை அடிமட்டத்திற்குக் கொண்டு செல்ல இது வழிவகுக்கும்.
4. இது உலகளாவிய சமத்துவமின்மைக்கு வழிவகுக்கிறது.
5. உலகமயமாக்கலால் குழந்தை தொழிலாளர் முறை மற்றும் அடிமைத்தனம் போன்ற நடவடிக்கைகள் அதிகரித்துள்ளது.
6. மக்கள் அதிகமாக துரித உணவுகளை உட்கொள்கிறார்கள். இதனால் உடல் நலக்குறைவு மற்றும் நோய் பரவுதலுக்கு இது வழிவகுக்கிறது.
7. உலகமயமாக்கலால் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
17.
MNC யின் பரிணாம வளர்ச்சி:
1. கிழக்கு இந்திய நிறுவனம், ஒரு வர்த்தக நிறுவனமாக இந்தியாவுக்கு வந்தது. அதன் பிறகு அரசியல் ரீதியாக நாடெங்கிலும் பரவலாக ஆதிக்கம் செலுத்தியது.
2. 1920களில் பன்னாட்டு நிறுவனங்கள் முதலில் பிரித்தெடுக்கப்பட்ட தொழில்களில் அல்லது தொழில் நடத்தும் நாடுகளின் மூலப்பொருட்களைக் கட்டுப்படுத்தி மெதுவாக இந்தியாவினுள் நுழைந்தன.
3. 1950களுக்கு பிறகு உற்பத்தி மற்றும் பணிகள் துறையிலும் ஈடுபட்டது. தற்போது, இந்தியாவில் நான்கு பெரிய ஏற்றுமதி நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு சொந்தமான பன்னாட்டு நிறுவனங்கள் பெரும்பான்மையாக உள்ளன. இவற்றில் அதிகமானது அமெரிக்காவினுடையது ஆகும்.
4. இந்தியாவிலுள்ள 15 பெரிய பன்னாட்டு நிறுவனங்களில், 11 அமெரிக்காவை சேர்ந்ததாகும்.
MNCயின் நன்மைகள்:
1. பன்னாட்டு நிறுவனங்கள் குறைந்த விலையில் பொருட்களை தரமாகவும் மற்றும் பரிவர்த்தனை செலவு இல்லாமலும் உற்பத்தி செய்கிறது.
2. பன்னாட்டு நிறுவனங்கள் விலைகளை குறைப்பதால் உலகளாவிய நுகர்வோரின் வாங்கும் சக்தி அதிகரிக்கிறது.
3. பன்னாட்டு நிறுவனங்கள் வரி மாறுபாட்டை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
4. பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளூர் பொருளாதாரத்தில் வேலை வாய்ப்பினை ஊக்குவிக்கின்றன.
MNCயின் தீமைகள்:
1. பன்னாட்டு நிறுவனங்கள் முற்றுரிமையை (சில தயாரிப்புகளுக்கு) வளர்ப்பதற்கான ஒரு வழியாகும்.
2. பன்னாட்டு நிறுவனங்களினால் சுற்றுச்சூழலில் தீங்கினை உருவாக்க வாய்ப்புள்ளது.
3. ஒரு புரவலன் நாட்டின் பொருளாதாரத்தில், பன்னாட்டு நிறுவனத்தின் அறிமுகம் சிறிய உள்ளூர் வணிக வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.
4. பன்னாட்டு நிறுவனங்கள் ஒழுக்க நெறிமுறைகளை மீறுவதோடு, தார்மீக சட்டங்களை அவர்கள் குற்றம் சாட்டி, மூலதனத்துடன் தங்கள் வணிக செயல்பாட்டினை திருப்பிக் கொள்வதற்கும் முனைவர்.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards