10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil நாகரிகம், நாடு, சமூகம் - கவிதை பேழை (செய்யுள்) -முத்தொள்ளாயிரம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil அறம்,தத்துவம், சிந்தனைகவிதை பேழை (செய்யுள்) -அக்கறை Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil உயிரின்ஓசை - துணைப்பாடம் -பிருமம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil அறம், தத்துவம், சிந்தனை - கவிதை பேழை (செய்யுள்) -தேம்பாவணி * Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil கலை, அழகியல், புதுமை - உரைநடை உலகம் -பன்முகக் கலைஞர் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil மணற்கேணி - இலக்கணம் - இலக்கணம் -பொது Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 28/09/2019
உலகமயமாதல் மற்றும் வர்த்தகம்
10ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
கீழ்க்கண்டவற்றுள் விரிவாக்கம் செய்க.
(i) GATT
(ii) WTO
(iii) FDI
(iv) TRIPS
(v) TRIMS
2.
நவீன உலகமயமாக்கல் என்றால் என்ன?
3.
தென்னிந்திய வர்த்தகக் குழுக்கள் எவ்வாறு உருவாகியது?
4.
தென்னிந்தியாவில் ஐரோப்பிய வணிகர்கள் வர்த்தக நடவடிக்கைப் பற்றி நீ அறிவது என்ன?
5.
இந்தியாவின் பன்னாட்டு நிறுவனங்கள் வளர்ச்சிக்கான காரணங்கள் கூறுக.
6.
இடைப்பட்ட உலகமயமாக்கல் பற்றி குறிப்பு வரைக.
7.
உலகமயமாக்கலின் நேர்மறையான தாக்கங்கள் இரண்டினை எழுதுக.
8.
TRIPs மற்றும் TRIMs - சிறுகுறிப்பு எழுதுக.
9.
"உலக வர்த்தக அமைப்பின்" முக்கிய நோக்கம் என்ன?
10.
“நியாயமான வர்த்தக நடைமுறைகளின்” ஏதாவது இரு கோட்பாடுகளை எழுதுக.
11.
நியாயமான வர்த்தகம் என்றால் என்ன?
12.
உலகமயமாக்கலை சார்ந்த சீர்திருத்தங்கள் ஏதேனும் இரண்டினை எழுதுக?
13.
தென்னிந்தியாவில் டச்சு - சிறு குறிப்பு வரைக.
14.
உலகமயமாக்கலின் வகைகளை எழுதுக (அல்லது) உலகமயமாக்கலின் மூன்று நிலைகளைக் கூறுக.
15.
உலகமயமாக்கல் என்றால் என்ன?
1.
(i) GATT - சுங்கவரி வாணிபம் குறித்த பொது உடன்பாடு
(ii) WTO - உலக வர்த்தக அமைப்பு
(iii) FDI - வெளிநாட்டு நேரடி முதலீடு
(iv) TRIPS - அறிவுசார் சொத்துரிமை தொடர்பான வர்த்தக உரிமைகள்
(v) TRIMS - வர்த்தக தொடர்புடைய முதலீட்டு நடவடிக்கைகள்
2.
19 ஆம் நூற்றாண்டில் உலகமயமாக்கலின் வருகை நவீன வடிவத்தை நெருங்கியது. 19 மற்றும் 20ம் நூற்றாண்டுகளுக்கு இடையே நடைபெற்ற உலகமயமாக்கல் குறிப்பிடத்தக்க வேறுபாடுகளை கொண்டிருந்தன. அவை இந்த நூற்றாண்டுகளில் நடைபெற்ற உலகளாவிய வர்த்தக பொருளாதாரத்தில் மூலதனம் மற்றும் முதலீடு செய்யப்பட்டது.
3.
வர்த்தக நடவடிக்கைகளை ஒழுங்கமைக்கவும் விரிவுபடுத்தும் வணிகர்கள் தென்னிந்திய வர்த்தகக் குழுக்களை உருவாக்கினார்கள். இந்திய கலாசாரத்தை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வழிகளாக வர்த்தக குழுக்கள் இருந்தன.
4.
வாஸ்கோடாகாமாவால் ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்கு நன்னம்பிக்கை முனை வழியாக புதிய கடல் பாதை கண்டுபிடிக்கப்பட்டது. அது நாகரிக உலகத்தின் மீது பல விளைவுகளை ஏற்படுத்தியது. இந்தியாவின் கடலோர மற்றும் கடல் வர்த்தகம் ஐரோப்பியர்களால் முற்றுரிமை பெற்றிருந்தது.
5.
(i) இந்திய தொழில் துறையில் பன்னாட்டு நிறுவனம் ஒரு பொதுவான வடிவத்துடன் இந்திய தொழிலதிபர்களின் ஒத்துழைப்புடன் நுழைந்தது. 1980 களில் தாராளமயமாக்கலின் போக்குகள் வெளிநாட்டு ஒத்துழைப்புக்கு கணிசமான பங்கினை அளித்தன.
(ii) ஜூலை-ஆகஸ்ட் 1991ல் அறிவிக்கப்பட்ட தாராளமயமாக்கப்பட்ட வெளிநாட்டு முதலீட்டுக் கொள்கையினால் (FIP) வெளிநாட்டு ஒத்துழைப்புகள் அதிகரித்து வெளிநாட்டு நேரடி முதலீடும் (FDI) அதிகரித்துள்ளது.
6.
(i) 16 மற்றும் 17ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய பேரரசுகளின் எழுச்சியால் முதலில் போர்ச்சுகீசியர்கள், ஸ்பானிஷ் பேரரசுகள், டச்சுக்காரர்கள் மற்றும் பிரிட்டிஷ் பேரரசுகளின் கடல் வழி வாணிபம் மேற்கொண்டனர்.
(ii) உலகமயமாக்கல் 17ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனம் (1600) தனியார் வணிக நிறுவனம் போன்று உருவாக்கப்பட்டு முதல் பன்னாட்டு நிறுவனம் என அழைக்கப்பட்டது.
7.
உலகமயமாக்கலின் நேர்மறையான தாக்கம் :
(i) ஒரு சிறந்த பொருளாதாரம் மூலதன சந்தையின் விரைவான வளர்ச்சியை அறிமுகப்படுத்துகிறது.
(ii) வாழ்க்கைத் தரம் அதிகரித்துள்ளது.
(iii) உலகமயமாக்கல் வேகமாக வர்த்தகத்தை அதிகரித்து அதனால் அதிக மக்களுக்கு வேலை வாய்ப்புகள் அளிக்கப்படுகிறது.
(iv) புதிய தொழில்நுட்பங்களில் மற்றும் புதிய அறிவியல் ஆராய்ச்சி முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டது.
(v) உலகமயமாக்கல் ஒரு நாட்டின் மொத்த உள் நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும்.
(vi) இது பண்டங்களின் ஓட்டத்தை தாராளமாக அதிகரிக்கவும், வெளிநாட்டு நேரடி முதலீடுகளை (FDI) அதிகரிக்கவும் உதவுகிறது.
8.
(i) அறிவுசார் சொத்துரிமை தொடர்பான வர்த்தக உரிமைகள் (TRIPs-Trade Related Aspects of Intellectual Property Rights) :
அறிவுசார் பண்டங்களின் உரிமைகள் என்பது ஒரு வணிக மதிப்புடன் கூடிய தகவல் என வரையறுக்கலாம். TRIPs ன் கீழ் பண்டங்கள் அல்லது செயல்முறைகள் அனைத்து துறைகளின் தொழில்நுட்பங்களில் எந்தவொரு கண்டுபிடிப்புக்கும் காப்புரிமை வழங்குகிறது.
(ii) வர்த்தக தொடர்புடைய முதலீட்டு நடவடிக்கைகள் (TRIMs - Trade Related Investment Measures) :
உள்நாட்டு தொழில்களின் வளர்ச்சிக்காக தேவையான வசதிகளை வழங்குவதற்கு அந்நாட்டில் செய்யப்படும் வெளிநாட்டு முதலீட்டிற்கு சில நிபந்தனைகள் அல்லது கட்டுப்பாடுகளை அரசு விதிக்கும் என்பதையே TRIMs குறிக்கிறது. என உருகுவே சுற்று உடன்படிக்கை கூறுகிறது.
9.
உலக வர்த்தக அமைப்பின் (WTO) முக்கிய குறிக்கோள்கள் :
1. அயல்நாட்டு வாணிபத்திற்கான விதிகள் அமைத்தல் மற்றும் செயல்படுத்துதல்.
2. வர்த்தக தாராளமயமாக்கலுக்கான பேச்சு வார்த்தை மற்றும் கண்காணிப்பதற்கான ஒரு மன்றத்தை வழங்குதல்.
3. வர்த்தக தகராறுகளைக் கையாளுதல்
4. நிலையான முன்னேற்றம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய இரண்டையும் ஒன்றிணைத்து அறிமுகம் செய்தல்
5. உலக வர்த்தகத்தில் வளர்ந்துவரும் நாடுகளின் ஒரு சிறந்த வளர்ச்சிக்கு பாதுகாப்பாக இருத்தல்
6. முடிவெடுக்கும் செயல்களின் வெளிப்படைத் தன்மையை அதிகரித்தல்
7. முழுவேலை வாய்ப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் பயனுள்ள தேவையை அதிகரித்தல்
10.
(i) பொருளாதார ரீதியில் பின்தங்கிய உற்பத்தியாளர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குதல்.
(ii) வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு.
(iii) நியாயமான வர்த்தக நடைமுறைகள் மற்றும் நியாயமான விலையில் கொடுப்பது.
(iv) குழந்தை தொழிலாளர் மற்றும் கட்டாயத் தொழிலாளர் இல்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.
(v) பாகுபாடு அல்லாத பாலின சமபங்கு மற்றும் சங்க சுதந்திரம் ஆகியவற்றுக்கு அர்ப்பணித்தல்.
11.
நியாயமான வர்த்தகமானது, சிறிய விவசாயிகளை உலகளாவிய சந்தை இடத்தில் ஒரு சுறுசுறுப்பான பகுதியாக வைத்திருப்பதோடு நுகர்வோருக்கு அதிகாரம் அளிக்கவும், கொள்முதல் செய்யவும், அவர்களின் மதிப்பை ஆதரிக்கவும் நோக்கமாகக் கொள்ளும் ஒரு வழிமுறையாக.
12.
உலகமயமாக்கல் சார்ந்த சீர்திருத்தங்கள் :
(i) இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கை சில தொழிற்சாலைகளை தவிர தொழில் உரிமம் பெறுவதை நீக்கியது.
(ii) பொதுத்துறை நிறுவனத்திற்காக ஒதுக்கப்பட்ட தொழிற்சாலைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது.
(iii) இந்தியாவின் பொருட்களின் ஏற்றுமதி பரிமாற்றத்தில் நிலையான பணத்தின் மாற்று வீதத்தை சரி செய்தது.
(iv) வெளிநாட்டு தனியார் துறை நடப்பு கணக்கில் இறக்குமதி வரியை குறைப்பதன் மூலம் வர்த்தகத்தில் ரூபாய் மாற்றத்தை உருவாக்கியது.
(v) அயல்நாட்டு செலவாணி ஒழுங்குமுறை பொருத்தமாக திருத்தப்பட்டது.
(vi) இந்திய ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட சட்ட ரீதியான நீர்மை விகிதம் (SLR) அதிகரிக்கப்பட்டது.
13.
1. டச்சு கிழக்கிந்திய நிறுவனம் 1602 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
2. அட்மிரல் வான் டெர் ஹகேன் என்பவரால் டச்சு நிறுவனம் மசூலிப்பட்டினம், பெத்தபோலி, (நிஜாம்பட்டினம்), தேவனாம்பட்டினம் ஆகிய இடங்களில் நிறுவப்பட்டது.
3. 1610ல் சந்திரகிரி ராஜாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி பழவேற்காட்டில் மற்றொரு தொழிற்சாலையை நிறுவினர்.
4. இண்டிகோ, சால்ட்பேட்டர் மற்றும் வங்க ஈச்சா பட்டு போன்ற இதர பொருட்கள் டச்சுக்காரர்களால் ஏற்றுமதி செய்யப்பட்டன.
5. இந்தியாவில் டச்சுக்காரர்களின் தலைமையிடமாக பழவேற்காடு இருந்தது.
14.
உலகமயமாக்கல் வரலாற்று பின்னணியில் மூன்று நிலைகளாக வகுக்கப்பட்டுள்ளன.
1. தொன்மையான உலகமயமாக்கல்
2. இடைப்பட்ட உலகமயமாக்கல்
3. நவீன உலகமயமாக்கல் என்பனவாகும்.
15.
உலகமயமாக்கல் என்பது உலக பொருளாதார நாடுகளை ஒருங்கிணைப்பதாகும். அடிப்படையில், இது சர்வதேசமயமாக்கல் மற்றும் தாராளமயமாக்கல் செயல் முறையை குறிக்கிறது.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil கூட்டாஞ்சோறு - இலக்கணம் - தொகைநிலை தொடர்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil பண்பாடு - கவிதை பேழை (செய்யுள்) -முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil உயிரின்ஓசை - இலக்கணம் - தொகாநிலை தொடர் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil இயற்கை, சுற்றுசூழல், அறிவியல் - கவிதை பேழை (செய்யுள்) -மேகம் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards