10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil நாகரிகம், நாடு, சமூகம் - கவிதை பேழை (செய்யுள்) -முத்தொள்ளாயிரம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil அறம்,தத்துவம், சிந்தனைகவிதை பேழை (செய்யுள்) -அக்கறை Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil உயிரின்ஓசை - துணைப்பாடம் -பிருமம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil அறம், தத்துவம், சிந்தனை - கவிதை பேழை (செய்யுள்) -தேம்பாவணி * Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil கலை, அழகியல், புதுமை - உரைநடை உலகம் -பன்முகக் கலைஞர் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil மணற்கேணி - இலக்கணம் - இலக்கணம் -பொது Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 09/09/2019
மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் அதன் வளர்ச்சி: ஓர் அறிமுகம்
10ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
இந்திய பொருளாதாரம் என்பது
வளர்ந்து வரும் பொருளாதாரம்
தோன்றும் பொருளாதாரம்
இணை பொருளாதாரம்
அனைத்தும் சரி
2.
கீழ்க்கண்டவற்றுள் எது வர்த்தக கொள்கை?
நீர்ப்பாசன கொள்கை
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கை
நில சீர்திருத்தக் கொள்கை
கூலிக் கொள்கை
3.
இந்தியாவில் பிறப்பின் போது எதிர்பார்க்கப்பட்ட ஆயுட்காலம் _______ ஆண்டுகள் ஆகும்.
65
60
70
55
4.
வேளாண் பண்டங்களின் உற்பத்தியில் இந்தியா ______ அதிகமாக உற்பத்தியாளர் ஆகும்.
1 வது
3 வது
4 வது
2 வது
5.
GNP யின் சமம்
பணவீக்கத்திற்காக சரிசெய்யப்பட்ட NNP
பணவீக்கத்திற்காக சரிசெய்யப்பட்ட GDP
GDP மற்றும் வெளிநாட்டில் ஈட்டப்பட்ட நிகர சொத்து வருமானம்
NNP மற்றும் வெளிநாட்டில் ஈட்டப்பட்ட நிகர சொத்து வருமானம்
6.
GDP யின் விரைவான பொருளாதார வளர்ச்சியைப் பெற நவீன மயமாக்கத்துடன் கூடிய விரைவான தொழில்மயமாக்கல் என்று ________ கொள்கை கூறுகிறது.
7.
இந்தியா ______ மிக வேகமாக வளரும் நாடாகும்.
8.
இந்தியா உலகத்தில் ________ மிகப்பெரிய பொருளாதாரம் ஆகும்.
9.
இரண்டாம் துறையை வேறுவிதமான ________ துறை என அழைக்கலாம்.
10.
இந்தியாவில் ______ துறை முதன்மை துறையாகும்.
11.
தலா வருமானம்
12.
GST
13.
விலைக் கொள்கை
14.
மின்சாரம்/எரிவாயு மற்றும் நீர்
15.
இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் காரணிகள் யாவை?
16.
இந்தியாவில் 2017ல் GDP யின் துறைவாரியான பங்களிப்பை கூறுக.
17.
GDP யில் பங்களிப்புள்ள துறைகளை எடுத்துக்காட்டுடன் எழுதுக.
18.
பொருளாதார வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் இடையேயுள்ள ஏதேனும் ஐந்து வேறுபாடுகளைக் கூறுக.
19.
இந்தியாவில் GDP யில் பல்வேறு துறைகளின் பங்கினை விவரி?
1.
(d)
அனைத்தும் சரி
2.
(b)
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கை
3.
(a)
65
4.
(d)
2 வது
5.
(c)
GDP மற்றும் வெளிநாட்டில் ஈட்டப்பட்ட நிகர சொத்து வருமானம்
6.
( )
தொழில் துறை
7.
( )
ஐந்தாவது
8.
( )
ஆறாவது
9.
( )
தொழில்
10.
( )
வேளாண்மை
11.
நாட்டு வருமானம் / மக்கள் தொகை
12.
பண்டம் மற்றும் பணிகள் மீதான வரி
13.
வேளாண்மை
14.
தொழில்துறை
15.
1. இந்தியாவில் உழைக்கும் வயது மக்களின் பங்கு உயர்ந்துள்ளது. இது 58% லிருந்து 64% ஆக உயர்ந்துள்ளது.
2. இந்தியா கடுமையான சட்டமுறையையும், அதிகமான ஆங்கில மொழி பேசுபவர்களையும் கொண்டுள்ளது.
3. மேலும் தகவல் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் வாய்ந்ததாக இருப்பதால் நிறுவனங்களிடமிருந்து முதலீடுகளை உள்நோக்கி இழுக்கிறது.
4. இந்தியாவின் பொருளாதாரம் தொழில்நுட்ப வளர்ச்சியில் மிகவும் முன்னேறிய மற்றும் கவர்ச்சிகரமான வெற்றியை உருவாக்கியுள்ளது.
16.
இந்தியாவில் GDP யின் துறை வாரியான 2017-18 ன் பங்களிப்பு:
1. விவசாயம் (முதன்மைத் துறை) = 17.09%
2. தொழில்கள் (இரண்டாம் துறை) = 29.03%
3. பணிகள் (மூன்றாம் துறை) = 52.08%
17.
| முதன்மைத்துறை (விவசாயத் துறை) | இரண்டாம் துறை (தொழில்) | மூன்றாம் துறை (பணிகள்) |
| கால்நடை பண்ணைகள் | இரும்பு எஃகு தொழில் | அரசு |
| மீன் பிடித்தல் | ஜவுளித் தொழில் | அறிவியல் ஆராய்ச்சி |
| சுரங்கங்கள் | சணல் | போக்குவரத்து |
| காடுகள் வளர்த்தல் | சர்க்கரை | தகவல் தொடர்பு |
| சிமெண்ட் | வர்த்தகம் | |
| காகிதம் | தபால் மற்றும் தந்தி | |
| பெட்ரோலியம் | வங்கி | |
| ஆட்டோமொபைல்ஸ் | கல்வி | |
| சிறு தொழில்கள் | பொழுதுபோக்கு | |
| சுகாதாரம் | ||
| தகவல் தொழில் நுட்பம் |
18.
| வ.எண் | பொருளாதார வளர்ச்சி முன்னேற்றம் ஒப்பீடு | பொருளாதார வளர்ச்சி | பொருளாதார முன்னேற்றம் |
| (i) | கருத்து | பொருளாதார வளர்ச்சி ஒரு குறுகிய கருத்து | பொருளாதார முன்னேற்றம் ஒரு பரந்த கருத்து |
| (ii) | வரையறை/பொருள் | ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு பொருளாதாரத்தில் வெளியீட்டில் இது நேர்மறை அளவு மாற்றத்தைக் கொடுக்கும் | இது பொருளாதாரத்தில் வெளியீட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு.HDI யின் குறியீட்டின் முன்னேற்றம் மற்றும் ஒரு நாட்டின் ஒட்டு மொத்த மகிழ்ச்சி குறியீட்டைக் கருதுகிறது. |
| (iii) | அணுகுமுறை | அளவின் இயல்பு | தரத்தின் இயல்பு |
| நோக்கம் | GDP, GNP, FDI,FII போன்ற அளவுகள் அதிகரிக்கும். | வாழ்க்கை எதிர்பார்ப்பு விகிதம், குழந்தை எழுத்தறிவு விகிதம் மற்றும் வறுமை விகிதத்தில் முன்னேற்றம் | |
|
(iv) |
கால வரம்பு | இயற்கையில் குறுகிய காலத்தை உடையது. | இயற்கையில் நீண்ட காலத்தை உடையது. |
| (v) | பொருந்தும் தன்மை | வளர்ந்த நாடுகள் | வளர்ந்து வருகின்ற நாடுகள் |
| (vi) | அளவீட்டு நுட்பங்கள் | நாட்டு வருமானத்தை அதிகரித்தல் | உண்மையான நாட்டு வருமானத்தை அதிகரித்தல், அதாவது, தனிநபர் வருமானம் போன்றவை. |
| (vii) | நிகழ்வின் அதிர்வெண் | ஒரு குறிப்பிட்ட காலம் | தொடர்ச்சியான செயல்முறை |
| (viii) | அரசாங்க உதவி | இது ஒரு தானியங்கி செயல்முறையாகும். எனவே, அரசாங்க உதவி/ஆதரவு அல்லது தலையீடு தேவைப்படாது. | அரசாங்க தலையீட்டை மிகவும் நம்பியுள்ளது. இது பரந்த கொள்கை மாற்றங்களை உள்ளடக்கியுள்ளது. எனவே அரசாங்கத் தலையீடு இல்லாமல் அது சாத்தியமே இல்லை. |
| (ix) | செல்வ பகிர்வு | பொருளாதார வளர்ச்சி அனைத்து மக்களிடையேயும் செல்வம் வருமானத்தை நியாயமாக மற்றும் சமமாக விநியோகிக்கப்படுவதில்லை. | இது ஒரு சம நிலையில் கவனம் செலுத்துகிறது. அனைத்து தனிநபர்களிடையே செல்வத்தை சமமாக விநியோகிப்பது சமூகங்களை மேம்படுத்துவதற்கு முயற்சிக்கிறது. |
19.
GDPயின் துறைகள்:
1. முதன்மைத் துறை (விவசாயத் துறை)
2. இரண்டாம் துறை (தொழில் துறை)
3. மூன்றாம் துறை (பணிகள் துறை)
முதன்மைத்துறை:
1. வேளாண்மைத் துறையை முதன்மைத் துறை எனவும் அழைக்கலாம். இதில் வேளாண் சார்ந்த நடவடிக்கைகள் மற்றும் விவசாய நடவடிக்கைகள் அடங்கும்.
2. இவை, கால்நடை பண்ணைகள், மீன்பிடித்தல், சுரங்கங்கள், காடுகள் வளர்த்தல், சோளம், நிலக்கரி போன்ற மூலப்பொருட்களை உற்பத்தி செய்கிறது.
இரண்டாம் துறை:
1. தொழில் துறையை இரண்டாம் துறை எனவும் அழைக்கலாம். மூலப்பொருட்களை மாற்றியமைப்பதன் மூலம் பண்டங்கள் மற்றும் பணிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
2. இரும்பு மற்றும் எஃகு தொழில், ஜவுளித் தொழில், சணல், சர்க்கரை, சிமெண்ட், காகிதம், பெட்ரோலியம், ஆட்டோ மொபைல்ஸ் மற்றும் பிற சிறுதொழில்கள் ஆகியன முக்கியத் தொழில்களாகும்.
மூன்றாம் துறை:
1. பணிகள் துறையை மூன்றாம் துறை எனவும் அழைக்கலாம்.
2. அவை அரசு, அறிவியல் ஆராய்ச்சி, போக்குவரத்து, தகவல் தொடர்பு, வர்த்தகம், தபால் மற்றும் தந்தி, வங்கி, கல்வி, பொழுதுபோக்கு, சுகாதாரம் மற்றும் தகவல் தொழில் நுட்பம் போன்றவைகளாகும்.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil கூட்டாஞ்சோறு - இலக்கணம் - தொகைநிலை தொடர்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil பண்பாடு - கவிதை பேழை (செய்யுள்) -முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil உயிரின்ஓசை - இலக்கணம் - தொகாநிலை தொடர் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil இயற்கை, சுற்றுசூழல், அறிவியல் - கவிதை பேழை (செய்யுள்) -மேகம் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards