10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 30/09/2019
HIS - முதல் உலகப்போரின் வெடிப்பும் அதன் பின்விளைவுகளும்
10ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
ஹாலாந்து நாட்டின் தி ஹேக் நகரில் _______ அமைதி மாநாடுகள் கூட்டப்பட்டன
இரண்டு
மூன்று
நான்கு
ஐந்து
2.
பின்லாந்தைத் தாக்கியதற்காக பன்னாட்டுச் சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நாடு எது?
ஜெர்மனி
ரஷ்யா
இத்தாலி
பிரான்ஸ்
3.
பன்னாட்டுச் சங்கத்தின் முதல் பொதுச்செயலர் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
பிரிட்டன்
பிரான்ஸ்
டச்சு
அமெரிக்க ஐக்கிய நாடுகள்
4.
மார்ன் போர் எதற்காக நினைவு கூறப்படுகிறது?
ஆகாயப் போர்முறை
பதுங்குக் குழிப்போர்முறை
நீர்மூழ்கிக் கப்பல் போர்முறை
கடற்படைப் போர்முறை
5.
முதல் உலகப்போரின் இறுதியில் நிலைகுலைந்து போன மூன்று பெரும் பேரரசுகள் யாவை?
ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, உதுமானியர்
ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, ரஷ்யா
ஸ்பெயின், போர்ச்சுகல், இத்தாலி
ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, இத்தாலி
6.
_______ விஷ வாயுவை அறிமுகம் செய்தது
7.
பாரிஸ் அமைதி மாநாட்டில் பிரதிநிதியாகப் பங்கேற்ற பிரான்ஸின் பிரதமர்______ ஆவார்.
8.
டானென்பர்க் போரில் _____ பேரிழப்புகளுக்கு உள்ளானது.
9.
_____ ஆண்டில் ஜப்பான் இங்கிலாந்துடன் நட்பினை ஒப்பந்தம் செய்து கொண்டது.
10.
______ ஆம் ஆண்டில் ஜப்பான் சீனாவுடன் வலுக்கட்டாயமாகப் போரிட்டது.
11.
i) முதலாளித்துவத்தின் உச்சக்கட்டமே ஏகாதிபதியமாகும்
ii) உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களுக்கு சந்தைகள் மட்டும் அல்லாமல், கச்சாப்பொருட்களும் தேவைப்பட்டன.
iii) ஏகாதிபத்தியம் ஒரு முழுமையான முறையாக மாறியதற்கு ராணுவமயமாக்கல் மற்றும் முழுமையான போர் காரணமில்லை
iv) பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பிய சக்திகள் பெரிய சிறிய நாடுகளைக் காலனிப்படுத்தி தங்களின் நலனுக்காக அவற்றை சுரண்டின
அ) (iii) மற்றும் (ii) சரியானவை
ஆ) (i) மற்றும் (ii) சரியானவை
இ) (i) மற்றும் (iv) சரியானவை
ஈ) (ii) மற்றும் (iv) சரியானவை
12.
இந்தியாவின் மீதான தாக்கம்
i) முதல் உலகப்போர் இந்தியாவின் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது
ii) ஐரோப்பா, ஆப்ரிக்கா, மேற்கு ஆசியா ஆகிய பகுதிகளில் போர்ப்பணி செய்வதற்காக ஆங்கிலேயர் இந்தியர்களைக் கொண்ட பெரும்படையைத் திரட்டினார்
iii) போர் செலவுக்காக இந்தியா 125 மில்லியன் பவுண்டுகளை கடனாக வழங்கியது
iv) இதன் விளைவாக இந்தியாவில் பெருமளவிலான பொருளாதார இன்னல்கள் ஏற்பட்டன
அ) (i) மற்றும் (ii) சரி
ஆ) (i) மற்றும் (iv) சரி
இ) (i), (ii), (iii) மற்றும் (iv) சரி
ஈ) (i), (ii) மற்றும் (iv) சரி
13.
i) துருக்கியப் பேரரசு, பால்கனில் துருக்கியரல்லாத பல இனமக்களைக் கொண்டிருந்தது.
ii) துருக்கி மையநாடுகள் பக்கம் நின்று போரிட்டது.
iii) சூயஸ் கால்வாயைத் தாக்க துருக்கி மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டது.
அ) i), ii) ஆகியன சரி
ஆ) i), iii) ஆகியன சரி
இ) ii), iii) ஆகியன சரி
ஈ) i), ii), iii) ஆகியன சரி
14.
ஜெர்மன் படை
15.
லாயிட் ஜார்ஜ்
16.
கண்ணாடி மாளிகை
17.
கமால் பாட்சா
18.
பிரெஸ்ட்-லிடோவஸ்க் உடன்படிக்கை
19.
மைய நாடுகளின் பெயர்களை எழுதுக
20.
கூட்டு நிறுவனம் என்றால் என்ன?
21.
பன்னாட்டுச் சங்கத்தின் தோல்விக்கான ஏதேனும் இரண்டு காரணங்களைப் பட்டியலிடுக.
22.
முஸ்தபா கமால் பாட்சா வகித்த பாத்திரமென்ன?
23.
ஐரோப்பிய போர்க்குணம் வாய்ந்த தேசியவாதத்தின் மூன்று வடிவங்கள் எவை?
24.
மூவர் கூட்டு நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக
25.
26.
ஜெர்மன் பேரரசர்
அ) ஜெர்மன் பேரரசர் இரண்டாம் கெய்சர் வில்லியமின் இயல்பு யாது?
ஆ) ஜெர்மனின் வன்முறைசார் தேசியம் எவ்வாறு அழைக்கப்பட்டது?
இ) மொராக்கோ விவகாரத்தில் கெய்சர் வில்லியம் தலையிட்டதேன்?
ஈ) ஜெர்மனியின் ஆப்பிரிக்கக் காலனிகளுக்கு என்ன நேர்ந்தது?
27.
பன்னாட்டுச் சங்கத்தின் பணிகளை மதிப்பிடுக.
28.
முதல் உலகப்போருக்கான முக்கியக் காரணங்களை விவாதி?
1.
(a)
இரண்டு
2.
(b)
ரஷ்யா
3.
(a)
பிரிட்டன்
4.
(b)
பதுங்குக் குழிப்போர்முறை
5.
(a)
ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி, உதுமானியர்
6.
( )
ஜெர்மனி
7.
( )
கிளமென்கோ
8.
( )
ரஷ்யா
9.
( )
1902
10.
( )
1894
11.
ஆ) (i) மற்றும் (ii) சரியானவை
12.
ஈ) (i), (ii) மற்றும் (iv) சரி
13.
ஈ) i), ii), iii) ஆகியன சரி
14.
1,00,000 வீரர்கள்
15.
இங்கிலாந்து பிரதமர்
16.
வெர்செய்ல்ஸ்
17.
துருக்கி
18.
ரஷ்யாவும் ஜெர்மனியும்
19.
மைய நாடுகள் அணியில் ஜெர்மனி, ஆஸ்திரியா, ஹங்கேரி, துருக்கி, பல்கேரியா, ஆகிய நாடுகள் அங்கம் வகித்தன
20.
கூட்டு நிறுவனம் என்பது பொருள்களை உற்பத்தி செய்து விநியோகத்தில் ஈடுபட்டிருக்கும் ஒரு தொழிற்சார் நிறுவனமாகும். தனக்கு நன்மை பயக்கும் விகிதத்தில் பொருட்களின் விநியோகம், விலை ஆகியவற்றின் மீது அந்நிறுவனம் அதிகக் கட்டுப்பாட்டினைக் கொண்டிருக்கும்.
21.
1. சங்கத்திற்கென்று இராணுவம் இல்லை என்பதால் தான் எடுத்த முடிவுகளை அதனால் நடைமுறைப்படுத்த இயலவில்லை.
2. "கூட்டுப்பாதுகாப்பு" எனும் கோட்பாட்டை நடைமுறையில் செயல்படுத்தவே முடியவில்லை.
3. இத்தாலி, ஜப்பான், ஜெர்மனி ஆகிய நாடுகள் சங்கத்தின் ஆணைகளுக்குக் கட்டுப்பட மறுத்தபோது, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் மட்டுமே உறுதியாகச் செயல்படும் நிலையிலிருந்தன.
22.
1. துருக்கி ஒருநாடாக மறுபிறவி எடுப்பதற்கு முஸ்தபா கமால் பாட்சாவின் உன்னதமான பங்கு முக்கியமானதாகும்.
2. அவர் துருக்கியை நவீனமயமாக்கி அதை எதிர்மறையான அங்கீகாரத்திலிருந்து மாற்றியமைத்தார்.
23.
1. ஆரவாரமான நாட்டுப்பற்று - இங்கிலாந்து
2. அதிதீவிரப்பற்று - பிரான்ஸ்
3. வெறிகொண்ட நாட்டுப்பற்று - ஜெர்மனி
24.
மூவர் கூட்டு நாடுகள்: இங்கிலாந்து (பிரிட்டன்), பிரான்ஸ், ரஷ்யா
25.
26.
அ) ஜெர்மன் பேரரசரான இரண்டாம் கெய்சர் வில்லியம் இரக்கமற்ற, ஆக்கிரமிப்பு மனப்பான்மை கொண்டவர்
ஆ) ஜெர்மனியின் வெற்றிகொண்ட நாட்டுப்பற்று (kultur) என அழைக்கப்படுகிறது
இ) (i) மொராக்கோவில் பிரான்ஸ் நலன்கள் சார்ந்து, இங்கிலாந்து பிரான்சோடு மேற்கொண்ட ஒப்பந்தத்தை ஜெர்மனி எதிர்த்தது.
(ii) எனவே ஜெர்மன் பேரரசர் இரண்டாம் கெய்சர் வில்லியம் மொராக்கோ சுல்தானின் சுதந்திரத்தை அங்கீகரித்ததோடு மொராக்கோவின் எதிர்காலம் குறித்து முடிவு செய்ய பன்னாட்டு மாநாடு ஒன்றைக் கூட்டும்படி கோரினார்.
ஈ) (i) கிழக்கு மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்த ஜெர்மன் காலனிகளும், நேசநாடுகளால் தாக்கப்பட்டன
(ii) இக்காலனிகள் அனைத்தும் ஜெர்மனியில் இருந்து தொலைதூரத்தில் இருந்தாலும் அவைகளால் உடனடியாக எவ்வித உதவியையும் பெற முடியாமல் போனதாலும் நேசநாடுகளிடம் சரணடையும் நிலை ஏற்பட்டது
27.
பன்னாட்டுச் சங்கத்தின் பணிகள்:
1. 1920-1925 ஆகிய ஆண்டுகளிடையே பன்னாட்டுச் சங்கம் பல சிக்கல்களைத் தீர்த்து வைக்க அழைக்கப்பட்டது.
2. மூன்று பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதில் சங்கம் வெற்றி பெற்றது.
3. 1920இல் பின்லாந்தின் மேற்குக் கடற்கரைக்கும் சுவீடனின் கிழக்குக்கடற்கரைக்கும் இடையில் அமைந்திருந்த ஆலேண்டுத் தீவுகள் யாருக்குச் சொந்தம் என்பதில் பின்லாந்திற்கும் சுவீடனுக்குமிடையே பிரச்சனை ஏற்பட்டது.
4. பன்னாட்டுச் சங்கம் அத்தீவுகள் பின்லாந்திற்கே உரியது எனத் தீர்ப்பளித்தது.
5. அடுத்த ஆண்டில் போலந்திற்கும் ஜெர்மனிக்குமிடையே மேலை சைலேஷியா பகுதியில் எல்லைப் பிரச்சனை ஏற்பட்டபோது, அப்பிரச்சனையைச் சங்கம் வெற்றிகரமாகத் தீர்த்து வைத்தது.
6. மூன்றாவது பிரச்சனை கிரீஸ் பல்கேரியாவின் மீது படையெடுத்த போது பன்னாட்டுச் சங்கம் போர் நிறுத்தம் செய்ய உத்தரவிட்டது.
7. விசாரணைக்குப் பின் சங்கம் கிரீஸின் மீது குற்றஞ்சாட்டி, கிரீஸ் போர் இழப்பீடு வழங்க வேண்டுமெனத் தீர்மானித்தது.
8. 1925இல் லொக்கர்னோ உடன்படிக்கை கையெழுத்தாகின்ற வரை பன்னாட்டுச் சங்கம் வெற்றிகரமாகவே செயலாற்றியது.
9. லொக்கர்னோ உடன்படிக்கையின்படி ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து, இத்தாலி ஆகிய நாடுகள் மேற்கு ஐரோப்பாவில் பரஸ்பரம் அமைதிக்கு உத்தரவாதமளித்தன.
10. இதன் பின்னர் ஜெர்மனி பன்னாட்டுச் சங்கத்தில் இணைந்தது. பாதுகாப்புக் குழுவில் ஜெர்மனிக்கு நிரந்தர இடம் அளிக்கப்பட்டது.
தோல்விக்கான காரணங்கள்:
(i) அரசியல் பிரச்சனைகளில் சங்கம் எடுக்கும் முடிவுகளுக்கு உறுப்பினர்கள் அனைவரின் ஏகோபித்த ஆதரவு அவசியமாயிற்று
(ii) சங்கத்திற்கென்று ராணுவம் இல்லை என்பதால் தான் எடுத்த முடிவுகளை நடைமுறைப்படுத்த அதனால் இயலவில்லை
(iii) சர்வாதிகாரிகளால் தலைமையேற்கப்பட்ட இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் சங்கத்தின் ஆணைகளுக்குக் கட்டுப்பட மறுத்த போது இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் மட்டுமே உறுதியாகச் செயல்படும் நிலையிலிருந்தன
28.
வல்லரசுகளின் இரு அணிகள்:
1. 1900 இல் ஐரோப்பிய வல்லரசுகளில் ஐந்து அரசுகள், இரண்டு ஆயுதமேந்திய முகாம்களாகப் பிரிந்தன.
2. ஒரு முகாமில் மையநாடுகளான ஜெர்மனி, ஆஸ்திரிய-ஹங்கேரி இத்தாலி ஆகியன 1882 இல் மூவர் உடன்படிக்கையை மேற்கொண்டன.
3. மற்றொரு முகாமில் இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய மூவரைக் கொண்ட மூவர் கூட்டு உருவாக்கப்பட்டது.
வன்முறை சார்ந்த தேசியம்:
1. ஒரு நாட்டின் மீதான பற்று மற்றொரு நாட்டை வெறுக்கும் தேவையை ஏற்படுத்தியது.
2. இங்கிலாந்தின் ஆரவாரமான நாட்டுப்பற்று பிரான்சின் அதிதீவிரப்பற்று, ஜெர்மனியின் வெறிகொண்ட நாட்டுப்பற்று ஆகிய அனைத்தும் தீவிர தேசியமாக போர் வெடிப்பதற்கு தீர்மானமாக பங்காற்றியது.
ஜெர்மன் பேரரசின் ஆக்கிரமிப்பு மனப்பான்மை:
1. ஜெர்மன் பேரரசர் இரண்டாம் கெய்சர் வில்லியம் ஆக்கிரமிப்பு ஜெர்மனியே உலகத்தின் தலைவன் எனப் பிரகடனம் செய்தார்.
2. ஜெர்மனியின் கடற்படை விரிவுபடுத்தப்பட்டது.
3. ஜெர்மனியின் ஆக்கிரமிப்பு இயல்பு கொண்ட அரசியல் விவேகத்தையும், விரைவாகக் கட்டப்படும் கப்பற்படை தளங்களையும் கண்ணுற்ற இங்கிலாந்தும் கப்பற்படை விரிவாக்கப் போட்டியில் இறங்கியது.
4. இதனால் இரு நாடுகளுக்குமிடையே பதற்றம் மேலும் அதிகரித்தது.
பிரான்ஸ் ஜெர்மனியோடு கொண்ட பகை:
1. பிரான்சும் ஜெர்மனியும் பழைய பகைவர்களாவர்.
2. 1871 இல் ஜெர்மனியால் தோற்கடிக்கப்பட்ட பிரான்ஸ் அல்சேஸ், லொரைன் பகுதிகளை ஜெர்மனியிடம் இழக்க நேரிட்டது
3. ஜெர்மன் பேரரசர் இரண்டாம் கெய்சர் வில்லியம் மொராக்கோ சுல்தானின் சுதந்திரத்தை அங்கீகரித்ததோடு மொராக்கோவின் எதிர்காலம் குறித்து முடிவு செய்யப் பன்னாட்டு மாநாடு ஒன்றைக் கூட்டும்படி கோரினார்
பால்கன் பகுதியில் ஏகாதிபத்திய அரசியல்:
1. 1908 இல் துருக்கியில் ஒரு வலுவான, நவீன அரசை உருவாக்கும் முயற்சியாக இளம்துருக்கியர் புரட்சி நடைபெற்றது. இது ஆஸ்திரியாவுக்கும் ரஷ்யாவிற்கும் பால்கன் பகுதிகளில் தங்கள் நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கும் வாய்ப்பினை வழங்கியது.
2. ஆஸ்திரியா செர்பியாவின் மீது படையெடுக்கும்போது அதன் விளைவாக செர்பியாவிற்கு ரஷ்யா உதவுமானால் ஆஸ்திரியாவிற்கு ஆதரவாக நான் களமிறங்கும் என ஜெர்மனி அறிவித்தது.
பால்கன் போர்கள்:
1. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பாதியில் துருக்கியப் பேரரசின் உறுதியற்ற அரசியல், பொருளாதாரச் சூழலைச் சாதகமாகக் கொண்டு கிரீசும் அதனைத் தொடர்ந்து ஏனைய நாடுகளும் ஒன்றன்பின் ஒன்றாக தங்களைத் துருக்கியின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்துக் கொண்டன.
2. மாசிடோனியா பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்களைக் கொண்டிருந்தது. எனவே மாசிடோனியாவை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பால்கன் நாடுகளுக்கிடையே போட்டி நிலவியது.
3. 1912 ஆம் ஆண்டு பால்கன் கழகம் எனும் அமைப்பை உருவாக்கின. இக்கழகம் முதல் பால்கன் போரில் துருக்கியப் படைகளைத் தாக்கித் தோற்கடித்தது.
உடனடிக் காரணம்:
1. 1914 ஆம் ஆண்டு ஆஸ்திரிய இளவரசர் பிரான்ஸ் பெர்டினாண்டு, பிரின்ஸப் என்ற பாஸ்னிய செர்பியனால் கொலை செய்யப்பட்டார்.
2. ஆஸ்திரியா இதனை செர்பியாவைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்பாக எண்ணியது.
3. ஆஸ்திரியாவிற்கு ஆதரவாக ஜெர்மனி, பிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கு எதிராகப் போர் செய்ய திட்டமிட்டது.
4. பெல்ஜியத்தின் நடுநிலைமையை மதியாது அதனை ஜெர்மனி தாக்கியதால் இப்போரில் இங்கிலாந்து பங்கேற்பது கட்டாயமாயிற்று.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards