10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil நிலா முற்றம் - பாய்ச்சல் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil நிலா முற்றம் - கம்பராமாயணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil மணற்கேணி - புதிய நம்பிக்கை Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil மணற்கேணி - திருவிளையாடற்புராணம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil மணற்கேணி - மொழிபெயர்ப்புக் கல்வி Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil கூட்டாஞ்சோறு - திருக்குறள் Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 22/10/2019
HIS - இரு உலகப்போர்களுக்கு இடையில் உலகம்
10ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
முதல் உலகப்போருக்குப் பின் ________ உடன்படிக்கை ஏற்படுத்திய அரசியல் சிக்கல்கள் நிலைமையை மேலும் மோசமாக்கியது
அமைதி
வெர்செய்ல்ஸ்
பாரிஸ்
லண்டன்
2.
முதல் உலகப்போரினால் _________ நாடுகள் நிதிசார்ந்த வகையிலும், அரசியல் நீதியாகவும் வலிமைகுன்றின
ஆசிய
ஐரோப்பிய
ஆப்பிரிக்கன்
ஆஸ்திரேலியன்
3.
தென் அமெரிக்காவின் விடுதலையைத் ததுரிதப்படுத்தியது எது?
அமெரிக்கா அளித்த உதவி
நெப்போலியனின் படையெடுப்புகள்
சைமன் பொலிவரின் பங்கேற்பு
பிரெஞ்சுப் புரட்சி
4.
தென்னாப்பிரிக்காவின் இனஒதுக்கல் கொள்கையின் மூளையாகச் செயல்பட்டவர் யார்?
வெர்வோர்டு
ஸ்மட்ஸ்
ஹெர்சாக்
போதா
5.
6.
முசோலினி ________ எனும் பட்டத்தை சூட்டிக்கொண்டார்
7.
போயர்கள் ______ என்றும் அழைக்கப்பட்டனர்.
8.
______ ஒரு ராணுவ நாடாகும்
9.
தென்னாப்பிரிக்க ஒன்றியம் ______ ஆம் ஆண்டு மே மாதம் உருவானது.
10.
நாசிச கட்சியின் பிரச்சாரங்களுக்குத் தலைமையேற்றவர்______.
11.
ஜெர்மனி
12.
1929
13.
ஹின்டன்பர்க்
14.
டோங்கிங்
15.
டிரான்ஸ்வால்
16.
அஸ்டெக்குகள் - குறிப்பு தருக
17.
பாசிஸம் - குறிப்புத் தருக
18.
“டாலர் ஏகாதிபத்தியம்” – தெளிவுபட விளக்குக
19.
1884-85இல் நடைபெற்ற பெர்லின் காலனிய மாநாட்டின் சாரத்தைக் குறிப்பிடுக
20.
மன்றோ கோட்பாட்டை விளக்குக.
21.
இந்தோ-சீனாவில் நடைபெற்ற 'வெள்ளை பயங்கரம்' குறித்து நீங்கள் அறிந்ததென்ன?
22.
தென் அமெரிக்க அரசியல் நிகழ்வுப் போக்குகள்
அ) ஒட்டு மொத்த தென் அமெரிக்காவும் எந்த ஆண்டில் ஐரோப்பிய மேலாதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றது?
ஆ) மத்திய அமெரிக்காவில் எத்தனைக் குடியரசுகள் உருவாயின?
இ) எந்த ஆண்டில் கியூபா அமெரிக்காவால் கைப்பற்றப்பட்டது?
ஈ) தென் அமெரிக்காவில் குழுக்களின் ஆட்சிகள் பலராலும் விரும்பப்படாமைக்குக் காரணம் என்ன?
23.
போயர் போர்கள் பற்றி விரிவாக எழுதவும்
24.
தென் ஆப்பிரிக்க தேசிய அரசியலின் எழுச்சி, வளர்ச்சி குறித்து விவரிக்கவும்.
25.
ஜெர்மனியில் ஹிட்லரின் எழுச்சிக்கு இட்டுச்சென்ற சூழ்நிலைகளைக் கண்டறியவும்.
26.
கீழ்க்கண்ட நிகழ்வுகளைக் காலக்கோட்டில் குறிக்கவும்.
1922 - முசோலியின் ரோமாபுரி அணிவகுப்பு
1927 - வியட்நாம் தேசியக்கட்சி உதயம்
1929 - பொருளாதாரப் பெருமந்தம்
1933 - ஹிட்லர் ஜெர்மனியின் சான்சிலர் (முக்கிய அமைச்சர்) ஆதல்
1935 - முசோலினி எத்தியோப்பியாவின் மீது படையெடுத்தது
1.
(b)
வெர்செய்ல்ஸ்
2.
(b)
ஐரோப்பிய
3.
(b)
நெப்போலியனின் படையெடுப்புகள்
4.
(a)
வெர்வோர்டு
5.
(c)
6.
( )
டியூஸ்
7.
( )
ஆப்பிரிக்கனேர்கள்
8.
( )
அஸ்டெக்குகள்
9.
( )
1910
10.
( )
ஜோசப் கோயபெல்ஸ்
11.
குடியரசு ஆட்சி
12.
அமெரிக்க பங்குச் சந்தையின் வீழ்ச்சி
13.
ஜெர்மனியின் குடியரசுத் தலைவர்
14.
கொரில்லா நடவடிக்கைகள்
15.
தங்கம்
16.
அஸ்டெக்குகள் நாடு இராணுவமயமான நாடாகும். அவர்கள் இராணுவக் குடியிருப்புகளையும் கோட்டைப் பாதுகாப்புப் படைகளையும் வலைப்பின்னல் போன்ற ராணுவச் சாலைகளையும் கொண்டிருந்தனர். பேரரசில் மேலெழுந்த வாரியாய் அமைதியும், பாதுகாப்புமிருந்தாலும் மக்கள் இரக்கமின்றி ஒடுக்கப்படும் சுரண்டப்பட்டும் இன்னலுக்குள்ளாயினர்.
17.
(i) பாசிஸம் என்பது தீவிர ஆதிக்க மனப்பான்மை கொண்ட அதிதீவிர தேசியவாதத்தின் ஓர் வடிவமாகும்
(ii) சர்வாதிகார வல்லமையும் எதிர்ப்பை வன்முறை கொண்டு அடக்குவதும் சமூகத்தையும், பொருளாதாரத்தையும் வலுவான மத்திய அதிகாரத்தின் கீழ் வைத்திருப்பதும் இதன் பண்புகளாகும்
(iii) இது இருபதாம் நூற்றாண்டின் தொடக்கப்பகுதியில் ஐரோப்பாவில் முக்கியத்துவம் பெற்றது
18.
டாலர் ஏகாதிபத்தியம்: இச்சொல் தொலைதூர நாடுகளுக்குப் பொருளாதார உதவி செய்வதன் மூலம் அவற்றின் மீது ஆதிக்கம் செலுத்தவும், தக்கவைத்துக் கொள்ளவும், அமெரிக்கா பின்பற்றிய கொள்கையை விளக்குவதற்குப் பயன்படுத்தப்படுவதாகும்.
19.
1. 1884-1885 ஆண்டுகளில் நடைபெற்ற பெர்லின் காலனிய மாநாட்டில் காலனியாதிக்க சக்திகள் ஆப்பிரிக்காவைத் தங்கள் செல்வாக்கு மண்டலங்களாகப் பிரித்துக் கொள்ளலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது.
2. ஆனால் ஆங்கிலேயருக்கும் தென்னாப்பிரிக்க போயர்களுக்கும் இடையே நடைபெற்ற போர் இத்தீர்மானத்திற்கு எதிரான செயலாகும்.
20.
மன்றோவின் கோட்பாடு:
(i) அமெரிக்கக் குடியரசு தலைவர் மன்றோ தனது புகழ்பெற்ற மன்றோ கோட்பாட்டை முன் வைத்தார்.
(ii) அமெரிக்காவின் எந்த பகுதியிலும் அது வடக்கோ தெற்கோ ஐரோப்பியர்கள் தலையிட்டால் அது அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கெதிரான போராக கருதப்படும் என அறிவித்தது
(iii) இப்பயமுறுதல் ஐரோப்பியர்களை அச்சங்கொள்ள வைத்து அவர்களை தென் அமேரிக்கா விவரங்களிலிருந்து விலகியிருக்கச் செய்தது
21.
1. 1929 இல் வியட்நாம் வீரர்கள் ராணுவப் புரட்சி செய்தனர்.
2. பிரெஞ்சு கவர்னர் ஜெனரலைக் கொலை செய்வதற்கான முயற்சி தோல்வியடைந்தது.
3. இதனைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட்களின் தலைமையில் மிகப்பெரும் விவசாயிகளின் புரட்சி நடைபெற்றது.
4. இப்புரட்சி ஒடுக்கப்பட்டதைத் தொடர்ந்து "வெள்ளை பயங்கரவாதம்" (White Terror) என்பது அரங்கேறியது.
5. அதில் புரட்சியாளர்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர்.
22.
அ) 1830
ஆ) ஐந்து
இ) 1898
ஈ) தென் அமெரிக்காவில் பொருளாதாரப் பெருமந்தத்தால் உருவான சூழ்நிலையில் சிலரின் அல்லது சில குடும்பங்களின் ஆட்சியால் பல உறுதியான குழுக்களின் எதிர்ப்புகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை
23.
(i) இங்கிலாந்தின் காலனிகளான நோட்டால் கேப் காலனி ஆகிய இரண்டிற்கும் சுதந்திர போயர் நாடுகளான டிரான்ஸவால் மற்றும் ஆரஞ்சு சுதந்திர அரசு ஆகியவற்றுக்கிடையே நீண்ட காலமாக நட்புறவு நிலவவில்லை
(ii) 1886 இல் டிரான்ஸ்வால் பகுதியில் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பெரும் எண்ணிக்கையில் ஆங்கிலேயச் சுரங்கத்தொழில் சார்ந்தோர் ஜோகன்னஸ்பர்க்கிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் குடியேறினர்
(iii) இவர்களை வெறுத்த போயர்கள் இவர்களை யுட்லேண்டர்ஸ் என்றே குறிப்பிட்டனர். குடியேறியவர் மீது அதிக வரிகளை விதித்த போயர்கள் அவர்களுக்கு அரசியல் உரிமைகளையும் மறுத்தனர்
(vi) யுட்லேண்டர்ஸின் அரசியல் உரிமைகள் குறித்த பேச்சுவார்த்தைகளில் உடன்பாடுகளேதும் ஏற்படவில்லை
24.
1. தென்னாப்பிரிக்காவில் இரு முக்கிய அரசியல் கட்சிகள் செயல்பட்டன. அவை பெரும்பாலும் ஆங்கிலேயர்களைக் கொண்ட யூனியனிஸ்ட் கட்சி மற்றும் ஆப்பிரிக்கநேர்ஸ் என்றழைக்கப்பட்ட போயர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருந்த தென்னாப்பிரிக்கக் கட்சி.
2. முதல் பிரதம மந்திரியான போதா, தென்னாப்பிரிக்கக் கட்சியைச் சேர்ந்தவர். அவர் ஆங்கிலேயருடன் ஒத்துழைத்து ஆட்சியை நடத்தினார்.
3. ஆனால் தென்னாப்பிரிக்கக் கட்சியைச் சேர்ந்த போராடும் குணமிக்க ஒரு பிரிவினர் ஹெர்சாக் என்பவரின் தலைமையின் கீழ் தேசியக் கட்சி எனும் கட்சியைத் தொடங்கினர்.
4. 1920ஆம் ஆண்டுத் தேர்தலில் தேசியக் கட்சி 44 இடங்களைக் கைப்பற்றியது. தென்னாப்பிரிக்கக் கட்சி ஸ்டீட்ஸ் என்பவரின் தலைமையில் 41 இடங்களில் வெற்றி பெற்றது.
5. இத்தருவாயில் ஆங்கிலேயர்கள் அதிகமிருந்த யூனியனிஸ்ட் கட்சி தென்னாப்பிரிக்கக் கட்சியுடன் இணைந்தது.
6. இதனால் போர்க்குணம் கொண்ட ஆப்பிரிக்கநேர்களின் கட்டுப்பாட்டில் இருந்த தேசியக் கட்சியைக் காட்டிலும் ஸ்மட்ஸ் பெரும்பான்மை பெற்றார்.
25.
ஹிட்லர் ஜெர்மனியின் அதிகாரத்தைக் கைப்பற்றுதல்:
1. 1919ஆம் ஆண்டு ஏழு நபர்களைக் கொண்ட ஒரு குழுவானது ஜெர்மன் உழைப்பாளர் கட்சி எனப்படும் நாசிசக் கட்சியை உருவாக்கியது. ஹிட்லரும் அவர்களுள் ஒருவராக இருந்தார்.
2. அவர் முதல் உலகப்போரின்போது பவேரியாவின் படையில் பணியாற்றினார்.
3. 1923 இல் பவேரியாவில் அதிகாரத்தைக் கைப்பற்ற ஹிட்லர் முயற்சி மேற்கொண்டார்.
4. மியூனிச் நகரில் முன்கூட்டியே திட்டமிடப்படாமல் அவர் மேற்கொண்ட தேசியப்புரட்சி அவரைச் சிறையில் தள்ளியது.
5. சிறையில் இருந்தபோது தனது சுயசரிதை நூலான மெயின் காம்ப் (Mein Kampf - எனது போராட்டம்) எனும் நூலை எழுதினார்.
6. 1932 இல் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் தவறான வழியில் ஜெர்மனியின் அதிகாரத்தைக் கைப்பற்றினார்.
ஹிட்லரின் நாசிச ஆட்சி:
1. ஜெர்மனியில் குடியரசு ஆட்சி கவிழ்ந்ததின் விளைவாகத் தொழிலதிபர்களும், வங்கியாளர்களும் குடியாட்சிக் கட்சியினரும் ஹிட்லரை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் 1933 இல் ஹிட்லரை சான்சிலராக (முக்கிய அமைச்சர்) பதவியில் அமர்த்தும்படி குடியரசுத் தலைவர் வான் ஹின்டென்பர்க்கை வற்புறுத்தினர்.
2. மூன்றாவது ரெய்க் (குடியரசு) என்று அழைக்கப்பட்ட ஹிட்லரின் நாஜி அரசு ஜெர்மனியில் நிறுவப்பட்டிருந்த பாராளுமன்ற ஜனநாயக அரசை முடிவுக்குக் கொண்டுவந்தது.
ஹிட்லர் மேற்கொண்ட ஒடுக்குமுறை நடவடிக்கைகள்:
1. ஹிட்லர் வெய்மர் குடியரசின் கொடிக்குப் பதிலாக ஸ்வஸ்திக் சின்னம் பொறிக்கப்பட்ட தேசிய சோசியலிசக் கட்சியின் கொடியை அறிமுகம் செய்தார்.
2. நாசிச கட்சியைத் தவிர பிறகட்சிகள் அனைத்தும் சட்டத்திற்குப் புறம்பானவை என்று அறிவிக்கப்பட்டது.
3. ஹிட்லர் இளைஞர் அணியும், தொழிலாளர் அமைப்பும் நிறுவப்பட்டன.
4. தொழிற்சங்கங்கள் ஒழிக்கப்பட்டன.
5. பத்திரிகைகள், அரங்குகள், திரைப்படங்கள், வானொலி, கல்வி ஆகிய அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டன.
6. யூதர்களுக்கு எதிராக ஒடுக்குமுறைக் கொள்கை பின்பற்றப்பட்டது.
7. 1934 ஆம் ஆண்டு ஹின்டென்பர்க் மறைவிற்குப்பின் சான்சிலராக இருந்த ஹிட்லர் குடியரசுத் தலைவராகவும் ராணுவத்தின் தலைமைத் தளபதியாகவும் பொறுப்பேற்றார்.
26.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil கூட்டாஞ்சோறு - கோபல்லபுரத்து மக்கள் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil கூட்டாஞ்சோறு - காசிக்காண்டம் Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil கூட்டாஞ்சோறு - விருந்து போற்றுதும்! Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil உயிரின் ஓசை - கேட்கிறதா என் குரல்! Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards