10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 05/09/2019
இந்தியா - அமைவிடம், நிலத்தோற்றம் மற்றும் வடிகாலமைப்பு
10ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
பழவேற்காடு ஏரி _______மாநிலங்களுக்கிடையே அமைந்துள்ளது.
மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசா
கர்நாடகா மற்றும் கேரளா
ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசம்
தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம்
2.
பழைய வண்டல் படிவுகளால் உருவான சமவெளி_____.
பாபர்
தராய்
பாங்கர்
காதர்
3.
தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம்______ .
ஊட்டி
கொடைக்கானல்
ஆனைமுடி
ஜின்டா கடா
4.
இந்தியாவின் தென்கோடி முனை _____.
அந்தமான்
கன்னியாகுமரி
இந்திராமுனை
காவரட்தி
5.
இந்தியாவின் வடக்கு தெற்கு பரவல்.
2500 கி.மீ
2933 கி.மீ
3214 கி.மீ
2814 கி.மீ
6.
கோதாவரி ஆறு விருத்தகங்கா என அழைக்கப்படுகிறது.
7.
வடக்கு கிழக்கு மாநிலங்கள் “ஏழு சகோதரிகள்” என அழைக்கப்படுகின்றன
8.
இந்திய பெரும் பாலைவனம் மருஸ்தலி என்று அழைக்கப்படுகிறது.
9.
மேற்கு கடற்கரைச் சமவெளி மற்றும் கிழக்கு கடற்கரைச் சமவெளி.
10.
இமாத்ரி மற்றும் இமாச்சல்
11.
இமயமலை ஆறுகள் மற்றும் தீபகற்ப ஆறுகள்
12.
இலட்சத் தீவுக் கூட்டங்கள் பற்றி விவரி
13.
14.
இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களைக் கூறுக
15.
கங்கை ஆற்று வடிநிலம் குறித்து விரிவாக எழுதுக.
16.
இமயமலையின் உட்பிரிவுகளையும், இந்தியாவிற்கு அதன் முக்கியத்துவம் பற்றியும் விவரி.
1.
(d)
தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசம்
2.
(c)
பாங்கர்
3.
(c)
ஆனைமுடி
4.
(b)
கன்னியாகுமரி
5.
(c)
3214 கி.மீ
6.
காரணம்: தீபகற்ப இந்தியாவில் பாயும் மிக நீளமான ஆறு என்பதாலும் 3.13 இலட்சம் சதுர கி.மீ பரப்பளவு வடிநிலத்தைக் கொண்டுள்ளதாலும் மிகப்பெரிய டெல்டாவை உருவாக்கியுள்ளதாலும் கோதாவரி ஆறு விருத்தகங்கா என அழைக்கப்படுகிறது.
7.
காரணம்: இந்தியாவின் வடகிழக்கிலுள்ள ஏழு மாநிலங்களும் ஒரே மாதிரியான புவி தோற்றத்தைக் கொண்டுள்ளதாலும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் அமைப்புகளில் ஒன்றையொன்று சார்ந்து காணப்படுவதாலும் அவை ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படுகின்றன.
8.
காரணம்: மருஸ்தலி என்ற சொல்லிற்கு "இறந்த நிலம்" (Land of Dead) என்று பொருள். இப்பாலைவனத்தின் கிழக்குப்பகுதியில் மணல் மேடுகள் நிறைந்துள்ளன. எனவே இப்பாலைவனம் மருஸ்தலி என்று அழைக்கப்படுகிறது.
9.
| மேற்கு கடற்கரைச் சமவெளி | கிழக்கு கடற்கரைச் சமவெளி | |
| 1 | மேற்கு கடற்கரைச் சமவெளி மேற்கு தொடர்ச்சி மலைக்கும் அரபிக் கடலுக்கும் இடையே அமைந்துள்ளது | கிழக்கு கடற்கரைச் சமவெளி கிழக்கு தொடர்ச்சி மலைக்கும் வங்காள விரிகுடாவிற்கும் இடையே அமைந்துள்ளது. |
| 2 | இச்சமவெளி ரான் ஆப் கட்ச் முதல் கன்னியாகுமரி வரை பரவியுள்ளது. | இச்சமவெளி மேற்கு வங்கம் முதல் கன்னியாகுமரி வரை பரவியுள்ளது. |
| 3 | இச்சமவெளியில் கொங்கண் கடற்கரை, கனரா கடற்கரை மற்றும் மலபார் கடற்கரை அமைந்துள்ளது. | இச்சமவெளியில் வடசர்க்கார் மற்றும் சோழ மண்டல கடற்கரை அமைந்துள்ளது. |
| 4 | வேம்பநாடு ஏரி இப்பகுதியில் உள்ள முக்கியமான ஏரியாகும். | சிலிகா ஏரி, கொல்லேறு ஏரி, பழவேற்காடு ஏரி ஆகியவை முக்கியமான ஏரிகளாகும். |
10.
| இமாத்ரி | இமாச்சல் | |
| 1 | இமாத்ரி பெரிய இமயமலை என்றும் அழைக்கப்படுகிறது | இமாச்சல் சிறிய இமயமலை என்றும் அழைக்கப்படுகிறது. |
| 2 | இதன் சராசரி உயரம் 6000 மீ ஆகும். | இதன் சராசரி உயரம் 3500 மீ முதல் 4500 வரை வேறுபடுகிறது. |
| 3 | இதன் சராசரி அகலம் 25 கி.மீ ஆகும். | இதன் சராசரி அகலம் 80 கி.மீ ஆகும். |
| 4 | இம்மலையில் மிக உயர்ந்த சிகரங்கள் காணப்படுகின்றன. எ.கா. எவரெஸ்ட் சிகரம், கஞ்சன் ஜுங்கா |
இம்மலையில் கோடை வாழிடங்கள் காணப்படுகின்றன. எ.கா. சிம்லா, நைனிட்டால், டார்ஜ்லிங். |
11.
| இமயமலை ஆறுகள் | தீபகற்ப ஆறுகள் | |
| 1 | ஆற்றின் மத்திய மற்றும் கீழ்நிலைப் பகுதிகள் போக்குவரத்திற்கு ஏற்றது. | நீர்வழிப் போக்குவரத்திற்குப் பயன்படாதவை. |
| 2 | இமயமலையில் உற்பத்தி ஆகின்றன. | மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தி ஆகின்றன. |
| 3 | இவை வற்றாத நதிகள் ஆகும். | இவை வற்றும் நதிகள் ஆகும். |
| 4 | இவை நீளமானவை மற்றும் அகலமானவை. | இவை குறுகலானவை மற்றும் நீளம் குறைந்தவை |
| 5 | மின்உற்பத்தி செய்ய இயலாத நிலை | நீர்மின் உற்பத்திக்கு ஏற்றது. |
12.
இலட்சத் தீவுகள்:
1. 27 தீவுகளைக் கொண்ட இலட்சத் தீவுகள் அரபிக்கடலில் அமைந்துள்ளன.
2. இலட்சத் தீவுகள் பவளப் பாறைகளால் உருவானவை ஆகும்.
3. இத்தீவுகள் சுமார் 32 ச.கி.மீ பரப்பளவைக் கொண்டதாகும்.
4. இங்குள்ள மனிதர்கள் வசிக்காத பிட்டி தீவு பறவைகள் சரணாலயத்திற்குப் பெயர் பெற்றது ஆகும்.
5. 1973ஆம் ஆண்டு முதல் இலட்சத்தீவு, மினிக்காய் தீவு மற்றும் அமினித் தீவு அனைத்தும் இலட்சத் தீவுகள் என அழைக்கப்படுகின்றன.
6. இதன் நிர்வாகத் தலைநகரம் கவராத்தி ஆகும்.
13.
14.
இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்கள்:
மேற்கு : பாகிஸ்தான்,
வடமேற்கு : ஆப்கானிஸ்தான்,
வடக்கு : சீனா, நேபாளம், பூடான்
கிழக்கு : மியான்மர், வங்காளதேசம்
15.
கங்கை ஆற்று வடிநிலம்:
1. கங்கையாற்றின் தொகுப்பு 8,61,404 ச.கி.மீ பரப்பளவில் பாயும் இந்தியாவின் மிகப்பெரிய வடிகால் அமைப்பைக் கொண்டதாகும்.
2. கங்கைச் சமவெளியில் பல நகரங்கள் ஆற்றங்கரையையொட்டி அமைந்துள்ளன.
3. கங்கைச் சமவெளி அதிக மக்களடர்த்தி கொண்டதாகும்.
4. கங்கை ஆறு உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள கங்கோத்ரி பனியாற்றிலிருந்து பாகிரதி என்னும் பெயருடன் உற்பத்தியாகிறது.
5. இந்நதியின் நீளம் சுமார் 2525 கி.மீ ஆகும்.
6. வடபகுதியிலிருந்து கோமதி, காக்ரா, கண்டாக், கோசி மற்றும் தென்பகுதியிலிருந்து யமுனை, சோன், சாம்பல் போன்ற துணையாறுகள் கங்கையுடன் இணைகின்றன.
7. வங்கதேசத்தில், கங்கை நதி பத்மா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
8. கங்கை மற்றும் பிரம்மபுத்திரா ஆறுகள் சேர்ந்து உலகிலேயே மிகப்பெரிய டெல்டாவை உருவாக்கி பின் வங்காள விரிகுடாவில் கலக்கின்றன.
16.
இந்தியாவின் பெரும் அரணாக உள்ள இமயமலையை மூன்று பெரும் உட்பிரிவுகளாக பிரிக்கலாம்.
1) ட்ரான்ஸ் இமயமலைகள் (மேற்கு இமய மலைகள்)
2) இமயமலைகள் (மத்திய இமயமலைகள்)
3) பூர்வாஞ்சல் குன்றுகள் (கிழக்கு இமய மலைகள்)
i. ட்ரான்ஸ் இமயமலை:
1. இம்மலைகள் மேற்கு இமயமலைகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
2. இவை ஜம்மு - காஷ்மீர் மற்றும் திபெத் பீடபூமியில் அமைந்துள்ளது.
3. இதன் பரப்பளவு திபெத்தில் அதிகமாக இருப்பதால் இவை திபெத்திய பீடபூமி என்றும் அழைக்கப்படுகின்றன.
4. சாஸ்கர், லடாக், கைலாஸ் மற்றும் காரகோரம் ஆகியவை இங்குள்ள முக்கியமான மலைத்தொடர்கள் ஆகும்.
ii. இமயமலை:
இமயமலைகள் இளம் மடிப்பு மலைகள். இது மூன்று உட்பிரிவுகளைக் கொண்டது.
i) உள் இமயமலைகள் / இமாத்ரி:
1. முக்கியமான சிகரங்களான எவரெஸ்ட், கஞ்சன்ஜங்கா ஆகியவை இங்கு அமைந்துள்ளன.
2. இவை நிரந்தர பனியால் சூழப்பட்டுள்ளதால் இங்கு பனியாறுகள் காணப்படுகின்றன.
ii) மத்திய இமயமலை / இமாச்சல்:
1. இது இமயமலையின் மத்தியத் தொடராகும்.
2. இத்தொடரில் வெண்கற்பாறைகள், சுண்ணாம்புப்பாறைகள் மற்றும் மணற்பாறைகள் காணப்படுகின்றன.
3. சிம்லா, முசௌரி, நைனிட்டால், அல்மோரா மற்றும் டார்ஜிலிங் போன்ற மலைவாழிடங்கள் இங்கு அமைந்துள்ளன.
iii) வெளி இமயமலை / சிவாலிக்:
1. இது மிகவும் தொடர்ச்சியற்ற மலைத்தொடராகும்.
2. இப்பகுதிகள் குடியிருப்பு வளர்ச்சிக்கு ஏற்றது.
iii. கிழக்கு இமயமலை அல்லது பூர்வாஞ்சல்:
1. இவை இமய மலையின் கிழக்குக் கிளையாகும்.
2. இது வடகிழக்கு மாநிலங்களில் பரவியுள்ளது. பெரும்பாலான குன்றுகள் இந்திய-மியான்மர் எல்லையிலும் மற்றவை இந்தியாவின் உட்பகுதியிலும் காணப்படுகின்றன.
இமயமலையின் முக்கியத்துவம்:
1. தென்மேற்கு பருவக்காற்றைத் தடுத்து வட இந்தியப் பகுதிக்கு கனமழையைக் கொடுக்கிறது.
2. இந்திய துணைக் கண்டத்திற்கு இயற்கை அரணாக அமைந்துள்ளது.
3. வற்றாத நதிகளின் பிறப்பிடமாக உள்ளது.
4. இயற்கை அழகின் காரணமாக வடக்கு மலைகள் சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமாகத் திகழ்கிறது.
5. பல கோடை வாழிடங்களும், புனிதத் தலங்களான அமர்நாத், கேதர்நாத், பத்ரிநாத் மற்றும் வைஷ்ணவி தேவி கோயில்களும் இம்மலைத் தொடரில் அமைந்துள்ளன.
6. வனப்பொருட்கள் சார்ந்த தொழிலகங்களுக்கு மூலப்பொருட்களை அளிக்கிறது.
7. மத்திய ஆசியாவிலிருந்து வீசும் கடும் குளிர் காற்றைத் தடுத்து இந்தியாவை குளிரிலிருந்து பாதுகாக்கிறது.
8. இமயமலைகள் பல்லுயிர் மண்டலத்திற்கு பெயர் பெற்றவை ஆகும்.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards