10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 06/09/2019
இந்தியா – மக்கள் தொகை, போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் வணிகம்
10ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
கீழ்க்கண்டவற்றில் எவை வானுலங்கு ஊர்தியுடன்(ஹெலிகாப்டர்) தொடர்புடையது?
ஏர் இந்தியா
இந்தியன் ஏர்லைன்ஸ்
வாயுதூத்
பவன்ஹான்ஸ்
2.
தேசிய தொலையுணர்வு மையம் அமைந்துள்ள இடம்_______.
பெங்களூரு
சென்னை
புது டெல்லி
ஹைதராபாத்
3.
4.
பன்னாட்டு வணிகம் – வரையறு.
5.
தகவல் தொடர்பு என்றால் என்ன? அதன் வகைகள் யாவை?
6.
நம் நாட்டின் குழாய் போக்குவரத்து அமைப்பு பற்றி ஒரு குறிப்பு எழுதுக.
7.
நீர்வழிப் போக்குவரத்து மற்றும் வான்வழிப் போக்குவரத்து
8.
அச்சு ஊடகம் மற்றும் மின்னணு ஊடகம்
9.
மக்களடர்த்தி மற்றும் மக்கட்தொகை வளர்ச்சி
10.
இந்தியாவின் சாலைகளை வகைப்படுத்தி விளக்குக.
11.
மக்களடர்த்தி மிகுந்த இந்திய மாநிலங்கள்.
1.
(d)
பவன்ஹான்ஸ்
2.
(d)
ஹைதராபாத்
3.
(b)
4.
பன்னாட்டு வணிகம்:
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளுக்கிடையே நடைபெறும் வணிகம், பன்னாட்டு வணிகம் அல்லது அயல்நாட்டு வணிகம் என அழைக்கப்படுகிறது.
கூறுகள்:
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகியவை பன்னாட்டு வணிகத்தின் இரு கூறுகள் ஆகும்.
வணிகச் சமநிலை:
ஒரு நாட்டின் ஏற்றுமதி மதிப்பிற்கும், இறக்குமதி மதிப்பிற்கும் இடையேயுள்ள வேறுபாடு வணிகச் சமநிலை எனப்படும்.
5.
தகவல் தொடர்பு:
தகவல்கள், எண்ணங்கள் மற்றும் கருத்துகளின் பரிமாற்றத்தையே தகவல் தொடர்பு என்கிறோம். தகவல் தொடர்புத் துறையில், தொழில்நுட்பம் வியக்கத்தக்க வகையில் உள்ளது.
வகைகள்:
i. பொதுத்தகவல் தொடர்பு
ii. தனிமனித தகவல் தொடர்பு
6.
1. எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வயல்களையும், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களையும், அதன் சந்தை பகுதிகளோடு இணைப்பதற்கு, எளிதான மற்றும் சிறந்த போக்குவரத்தாக குழாய் போக்குவரத்து செயல்பட்டு வருகிறது.
2. முன்னதாக இவை நகரங்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் தண்ணீர் வழங்குவதற்கு பயன்படுத்தப்பட்டது.
3. தற்பொழுது திடப்பொருள்களும் குழம்பாக்குதல் மூலம் குழாய் வழியே கொண்டு செல்லப்படுகிறது.
4. குழாய் போக்குவரத்து அமைப்பதற்கு ஆரம்பகால செலவுகள் அதிகம். ஆனால் இதனை பராமரிப்பதற்கான செலவு மிகவும் குறைவு.
5. இவற்றை கடினமான நிலப்பகுதிகளிலும், நீருக்கு அடியிலும் அமைக்க இயலும். இது தடங்கலற்ற, குறைந்த செலவுடைய, காலதாமதமற்ற மற்றும் ஆவியாதலற்ற போக்குவரத்து ஆகும்.
7.
| நீர்வழிப் போக்குவரத்து | வான்வழிப் போக்குவரத்து | |
| 1 | நீர்வழிப் போக்குவரத்து பழமையான மற்றும் மலிவான ஒரு போக்குவரத்து ஆகும் | வான்வழிப் போக்குவரத்து நவீன வசதியான மற்றும் செலவு மிகுந்த ஒரு போக்குவரத்தாகும். |
| 2 | நீர் நிலைகளில் மட்டும் இப்போக்குவரத்து நடைபெறும். | இது உயர்ந்த மலைகள், பாலைவனங்கள் மற்றும் அடர்ந்த காடுகளையும் எளிதில் கடந்து செல்ல உதவுகிறது. |
| 3 | கனமான மற்றும் அதிகளவிலான சரக்குகளை ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு எடுத்துச் செல்ல உதவுகிறது. | இது பயணிகள், அஞ்சல்கள் மற்றும் குறைந்த எடையுள்ள சரக்குகளை கொண்டு செல்ல ஏற்றது. |
| 4 | எரிபொருள், செலவினம் குறைவு | எரிபொருள் செலவினம் அதிகம். |
| 5 | சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது. | சுற்றுச்சூழலை மாசுபடுத்தும். |
8.
| அச்சு ஊடகம் | மின்னணு ஊடகம் | |
| 1 | எல்லோராலும் பயன்படுத்தப்படும் செய்தித்தாள்கள் ஒரு சக்தி வாய்ந்த அச்சு ஊடகமாகும். மேலும் இது ஒரு தகவல் தொடர்பு சாதனமாகும். |
வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையம் ஆகியன மின்னணு ஊடகங்களாகும். |
| 2 | அச்சு ஊடகம் இந்தியாவில் உள்ளூர், தேசிய மற்றும் சர்வதேச அளவில் செய்திகளை அளிக்கக் கூடிய பல செய்தித்தாள்கள் உள்ளன. |
இது கல்வி, செய்திகள், மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகிறது. |
9.
| மக்களடர்த்தி வளர்ச்சி | மக்கட்தொகை வளர்ச்சி |
| மக்களடர்த்தி என்பது சராசரியாக ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கையைக் குறிப்பிடுகிறது. | மக்கள் - தொகை வளர்ச்சி என்பது ஒரு குறிப்பிட்ட காலப் பகுதியில் ஒரு நாட்டின் மக்கள் தொகை எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றத்தை குறிப்பிடுகிறது. |
| இது சராசரியாக ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பளவில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கையைக் குறிக்கிறது. |
மக்கள் தொகை வளர்ச்சி சதவீதத்தில் குறிப்பிடப்படுகிறது. |
| மக்களடர்த்தி, நிலத்தோற்றம், காலநிலை, இயற்கைத்தாவரம், மதம், கலாச்சாரம், பொருளாதாரம், போக்குவரத்து, வேலைவாய்ப்புகள் போன்ற பௌதிக மற்றும் சமூகக் காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது. |
பிறப்பு விகிதம், இறப்பு விகிதம் மற்றும் புலம் பெயர்தல் ஆகியவை மக்கள் தொகை வளர்ச்சியைத் தீர்மானிக்கிறது. |
| இந்தியாவில் மக்களடர்த்தி மிகுந்த மாநிலம் பீகார் ஆகும். | இந்தியாவில் மக்கள் தொகை மிகுந்த மாநிலம் உத்திரப்பிரதேசம் ஆகும். |
10.
சாலைகளின் வகைகள்:
1. தேசிய நெடுஞ்சாலைகள்
2. மாநில நெடுஞ்சாலைகள்
3. மாவட்டச் சாலைகள்
4. கிராமச் சாலைகள்
5. எல்லைப்புறச் சாலைகள்
6. தங்க நாற்கரச் சாலைகள்
தேசிய நெடுஞ்சாலைகள்
1. தேசிய நெடுஞ்சாலைகள் இந்திய சாலைப் போக்குவரத்தின் மிக முக்கிய அமைப்பாகும். இது நாட்டின் எல்லைகள், மாநிலத் தலைநகரங்கள், முக்கியத் துறைமுகங்கள் இரயில் நிலையங்கள், முக்கிய சுற்றுலா மையங்கள் ஆகியவற்றை இணைக்கின்றன.
2. இச்சாலைகளை மேம்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் இந்திய அரசின் தரைவழி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் பொறுப்பாகும்.
3. இந்தியாவில் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை NH4 ஆகும். இது உத்திரப் பிரதேசத்தில் உள்ள வாரணாசியிலிருந்து தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி வரை 2369 கி.மீ நீளத்தைக் கொண்டதாகும்.
4. குறைவான நீளமுடைய தேசிய நெடுஞ்சாலை NH47 A ஆகும். இது எர்ணாகுளத்திலிருந்து 6 கி.மீ தொலைவைக் கொண்ட கொச்சின் துறைமுகத்தை இணைக்கிறது.
மாநில நெடுஞ்சாலைகள்:
1. மாநில நெடுஞ்சாலைகள் பொதுவாக மாநிலத்திலுள்ள முக்கிய மாநகரங்கள், நகரங்கள் மற்றும் மாவட்டத் தலைநகரங்களை, மாநில தலை நகரத்துடனும் தேசிய நெடுஞ்சாலைகளுடனும், அண்டை மாநில நெடுஞ்சாலைகளுடனும் இணைக்கின்றன.
2. இந்த மாநில நெடுஞ்சாலைகள் மாநில பொதுப்பணித்துறையினால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.
மாவட்டச் சாலைகள்:
1. மாவட்ட சாலைகளானது மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளுடன் மாவட்ட மற்றும் வட்டார தலைமை இடங்களை இணைக்கிறது.
2. மாவட்ட சாலைகள் மாநிலத்தின் பொதுப்பணித்துறையால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.
கிராமச்சாலைகள்:
1. கிராமச் சாலைகள் கிராமப்புறங்களை இணைப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன.
2. இவை பல்வேறு கிராமங்களை அருகில் உள்ள நகரங்களுடன் இணைக்கின்றன. இவைகளை கிராமப் பஞ்சாயத்துக்கள் பராமரிக்கின்றன.
எல்லைப்புறச்சாலைகள்:
1. எல்லைப்புறச் சாலைகள் நாட்டின் எல்லைகளில் அமைந்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த சாலைகளாகும்.
2. இவைகள் எல்லைப்புற சாலைகள் நிறுவனத்தால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன.
3. இவ்வமைப்பு 1960இல் நிறுவப்பட்டது.
4. இச்சாலைகள் வடக்கு மற்றும் வடகிழக்கு எல்லைப் பகுதிகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.
5. எல்லைப்புறச் சாலை நிறுவனத்தால் உலகிலேயே உயரமான (4270 மீ) எல்லைப்புற சாலை லடாக்கிலுள்ள லேவிலிருந்து சண்டிகர் வரை அமைக்கப்பட்டுள்ளது.
தங்க நாற்கரச்சாலை:
5846 கி.மீ நீளத்தையும் 4 முதல் 6 வழிகளைக் கொண்டதாகவும் உள்ளது. இது வடக்கு தெற்காக இந்தியாவின் நான்கு பெரு நகரங்களான புதுடெல்லி-கொல்கத்தா-சென்னை-மும்பை-புதுடெல்லி ஆகியவைகளை இணைக்கிறது. இத்திட்டம் 1999 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
வட -தென் மற்றும் கிழக்கு-மேற்கு பகுதிகளை இணைக்கும் சாலைகள் :
வடதென் பகுதி இணைக்கும் சாலைகளின் நோக்கம் ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரையும் கன்னியாகுமரியையும் இணைப்பதாகும்
கிழக்கு மேற்கு பகுதி இணைக்கும் வகையில் குஜராத் போர்பந்தரையும் அசாம் மாநிலத்தில் சில்சரையும் இணைப்பதாகும்.
விரைவுச் சாலை :
நன்கு மேம்படுத்தப்பட்ட தரமான பல்வழிப் பாதைகளை கொண்ட அதிவேக போக்குவரத்திற்கான சாலைகள் ஆகும்.
எ.கா: மும்பை - பூனா விரைவுச்சாலை
பன்னாட்டு நெடுஞ்சாலை:
இந்தியா தனது அண்டை நாடுகளுடன் இணக்கமான உறவை மேம்படுத்தும் நோக்கத்துடன் இணைக்கப்பட்டுள்ளன சாலை பன்னாட்டு நெடுஞ்சாலைகள் ஆகும்.
11.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards