10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 14/09/2019
சமூக அறிவியல் காலாண்டு
10ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
_________ அதிவிரைவு வண்டி இந்தியாவின் மிக அதிகவேக இரயில்வண்டி ஆகும்.
சதாப்தி
ராஜ்தானி
காத்திமண்
சார்மினார்
2.
______ காடுகள் நறுமண திரவியங்கள், வார்னிஷ், சந்தன எண்ணெய் மற்றும் வாசனை திரவியங்களை அளிக்கின்றன.
அயன மண்டல இலையுதிர் காடுகள்
அயன மண்டல பசுமை மாறாக் காடுகள்
முட்புதர்க் காடுகள்
மலைக் காடுகள்
3.
மனித உரிமைகள் தினம் _______ ல் கொண்டாடப்படுகிறது
டிசம்பர் 10
நவம்பர் 10
ஜனவரி 10
ஏப்ரல் 10
4.
முதல் உலகப்போருக்குப் பின் ________ உடன்படிக்கை ஏற்படுத்திய அரசியல் சிக்கல்கள் நிலைமையை மேலும் மோசமாக்கியது
அமைதி
வெர்செய்ல்ஸ்
பாரிஸ்
லண்டன்
5.
துணை குடியரசுத் தலைவரின் பதவிக்காலம் _________ ஆண்டுகள்.
6
4
3
5
6.
உலக வர்த்தக அமைப்பின் தலைமையிடம் _______
ஜெனிவா
டார்க்குவே
டோக்கியோ
ஆஸ்திரேலியா
7.
உலக வர்த்தக அமைப்பின் (WTO) தலைவர் யார்?
அமைச்சரவை
தலைமை இயக்குநர்
துணை தலைமை இயக்குநர்
இவற்றில் எதுவுமில்லை
8.
GDP யில் எந்த துறை மூலம் அதிகமான வேலைவாய்ப்பு ஏற்படுகிறது?
வேளாண் துறை
தொழில்துறை
பணிகள் துறை
மேற்கண்ட எதுவுமில்லை
9.
ஆங்கிலோ - இந்தியன் வகுப்பினரிலிருந்து ஒரு பிரதிநிதியை சட்டமன்றத்திற்கு யார் நியமிக்கிறார்?
குடியரசுத் தலைவர்
ஆளுநர்
முதலமைச்சர்
சட்டமன்ற சபாநாயகர்
10.
லோக்சபா தேர்தலில் போட்டியிட தேவையான குறைந்தபட்ச வயது ______.
18 வயது
21 வயது
25 வயது
30 வயது
11.
யாருடைய பணியும் இயக்கமும், 1856ஆம் ஆண்டு விதவை மறுமண சீர்திருத்தச் சட்டம் இயற்றப்படுவதற்கு வழிகோலியது?
ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்
ராஜா ராம்மோகன் ராய்
அன்னிபெசன்ட்
ஜோதிபா புலே
12.
இந்திய அரசியலமைப்பின் எந்த பிரிவில் அரசியலமைப்பு திருத்தம் நடைமுறை குறித்து தரப்பட்டுள்ளது?
சட்டப்பிரிவு 352
சட்டப்பிரிவு 356
சட்டப்பிரிவு 360
சட்டப்பிரிவு 368
13.
தென் அமெரிக்காவின் விடுதலையைத் ததுரிதப்படுத்தியது எது?
அமெரிக்கா அளித்த உதவி
நெப்போலியனின் படையெடுப்புகள்
சைமன் பொலிவரின் பங்கேற்பு
பிரெஞ்சுப் புரட்சி
14.
பின்லாந்தைத் தாக்கியதற்காக பன்னாட்டுச் சங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட நாடு எது?
ஜெர்மனி
ரஷ்யா
இத்தாலி
பிரான்ஸ்
15.
வைகுண்ட சுவாமிகள் எதனை விமர்சனம் செய்தார்?
16.
இந்திய சாலைகளின் வகைகளை எழுதுக.
17.
தொழிற்சாலைகள் என்றால் என்ன? அதன் வகைகளை விவரி.
18.
உயிர்கோள பெட்டகம் அல்லது காப்பகங்கள் என்றால் என்ன?
19.
மத்திய அமெரிக்காவின் ஐந்து குடியரசு நாடுகள் யாவை?
20.
மொத்த உள்நாட்டு உற்பத்தி என்றால் என்ன?
21.
சாலைப் போக்குவரத்தின் சாதக அம்சங்களை குறிப்பிடுக
22.
'ஜெட் காற்றோட்டங்கள்’ என்றால் என்ன?
23.
ஒட்டாவா பொருளாதார உச்சி மாநாட்டின் முக்கியத்துவம் குறித்து விவாதிக்கவும்.
24.
ரஷ்யப் புரட்சியின் உலகளாவியத் தாக்கத்தினைக் கோடிட்டுக் காட்டுக.
25.
பெர்லின் சுவர் வீழ்ச்சியும் பனிப்போர் கால முடிவும்
அ) மேற்கு பெர்லின் பொருளாதாரம் எவ்வாறு செழித்தோங்கியது?
ஆ) கிழக்கு பெர்லின் மக்கள் ஏன் மேற்கு பெர்லினுக்கு நகர்ந்து செல்ல முயன்றனர்?
இ) 1961ல் கிழக்கு ஜெர்மனி ஏன் சுவரை எழுப்பியது?
ஈ) பெர்லின் சுவரின் முக்கியத்துவம் யாது?
26.
பால்கன் போர்கள்
அ) பால்கன் கழகம் ஏன் உருவாக்கப்பட்டது?
ஆ) முதல் பால்கன் போரின் விளைவுகள் யாவை?
இ) இப்போரில் தோற்கடிக்கப்பட்டவர்கள் யாவர்?
ஈ) இரண்டாவது பால்கன் போரின் இறுதியில் கையெழுத்திடப்பட்ட உடன்படிக்கையின் பெயரென்ன?
27.
சீனப்புரட்சி பற்றி விரிவாக எழுது
28.
பன்னாட்டு நிதியமைப்பு (International Monetary Fund) பற்றி விவரிக்கவும்
29.
மத்திய அமைச்சர்களின் வகைகள் பற்றி விரிவாக எழுதவும்.
30.
அமைதி உடன்படிக்கை பற்றிய விமர்சனம் பற்றி [ஏதேனும் ஐந்து] எழுதவும்
31.
2018இல் இந்தியாவின் மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனங்கள் எவை?
32.
அமைச்சரவையின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை ஆய்க.
33.
கங்கை ஆற்று வடிநிலம் குறித்து விரிவாக எழுதுக.
34.
அடிப்படை உரிமைகளுக்கும், அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகளுக்கும் இடையேயான வேறுபாடுகளைக் குறிப்பிடுக.
35.
36.
பன்னாட்டுச் சங்கத்தின் பணிகளை மதிப்பிடுக.
1.
(c)
காத்திமண்
2.
(a)
அயன மண்டல இலையுதிர் காடுகள்
3.
(d)
ஏப்ரல் 10
4.
(b)
வெர்செய்ல்ஸ்
5.
(d)
5
6.
(a)
ஜெனிவா
7.
(b)
தலைமை இயக்குநர்
8.
(c)
பணிகள் துறை
9.
(b)
ஆளுநர்
10.
(c)
25 வயது
11.
(a)
ஈஸ்வர் சந்திர வித்யாசாகர்
12.
(d)
சட்டப்பிரிவு 368
13.
(b)
நெப்போலியனின் படையெடுப்புகள்
14.
(b)
ரஷ்யா
15.
வைகுண்ட சுவாமிகள் ஆங்கில ஆட்சியையும் திருவிதாங்கூர் அரசரின் ஆட்சியையும் முறையே வெள்ளைப்பிசாசுகளின் ஆட்சியென்றும் கருப்புப் பிசாசுகளின் ஆட்சியென்றும் விமர்சித்தார்
16.
1) தேசிய நெடுஞ்சாலைகள் (NH)
2) மாநில நெடுஞ்சாலைகள்
3) மாவட்டச் சாலைகள்
4) ஊரகப்பகுதி சாலைகள்
5) எல்லைப்புறச் சாலைகள்
6) பன்னாட்டு நெடுஞ்சாலைகள்
17.
மூலப்பொருட்கள் இயந்திரங்களின் மூலம் உற்பத்தி பொருட்களாக மாற்றப்படும் இடங்கள் தொழிலகங்கள் என்று பெயர்.
மூலப்பொருட்களின் ஆதாரங்களின் அடிப்படையில் தொழிலகங்கள் மூன்று வகையாக வகைப்படுத்தப்படுகிறது.
1) வேளாண் சார்ந்த தொழிலகங்கள்
2) காடுகள் சார்ந்த தொழிலகங்கள்
3) கனிமம் சார்ந்த தொழிலகங்கள்
18.
உயிர்கோள பெட்டகம் என்பது நிலம் மற்றும் கடலோர சுற்றுச் சூழலைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட ஒன்று மக்கள் இவற்றின் ஒருங்கிணைந்த அங்கமாகும். இந்திய அரசாங்கம் 18 உயிர்கோள காப்பகங்களை ஏற்படுத்தியுள்ளது.
19.
மத்திய அமெரிக்காவை ஐந்து குடியரசுகளாகப் (கோஸ்டாரிக்கா, எல் சால்வடார், கவுதமாலா, ஹாண்டுராஸ், நிகராகுவா) பிரிந்தது
20.
ஒரு ஆண்டில் நாட்டின் புவியியல் எல்லைக்குள் உள்ள உற்பத்தி காரணிகளினால் உற்பத்தி செய்யப்பட்ட வெளியீடுகளின் (பண்டங்கள் + பணிகளின்) மொத்த மதிப்பே மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகும்.
21.
சாலைப் போக்குவரத்தின் சாதக அம்சங்கள்:
1. சாலைவழி, குறுகிய மற்றும் நீண்ட தூரத்திற்கு பயணிகள் மற்றும் சரக்குகளைக் கொண்டு செல்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
2. இது குறுகிய, மத்திய மற்றும் தொலைதூர சேவைகளுக்கு மிகவும் ஏற்றது.
3. இது குறுகிய தூர பயணத்திற்கு மிகவும் உகந்தது ஆகும்.
4. சாலைகளை அமைப்பது மற்றும் பராமரிப்பு செய்வது மற்ற போக்குவரத்து முறைகளை ஒப்பிடும் பொழுது மலிவானதாகும்.
5. சாலைப் போக்குவரத்து அமைப்பு மூலம் பண்ணைகள், தொழிற்சாலைகள் மற்றும் சந்தைகள் ஆகியவற்றிற்கு இடையில் எளிதில் தொடர்பு ஏற்படுகிறது.
6. இது சமுதாயத்தின் அனைத்துப் பிரிவு மக்களாலும் பயன்படுத்தக்கூடிய மலிவான போக்குவரத்து ஆகும்.
22.
1.வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் குறுகிய பகுதிகளில் வேகமாக நகரும் காற்றுகள் "ஜெட் காற்றுகள்" எனப்படும்.
2. ஜெட் காற்றோட்ட கோட்பாட்டின் படி, உப அயன மேலை காற்றோட்டம் வடபெரும் சமவெளிகளிலிருந்து திபெத்திய பீடபூமியை நோக்கி இடம் பெயர்வதால் தென்மேற்குப் பருவக்காற்று உருவாகின்றது.
3. கீழை ஜெட் காற்றோட்டங்கள் தென்மேற்கு மற்றும் பின்னடையும் பருவக்காற்றுக் காலங்களில் வெப்ப மண்டல தாழ்வழுத்தங்களை உருவாக்குகின்றன.
23.
1. இங்கிலாந்து பொருளாதாரப் பெருமந்தத்தின் தீய விளைவுகளைத் தனது காலனி நாடுகளின் தோள்களுக்கு மாற்றியது.
2. இங்கிலாந்திற்கும் ஆங்கிலப் பேரரசின் உறுப்பு நாடுகளுக்கும் 1932 இல் நடைபெற்ற ஒட்டாவா பொருளாதார உச்சி மாநாட்டில் இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
3. இம்மாநாட்டில் பங்கேற்ற நாடுகள் (இந்தியா உட்பட) ஏனைய நாட்டுப் பொருள்களைக் காட்டிலும் இங்கிலாந்து பொருட்களுக்கு முன்னுரிமை வழங்க ஒத்துக்கொண்டன.
24.
1. ரஷ்யப் புரட்சி உலக மக்களின் கற்பனையைத் தூண்டியது.
2. பல நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் உருவாக்கப்பட்டன.
3. ரஷ்ய கம்யூனிஸ்ட் அரசு காலனி நாடுகளை விடுதலைக்காகப் போராட ஊக்குவித்தது.
4. நிலச்சீர்த்திருத்தம், சமூகநலன், தொழிலாளர் உரிமைகள், பாலின சமத்துவம் போன்ற இன்றியமையாதவை குறித்த விவாதங்கள் உலகளவில் நடைபெறத் தொடங்கின.
25.
அ) மார்ஷல் திட்டத்தின் துணையால் மேற்கு பெர்லின் பொருளாதாரம் செழித்தோங்கியது
ஆ) (i) கிழக்கு பெர்லினின் பொருளாதார வளர்ச்சியில் ரஷ்யா போதிய அக்கறை கொண்டிருக்கவில்லை
(ii) மேலும் கிழக்கு பெர்லினில் மக்களாட்சியோ சுதந்திரமோ இல்லாததால் மக்களுக்குப் பெரும்சிரமம் ஆக இருந்தது
இ) மேற்கு பெர்லின் ரஷ்யா கிழக்கு ஜெர்மனி மீது எந்த நேரத்திலும் படையெடுப்பார்கள் என்ற அச்சம் காரணமாக கிழக்கு ஜெர்மனி 1961 ல் சுவரை எழுப்பியது
ஈ) பெர்லின் சுவர் முதலாளித்துவத்திற்கும் பொதுவுடைமைக்கும் இடையே இருந்தப் பிளவை அடையாளப்படுத்தியது
26.
அ) மாசிடோனியாவைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதில் கிரீஸ், செர்பியா, பல்கேரியா பின்னர், மாண்டிநீக்ரோ ஆகிய நாடுகள் இடையே போட்டிகள் நிலவின. 1912 ஆம் ஆண்டு மார்ச் திங்களில் அவை பால்கன் கழகம் என்ற அமைப்பை உருவாக்கின
ஆ) (i) பால்கன் கழகம் முதல் பால்கன் போரில் (1912 - 1913) துருக்கிய படைகளைத் தோற்கடித்தன
(ii) 1913 ஆம் ஆண்டு மே மாதம் லண்டன் உடன்படிக்கையின்படி அல்பேனியா என்ற புதிய நாடு உருவாக்கப்பட்டது. மாசிடோனியாவை ஏனைய பால்கன் நாடுகள் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டன
(iii) துருக்கி, கான்ஸ்டாண்டிநோபிளைச் சுற்றியுள்ள பகுதிகளை மட்டும் கொண்ட அரசாகச் சுருக்கப்பட்டது
இ) துருக்கியப் படைகள்
ஈ) 1913 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் கையெழுத்திடப்பட்ட புகாரெஸ்ட் உடன்படிக்கையோடு இரண்டாம் பால்கன் போர் முடிவடைந்தது.
27.
(i) மஞ்சு வம்சத்தின் சிதைவு 1908ம் ஆண்டு பேரரசின் பாதுகாவலாயிருந்த பேராசிரியர் தாவேகரின் மரணத்தோடுத் துவங்கியது. புதிய பேரரசர் இரண்டு வயதே நிரம்பியவர் என்ற நிலையில் மாகாண ஆளுநர்கள் சுதந்திரமாகச் செயல்படலாயினர். உள்ளூர் இராணுவக் கிளர்ச்சி 1911ம் ஆண்டு ஏற்பட்டு அதன் பாதிப்பு பல மட்டங்களில் பரவியது
(ii) மாகாண ஆளுநர்கள் மஞ்சு அரசின் பிரதிநிதித்துவங்களை உதறித் தங்கள் சுதந்திரத்தை பிரகடனப்படுத்தலாயினர்.
(iii) இக்காலக் கட்டத்தில் நடுத்தர வர்க்கத்திலிருந்து சில தலைவர்கள் உருவாகியிருந்தார்.
(iv) அவர்களில் டாக்டர் சன் யாட் சென்னும் ஒருவர் சீனாவில் ஏற்பட்ட எழுச்சியைப் பற்றி அமெரிக்க நாளிதழ்களின் மூலமாக அறிந்து கொண்ட டாக்டர் சன் யாட் சென் ஷாங்காய் நகரை வந்தடையவும் அங்கே அவர் சீனக் குடியரசின் தற்காலிக குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
(v) ஆனால் மஞ்சு அரசின் நிர்வாகத்தில் முன்பு அமைச்சராகப் பணியாற்றிய யுவான்-ஷி-கே வடபகுதி நவீன இராணுவத்தின் முழுக் கட்டுப்பாட்டையும் தன்னிடம் வைத்திருந்தார்.
(vi) அவர், சிறு வயது பேரரசர் பதிவுயேறக் காரணமாக இருந்தவர்களை வலியுறுத்தி பேரரசரைப் பதவியை விட்ட விலகச் செய்யும் முயற்சியில் வெற்றிகண்டார். அங்கு ஒரு குடியரசும் ஏற்படுத்தப்பட்டது.
28.
(i) பன்னாட்டு நிதியமைப்பானது அடிப்படையில் ஹேரி டேக்ஸ்டர் ஒயிட் ஜான் மேனார்டு கெயின்ஸ் எனும் புகழ்பெற்றப் பொருளாதார நிபுணர்களின் மூளையில் உற்ற குழந்தையாகும்
(ii) இவ்வமைப்பு 1945 - இல் 29 உறுப்பு நாடுகளைக் கொண்டு முறையாக தொடங்கப் பெற்றது தற்போது 189 நாடுகள் இவ்வமைப்பில் உறுப்பு நாடுகளாக உள்ளன.
(iii) இதனுடைய அடிப்படை நோக்கம் உலகம் முழுவதிலும் நிதி மற்றும் வளர்ச்சியின் நிலைத்த தன்மையை உறுதிப்படுத்துவதாக இதனுடைய முக்கிய நிகழ்ச்சி நிரல் பன்னாட்டளவில் நிதிசார்ந்த ஒத்துழைப்பை மேம்படுத்துவது, பன்னாட்டு வணிகத்தையும் நாணயச் செலவாணியையும் உறுதியாக வைத்திருத்தல் ஆகியவையாகும்.
(iv) இவ்வமைப்பு பணம் செலுத்துவதில் சமநிலைப் பிரச்சனைகளை (ஏனினில் இந்நாடுகளால் தங்கள் இறக்குமதிக்கு பணம் செலுத்த முடிவதில்லை.) சந்திக்கும் நாடுகளுக்குக் கடன் வழங்கும் ஆனால் கடன் வாங்கும் நாடுகள் மீது இவ்வமைப்பு வரவு செலவுத்திட்டங்களைச் சுருக்குதல் செலவுகளைச் சுருக்குதல் போன்ற கடுமையான நிபந்தனைகளை சுமத்துகிறது
(v) இந்நடவடிக்கை பெரும்பாலும் வளரும் நாடுகளால் விரும்பப்படுவதில்லை. ஏனெனில் அவை மக்களுக்கு மானியம் வழங்கும் பல்வேறு திட்டங்களை கைவிட வேண்டிய சூழல் உருவாகிறது
29.
மத்திய அமைச்சர்களின் வகைகள் மூன்று வகைப்படும்.
(i) கேபினெட் (அ) ஆட்சிக்குழு அமைச்சர்கள்
(ii) இராஜாங்க அமைச்சர்கள்
(iii) துணை அமைச்சர்கள்
(i) கேபினெட் அமைச்சர்கள் :
நிர்வாகத்தின் மையக் கருவை உருவாக்கும் மூத்த அமைச்சர்களின் முறைசாரா அமைப்பே கேபினெட் ஆகும். கேபினெட் அரசாங்கத்தின் பாதுகாப்பு, நிதி, வெளியுறவுக் கொள்கைகள், உள்துறை ஆகியவற்றின் முக்கிய முடிவுகளை எடுக்கிறது. குடியரசுத் தலைவர் அவசரநிலையைப் பிரகடனம் செய்ய அமைச்சரவை பரிந்துரைக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர அமைச்சரவை ஒரு கருவியாக செயல்படுகிறது. நிதி மசோதாவானது அமைச்சரவையில் இருந்து தொடங்கும். பின்னர் குடியரசுத்தலைவர் பரிந்துரையின்படி மக்களவையில் அறிமுகப்படுத்தப்படும், அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கையை அமைச்சரவை முடிவு செய்வதோடு, சர்வதேச உடன்படிக்கைகளும் ஒப்புதல் அளிக்கிறது. பல்வேறு நாடுகளுக்கானத் தூதர்களை நியமிப்பதில் அமைச்சரவை முக்கிய பங்கு வகிக்கிறது.
(ii) இராஜாங்க அமைச்சர்கள் :
அமைச்சரவை குழுவின் இரண்டாவது வகையினரே இராசாங்க அமைச்சர்கள் ஆவர். அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகளின் பொறுப்பு அமைச்சராக செயல்படுகின்றனர். ஆனால் அழைப்பு விடுத்தால் மட்டுமே இவர்கள் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்து கொள்வர்.
(iii) துணை அமைச்சர்கள் :
அமைச்சரவையில் மூன்றாவதாக, இணை அமைச்சர்கள் உள்ளனர். கேபினெட் அமைச்சர்கள் அல்லது இராசாங்க அமைச்சர்களுக்கு ஒப்படைக்கப்பட்ட கடமைகளைச் செயலாற்றுவதில் இவர்கள் உதவி புரிகின்றனர்.
30.
அமைதி உடன்படிக்கை பற்றிய விமர்சனம்:
(i) தோல்வியடைந்த நாடுகள் பேச்சு வார்த்தையில் பங்கேற்கவில்லை. அமைதி உடன்படிக்கை கட்டளையிடப்பட்டதாக இருந்தது. அது போரின் ஆதாயங்கள் வெற்றி பெற்றவருக்கே நேசநாடுகளே வெற்றியாளர்கள் எனும் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருந்தது
(ii) அமைதியை மீட்பதற்காக உட்ரோ வில்சனால் முன் வைக்கப்பட்ட பதினான்கு அம்சத் திட்டம் எனும் கோட்பாடு ஜெர்மனியை தவிர்த்து மீதமுள்ள அனைத்து மக்களுக்கும் வழங்கப்பட்டது
(iii) போர் இழப்பீட்டுத் தொகையான 6600 மில்லியன் பவுண்டுகள் ஜெர்மனியின் செலுத்தும் சக்தியைக் காட்டிலும் மிக அதிகமாக இருந்தது
(iv) அரசியல் பொருளாதார ரீதியாக ஜெர்மனி பலவீனப்படுத்தப்பட்டது. ஆனால் ஜெர்மனி தனது கிழக்கெல்லையில் மிகப்பெரும் ரஷ்யா, ஆஸ்திரிய ஹங்கேரிப் பேரரசுகளுக்குப் பதிலாக தற்போது சிறிய பலவீனமான புதிய நாடுகளை கொண்டிருந்தது
(v) ஜெர்மனியருக்கும் ஆஸ்திரியார்களுக்கும் பல வாக்குறுதிகளை வழங்கிய வில்சன் அவற்றிற்கு துரோகமிழைத்து விட்டார். 1920 ல் வெர்செயல்ஸ் உடன்படிக்கையை செனட் சபை ஏற்றுக்கொள்ள மறுத்ததைத் தொடர்ந்த அமெரிக்கா தனித்திருக்கும் கொள்கையைப் பின்பற்றத் தொடங்கியது மிகவும் வலுவிழந்த நிலைமையிலிருந்த பிரான்ஸ் மட்டும் இங்கிலாந்தின் நல்லுதவியுடன் ஆற்றல் மிக்க ஜெர்மனியின் வலிமையை எதிர்கொள்ள நேர்ந்தது
31.
(i) சோனி கார்ப்பரேஷன்
(ii) ஹவுலக் பேக்கார்டு (HP)
(iii) டாட்டா குழுமம்
(iv) மைக்ரோசாப்ட் கார்ப்பரேசன்
(v) ஐ.பி.எம்
(vi) நெஸ்ட்லே
(vii) பிராக்டர் மற்றும் கேம்பில்
(viii) சிட்டி குழுமம்
(ix) பெப்சி நிறுவனம்
(x) கோகோ கோலா நிறுவனம்
32.
அமைச்சரவையின் அதிகாரங்கள் மற்றும் பணிகள்:
1. மாநில அரசிற்கான கொள்கைகளை உருவாக்கி அவற்றை திறம்பட நடைமுறைப்படுத்துகிறது.
2. சட்டமன்ற நிகழ்ச்சிகளை முடிவு செய்து எல்லா முக்கியமான மசோதாக்களுக்கும் ஆதரவளிக்கிறது.
3. நிதிக் கொள்கையைக் கட்டுப்படுத்துவதுடன் மாநில பொது நலனுக்கான வரிக்கொள்கையை முடிவு செய்கிறது.
4. முக்கியமான துறைத் தலைவர்களின் நியமனங்களைச் செய்கிறது.
5. மற்ற மாநிலங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
6. மாநிலத்திற்கான செலவுகளைச் சமாளிக்க திட்ட அறிக்கையை உருவாக்குகிறது.
7. ஒரு மசோதா சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் போது அது சாதாரண மசோதாவா அல்லது நிதி மசோதாவா என்று தீர்மானிக்கிறது.
8. அமைச்சரவையின் ஒவ்வொரு அமைச்சரின் பணிகளைக் கட்டுப்படுத்தி, கண்காணித்து ஒருங்கிணைக்கின்றது.
9. ஆண்டு வரவு செலவு திட்டம் (Budget) அமைச்சரவையால் இறுதி செய்யப்படுகிறது.
33.
கங்கை ஆற்று வடிநிலம்:
1. கங்கையாற்றின் தொகுப்பு 8,61,404 ச.கி.மீ பரப்பளவில் பாயும் இந்தியாவின் மிகப்பெரிய வடிகால் அமைப்பைக் கொண்டதாகும்.
2. கங்கைச் சமவெளியில் பல நகரங்கள் ஆற்றங்கரையையொட்டி அமைந்துள்ளன.
3. கங்கைச் சமவெளி அதிக மக்களடர்த்தி கொண்டதாகும்.
4. கங்கை ஆறு உத்தரகாண்ட் மாநிலத்திலுள்ள கங்கோத்ரி பனியாற்றிலிருந்து பாகிரதி என்னும் பெயருடன் உற்பத்தியாகிறது.
5. இந்நதியின் நீளம் சுமார் 2525 கி.மீ ஆகும்.
6. வடபகுதியிலிருந்து கோமதி, காக்ரா, கண்டாக், கோசி மற்றும் தென்பகுதியிலிருந்து யமுனை, சோன், சாம்பல் போன்ற துணையாறுகள் கங்கையுடன் இணைகின்றன.
7. வங்கதேசத்தில், கங்கை நதி பத்மா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
8. கங்கை மற்றும் பிரம்மபுத்திரா ஆறுகள் சேர்ந்து உலகிலேயே மிகப்பெரிய டெல்டாவை உருவாக்கி பின் வங்காள விரிகுடாவில் கலக்கின்றன.
34.
| வ.எண் | அடிப்படை உரிமைகள் | அரசு நெறிமுறையுறுத்தும் கோட்பாடுகள் |
| (i) | இவை அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசியலமைப்பிலிருந்து பெறப்பட்டவை. | இவை அயர்லாந்து நாட்டின் அரசியலமைப்பில் இருந்து பெறப்பட்டது. |
| (ii) | அரசாங்கத்தால் கூட இந்த உரிமையை சுருக்கவோ, நீக்கவோ முடியாது. | இவை அரசுக்கு வெறும் அறிவுறுத்தல்களே ஆகும். |
| (iii) | இவற்றை நீதிமன்ற சட்டத்தால் செயற்படுத்த முடியும். | எந்த நீதிமன்றத்தாலும் கட்டாயப்படுத்த முடியாது. |
| (iv) | இவை சட்ட ஒப்புதலைப் பெற்றவை. | இவை தார்மீக மற்றும் அரசியல் ஒப்புதலைப் பெற்றவை. |
| (v) | இந்த உரிமைகள் நாட்டின் அரசியல் ஜனநாயகத்தை வலுப்படுத்துகின்றன. | இந்தக் கொள்கைகளைச் செயற்படுத்தும் பொழுது சமுதாய மற்றும் பொருளாதார ஜனநாயகம் உறுதியாகிறது. |
35.
36.
பன்னாட்டுச் சங்கத்தின் பணிகள்:
1. 1920-1925 ஆகிய ஆண்டுகளிடையே பன்னாட்டுச் சங்கம் பல சிக்கல்களைத் தீர்த்து வைக்க அழைக்கப்பட்டது.
2. மூன்று பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதில் சங்கம் வெற்றி பெற்றது.
3. 1920இல் பின்லாந்தின் மேற்குக் கடற்கரைக்கும் சுவீடனின் கிழக்குக்கடற்கரைக்கும் இடையில் அமைந்திருந்த ஆலேண்டுத் தீவுகள் யாருக்குச் சொந்தம் என்பதில் பின்லாந்திற்கும் சுவீடனுக்குமிடையே பிரச்சனை ஏற்பட்டது.
4. பன்னாட்டுச் சங்கம் அத்தீவுகள் பின்லாந்திற்கே உரியது எனத் தீர்ப்பளித்தது.
5. அடுத்த ஆண்டில் போலந்திற்கும் ஜெர்மனிக்குமிடையே மேலை சைலேஷியா பகுதியில் எல்லைப் பிரச்சனை ஏற்பட்டபோது, அப்பிரச்சனையைச் சங்கம் வெற்றிகரமாகத் தீர்த்து வைத்தது.
6. மூன்றாவது பிரச்சனை கிரீஸ் பல்கேரியாவின் மீது படையெடுத்த போது பன்னாட்டுச் சங்கம் போர் நிறுத்தம் செய்ய உத்தரவிட்டது.
7. விசாரணைக்குப் பின் சங்கம் கிரீஸின் மீது குற்றஞ்சாட்டி, கிரீஸ் போர் இழப்பீடு வழங்க வேண்டுமெனத் தீர்மானித்தது.
8. 1925இல் லொக்கர்னோ உடன்படிக்கை கையெழுத்தாகின்ற வரை பன்னாட்டுச் சங்கம் வெற்றிகரமாகவே செயலாற்றியது.
9. லொக்கர்னோ உடன்படிக்கையின்படி ஜெர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து, இத்தாலி ஆகிய நாடுகள் மேற்கு ஐரோப்பாவில் பரஸ்பரம் அமைதிக்கு உத்தரவாதமளித்தன.
10. இதன் பின்னர் ஜெர்மனி பன்னாட்டுச் சங்கத்தில் இணைந்தது. பாதுகாப்புக் குழுவில் ஜெர்மனிக்கு நிரந்தர இடம் அளிக்கப்பட்டது.
தோல்விக்கான காரணங்கள்:
(i) அரசியல் பிரச்சனைகளில் சங்கம் எடுக்கும் முடிவுகளுக்கு உறுப்பினர்கள் அனைவரின் ஏகோபித்த ஆதரவு அவசியமாயிற்று
(ii) சங்கத்திற்கென்று ராணுவம் இல்லை என்பதால் தான் எடுத்த முடிவுகளை நடைமுறைப்படுத்த அதனால் இயலவில்லை
(iii) சர்வாதிகாரிகளால் தலைமையேற்கப்பட்ட இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் சங்கத்தின் ஆணைகளுக்குக் கட்டுப்பட மறுத்த போது இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் மட்டுமே உறுதியாகச் செயல்படும் நிலையிலிருந்தன
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards