10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 06/09/2019
வளங்கள் மற்றும் தொழிலகங்கள்
10ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
மிக அதிகமாக கிடைக்கக்கூடிய ஆற்றல் வளம் ______.
உயிரி சக்தி
சூரியன்
நிலக்கரி
எண்ணெய்
2.
பெட்ரோலியத்தில் உள்ள முக்கிய கனிமங்கள் ஹைட்ரஜன் மற்றும்_____.
ஆக்ஸிஜன்
நீர்
கார்பன்
நைட்ரஜன்
3.
ஆந்த்ரசைட் நிலக்கரி ______ கார்பன் அளவை கொண்டுள்ளது.
80% - 90%
70% க்கு மேல்
60% - 70%
50%க்கும் குறைவு
4.
மாங்கனீசு இவற்றில் பயன்படுத்தப்படுகிறது.
காகித தொழிற்சாலை
எஃகு தயாரிப்பு
செம்பு உருக்குதல்
பெட்ரோலிய சுத்திகரிப்பு
5.
இந்தியாவின் முக்கிய எண்ணெய் உற்பத்தி பகுதிகளைக் குறிப்பிடுக
6.
இந்தியாவில் சணல் உற்பத்தி செய்யும் முக்கிய பகுதிகளைக் குறிப்பிடுக
7.
நிலக்கரியின் வகைகளை அதன் கரிம அளவுகளுடன் குறிப்பிடுக
8.
இந்தியாவின் இரும்பு எஃகு தொழிலகங்கள் பற்றி ஒரு தொகுப்பு எழுதுக.
9.
இந்தியாவில் உள்ள பருத்தி நெசவாலைகளின் பரவல் பற்றி எழுதுக.
10.
இரும்பு தாது உற்பத்தி மையங்கள்.
1.
(b)
சூரியன்
2.
(c)
கார்பன்
3.
(a)
80% - 90%
4.
(b)
எஃகு தயாரிப்பு
5.
மேற்குக் கடற்கரையிலுள்ள எண்ணெய் வயல்கள்:
1. பாசின் எண்ணெய் வயல்
2. மும்பை ஹை
3. குஜராத் கடற்கரை
4. அங்கலேஸ்வர்
5. காம்பே-லூனி பகுதிகள்
6. அகமதாபாத் - கலோல் பகுதி
கிழக்குக் கடற்கரையிலுள்ள எண்ணெய் வயல்கள்:
1. பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கு (அசாம்)
2. திக்பாய்
3. நாகர்காட்டியா
4. மோரான் ஹக்ரிஜன்
5. ருத்ரசாகர் - லாவா
6. சர்மா பள்ளத்தாக்கு
7. அந்தமான், நிகோபாரின் உட்பகுதிகள்
8. மன்னார் வளைகுடா
9. பலேஷ்வர் கடற்கரை
6.
1. சணல் உற்பத்தி பகுதிகள் மேற்கு வங்கத்தில் உள்ள ஹுக்ளி ஆற்றங்கரை நெடுகிலும் அமைந்துள்ளது.
2. டிடாகர், ஜகத்தல், பஜ் - பஜ், ஹவுரா மற்றும் பத்ரேஸ்வர் ஆகியன முதன்மை சணல் பொருள்கள் உற்பத்தி மையங்களாகும்.
3. ஆந்திரப்பிரதேசம், பீகார், அசாம், உத்திரப்பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா ஆகியன சணல் பொருள் உற்பத்தி பொருட்களின் பிற மாநிலங்களாகும்.
7.
நிலக்கரி:
1. நிலக்கரி என்பது எளிதில் எரியக்கூடிய உயிரின படிமங்கள் கொண்ட ஒரு நீரக தனிமம் ஆகும். இது படிவுப் பாறைகளில் கிடைக்கிறது.
2. நிலக்கரி ஒரு நாட்டின் தொழிற்சாலை வளர்ச்சிக்கு மிக இன்றியமையாததாக இருப்பதால் இது 'கருப்பு தங்கம்' (Black gold) என அழைக்கப்படுகிறது.
வகைகள்
கரிம அளவு
i. ஆந்த்ரசைட் : 80 முதல் 90 சதவீதம்.
ii. பிட்டுமினஸ் : 60 முதல் 80 சதவீதம்.
iii. பழுப்பு நிலக்கரி : 40 முதல் 60 சதவீதம்.
iv. மரக்கரி : 40 சதவீதத்திற்கும் குறைவு.
8.
இந்தியாவின் எஃகு தொழிலகங்கள்:
1. இரும்பு எஃகு தொழிற்சாலைகள் இதன் உற்பத்தி பொருள்களை மற்ற தொழிலகங்களுக்கு தேவையான மூலப்பொருளாக அளிப்பதனால் இது அடிப்படையான உலோகத் தொழிற்சாலை என அழைக்கப்படுகிறது.
2. பொறியியல் கனரக இயந்திரங்கள், எந்திரக் கருவிகள், வாகனங்கள், ரயில் என்ஜின்கள் மற்றும் ரயில்வே உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இரும்பை மூலப்பொருள்களாகப் பயன்படுத்துகின்றன.
3. ஒரு நாட்டின் தொழில் வளர்ச்சி இரும்பு எஃகு உற்பத்தியின் அளவைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது.
4. டாடா இரும்பு எஃகு தொழிற்சாலை 1907 ஆம் ஆண்டு 'சாக்சி' என்றழைக்கப்பட்ட ஜாம்ஷெட்பூரில் தொடங்கப்பட்ட முதல் நவீன தொழிற்சாலையாகும்.
5. இரும்பு எஃகு ஆலைகள் ஜார்கண்ட், மேற்கு வங்காளம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் செறிந்து காணப்படுகின்றன.
6. ஜாரியா, ராணிகஞ்ச், பொகாரோ, கரன்புரா ஆகிய நிலக்கரி வயல்களும் மற்றும் மயூர்பஞ்ச், கியோன்சர், புரேனா ஆகிய இரும்புதாது சுரங்கங்களும் ஒன்றுக்கொன்று அருகாமையில் அமைந்திருப்பது இதன் செறிவிற்குக் காரணமாகும்.
7. மேலும் இத்தொழிற்சாலைக்குத் தேவையான டோலமைட், மாங்கனீசு மற்றும் சிலிகான் போன்ற தாது படிவுகள் போதுமான அளவில் கிடைக்கின்றன.
8. இந்தியாவில் 10 பெரிய இரும்பு எஃகுத் தொழிலகங்கள் அமைந்துள்ளன.
9. டாட்டா இரும்பு எஃகு ஆலை, இந்தியா எஃகு நிறுவனம், இந்துஸ்தான் எஃகு நிறுவனங்கள், விஸ்வேஷ்வரையா இரும்பு எஃகு நிறுவனம் மற்றும் சேலம் எஃகு ஆலை ஆகியவை முக்கியமான இரும்பு எஃகுத் தொழிலகங்கள் ஆகும்.
9.
இந்திய பருத்தி நெசவாலைகள்:
1. பருத்தி நெசவாலைகள் நம் நாட்டின் அதிக வேலை வாய்ப்பை அளிக்கும் ஆதாரங்களில் ஒன்றாக உள்ளது.
2. தற்போது இந்தியா, பருத்தி உற்பத்தியில் உலகின் மூன்றாவது பெரிய நாடாகவும் தறிகளிலும், நூற்பு கருவிகளின் எண்ணிக்கையிலும் முதன்மையான நாடாகவும் உள்ளது.
3. தற்போது பருத்தி நெசவாலைகள் இந்தியாவின் மிகப்பெரிய நவீன தொழிலகப் பிரிவாக உள்ளது.
பருத்தி நெசவாலைகளின் பரவல்:
1. மகாராஷ்டிரம், குஜராத், மேற்கு வங்காளம், உத்திரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் பருத்தி நெசவாலைகள் செறிந்து காணப்படுகின்றன.
2. தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், கரூர், சென்னை, திருநெல்வேலி, மதுரை, தூத்துக்குடி, சேலம், மற்றும் விருதுநகர் ஆகியன முக்கிய நெசவாலை நகரங்களாகும்.
மும்பை-இந்தியாவின் மான்செஸ்டர்:
1. மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பருத்தி நெசவாலைகள் செறிந்து காணப்படுவதால் மும்பை, இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது.
2. இதற்குக் காரணம் மகாராஷ்டிரா மாநிலத்தில் காணப்படும் கரிசல் மண், ஈரப்பதக்கால நிலை, மும்பைத் துறைமுகம், எளிதில் கிடைக்கும் நீர்மின்சக்தி, சந்தை வசதி மற்றும் சிறந்த போக்குவரத்து வசதி ஆகியனவாகும்.
கோயம்புத்தூர்-தென்னிந்தியாவின் மான்செஸ்டர்
1. தமிழ்நாட்டிலுள்ள கோயம்புத்தூரில் அதிக எண்ணிக்கையிலான பருத்தி நெசவாலைகள் உள்ளன.
2. இதனால் கோயம்புத்தூர் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படுகிறது.
10.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards