10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 21/09/2019
19ஆம் நூற்றாண்டில் சமூக, சமய சீர்திருத்த இயக்கங்கள்
10ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
அலிகார் இயக்கம் யாரால் நிறுவப்பட்டது? அதன் நோக்கம் யாது?
2.
இராமலிங்க அடிகள் - குறிப்பு தருக
3.
பார்சி என்பவர்கள் யார்?
4.
சுவாமி தயானந்த சரஸ்வதி பற்றி எழுதுக
5.
இராஜாராம் மோகன்ராய் பற்றி சிறுகுறிப்பு வரைக
6.
ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்களின் நலன்களுக்காக ஜோதிபா புலே ஆற்றிய பணிகளைக் கோடிட்டுக் காட்டுக.
7.
பிரம்ம சமாஜத்தால் ஒழிக்கப்பட்ட சமூகத் தீமைகள் யாவை ?
8.
சுவாமி விவேகானந்தரின் ‘செயல்பாட்டாளர்’ சித்தாந்தத்தின் தாக்கமென்ன?
9.
இராமலிங்க அடிகளின் சீர்திருத்தங்கள் குறித்து சிறுகுறிப்பு வரைக
10.
மகரிஷி தேவேந்திரநாத் தாகூர் முன்வைத்த நம்பிக்கையின் நான்கு கூறுகளைக் குறிப்பிடுக.
1.
(i) அலிகார் இயக்கம் சர் சையத் அகமத்கான் 1875 ஆம் ஆண்டு அலிகார் நகரில் அலிகார் முகமதி ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரியை நிறுவினார்
(ii) அலிகார் இயக்கம் எனப்பட்ட அவரது இயக்கம் இக்கல்லூரியைப் மையப்படுத்தி நடைபெற்றதால் அப்பெயரைப் பெற்றது. இந்திய முஸ்லீம்களின் கல்வி வரலாற்றில் இக்கல்லூரி ஒரு மைல் கல்லாகும்.
(iii) 1920 இல் இக்கல்லூரி தரம் உயர்த்தப்பட்டு பல்கலைக்கழகமானது அலிகார் பல்கலைக்கழகம் தொடர்ந்து வந்த சந்ததியினரைச் சேர்ந்தோரைக் கொண்ட ஒரு கற்றறிந்த மேதைகளின் கூட்டமாக உருவாக்கியது
2.
(i) வள்ளலார் எனப் பிரபலமாக அறியப்பட்ட ராமலிங்க சுவாமிகள் சிதம்பரத்திற்கு அருகேயுள்ள மருதூர் என்னும் கிராமத்தில் பிறந்தார்
(ii) முறையான கல்வியை அவர் பெற்றிராவிட்டாலும் அளப்பரிய புலமையை பெற்றிருந்தார். உயிர்களிடையே நம்பிக்கை, இரக்கம் எனும் பிணைப்புகள்.
3.
பார்சி என்பவர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் படிப்பறிவு பெற்றிருந்த பார்சிகளின் சமயக் கொடுமைகளிலிருந்து தப்பிக்கும் பொருட்டு ஈரானிலிருந்து பத்தாம் நூற்றாண்டில் குடிபெயர்ந்து வந்த ஜொராஸ்டியர்கள்
4.
(i) பஞ்சாபில் ஆரிய சமாஜம் சீர்திருத்த இயக்கங்களுக்குத் தலைமையேற்றது. இவ்வமைப்பு மேலை கங்கைச் சமவெளியில் நாடோடியாய் அலைந்து திரிந்து கொண்டிருந்த சுவாமி தயானந்த சரஸ்வதி (1824 - 83) என்பவரால் நிறுவப்பட்டது .
(ii) சுவாமி தயானந்தர் பின்னர் தனது கருத்துக்களைப் போதிப்பதற்காகப் பஞ்சாபில் தங்கினார். அவருடைய புத்தகமான சத்யார்த்த பிரகாஷ் பெரும்பாலானோரால் படிக்கப்பட்டது
(iii) அவர் முன்வைத்த நேர்மறையான கொள்கைகள் கட்டுப்பாடான ஒரு கடவுள் வழிபாடு உருவ வழிபாட்டை நிராகரித்தல், பிராமணர் மேலாதிக்கம் செலுத்தும் சடங்குகள் ஆகியவற்றை மறுத்தல் என்பனவாகும்
5.
(i) இராஜாராம் மோகன்ராய் (1772 - 1833) மேலைநாட்டுக் கருத்துக்களால் கவரப்பட்டு, சீர்திருத்தப்பணிகளை முன்னெடுத்த தொடக்ககாலச் சீர்திருத்தவாதிகளில் ஒருவராவார்
(ii) ஒரு பெரும் அறிஞரான அவர் தனது தாய்மொழியான வங்காளமொழியில் புலமைபெற்றிருந்ததோடு சமஸ்கிருதம், அராபி, பாரசீகம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் புலமை பெற்றிருந்தார்
(iii) இராஜாராம் மோகன்ராய் பொருளற்ற சமயசடங்குகளையும் கேடுகளை விளைவிக்கும் சமூக மரபுகளையும் எதிர்த்தார்.
(iv) சமூகத்தில் நிலவிவரும் உடன்கட்டை ஏறுதல், குழந்தைத் திருமணம், பலதாரமணம் போன்ற மரபு சார்ந்த பழக்கங்கள் குறித்து பெரிதும் கவலை கொண்ட அவர் அவற்றிற்கு எதிராகக் சட்டங்கள் இயற்றும்படி அரசாங்கத்திற்கு மனுச்செய்தார்
(v) அவருடைய செயல்பாடுகள் கவர்னர்ஜெனரல் வில்லியம் பெண்டிங்கை 1829 இல் உடன்கட்டை ஏறும் பழக்கத்தை ஒழித்து சட்டமியற்ற கட்டாயப்படுத்தியதில் முக்கிய பாத்திரம் வகித்தது
6.
1. ஜோதிபா பூலே 1852 இல் ஒடுக்கப்பட்டோருக்கான முதல் பள்ளியை புனேயில் திறந்தார்.
2. சத்தியசோதக் சமாஜ் (உண்மையை நாடுவோர் சங்கம்) எனும் அமைப்பை, பிராமணரல்லாத மக்களும் சுயமரியாதையோடும், குறிக்கோளோடும் வாழத் தூண்டுவதற்காய் நிறுவினார்.
3. பூலே குழந்தைத் திருமணத்தை எதிர்த்தார். விதவை மறுமணத்தை குறிப்பாக மறுமணம் மறுக்கப்பட்ட உயர்சாதி இந்துக்களின் மறுமணத்தை ஆதரித்தார்.
4. ஜோதிபா பூலே பெற்றோரில்லா குழந்தைகளுக்கென்று விடுதிகளையும் விதவைகளுக்கென காப்பகங்களையும் உருவாக்கினார்.
5. ஜோதிபாவும் அவருடைய மனைவி சாவிதிரிபாயும் ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் பெண்களின் முன்னேற்றத்திற்காக தங்களின் வாழ்க்கையை அர்ப்பணித்தனர்.
7.
1. உடன்கட்டை ஏறுதல் (சதி)
2. குழந்தைத் திருமணம்
3. பலதாரமணம்.
8.
(i) சுவாமி விவேகானந்தர் பண்பாட்டுத் தேசியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த அவர் இந்து சமூகத்திற்குப் புத்துயிரளிக்க இந்திய இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்தார்.
(ii) விவேகானந்தரின் செயலூக்கம் மிக்க சித்தாந்தம் மேலைக்கல்வி பயின்ற வங்காள இளைஞர்களிடையே அரசியல் மாற்றங்களுக்கான நாட்டத்தை வங்கப்பிரிவினையைத் தொடர்ந்து நடைபெற்ற சுதேசி இயக்கத்தின் போது இளைஞர்களில் பலர் விவேகானந்தரால் ஊக்கம் பெற்றனர்
9.
1. ராமலிங்க சுவாமிகள் உயிர்களிடையே நம்பிக்கை, இரக்கம் எனும் பிணைப்புகள் இருக்கவேண்டுமென்றார்.
2. அவர் தன்னுடைய அன்பையும் இரக்கத்தையும் செடிகொடிகள் உட்பட அனைத்து உயிரினங்களிடமும் காட்டினார். இதை அவர் ஜீவகாருண்யம் என்றார்.
3. அவர் 1856 இல் சமரச வேத சன்மார்க்க சங்கம் எனும் அமைப்பை நிறுவினார். பின்னர் அது சமரசசுத்த சன்மார்க்க சத்ய சங்கம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
4. 1866 இல் தென்னிந்தியாவில் ஏற்பட்ட கொடிய பஞ்சத்தைக் கணக்கில் கொண்டு 1867 இல் சாதி எல்லைகளைத் தாண்டி அனைத்து மக்களுக்குமான இலவச உணவகத்தை வடலூரில் நிறுவினார்.
10.
1. தொடக்கத்தில் எதுவுமில்லை, எல்லாம் வல்ல ஒரு கடவுள் மட்டுமே உள்ளார். அவரே இவ்வுலகத்தைப் படைத்தார்.
2. அவர் ஒருவரே உண்மையின், எல்லையற்ற ஞானத்தின், நற்பண்பின், சக்தியின் கடவுளாவார். அவரே நிலையானவர், எங்கும் நிறைந்திருப்பவர் அவருக்கு இணை யாருமில்லை.
3. நம்முடைய வீடுபேறு, இப்பிறவியிலும் அடுத்த பிறவியிலும் அவரை நம்புபவதையும் அவரை வணங்குவதையும் சார்ந்துள்ளது.
4. அவரை நம்புவதென்பது, அவரை நேசிப்பதிலும் அவர் விருப்பத்தைச் செயல்படுத்துவதிலும் அடங்கியுள்ளது.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards