10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 20/09/2019
10ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
இந்தியாவின் தாராளமயமாக்கல் கொள்கை _______ ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
1994
1991
1995
1998
2.
WTO வில் தற்போதுள்ள உறுப்பு நாடுகளின் எண்ணிக்கை
159
164
148
128
3.
4.
தக்காண பீடபூமியின் பரப்பளவு ________சதுர கி.மீ ஆகும்
6 லட்சம்
8 லட்சம்
5 லட்சம்
7 லட்சம்
5.
கீழ்க்காணும் எந்த விதியின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் நிதி நெருக்கடி நிலையினை அறிவிக்கிறார்?
சட்டப்பிரிவு 352
சட்டப்பிரிவு 360
சட்டப்பிரிவு 356
சட்டப்பிரிவு 365
6.
சுவாமி ஸ்ரத்தானந்தர் என்பவர் யார்?
சுவாமி விவேகானந்தரின் சீடர்
இந்திய பிரம்ம சமாஜத்தில் பிளவை ஏற்படுத்தியவர்
ஆரிய சமாஜத்தில் பிளவை ஏற்படுத்தியவர்
சமத்துவ சமாஜத்தை நிறுவியவர்
7.
எந்த ஆண்டு வார்சா ஒப்பந்தம் கலைக்கப்பட்டது?
1979
1989
1990
1991
8.
ஹிட்லர் எவரை மிகவும் கொடுமைப்படுத்தினார்?
ரஷ்யர்கள்
அரேபியர்கள்
துருக்கியர்கள்
யூதர்கள்
9.
10.
எவ்விடத்தில் எத்தியோப்பியாவின் படை இத்தாலியின் படைகளைத் தோற்கடித்தது?
டெல்வில்லி
ஆரஞ்சு நாடு
அடோவா
அல்ஜியர்ஸ்
11.
_______ ஆல் உலகமயமாக்கல் என்ற பதம் கண்டுபிடிக்கப்பட்டது.
12.
________ அலுவல் வழியில் மாநிலங்களவையின் தலைவர் ஆவார்.
13.
குலாம்கிரி நூலை எழுதியவர்_______ஆவார்.
14.
வியட்நாம் தேசியவாதிகள் கட்சி _____ இல் நிறுவப்பட்டது.
15.
_____ ஆண்டில் ஜப்பான் இங்கிலாந்துடன் நட்பினை ஒப்பந்தம் செய்து கொண்டது.
16.
மைக்கா
17.
வடகிழக்குப் பருவக் காற்று
18.
அன்வர் சாதத்
19.
கடன் குத்தகை
20.
எம்டன்
21.
"உலக வர்த்தக அமைப்பின்" முக்கிய நோக்கம் என்ன?
22.
சிறு குறிப்பு வரைக.
1) மொத்த தேசிய மகிழ்ச்சி (GNH)
2) மனித மேம்பாட்டுக் குறியீடு (HDI)
23.
’வேளாண்மை’–வரையறு
24.
உச்சநீதிமன்ற நீதிபதி ஆவதற்கான தகுதிகள் யாவை?
25.
'புலிகள் பாதுகாப்புத் திட்டம்' என்றால் என்ன?
26.
சுவாமி விவேகானந்தரின் ‘செயல்பாட்டாளர்’ சித்தாந்தத்தின் தாக்கமென்ன?
27.
செம்மொழித் தகுதிப்பெற்ற இந்திய மொழிகள் எவை?
28.
பிரெட்டன் உட்ஸ் இரட்டையர்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
29.
முசோலினியின் ரோமாபுரி நோக்கிய அணிவகுப்பின் விளைவுகள் யாவை?
30.
பன்னாட்டு நிறுவனங்களின் (MNC) நன்மைகள் மற்றும் தீமைகளை சுருக்கமாக எழுதுக.
31.
முதலமைச்சரின் அதிகாரங்கள் மற்றும் பணிகளை விவரி.
32.
33.
தென் ஆப்பிரிக்க தேசிய அரசியலின் எழுச்சி, வளர்ச்சி குறித்து விவரிக்கவும்.
34.
வானிலை மற்றும் காலநிலை
1.
(b)
1991
2.
(b)
164
3.
(a)
4.
(d)
7 லட்சம்
5.
(b)
சட்டப்பிரிவு 360
6.
(c)
ஆரிய சமாஜத்தில் பிளவை ஏற்படுத்தியவர்
7.
(d)
1991
8.
(d)
யூதர்கள்
9.
(c)
10.
(c)
அடோவா
11.
( )
பேராசிரியர் தியோடோர் லெவிட்
12.
( )
துணை குடியரசு தலைவர்
13.
( )
ஜோதிபா புலே
14.
( )
1927
15.
( )
1902
16.
மின்சாதனப் பொருட்கள்
17.
அக்டோபர், டிசம்பர்
18.
எகிப்து
19.
ரூஸ்வெல்ட்
20.
சென்னை
21.
உலக வர்த்தக அமைப்பின் (WTO) முக்கிய குறிக்கோள்கள் :
1. அயல்நாட்டு வாணிபத்திற்கான விதிகள் அமைத்தல் மற்றும் செயல்படுத்துதல்.
2. வர்த்தக தாராளமயமாக்கலுக்கான பேச்சு வார்த்தை மற்றும் கண்காணிப்பதற்கான ஒரு மன்றத்தை வழங்குதல்.
3. வர்த்தக தகராறுகளைக் கையாளுதல்
4. நிலையான முன்னேற்றம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய இரண்டையும் ஒன்றிணைத்து அறிமுகம் செய்தல்
5. உலக வர்த்தகத்தில் வளர்ந்துவரும் நாடுகளின் ஒரு சிறந்த வளர்ச்சிக்கு பாதுகாப்பாக இருத்தல்
6. முடிவெடுக்கும் செயல்களின் வெளிப்படைத் தன்மையை அதிகரித்தல்
7. முழுவேலை வாய்ப்பை உறுதிப்படுத்துதல் மற்றும் பயனுள்ள தேவையை அதிகரித்தல்
22.
GNH (மொத்த தேசிய மகிழ்ச்சி)
(GNH) என்பது அரசாங்கத்தை வழி நடத்தும் ஒரு தத்துவமாகும். அது ஒரு மக்கள் தொகை கூட்டு மகிழ்ச்சி மற்றும் நல்வாழ்வை அளவிடப் பயன்படும் குறியீட்டை உள்ளடக்கியது.
GNH என்ற வார்த்தையை 1972ல் உருவாக்கியவர் ஜிகமே சிங்கயே வாங்ஹக் என்ற பூட்டான் அரசர் ஆவார். அவர் GNP -ஐ விட GNH முக்கியம் என்றார்.
GNH ன் நான்கு தூண்கள்:
1. நிலையான மற்றும் சமமான சமூக பொருளாதார வளர்ச்சி
2. சுற்றுச்சூழல் பாதுகாப்பு
3. கலாசாரத்தை பாதுகாப்பது மற்றும் மேம்படுத்துவது
4. நல்ல ஆட்சி.
GNH ன் ஒன்பது களங்கள்: (domains)
1. உளவியல் நலன்
2. உடல் நலம்
3. நேரம் பயன்பாடு
4. கல்வி
5. கலாச்சார பன்முகத் தன்மை மற்றும் பின்னடைவு
6. நல்ல ஆட்சி
7. சமூகத்தின் உயர்வு
8. சுற்றுச்சூழல் பன்முகத் தன்மை மற்றும் பின்னடைவு
9. வாழ்க்கைத் தரம்
HDI : (மனித மேம்பாட்டுக் குறியீடு)
1. பொருளாதாரத்தின் உண்மையான முன்னேற்றத்தை அளப்பதற்கு மனிதவள மேம்பாட்டு குறியீடு (HDI) சரியானதாகும்.
2. இது 1990 ஆம் ஆண்டு மஹ்பூப்-உல் ஹக் என்ற பாகிஸ்தான் பொருளியல் அறிஞரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
3. பிறப்பின் போது வாழ்நாள் எதிர்பார்ப்பு, வயது வந்தோரின் கல்வியறிவு மற்றும் வாழ்க்கைத்தரம், GDP மடக்கை செயல்பாடு என கணக்கிடப்பட்டு வாங்கும் சக்தி சமநிலைக்கு (PPP) சரி செய்யப்படுகிறது.
23.
வேளாண்மை என்பது குறிப்பிட்ட பயிர்களை உற்பத்தி செய்தும் கால்நடைகளை வளர்த்தும் மக்களுக்கு உணவையும் கால்நடைகளுக்கு தீவனத்தையும், நார் மற்றும் தேவையான இதர பொருட்களையும் வழங்குவதாகும்.
24.
உச்ச நீதிமன்ற நீதிபதிக்கான தகுதிகள் :
1. அவர் இந்தியக் குடிமகனாய் இருத்தல் வேண்டும்.
2. அவர் ஐந்து ஆண்டுகள் உயர் நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்திருத்தல் வேண்டும்.
(அல்லது)
3. அவர் பத்து ஆண்டுகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக செயலாற்றியிருத்தல் வேண்டும்.
4. அவர் குடியரசுத் தலைவர் கருத்தின்படி சிறப்புமிக்க சட்ட வல்லுநராய் இருத்தல் வேண்டும்.
25.
1. "புலிகள் பாதுகாப்புத் திட்டம்" இந்தியாவில் 1973 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
2. புலிகளை பாதுகாக்கவும் அதன் எண்ணிக்கையை அதிகரிக்கவும் புலிகள் பாதுகாப்பகங்கள் தொடங்கப்பட்டன.
3. இத்திட்டத்தின் மூலம் புலிகளின் எண்ணிக்கை 60 சதவீதம் உயர்ந்துள்ளது.
26.
(i) சுவாமி விவேகானந்தர் பண்பாட்டுத் தேசியத்திற்கு முக்கியத்துவம் கொடுத்த அவர் இந்து சமூகத்திற்குப் புத்துயிரளிக்க இந்திய இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்தார்.
(ii) விவேகானந்தரின் செயலூக்கம் மிக்க சித்தாந்தம் மேலைக்கல்வி பயின்ற வங்காள இளைஞர்களிடையே அரசியல் மாற்றங்களுக்கான நாட்டத்தை வங்கப்பிரிவினையைத் தொடர்ந்து நடைபெற்ற சுதேசி இயக்கத்தின் போது இளைஞர்களில் பலர் விவேகானந்தரால் ஊக்கம் பெற்றனர்
27.
1. தமிழ்
2. சமஸ்கிருதம்
3. தெலுங்கு
4. கன்னடம்
5. மலையாளம்
6. ஓடியா
28.
1. "பிரெட்டன் உட்ஸ் இரட்டையர்கள்" எனக் குறிப்பிடப்படும் உலக வங்கி, பன்னாட்டு நிதி அமைப்பு ஆகிய இரண்டும் 1944 இல் நடைபெற்ற பிரெட்டன் உட்ஸ் மாநாட்டிற்குப் பின் 1945 இல் நிறுவப்பட்டன.
2. இவ்விரு நிறுவனங்களும் அமெரிக்காவில் வாஷிங்டன் நகரில் அமைந்துள்ளன.
29.
1. 1922 அக்டோபரில் ஒரு நீண்ட அமைச்சரவைச் சிக்கலின் போது முசோலினி பாசிஸ்டுகளின் மாபெரும் அணிவகுப்பு ஒன்றை ரோமாபுரியை நோக்கி நடத்தினார்.
2. முசோலினியின் வலிமையைக் கண்டு வியந்துபோன அரசர் முசோலினியை ஆட்சியமைக்க வரவேற்றார்.
30.
MNC யின் பரிணாம வளர்ச்சி:
1. கிழக்கு இந்திய நிறுவனம், ஒரு வர்த்தக நிறுவனமாக இந்தியாவுக்கு வந்தது. அதன் பிறகு அரசியல் ரீதியாக நாடெங்கிலும் பரவலாக ஆதிக்கம் செலுத்தியது.
2. 1920களில் பன்னாட்டு நிறுவனங்கள் முதலில் பிரித்தெடுக்கப்பட்ட தொழில்களில் அல்லது தொழில் நடத்தும் நாடுகளின் மூலப்பொருட்களைக் கட்டுப்படுத்தி மெதுவாக இந்தியாவினுள் நுழைந்தன.
3. 1950களுக்கு பிறகு உற்பத்தி மற்றும் பணிகள் துறையிலும் ஈடுபட்டது. தற்போது, இந்தியாவில் நான்கு பெரிய ஏற்றுமதி நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளுக்கு சொந்தமான பன்னாட்டு நிறுவனங்கள் பெரும்பான்மையாக உள்ளன. இவற்றில் அதிகமானது அமெரிக்காவினுடையது ஆகும்.
4. இந்தியாவிலுள்ள 15 பெரிய பன்னாட்டு நிறுவனங்களில், 11 அமெரிக்காவை சேர்ந்ததாகும்.
MNCயின் நன்மைகள்:
1. பன்னாட்டு நிறுவனங்கள் குறைந்த விலையில் பொருட்களை தரமாகவும் மற்றும் பரிவர்த்தனை செலவு இல்லாமலும் உற்பத்தி செய்கிறது.
2. பன்னாட்டு நிறுவனங்கள் விலைகளை குறைப்பதால் உலகளாவிய நுகர்வோரின் வாங்கும் சக்தி அதிகரிக்கிறது.
3. பன்னாட்டு நிறுவனங்கள் வரி மாறுபாட்டை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
4. பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளூர் பொருளாதாரத்தில் வேலை வாய்ப்பினை ஊக்குவிக்கின்றன.
MNCயின் தீமைகள்:
1. பன்னாட்டு நிறுவனங்கள் முற்றுரிமையை (சில தயாரிப்புகளுக்கு) வளர்ப்பதற்கான ஒரு வழியாகும்.
2. பன்னாட்டு நிறுவனங்களினால் சுற்றுச்சூழலில் தீங்கினை உருவாக்க வாய்ப்புள்ளது.
3. ஒரு புரவலன் நாட்டின் பொருளாதாரத்தில், பன்னாட்டு நிறுவனத்தின் அறிமுகம் சிறிய உள்ளூர் வணிக வீழ்ச்சிக்கு வழிவகுக்கும்.
4. பன்னாட்டு நிறுவனங்கள் ஒழுக்க நெறிமுறைகளை மீறுவதோடு, தார்மீக சட்டங்களை அவர்கள் குற்றம் சாட்டி, மூலதனத்துடன் தங்கள் வணிக செயல்பாட்டினை திருப்பிக் கொள்வதற்கும் முனைவர்.
31.
அமைச்சரவை தொடர்பானவை:
1. முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் ஆளுநர் அமைச்சர்களை நியமிக்கிறார்.
2. அமைச்சர்களுக்குத் துறைகளை ஒதுக்கீடு செய்கிறார்.
3. தனது அமைச்சரவையை மாற்றியமைக்கிறார்.
4. அமைச்சரவைக் கூட்டத்தைத் தலைமை ஏற்று நடத்தி முடிவுகளை எடுக்கிறார்.
5. அமைச்சர்கள் அனைவரையும் கட்டுப்படுத்தி, வழிநடத்தி, இயக்கி, அவர்களது நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கிறார்.
ஆளுநர் தொடர்பானவை:
கீழ்க்காணும் அலுவலர்களின் நியமனங்கள் தொடர்பாக ஆளுநருக்கு ஆலோசனை வழங்குகிறார்.
1. மாநில அரசு வழக்குரைஞர்
2. மாநில தேர்தல் ஆணையர்
3. அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மாநில திட்டக் குழுத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
4. மாநில நிதிக்குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள்
சட்டமன்றம் தொடர்பானவை:
1. சட்டமன்ற கூட்டத் தொடரை ஆரம்பிக்கவும் ஒத்திவைக்கவும் ஆளுநருக்கு முதலமைச்சர் ஆலோசனை வழங்குகிறார்.
2. சட்டமன்றத்தில் அரசின் கொள்கைகளை அறிவிக்கிறார்.
3. சட்டமன்றத்தில் மசோதாக்களை அறிமுகப்படுத்துகிறார்.
4. எந்நேரத்திலும் சட்டமன்றத்தைக் கலைக்க ஆளுநருக்குப் பரிந்துரை செய்கிறார்.
32.
33.
1. தென்னாப்பிரிக்காவில் இரு முக்கிய அரசியல் கட்சிகள் செயல்பட்டன. அவை பெரும்பாலும் ஆங்கிலேயர்களைக் கொண்ட யூனியனிஸ்ட் கட்சி மற்றும் ஆப்பிரிக்கநேர்ஸ் என்றழைக்கப்பட்ட போயர்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருந்த தென்னாப்பிரிக்கக் கட்சி.
2. முதல் பிரதம மந்திரியான போதா, தென்னாப்பிரிக்கக் கட்சியைச் சேர்ந்தவர். அவர் ஆங்கிலேயருடன் ஒத்துழைத்து ஆட்சியை நடத்தினார்.
3. ஆனால் தென்னாப்பிரிக்கக் கட்சியைச் சேர்ந்த போராடும் குணமிக்க ஒரு பிரிவினர் ஹெர்சாக் என்பவரின் தலைமையின் கீழ் தேசியக் கட்சி எனும் கட்சியைத் தொடங்கினர்.
4. 1920ஆம் ஆண்டுத் தேர்தலில் தேசியக் கட்சி 44 இடங்களைக் கைப்பற்றியது. தென்னாப்பிரிக்கக் கட்சி ஸ்டீட்ஸ் என்பவரின் தலைமையில் 41 இடங்களில் வெற்றி பெற்றது.
5. இத்தருவாயில் ஆங்கிலேயர்கள் அதிகமிருந்த யூனியனிஸ்ட் கட்சி தென்னாப்பிரிக்கக் கட்சியுடன் இணைந்தது.
6. இதனால் போர்க்குணம் கொண்ட ஆப்பிரிக்கநேர்களின் கட்டுப்பாட்டில் இருந்த தேசியக் கட்சியைக் காட்டிலும் ஸ்மட்ஸ் பெரும்பான்மை பெற்றார்.
34.
| வ.எண் | வானிலை | காலநிலை |
| 1 | வானிலை என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள வளிமண்டலத்தின் தன்மையைக் குறிப்பதாகும். | காலநிலை என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியின் சுமார் 30-35 ஆண்டு சராசரி வானிலையைக் குறிப்பதாகும். |
| 2 | வெப்பம், மழைப்பொழிவு, ஈரப்பதம், காற்று, அழுத்தம் ஆகியவை ஒரு இடத்தின் வானிலையின் முக்கிய கூறுகள் ஆகும். | அட்சரேகை பரவல், கடலிலிருந்து அமைந்துள்ள தொலைவு, கடல் மட்டத்திலிருந்து உயரம், பருவக்காற்று, நிலத்தோற்றம், ஜெட் காற்றுகள் போன்றவை காலநிலையை காரணிகள் ஆகும். |
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards