10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 21/09/2019
இரண்டாம் உலகப்போர்
10ஆம் வகுப்பு Social Science / சமூக அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Social Science / சமூக அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Social Science Test

1.
உலக வங்கியின் இரு முக்கிய அங்கங்கள் யாவை?
2.
ஐநாவின் இதர முக்கியத் துணை அமைப்புகள் பற்றி குறிப்பிடுக
3.
அணு ஆயுதம் பரவல் - குறிப்புத் தருக
4.
அமெரிக்க ஜப்பான் மீது ஏன் குண்டு வீசியது?
5.
இத்தாலி எவ்வாறு சரணடைந்தது?
6.
ஜெர்மனி ரஷ்யாவின் மீது படையெடுத்தது பற்றி எழுதுக
7.
கடன் குத்தகை திட்டம் என்றால் என்ன?
8.
ஜெர்மனி ஏன் நீர்மூழ்கிக் கப்பற்படையை இங்கிலாந்துக்கு அனுப்பியது
9.
இரண்டாம் உலகப்போர் பற்றி விவரிக்கவும்
10.
மியூனிச் உடன்படிக்கை - குறிப்புத் தருக
11.
நேசநாடுகளும் அதன் தலையீடாக் கொள்கை பற்றி எழுதுக
12.
"உலகப்போர்கள்" என்று அழைக்கப்படக் காரணமென்ன?
13.
பன்னாட்டு நிதியமைப்பின் (IMF) நோக்கங்கள் யாவை?
14.
முதல் உலகப்போருக்குப் பிந்தைய உலகத்தின் மூன்று முக்கிய சர்வாதிகாரிகள் யாவர்?
15.
ஜெர்மனியுடன் தொடர்புடைய வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையின் முக்கியச் சரத்துக்களைக் குறிப்பிடுக.
1.
(i) உலக வங்கியின் இரு முக்கிய அங்கங்கள் புனரமைப்பு மற்றும் வளர்ச்சிக்கானப் பன்னாட்டு வங்கி (International Bank of Reconstruction and Development - IBRD) மற்றொன்று பன்னாட்டு வளர்ச்சி முகமை (International Development Association - IDA) ஆகியனவாகும்
(ii) இவையிரண்டுமே உலக வங்கி என்ற பெயரிலேயே குறிப்பிடப்படுகிறது
2.
(i) உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO), உலக சுகாதார நிறுவனம் (WHO), யூனெஸ்கோ (UNESCO) என்பனவாகும். யுனிசெப் (UNICEF) இது உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தையும் ஏனைய நலன்களையும் முன்னெடுக்கப் பணி செய்கிறது
(ii) மற்றொன்று ஐ.நா வளர்ச்சி திட்டம் (UNDP) இது வளர்ச்சித் திட்டங்களில் கவனம் குவிக்கிறது
3.
(i) அமெரிக்க ஐக்கிய நாடுகளும் சோவியத் யூனியனும் அதிகமான அணு ஆயுதங்களைப் பெருக்கும் போட்டியில் இறங்கின. அப்படிப்பட்ட ஆயுதங்களைப் பெருக்கிக் குவித்து வைத்தன
(ii) இதேபோல இங்கிலாந்தும் பிரான்சும் தங்களுக்கான அணு ஆயுதங்களைத் தயாரித்தனர். அதிக சக்தி வாய்ந்த ஆயுதங்களைக் கண்டுபிடிக்கவும் உற்பத்தி செய்யவும் உலகநாடுகள் பெருமளவுத் தங்கள் வளங்களை செலவு செய்தன
4.
(i) ஜப்பானிய படைத்தளபதிகள் சரணடைய மறுத்த போது அமெரிக்க ஜப்பானின் ஹிரோஸிமா நகர் மீது ஒரு அணுகுண்டை வீசியது இதன் பின்னரும் ஜப்பானியர் சரணடைய மறுத்ததால் மற்றொரு அணுகுண்டு நாகசாகி மீது வீசப்பட்டது
(ii) இறுதியாக ஜப்பான் ஆகஸ்ட் 15, 1945 இல் தங்களது சரணடைதலை அறிவித்தபின் செப்டம்பர் 2, 1945 இல் உலகப்போர் ஓர் முடிவுக்கு வந்தது
5.
(i) இத்தாலியில் முசோலினி புதிய இத்தாலி அரசு 1943 இல் நேச நாடுகளிடம் சரணடைந்தது
(ii) இருந்தபோதிலும் ஜெர்மனி வடக்கே ஒரு பொம்மை அரசை நிறுவி அதில் முசோலினியை அமரவைத்தது. 1945 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில் முசோலினி இத்தாலியக் கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டார்
6.
(i) 1941 ஆம் ஆண்டு ஜூன் திங்களில் ஜெர்மன் படைகள் ரஷ்யாவின் மீது படையெடுத்தன.
(ii) ஜெர்மன் மக்களைக் குடியேற்றுவதற்குத் தேவையான முக்கிய நிலப் பகுதிகளைப் பெறுதல், கம்யூனிச ஆட்சியை ஒழிப்பது, ரஷ்யாவின் இயற்கை வளங்களைக் குறிப்பாக எண்ணெய் வளங்களைக் கைப்பற்றுவது போன்ற நீண்டகால நோக்கங்களுடன் இப்படையெடுப்பு மேற்கொள்ளப்பட்டது
7.
(i) 1941 ஆம் ஆண்டு மார்ச் திங்களில் கடன் குத்தகை திட்டத்தைத் தொடங்கினார் அதன்படி கடன் எனும் பெயரில் ஆயுதங்கள், உணவுப் பண்டங்கள், ராணுவ உபகரணங்கள், ஏனைய பொருட்கள் இங்கிலாந்திற்கு அனுப்பி வைக்கப்படும்
(ii) அவை பயன்படுத்திய பின்னர் திருப்பிக் கொடுக்கப்பட்டுவிடும். இத்திட்டம் மிகப்பெருமளவிற்கு இங்கிலாந்தின் வளங்களைப் பெருக்கியது. 1941 - 1945 க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் இத்திட்டத்தின் கீழ் செய்யப்பட்ட உதவியின் மதிப்பு 46.5 பில்லியன் டாலர்களாகும்.
8.
(i) இங்கிலாந்து தனது பேரரசின் ஏனைய பகுதிகளில் இருந்தும் அமெரிக்காவிலிருந்தும் கடல்வழியாக இறக்குமதி செய்யப்படும் உணவுப்பண்டங்கள் கச்சாப் பொருட்கள் தொழிற்சாலை உற்பத்தி பொருள்கள் ஆகியவற்றையே பெரிதும் சார்ந்திருக்கிறது
(ii) இதனை தாக்குவதற்காக ஜெர்மனி நீர்மூழ்கிக் கப்பற்படையை அனுப்பி பெரும் சேதத்தை ஏற்படுத்தின
(iii) குறிப்பாக அட்லாண்டிக் பெருங்கடலில் இங்கிலாந்திற்குத் தேவையான பொருள்களை ஏற்றிவரும் பயணி கப்பல்களை அவை மூழ்கடித்தன
9.
(i) இரண்டாம் உலகப்போர் நவீனமான போராடும் டாங்குகள், போர்க்கப்பல்கள், விமானம் தாங்கிக் கப்பல்கள், நீர் மூழ்கி கப்பல்கள், போர் விமானங்கள் கனரக ராணுவ உபகரணங்கள்.
(ii) இவையனைத்தையும் உற்பத்தி செய்வதற்கு பெருமளவிலான வளங்கள் தேவைப்பட்டது
(iii) ராணுவ உபகரணங்களை நவீனப்படுத்துவதற்கு தேவையான கச்சாப் பொருட்களும் உற்பத்தித் திறன், தொழில் நுட்பம் ஆகியவையும் தேவைப்பட்டன
10.
(i) 1938 இல் இங்கிலாந்தின் பிரதம மந்திரி சேம்பர்லின் ஜெர்மனியோடு மியூனிச் உடன்படிக்கை மேற்கொண்டார்
(ii) இது செக்கோஸ்லோவாக்கியாவின் மீது படையெடுத்து அதன் ஜெர்மன் மொழி பேசும் பகுதியான சூடேட்டன்லாந்தை ஜெர்மனி இணைத்துக் கொண்டதை வெட்கமின்றி ஒத்துக் கொள்வதாக அமைந்தது
(iii) இருந்த போதிலும் 1939 இல் சோவியத் யூனியன் ஜெர்மனியுடன் ஒருவர் மீது மற்றொருவர் படையெடுப்பதில்லை என ஒப்பந்தம் செய்து கொண்டது
11.
(i) இத்தாலியும் ஜப்பானும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டன. இத்தாலி 1935 - இல் எத்தியோப்பியா மீதும் 1939 - இல் அல்பேனியா மீதும் படையெடுத்தது, எத்தியோப்பிய பேரரசர் ஹெய்லி செலாஸ்ஸி சர்வதேச சங்கத்திடம் முறையிட்டார்
(ii) ஆனால் அவருக்கு எவ்வித உதவியும் கிட்டவில்லை. கிழக்கு பகுதிகளில் ஜப்பான் ராணுவ விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டது. 1931 - இல் ஜப்பானின் மஞ்சூரியாவின் மீது படையெடுத்தது
(iii) 1937 இல் சீனாவை தாக்கி பெய்ஜிங்கை முற்றுகையிட்டது. இந்நவடிக்கைகள் அனைத்தும் நேசநாடுகளால் கண்டு கொள்ளப்பட்டு புறக்கணிக்கப்பட்டன
12.
1. முதல் உலகப்போர் 1914 இல் தொடங்கி 1918 வரையும், இரண்டாம் உலகப்போர் 1939 இல் தொடங்கி 1945 வரையும் நடைபெற்றது.
2. உலகம் ஏற்கனவே பல போர்களை சந்தித்திருந்தாலும் இவ்விரு போர்கள் மட்டுமே உலகப்போர்கள் எனக் குறிப்பிடப்படுகின்றன.
3. ஏனெனில் இவ்விரு போர்களிலும் மோதல்கள் நடைபெற்ற பகுதிகள் பரந்து விரிந்ததாக இருந்தன.
4. மேலும் இப்போர்களினால் உயிரிழந்த ஆயுதமேந்திப் போரிட்டோர், பொதுமக்கள் ஆகியோரின் இறப்பு எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது.
5. தவிரவும் இவ்விரு போர்களும் ஐரோப்பிய, ஆசிய, ஆப்பிரிக்கக் கண்டங்களில் பல முனைகளில் நடைபெற்றன.
13.
1. உலக அளவில் நிதி சார்ந்த ஒத்துழைப்பைப் பேணுவது.
2. நிதிநிலையை உறுதியானதாக வைத்திருத்தல்.
3. பன்னாட்டு வணிகத்திற்கு வழிவகைகள் ஏற்படுத்திக் கொடுப்பது.
4. வேலை வாய்ப்பினைப் பெருக்குவது.
5. நீடித்த பொருளாதார வளர்ச்சியை அடைதல்.
6. உலகம் முழுவதிலும் வறுமையை ஒழிப்பது என்பனவாகும்.
14.
1. முசோலினி (இத்தாலி)
2. ஹிட்லர் (ஜெர்மனி)
3. பிராங்கோ (ஸ்பெயின்)
15.
ஜெர்மனியுடன் தொடர்புடைய வெர்செய்ல்ஸ் உடன்படிக்கை 1919:
1919 ஆம் ஆண்டு ஜூன் திங்களில் கையெழுத்தான வெர்செய்ல்ஸ் உடன்படிக்கையோடு முதல் உலகப்போர் முடிவுற்றது அதன் சரத்துக்கள் ஜெர்மன் மக்களிடையே பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியது.
(i) ஜெர்மனி தனது மேற்கு, வடக்கு, கிழக்கு ஆகிய எல்லைகளில் பல பகுதிகளை விட்டுத்தரக் கட்டாயப்படுத்தப்பட்டது
(ii) ஜெர்மனி ஆயுதக் குறைப்புக்கு உள்ளாக்கப்பட்டு மிக்க குறைந்த அளவிலான படைகளை மட்டுமே வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. (காலாட்படை, கப்பற்படை, விமானப்படை)
(iii) நேச நாடுகளுக்கு போரில் ஏற்பட்ட ராணுவ வீரர்கள், பொதுமக்களின் உயிர் இழப்பிற்காக ஜெர்மனி நஷ்டஈடு வழங்கவேண்டுமென எதிர்பார்க்கப்பட்டது. போர் இழப்பானது 10 மில்லியன் டாலர் என இங்கிலாந்தாலும், 16 மில்லியன் டாலர் என அமெரிக்காவிலும் கணக்கிடப்பட்டது
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards