10th Standard Syllabus & Materials
10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 26/02/2020
10 ஆம் வகுப்பு கணிதம் அனைத்து பாட Book back மற்றும் creative முக்கிய வினாக்கள் 2019 -2020 ( 10th Standard Mathematics Tamil Medium Book Back and Creative Important Questions All Chapter 2019 - 2020 )
10ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
\(\sqrt { 3 } \) ஒரு விகிதமுறா மூலம் என நிரூபி.
2.
சார்பு f: [-7, 6) ⟶ R கீழ்கண்டவாறு வரையறுக்கப்பட்டுள்ளது.
\(f(x)=\begin{cases} { x }^{ 2 }+2x+1\quad -7\le x<-5 \\ x+5\quad \quad \quad \ -5\le x\le 2 \\ x-1\quad \quad \quad \quad 2<x\le 6 \end{cases}\)
பின்வருவனவற்றைக் காண்.
f(-7) - f(-3)
3.
A(2, -2) மற்றும் B(-7, 4) ஐச் சேர்க்கும் கோட்டுத் துண்டினை முப்பிரிவுகளாகப் பிரிக்கும் புள்ளிகளின் ஆய அச்சுத் தொலைவுகளைக் காண்க.
4.
AD 丄 BC எனில், AB2+CD2 = BD2+AC2 என நிரூபிக்க.
5.
கீழ்க்காணும் புள்ளிகள் ஒரே நேர்க்கோட்டில் அமையுமா எனத் தீர்மானிக்கவும்.
(a, b + c), (b, c + a) மற்றும் (c, a + b)
6.
BC -யின் மையப்புள்ளி D மற்றும் AE ⊥ BC. BC = a, AC = b, AB = c, ED = x, AD = p மற்றும் AE = h, எனில்
b2 = p2 + ax + \(\frac { { a }^{ 2 } }{ 4 } \)
7.
கொடுக்கப்பட்ட முக்கோணம் PQR -க்கு ஒத்த பக்கங்களின் விகிதம் \(\frac { 7 }{ 4 } \) என அமையுமாறு ஒரு வடிவொத்த முக்கோணம் வரைக. (அளவு காரணி \(\frac { 7 }{ 4 } >1\))
8.
ஒரு குறிப்பிட்ட தொடரின் முதல் ‘n’ உறுப்புகளின் கூடுதல் 2n2 - 3n எனில், அது ஒரு கூட்டுத் தொடர்வரிசை என நிரூபிக்க.
9.
6x3 - 30x2 + 60x - 48 மற்றும் 3x3 - 12x2 + 21x - 18 ஆகிய பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பெ.வ காண்க.
10.
X = {3, 4, 6, 8} என்க. R = {(x,f(x)) | x∈X, f(x) = x2 + 1} என்ற உறவானது X –லிருந்து N-க்கு ஒரு சார்பாகுமா?
11.
பின்வருவனவற்றுள் எவை கூட்டுத் தொடர் வரிசை அமைக்கும்? கூட்டுத் தொடர் எனில் அடுத்த இரண்டு உறுப்புகளைக் காண்
4,10,16,22,....
12.
A = {1, 2, 3, 4}, B = {-1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12}, R = {(1, 3), (2, 6), (3, 10), (4, 9)} ⊆ A x B என்பது ஓர் உறவு என்க. இந்த சார்பின் மதிப்பகம், துணை மதிப்பகம், வீச்சகம் இவற்றைக் காண்.
13.
A (-5, 7), B (-4, -5), C (-1, -6) மற்றும் D (4, 5) உச்சிகளைக் கொண்ட நாற்கரத்தின் பரப்பு காண்க.
14.
படத்தில் PQ||RS எனில் ΔPQ ∼ ΔSOR என நிரூபிக்க
15.
f o f(k) = 5, f(k) = 2k - 1 எனில், k -யின் மதிப்பைக் காண்க.
16.
பின்வருவனவற்றிற்கு மீ.சி.ம காண்க
(i) 8x4y2, 48x2y4
(ii) 5x - 10, 5x2 - 20
(iii) x4 - 1, x2 - 2x + 1
(iv) x3 - 27, (x - 3)2, x2 - 9
17.
A ன் வரிசை 3 x 4 மற்றும் B ன் வரிசை 4 x 3 எனில் BA ன் வரிசை
3 x 3
4 x 4
4 x 3
வரையறுக்கப்படவில்லை
18.
படத்தில் உள்ளவாறு O -வை மையமாகக் கொண்ட வட்டத்தின் தொடுகோடு PR எனில், ㄥPOQ ஆனது

1200
1000
1100
900
19.
\(A=\left( \begin{matrix} 1 \\ 3 \end{matrix}\begin{matrix} 2 \\ 2 \end{matrix}\begin{matrix} 3 \\ 1 \end{matrix} \right) ,B=\left( \begin{matrix} 1 \\ 2 \\ 0 \end{matrix}\begin{matrix} 0 \\ -1 \\ 2 \end{matrix} \right) \) மற்றும் \(C=\left( \begin{matrix} 0 \\ -2 \end{matrix}\begin{matrix} 1 \\ 5 \end{matrix} \right) \) எனில், பின்வருவனவற்றுள் எவை சரி?
(i) \(AB+C=\left( \begin{matrix} 5 & 5 \\ 5 & 5 \end{matrix} \right) \)
(ii) \(BC=\left( \begin{matrix} 0 \\ 2 \\ -4 \end{matrix}\begin{matrix} 1 \\ -3 \\ 10 \end{matrix} \right) \)
(iii) \(BA + C=\left( \begin{matrix} 2 \\ 3 \\ \end{matrix}\begin{matrix} 5 \\ 0 \\ \end{matrix} \right) \)
(iv) \((AB)C=\left( \begin{matrix} -8 \\ -8 \end{matrix}\begin{matrix} 20 \\ 13 \end{matrix} \right) \)
(i) மற்றும் (ii) மட்டும்
(ii) மற்றும் (iii) மட்டும்
(iii) மற்றும் (iv) மட்டும்
அனைத்தும்
20.
(13 + 23 + 33+ ...+ 153) - (1 + 2 + 3+....+15) யின் மதிப்பு _______.
14400
14200
14280
14520
21.
சாய்வைப் பயன்படுத்தி நாற்கரமானது ஓர் இணைகரமாக உள்ளது எனக் கூற நாம் காண வேண்டியவை
இரு பக்கங்களின் சாய்வுகள்
இரு சோடி எதிர் பக்கங்களின் சாய்வுகள்
அனைத்துப் பக்கங்களின் நீளங்கள்
இரு பக்கங்களின் சாய்வுகள் மற்றும் நீளங்கள்
22.
(a + 2, 4) மற்றும் (5, 2a + b) ஆகிய வரிசைச் சோடிகள் சமம் எனில் (a, b) என்பது _____.
(2,-2)
(5,1)
(2,3)
(3,-2)
23.
ஏழு வருடங்களுக்கு முன்பு வருணின் வயது சுவாதி வயதின் வர்க்கத்தைப் போல் 5 மடங்கு 3 வருடங்களுக்குப் பின் சுவாதியின் வயது வருணின் வயதில் ஐந்தில் இரு பங்கு எனில் அவர்களின் தற்போதைய வயதைக் காண்.
24.
ஒரு கூட்டுத் தொடரில் முதல் உறுப்புகளின் கூடுதல் 1050, முதல் உறுப்பு 10 எனில், 20வது உறுப்பைக் காண்.
25.
சார்பு f: [1, 6) ⟶ R ஆனது பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது.
\(f(x)=\begin{cases} 1+x,\quad \quad \quad \quad \quad \quad 1\le x<2 \\ 2x-1,\quad \quad \quad \quad \quad 2\le x<4 \\ { 3x }^{ 2 }-10,\quad \quad \quad \quad 4\le x<6 \end{cases}\quad =x\epsilon R:1\le x<6)\)
எனில் பின்வருவனவற்றின் மதிப்பை காண்.
f (2) - f(4)
26.
கீழ்கண்ட புள்ளிகள் ஒரு இணைகரத்தின் உச்சிகள் எனில் a,b-ன் மதிப்புகளைக் காண்.
A(-2, -1), B(a, 0), C(4, b) மற்றும் D(1, 2)
27.
ஓர் ஏணியானது சுவர் மீது சாய்ந்து வைக்கப்படுகிறது. அதனுடைய கீழ்முனை சுவரிலிருந்து 2.5 மீ தூரத்தில் உள்ளது எனில் அதனுடைய உச்சி 6 மீ உயரத்தில் உள்ள ஜன்னலை தொடுகிறது. ஏணியின் நீளம் காண்க.
28.
6 செ.மீ விட்டமுள்ள வட்டம் வரைந்து வட்டத்தின் மையத்திலிருந்து 8 செ.மீ தொலைவில் P என்ற புள்ளியைக் குறிக்கவும். அப்புள்ளியிலிருந்து PA மற்றும் PB என்ற இரு தொடுகோடுகள் வரைந்து அவற்றின் நீளங்களை அளவிடுக.
29.
y = x2 - 4 வரைபடம் வரைந்து, அதனைப் பயன்படுத்தி x2 - x - 12 = 0 என்ற சமன்பாட்டைத் தீர்க்கவும்.
1.
\(\sqrt { 3 } \)=\(\frac {p}{q }\)
\(\sqrt { 3 } \)=\(\frac {p}{q }\)(q≠0) (p மற்றும் q என்பன சார்பகா எண்கள்)
எனவே, \(\sqrt { 3 } \)=\(\frac {p}{q }\)
\(\sqrt { 3 } \)q =p
இருபுறமும் வர்க்கப்படுத்த,
(\(\sqrt { 3 } \)q)2=p2
3q2=p2 ....(1)
q2=\(\frac{p^2}{3}\)
எனவே, 3 ஆனது p2-யை வகுக்கும் 3 ஆனது p-யையும் வகுக்கும்.
எனவே, \(\frac{p}{q}\)=c என்க
p=3c
நமக்குத் தெரியும்
3q2=p2
p=3c என (1)-ல் பிரதியட
3q2=(3c)2
3q2=9c2
q2=\(\frac{1}{3}\)x9x2
q2=3c2
\(\frac{q^2}{3}=c^2\)
எனவே 3 ஆனது q2 ஐ வகுக்கும்
அதனால், 3 ஆனது q ஐயும் வகுக்கும் ...(3)
முரண்பாட்டினால் \(\sqrt { 3 } \) ஆனது விகிதமுறா எண்
2.
\(f(x)=\begin{cases} { x }^{ 2 }+2x+1\quad : -7\le x<-5 \\ x+5\quad \quad \quad\quad: -5\le x\le 2 \\ x-1\quad \quad \quad \quad2<x\le 6 \end{cases}\)
f(-7) = x2 + 2x +1
= (-7)2 + 2(-7) + 1
= 49 - 14 + 1 = 36
f(3) = x + 5 = -3 + 5 = 2
f(-7) - f(-3) = 36 - 2 = 34
3.
P, Q என்ற புள்ளிகள் AB கோட்டினை
AP = PQ = QB எனப் பிரிப்பதாகக் கொள்வோம்.
எனவே P ஆனது AB ஐ உட்புறமாக 1:2 என்ற விகிதத்தில் பிரிக்கிறது. எனவே, P பிரிவு சூத்திரத்தைப் பயன்படுத்தி
\(P(x,y)=\left[ \frac { 1(-7)+2(2) }{ 1+2 } ,\frac { 1(7)+2(-2) }{ 1+2 } \right] \) i.e., (-1, 0)
மேலும் Q ஆனது AB இன் உட்புறமாக 2:1 என்ற விகிதத்தில் Q பிரிக்கிறது.
\(\therefore Q(x,y)=\left[ \frac { 2(-7)+1(2) }{ 2+1 } ,\frac { 2(4)+(-2) }{ 2+1 } \right] \) i.e., (-4, 2)
∴ AB கோட்டினை P(-1, 0) மற்றும் (-4, 2) புள்ளிகள் மூன்றும் பிரிவுகளாகப் பிரிக்கின்றன.
4.
ΔADC யில்
AC2 = AD2 + CD2 ...(1)
(பிதாகரஸ் தேற்றத்தின்படி)
ΔADB யில்,
AB2 = AD2 + BD2 ...(2)
(பிதாகரஸ் தேற்றத்தின்படி)
(1) ஐ (2) லிருந்து கழிக்க
AB2 - AC2 = BD2 - CD2
AB2 + CD2 = BD2 + AC2
5.
கொடுக்கப்பட்ட புள்ளிகள் (a, b + c), (b, c + a) மற்றும் (c, a + b)
முக்கோணத்தின் பரப்பளவு \(=\frac{1}{2}\left[x_1\left(y_2-y_3\right)+x_2\left(y_3-y_1\right)+x_3\left(y_1-y_2\right)\right] \)
\(=\frac{1}{2}[a(c+a-a-b)+b(a+b-b-c) +c(b+c-c-a)] \)
\(=\frac{1}{2}[a(c-b)+b(a-c)+c(b-a)] \)
\(=\frac{1}{2}[a c-a b+a b-b c+b c-a c] \)
\(=\frac{1}{2}(0)=0\)
முக்கோணத்தின் பரப்பளவு பூச்சியம் என்பதால், புள்ளிகள் ஒரே கோட்டமைப் புள்ளிகளாகும்.
6.
\(\angle A E D=90^{\circ}[\because A E \perp B C]\)
\(\mathrm{BC}=\mathrm{a}, \mathrm{AC}=\mathrm{b}, \mathrm{AB}=\mathrm{c}, \mathrm{ED}=\mathrm{x}, \mathrm{AD}=\mathrm{p}\) மற்றும் AE = h என தரப்பட்டுள்ளது.
ΔAEC இல், பிதாகரஸ் தேற்றத்தின்படி
\(A C^2=\mathrm{AE}^2+\mathrm{EC}^2 \)
\(\mathrm{AC}^2=\mathrm{AE}^2+(\mathrm{ED}+\mathrm{DC})^2 \)
\(\mathrm{AC}^2=\mathrm{AE}^2+\mathrm{ED}^2+\mathrm{DC}^2+2 \cdot \mathrm{ED} \cdot \mathrm{DC} \)
\(\mathrm{AC}^2=\left(\mathrm{AE}^2+\mathrm{ED}^2\right)+\mathrm{DC}^2+2 \mathrm{ED} \cdot \mathrm{DC} \)
\(\mathrm{AC}^2=\mathrm{AD}^2+\mathrm{DC}^2+2 \mathrm{ED} \cdot \mathrm{DC} \)
\(\mathrm{AC}^2=\mathrm{AD}^2+\left(\frac{1}{2} B C\right)^2+2\left(\frac{1}{2} B C\right) D E\)
[∵ D ஆனது BC இன் மையப்புள்ளி, BD = DC]
\(\mathrm{AC}^2 =\mathrm{AD}^2+\mathrm{BC} \cdot \mathrm{DE}+\frac{1}{4} B C^2 \)
\(\mathrm{~b}^2 =\mathrm{P}^2+\mathrm{ax}+\frac{1}{4} a^2 \)
\(\mathrm{~b}^2 =\mathrm{P}^2+\mathrm{ax}+\frac{a^2}{4}\)
7.

கொடுக்கப்பட்ட \(\triangle\)PQR -ன் பக்கங்களைப் போல் \(\frac { 7 }{ 4 } \) பங்கு அளவுடைய ஒத்த பக்கங்களைக் கொண்ட மற்றொரு முக்கோணத்தை அமைப்போம்.
வரைதலின் படிகள்
1. ஏதேனும் ஓர் அளவைக் கொண்டு ΔPQR வரைக.
2. QR என்ற கோட்டுத்துண்டில் குறுங்கோணத்தை ஏற்படுத்துமாறு, QX என்ற கதிரை P என்ற முனைப் புள்ளிக்கு எதிர் திசையில் வரைக.
3. QX யின் மீது Q1, Q2, Q3, Q4, Q5, Q6 மற்றும் Q7 என்ற 7 புள்ளிகளை (\(\frac { 7 }{ 4 } \) யில் 7 மற்றும் 4 ஆகியவற்றில் பெரியது)
QQ1 = Q1Q2 = Q2Q3 = Q3Q4 = Q4Q5 = Q5Q6 = Q6Q7 என்றவாறு குறிக்கவும்.
4. Q4 ஐ (4-வது புள்ளி, அதாவது \(\frac { 7 }{ 4 } \) யில் 4 மற்றும் 7 ஆகியவற்றில் சிறியது) புள்ளி R –வுடன் இணைக்க Q4R -க்கு இணையாக Q7-லிருந்து வரையப்படும் கோடு QR ஐ R'–ல் சந்திக்கிறது.
5. R'லிருந்து RP–க்கு இணையாக வரையப்படும் கோடு QP–ஐ P'–யில் சந்திக்கிறது. ΔP′QR'–யின் பக்கங்கள் ΔPQR –ன் ஒத்த பக்கங்களின் அளவில் 4–ல் 7 பங்கு ஆகும்.
6. ΔP'QR' ஆனது தேவையான வடிவொத்த முக்கோணம் ஆகும்.
8.
முதல் n உறுப்புகளின் கூடுதல்
\(\mathrm{S}_n =2n^2-3n \)
∴ முதல் உறுப்பு S1 = 2(1)2 - 3(1) = 2 - 3 = - 1 = t1
முதல் இரு உறுப்புகளின் கூடுதல்
\(\mathrm{S}_2 =2(2)^2-3(2) \)
= 8 - 6 = 2
\(\therefore \quad \mathrm{t}_2 =\mathrm{S}_2-\mathrm{S}_1 \)
\(=2-(-1)=2+1 \)
\(\mathrm{t}_2 =3\)
முதல் மூன்று உறுப்புகளின் கூடுதல்
\(\mathrm{S}_3 =2(3)^2-3(3) \)
\(=18-9=9 \)
\(\therefore \mathrm{t}_3 =\mathrm{S}_3-\mathrm{S}_2=9-2 \)
\(\mathrm{t}_3 =7 \)
இங்கு \(\mathrm{t}_2-\mathrm{t}_1 =3-(-1)=3+1=4 \)
\( \mathrm{t}_3-\mathrm{t}_2 =7-3=4 \)
\(\therefore \mathrm{t}_2-\mathrm{t}_1 =\mathrm{t}_3-\mathrm{t}_2.\)
∴ இது ஒரு கூட்டுத்தொடர்வரிசை ஆகும்.
9.
f(x) = 6x3 - 30x2 + 60x - 48 = 6(x3 - 5x2 + 10x - 8) மற்றும்
g(x) = 3x3 - 12x2 + 21x - 18 = 3 (x3 - 4x2 + 7x - 6) என இருப்பதால், தற்பொழுது நாம்
x3 - 5x2 + 10x - 8 மற்றும் x2 - 4x2 + 7x - 6 என்ற பல்லுறுப்புக் கோவைகளின் மீ.பெ.வ காண்போம்.

இங்கு தலையாயக் கெழுக்கள் 3 மற்றும் 6 -ன் மீ.பெ.வ 3 ஆகும்
எனவே, மீ.பெ.வ [(6x3 - 30x2 + 60x - 48, 3x3 - 12x2 + 21x - 18)] = 3(x - 2)
10.
கொடுக்கப்பட்டது X = {3,4,6,8}
உறவு \(\mathrm{R}=\left\{(x, f(x)) / x \in X, f(x)=x^2+1\right\}\)
x = 3 எனும்போது, \(\mathrm{f}(3)=(3)^2+1=9+1=10 \in N\)
x = 4 எனும்போது, \(\mathrm{f}(4)=(4)^2+1=16+1=17 \in N \)
x = 6 எனும்போது, \(\mathrm{f}(6)=(6)^2+1=36+1=37 \in N\)
x = 8 எனும்போது, \(\mathrm{f}(8)=(8)^2+1=64+1=65 \in N\)
\(R=\{(3,10),(4,17),(6,37),(8,65)\}\)
X-ன் எல்லா உறுப்புகளும் இயல் எண்களை நிழல் உருக்களாகக் கொண்டிருப்பதால், X -லிருந்து N-க்கான உறவு ஒரு சார்பாகும்.
11.
4,10,16,22,..
இங்கு a2-a2=10-4=6
a3-a2=16-10=6
a4-a3=22-16=6
∴ அது ஒரு A.P. பொது வித்தியாசம் 6.
∴ அடுத்து இரண்டு உறுப்புகள், \(\underline { 28 } ,\underline { 34 } .\)
12.
R-ன் மதிப்பகம் = {1, 2, 3, 4}
R-ன் துணை மதிப்பகம் = B = {-1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12}
R-ன் வீச்சகம் = {3, 6, 10, 9}
13.
B, D ஐ இணைப்பதால் ΔABD, ΔBCD கிடைக்கின்றன.
இப்பொழுது ΔABD - ன் பரப்பு
= \(\frac { 1 }{ 2 } \) [-5(- 5 - 5) + (-4) (5 - 7) + 4 (7 + 5 )]
= \(\frac { 1 }{ 2 } \) (50 + 8 + 48)
= \(\frac { 106 }{ 2 } \) = 53 சதுர அலகுகள்
மேலும் ΔBCD யின் பரப்பு
= \(\frac { 1 }{ 2 } \) [-4 (- 6 - 5) - 1 (5 + 5) + 4 (-5 + 6)]
= \(\frac { 1 }{ 2 } \) (44 - 10 + 4)
= 19 சதுர அலகுகள்
ஆகையால் நாற்கரம் ABCD-ன் பரப்பு
= 53 + 19 = 72 சதுர அலகுகள்
14.
PQ||RS
அதனால், ∠P = ∠S (ஒன்றுவிட்ட கோணங்கள்)
∠Q = ∠R
∠PQR = ∠SOR(குத்தெதிர் கோணங்கள் சமம்)
∴ ΔPOQ∼ΔSOR (AAA விதிமுறைப்படி)
15.
f o f(k) = f(f(k)) = 2(2k - 1) - 1 = 4k - 3
எனவே, f o f(k) =4k - 3
ஆனால் f o f(k) = 5 எனக் கொடுக்கப்பட்டுள்ளது.
\(4 k-3=5 \Rightarrow k=2\)
16.
(i) 8x4y2, 48x2y4
முதலில் நாம் எண் கெழுக்களின் மீ.சி.ம காண்போம்.
அதாவது, மீ.சி.ம (8, 48) = 2 x 2 x 2 x 6 = 48
இப்பொழுது உறுப்புகளில் உள்ள மாறிகளுக்கு மீ.சி.ம காண்போம்.
அதாவது மீ.சி.ம (x4y2, x2y4) = x4y4
எண்கெழுக்களின் மீ.சி.ம மற்றும் மாறிகளின் மீ.சி.ம ஆகியவற்றின் பெருக்கற்பலன் கொடுக்கப்பட்ட கோவைகளின் மீ.சி.ம ஆகும். எனவே, மீ.சி.ம (8x4y2, 48x2y4) = 48x4y4
(ii) (5x - 10), (5x2 - 20)
5x - 10 = 5(x - 2)
5x2 - 20 = 5(x2 - 4) = 5(x + 2)(x - 2)
எனவே,மீ.சி.ம [(5x - 10), (5x2 - 20)] = 5(x + 2)(x - 2)
(iii) (x4 - 1), x2 - 2x + 1
x4 - 1 = (x2)2 - 1 = (x2 + 1)(x2 - 1) = (x2 + 1)(x + 1)(x - 1)
x2 - 2x + 1 = (x - 1)2
எனவே, மீ.சி.ம [(x4 - 1), (x2 - 2x + 1)] = (x2 + 1)(x + 1)(x - 1)2
(iv) x3 - 27, (x - 3)2, x2 - 9
x3 - 27 = (x - 3)(x2 + 3x + 9); (x - 3)2 = (x - 3)2; (x2 - 9) = (x + 3)(x - 3)
எனவே, மீ.சி.ம [(x3 - 27), (x - 3)2, (x2 - 9) = (x - 3)2 (x + 3)(x2 + 3x + 9)
17.
(a)
3 x 3
18.
60 x 2 = 120o
19.
AB = \(\left(\begin{array}{rr} 1 & 2 & 3 \\ 3 & 2 & 1 \end{array}\right) \left[\begin{array}{rr} 0 & 1 \\ 2 & -1 \\ 0 & 2 \end{array}\right] \)
\(=\left[\begin{array}{rr} 1+4+0 \ \ 0-2 + 6 \\ 3+4+0 \ 0-2+2 \end{array}\right] =\left[\begin{array}{rr} 5 & 4 \\ 7 & 0 \end{array}\right] \)
\(\begin{gathered} A B+C=\left[\begin{array}{ll} 5 & 4 \\ 7 & 0 \end{array}\right]+\left(\begin{array}{rr} 0 & 1 \\ -2 & 5 \end{array}\right)=\left[\begin{array}{ll} 5 & 5 \\ 5 & 5 \end{array}\right] \\ \end{gathered}\)
இது சரி
(ii) \(\begin{gathered} B C=\left[\begin{array}{rr} 1 & 0\\ 2 & -1 \\ 0 & 2 \end{array}\right] \end{gathered}\left(\begin{array}{rr} 0 & 1 \\ -2 & 5 \end{array}\right)\)
\(=\left[\begin{array}{rr} 0+0 \ 1+0 \\ 0+2 \ 2-5 \\ 0-4 \ 0+7 \end{array}\right] =\left[\begin{array}{rr} 0 & 1 \\ 2 & -3 \\ -4 & 7 \end{array}\right] \)
இது சரி
(iii) BA \(=\left[\begin{array}{rr} 1 & 0\\ 2 & -1 \\ 0 & 2 \end{array}\right] \left(\begin{array}{rr} 1&2&3 \\ 3&2&1 \end{array}\right)\)
\(=\left[\begin{array}{rr} 1+0 & 2+0 & 3+0 \\2-3 & 4-2 &6-1 \\ 0+6 & 0+4 & 0+2 \end{array}\right] \)
\(=\left[\begin{array}{rr} 1 & 2& 3\\ -1 & 2 & -5 \\ 6&4&2 \end{array}\right]\)
BA + C காண இயலாது
(AB)C = \(=\left[\begin{array}{ll} 5 & 4 \\ 7 & 0 \end{array}\right]+\left(\begin{array}{rr} 0 & 1 \\ -2 & 5 \end{array}\right)=\left[\begin{array}{ll} 0-8 & 5+20 \\ 0+0 & 7+0 \end{array}\right] =\left[\begin{array}{ll} -8 & 25 \\ 0 & 7 \end{array}\right] \)
இது சரியல்ல எனவே (i) மற்றும் (ii) மட்டுமே சரியானது
20.
\(\left(1^3+2^3+3^3+\ldots+15^3\right)-(1+2+3+\ldots+15) \)
\(=\left[\frac{n(n+1)}{2}\right]^2-\left[\frac{n(n+1)}{2}\right] \)
\(=\left[\frac{15 \times 16}{2}\right]^2-\left[\frac{15 \times 16}{2}\right]=(120)^2-120\)
= 14400 - 120 = 14280
21.
(a)
இரு பக்கங்களின் சாய்வுகள்
22.
கொடுக்கப்பட்டது: (a + 2, 4) = (5, 2a + b)
\(\begin{array}{rl|rl} a+2 & =5 & 2 a+b & =4 \\ a & =5-2 & 2(3)+b & =4 \\ & =3 & b=4-6 & =-2 \end{array} \)
23.
ஏழு வருடங்களுக்கு முன்பு சுவாதியின் வயது = x ஆண்டுகள் என்க.
வருணின் வயது 5x2 ஆண்டுகள் என்க.
சுவாதியின் தற்போதைய வயது =x+7
வருணின் தற்போதைய வயது=(5x2+7)
3 ஆண்டுகளுக்கு பிறகு
சுவாதியின் வயது =x+7+3
= x+10
வருணின் வயது= 5x2+7+3
=5x2+10
3 ஆண்டுகளுக்குப் பிறகு சுவாதியின் வயது = \(\cfrac { 2 }{ 5 } \) வருணின் வயது
\(\therefore x+10=\cfrac { 2 }{ 5 } \left( { 5x }^{ 2 }+10 \right) \\ \)
x+10=2x2+4
2x2-x-6=0
2x(x-2)+3(x-2)=0
(2x+3)(x-2)=0
x-2=0
x=0(\(\because\) 2x+3 \(\neq \)0 ஏனெனில் x>0)
சுவாதியின் தற்போதைய வயது =(2+7)ஆண்டுகள்
= 9ஆண்டுகள்
வருணின் தற்போதைய வயது =(5X2+7) ஆண்டுகள்
= 27 ஆண்டுகள்
24.
இங்கு
S14=1050
n=14
a=10
sn=\(\frac{n}{2}\)(2a+(n-1)d)
1050=\(\frac{14}{2}\)(20+13d)
=140+91d
910=91d
d=10
a20=10+(20-1)x10
=20
∴ 20 வது உறுப்பு =200.
25.
f(2) = 2x - 1
= 2(2) -1 = 3
f(4) = 3x2 - 10
= 3 (42) - 10 = 38
∴ f(2) - f(4) = 3 - 38 = -35
26.
இணைகரத்தில் மூலைவிட்டங்கள் ஒன்றையொன்று இருசமக்கூறிடும். ∴ AC-ன் நடுப்புள்ளி = BD-ன் நடுப்புள்ளியின் ஆயத்தொலைவுகள்
\(\left( \frac { -2+4 }{ 2 } ,\frac { -1+b }{ 2 } \right) =\left( \frac { a+1 }{ 2 } ,\frac { 0+2 }{ 2 } \right) \)
\(\Rightarrow \left( 1,\frac { b-1 }{ 2 } \right) =\left( \frac { a+1 }{ 2 } ,1 \right) \)
\(\Rightarrow \frac { a+1 }{ 2 } \) = 1 ⇒ a + 1 = 2 ⇒ a = 1
\(\Rightarrow \frac { b-1 }{ 2 } \) = 1 ⇒ b - 1 = 2 ⇒ b = 3
27.
AB - ஏணி, CA - சுவர், A - ஜன்னல்,
மேலும், BC = 2.5 மீ மற்றும் CA = 6 மீ
பித்தாகரஸ் தேற்றத்தின்படி,
AB2 = BC2+ CA2
= (2.5)2 + (6)2
= 42.25
AB = 6.5
ஏணியின் நீளம் = 6.5 மீ.
28.
விட்டம் (d) = 6 செ.மீ எனக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆரம் \(\left( r \right) =\frac { 6 }{ 2 } \) = 3 செ.மீ

வரைமுறை
படி 1 : O-வை மையமாகக் கொண்டு 3 செ.மீ ஆரமுள்ள வட்டம் வரைக
படி 2 : 8 செ.மீ நீளமுள்ள OP என்ற ஒரு கோடு வரைக.
படி 3 : OP-க்கு மையக்குத்துக் கோடு வரைக. அது OP-ஐ M -ல் சந்திக்கும்.
படி 4 : M-யை மையமாகவும், MO-வை ஆரமாகவும் கொண்டு வரையப்படும் வட்டமானது முந்தைய வட்டத்தை A மற்றும் B -யில் சந்திக்கிறது.
படி 5 : AP மற்றும் BP யை இணைக்கவும். AP மற்றும் BP தேவையான தொடுகோடுகள் ஆகும். தொடுகோட்டின் நீளம் PA = PB = 7.4 செ.மீ.
சரிபார்த்தல் : செங்கோண முக்கோணம் OPA-யில் PA2 = OP2 - OA2 = 82 – 32 = 64 – 9 = 55
PA = \( \sqrt{55} = 7.4\) செ.மீ (தோராயமாக) .
29.
y = x2 - 4
அட்டவணை மதிப்புகள்
| x | -4 | -3 | -2 | -1 | 0 | 1 | 2 | 3 | 4 |
| x2 | 16 | 9 | 4 | 1 | 0 | 1 | 4 | 9 | 16 |
| -4 | -4 | -4 | -4 | -4 | -4 | -4 | -4 | -4 | -4 |
| y | 12 | 5 | 0 | -3 | -4 | -3 | 0 | 5 | 12 |
வரைபடத்தில் புள்ளிகளைக் குறிக்க, y = x2 - 4 என்ற வளைவரை கிடைக்கிறது.
x2 - x - 12 = 0, என்பதைத் தீர்க்க,
y = x2 - 4 லிருந்து \(x^2-x-12=0\) என்பதைக் கழிக்க.
\(y=x^2+0 x-4 \)
\(0=x^2-x-12 \)
一一一一一一一一
y = x + 8 என்ற சமன்பாடு நோ்க்கோட்டை குறிக்கிறது.
一一一一一一一一
y = x + 8 என்ற நேர்க்கோட்டிற்கான வரைபடம் வரைய வேண்டும்.
| x | -2 | -1 | 0 | 1 | 2 |
| y | 6 | 7 | 8 | 9 | 10 |
நேர்க்கோடு, பரவளையத்தை (4, 12) மற்றும் (-3, 5) ஆகிய புள்ளிகளில் சந்திக்கிறது.
தீர்வு : x = 4, -3
10th Standard Syllabus & Materials
10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Location, Relief and Drainage Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards