10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 26/02/2020
10 ஆம் வகுப்பு கணிதம் அனைத்து பாட முக்கிய வினா விடைகள்- 2020 ( 10th Standard Mathematics Tamil Medium Model Questions Full Chapter 2020 )
10ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
பின்வருவனவற்றுள் எவை கூட்டுத் தொடர் வரிசை அமைக்கும்? கூட்டுத் தொடர் எனில் அடுத்த இரண்டு உறுப்புகளைக் காண்
-2,2,-2,2,-2,....
2.
சார்பு f: [-7, 6) ⟶ R கீழ்கண்டவாறு வரையறுக்கப்பட்டுள்ளது.
\(f(x)=\begin{cases} { x }^{ 2 }+2x+1\quad -7\le x<-5 \\ x+5\quad \quad \quad \ -5\le x\le 2 \\ x-1\quad \quad \quad \quad 2<x\le 6 \end{cases}\)
பின்வருவனவற்றைக் காண்.
f(-7) - f(-3)
3.
A(6, 1), B(8, 2), C(9, 4) மற்றும் D(P, 3) என்பன ஒரு இணைகரத்தின் வரிசையாக எடுக்கப்பட்ட முனைப்புள்ளிகள் எனில், Pயின் மதிப்பைக் காண்.
4.
BL மற்றும் CM செங்கோணம் A வில் உள்ள முக்கோணம் ABC ன் நடுக்கோடுகள் 4(BL2 + CM2) = 5BC2 என நிரூபிக்க
5.
கிழக்கு நிழற்சாலை மற்றும் குறுக்குச் சாலைகளால் ஒரு வட்ட வடிவத் தோட்டம் சூழப்பட்டுள்ளது. குறுக்குச் சாலையானது வடக்கு தெருவை D-யிலும், கிழக்குச் சாலையை E-யிலும் சந்திக்கிறது. தோட்டத்திற்கு A(3,10) என்ற புள்ளியில் AD ஆனது தொடுகோடாக அமைகிறது. படத்தைப் பயன்படுத்தி
குறுக்குச் சாலை கீழ்க்கண்டவற்றைச் சந்திக்கின்ற புள்ளியைக் காண்க
(i) வடக்குத் தெரு
(ii) கிழக்கு நிழற்சாலை
6.
90 செ.மீ உயரமுள்ள ஒரு சிறுவன் விளக்கு கம்பத்தின் அடியிலிருந்து 1.2 மீ/வினாடி வேகத்தில் நடந்து செல்கிறான். தரையிலிருந்து விளக்கு கம்பத்தின் உயரம் 3.6 மீ எனில், 4 வினாடிகள் கழித்துச் சிறுவனுடைய நிழலின் நீளத்தைக் காண்க
7.
8.
A = {1,3,5}, B = {2,3} எனில்
(i) A x B மற்றும் B x A-ஐ காண்க.
(ii) A x B = B x A ஆகுமா? இல்லையெனில் ஏன்?
(iii) n(A x B) = n(B x A) = n(A) x n(B) எனக் காட்டுக.
9.
மூன்று மாறிகளில் அமைந்த நேரிய சமன்பாட்டு தொகுப்பிற்கு தீர்வு காணும் போது 0 = 0 என்பது போன்ற முற்றொருமை கிடைக்குமாயின் அந்த சமன்பாட்டு தொகுப்பிற்கு
தீர்வு இல்லை
ஒரே ஒரு தீர்வு
எண்ணற்ற தீர்வுகள்
இவற்றில் ஏதுமில்லை
10.
\(\Delta \) இரு வடிவொத்த முக்கோணங்கள் \(\Delta ABC\) மற்றும் \(\Delta PQR\) -யின் சுற்றளவுகள் முறையே 36 செ.மீ மற்றும் 24 செ.மீ ஆகும். PQ = 10 செ.மீ எனில், AB–யின் நீளம் _____.
\(6\cfrac { 2 }{ 3 } \) செ.மீ
\(\cfrac { 10\sqrt { 6 } }{ 3 } \) செ.மீ
\(6\cfrac { 2 }{ 3 } \) செ.மீ
15 செ.மீ
11.
\(\cfrac { x }{ { x }^{ 2 }-25 } -\cfrac { 8 }{ { x }^{ 2 }+6x+5 } \) –யின் சுருங்கிய வடிவம் _____.
\(\cfrac { x^{ 2 }-7x+40 }{ \left( x-5 \right) \left( x+5 \right) } \)
\(\cfrac { x^{ 2 }+7x+40 }{ \left( x-5 \right) \left( x+5 \right) (x+1) } \)
\(\cfrac { { x }^{ 2 }-7x+40 }{ \left( { x }^{ 2 }-25 \right) \left( x+1 \right) } \)
\(\cfrac { { x }^{ 2 }+40 }{ \left( { x }^{ 2 }-25 \right) \left( x+1 \right) } \)
12.
(13 + 23 + 33+ ...+ 153) - (1 + 2 + 3+....+15) யின் மதிப்பு _______.
14400
14200
14280
14520
13.
(5, 7), (3, p) மற்றும் (6, 6) என்பன ஒரு கோடமைந்தவை எனில், p–யின் மதிப்பு _______.
3
6
9
12
14.
(a + 2, 4) மற்றும் (5, 2a + b) ஆகிய வரிசைச் சோடிகள் சமம் எனில் (a, b) என்பது _____.
(2,-2)
(5,1)
(2,3)
(3,-2)
15.
ஏழு வருடங்களுக்கு முன்பு வருணின் வயது சுவாதி வயதின் வர்க்கத்தைப் போல் 5 மடங்கு 3 வருடங்களுக்குப் பின் சுவாதியின் வயது வருணின் வயதில் ஐந்தில் இரு பங்கு எனில் அவர்களின் தற்போதைய வயதைக் காண்.
16.
an=3+2n என்ற பொது உறுப்பைக் கொண்ட முதல் 24 உறுப்புகளின் கூடுதல் காண்க.
17.
A = {1, 2, 3, 4, 5}, B = N மற்றும் f : A ⟶ B ஆனது f(x) = x2 என வரையறுக்கப்படுகிறது. f-ன் வீச்சகத்தைக் காண். மேலும் f வகையைக் காண்.
18.
A(2, 3), B(4, k) மற்றும் (6, -3) ஒரே நேர்க்கோட்டில் அமைவன எனில் k-யின் மதிப்பு காண்க.
19.
ㄥACD = 90° மற்றும் CD 丄 AB. \(\frac { { BC }^{ 2 } }{ { AC }^{ 2 } } =\frac { AB }{ AD } \) என நிரூபிக்க.
20.
AB = 5.5 செ.மீ, ∠C = 25° மற்றும் உச்சி C-யிலிருந்து AB-க்கு வரையப்பட்ட குத்துக்கோட்டின் நீளம் 4 செ.மீ உடைய \(\Delta \)ABC வரைக.
21.
y = x2 - 4x + 3 - யின் வரைபடம் வரைந்து அதன்மூலம் x2 - 6x + 9 = 0 என்ற சமன்பாட்டைத் தீர்க்கவும்.
22.
ஓர் இயந்திரத்தின் தற்போதைய மதிப்பு 40,000 மற்றும் ஒவ்வொரு வருடமும் அதன் மதிப்பு 10% குறைகிறது. 6-வது வருடத்தில் இயந்திரத்தின் தோராய மதிப்பைக் காண்க.
23.
பின்வருவனவற்றுள் எவை கூட்டுத் தொடர் வரிசை அமைக்கும்? கூட்டுத் தொடர் எனில் அடுத்த இரண்டு உறுப்புகளைக் காண்
1,-1,-3,-5,....
24.
A = {1, 2, 3, 4}, B = {-1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12}, R = {(1, 3), (2, 6), (3, 10), (4, 9)} ⊆ A x B என்பது ஓர் உறவு என்க. இந்த சார்பின் மதிப்பகம், துணை மதிப்பகம், வீச்சகம் இவற்றைக் காண்.
25.
(x,y) எனும் புள்ளி (7, 1) மற்றும் (3, 5) லிருந்து சமதூரத்தில் உள்ளதெனில், x மற்றும் y இடையேயான உறவைக் காண்க.
26.
படத்தில் PQ||RS எனில் ΔPQ ∼ ΔSOR என நிரூபிக்க
27.
(1, -5) மற்றும் (4,2) என்ற புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டின் நடுப்புள்ளி வழியாகச் செல்வதும், கீழ்க்கண்டவற்றிற்கு இணையானதுமான நேர்க்கோட்டின் சமன்பாட்டைக் காண்க.
Y அச்சு
28.
சுருக்குக.
\(\cfrac { { x }^{ 3 }-{ y }^{ 3 } }{ { 3x }^{ 2 }+9xy+{ 6y }^{ 2 } } \times \cfrac { { x }^{ 2 }+2xy+{ y }^{ 2 } }{ { x }^{ 2 }-{ y }^{ 2 } } \)
29.
\(\Delta ABC\) யின் பக்கங்கள் AB மற்றும் AC-ல் அமைந்த புள்ளிகள் முறையே D மற்றும் E மேலும், AB = 5.6 செ.மீ, AD = 1.4 செ.மீ, AC = 7.2 செ.மீ மற்றும் AE = 1.8 செ.மீ எனில், DE||BC எனக் காட்டுக.
30.
கீழ்க்காணும் சமன்பாடுகளில் இருந்து x, y மற்றும் z –யின் மதிப்பைக் காண்க.
\(\left[\begin{matrix} 12 & 3 \\ x & 5 \end{matrix} \right] =\left[\begin{matrix} y & z \\ 3 & 5 \end{matrix} \right] \).
1.
-2,2,-2,2,-2
t2-t1=2-(-2)=4
t3-t2=-2-2=-4
t4-t3=2-(-2)=4
இது ஒரு கூட்டுத்தொடர் வரிசை அல்ல.
2.
\(f(x)=\begin{cases} { x }^{ 2 }+2x+1\quad : -7\le x<-5 \\ x+5\quad \quad \quad\quad: -5\le x\le 2 \\ x-1\quad \quad \quad \quad2<x\le 6 \end{cases}\)
f(-7) = x2 + 2x +1
= (-7)2 + 2(-7) + 1
= 49 - 14 + 1 = 36
f(3) = x + 5 = -3 + 5 = 2
f(-7) - f(-3) = 36 - 2 = 34
3.
இணைகரத்தில் மூலைவிட்டங்கள் இருசமக்கூறிடும்.
∴ AC யின் மையப்புள்ளி = BD-ன் மையப்புள்ளி
i.e., \(\left[ \frac { 6+9 }{ 2 } ,\frac { 1+4 }{ 2 } \right] =\left[ \frac { 8+p }{ 2 } ,\frac { 2+3 }{ 2 } \right] \)
\(\left[ \frac { 15 }{ 2 } ,\frac { 5 }{ 2 } \right] =\left[ \frac { 8+p }{ 2 } ,\frac { 5 }{ 2 } \right] \)
\(\frac { 15 }{ 2 } ,\frac { 8+p }{ 2 } \)
P = 7
4.
BL மற்றும் CM என்பன ΔABC யின் நடுக்கோடுகள்
A = ∠90°.
ΔABC யிலிருந்து
BC2 = AB2 + AC2 ...(1)
(பிதாகரஸ் தேற்றத்தின்படி)
ΔABL லிருந்து,
BL2 = AL2 + AB2
\(BL^{ 2 }={ \left( \frac { AC }{ 2 } \right) }^{ 2 }+{ AB }^{ 2 }\)....(1)
(L ஆனது BC யின் நடுப்புள்ளி)
\({ BL }^{ 2 }=\frac { { AC }^{ 2 } }{ 4 } +{ AB }^{ 2 }\)
4BL2 = AC2 + 4AB2 ...(2)
ΔCMA லிருந்து,
CM2 = AC2 + AM2
\({ CM }^{ 2 }={ AC }^{ 2 }+{ \left( \frac { AB }{ 2 } \right) }^{ 2 }\)
(M ஆனது AB யின் நடுப்புள்ளி)
\({ CM }^{ 2 }={ AC }^{ 2 }+\frac { { AB }^{ 2 } }{ 4 } \)
4CM2 = 4AC2 + AB2 ...(3)
(2) மற்றும் (3) ஐ கூட்ட கிடைப்பது
4(BL2 + CM2) = 5(AC2 + AB2)
4(BL2 + CM2) = 5BC2 [(1) லிருந்து]
5.
(i) குறுக்குச் சாலை மற்றும் வடக்குத் தெரு சந்திக்கும் புள்ளியைக் காணுதல்.
D(0, k) என்பது குறுக்குச் சாலையின் மேல் உள்ள புள்ளி ஆகும்.
எனவே, x = 0, y = k என குறுக்கு சாலையின் சமன்பாட்டில் பிரதியிட, நாம் பெறுவது
0 - 3k + 18 = 0
k = 6
எனவே, D ஆனது (0,6) ஆகும்
(ii) குறுக்குச் சாலை மற்றும் கிழக்கு நிழற்சாலை சந்திக்கும் புள்ளியைக் காணுதல்.
E-யின் ஆயப் புள்ளி (q, 2) என்க.
x = q, y = 2 எனக் குறுக்குச் சாலை சமன்பாட்டில் பிரதியிட
4q - 6 + 18 = 0
4q = -12 எனவே q = –3
ஆகவே, E என்ற புள்ளி (-3, 2)ஆகும்.
ஆதலால், குறுக்கு சாலையானது வடக்கு தெருவை D(0, 6) என்ற புள்ளியிலும், கிழக்கு நிழற்சாலையை E (-3, 2) என்ற புள்ளியிலும் சந்திக்கிறது.
6.

வேகம் = 1.2 மீ/வினாடி, என்பது கொடுக்கப்பட்டது.
நேரம் = 4 வினாடி,
தொலைவு = வேகம் × நேரம்
= 1.2 x 4 = 4.8 மீ
4 வினாடிகளுக்குப் பிறகு சிறுவனுடைய நிழலின் நீளம் x என்க
\(\Delta ABE\sim \Delta CDE\) ஆகையால்,\(\cfrac { BE }{ DE } =\cfrac { AB }{ CD } \) எனவே \(\cfrac { 4.8+x }{ x } =\cfrac { 3.6 }{ 0.9 } =4\) (90 செ.மீ = 0.9 மீ)
4.8 + x = 4x ⇒ 3x = 4.8 ஆகவே, x = 1.6 மீ
சிறுவனுடைய நிழலின் நீளம் DE = 1.6 மீ
7.

8.
A = {1,3,5} ,B = {2,3} எனக் கொடுக்கப்பட்டுள்ளன.
(i) A x B = {1,3,5} x {2,3} = {(1,2), (1,3), (3,2), (3,3), (5,2), (5,3)} .......(1)
B x A = {2,3} x {1,3,5} = {(2,1), (2,3), (2,5), (3,1), (3,3), (3,5)} .......(2)
(ii) (1) மற்றும் (2) -ன் மூலமாக A x B ≠ B x A ஏனெனில் (1,2) ≠ (2,1), (1,3) ≠ (3,1)...
(iii) n(A) = 3; n(B) = 2.
(1) மற்றும் (2)-லிருந்து நாம் காண்பது, n (A x B) = n (B x A) = 6;
n (A) x n (B) = 3 x 2 = 6 மற்றும் n (B) x n (A) = 2 x 3 = 6
எனவே, n (A x B) = n (B x A) = n(A) x n(B) = 6.
ஆகவே, n (A x B) = n (B x A) = n(A) x n(B).
9.
(a)
தீர்வு இல்லை
10.
\(\triangle A B C \sim \triangle P Q R\) எனில்,
\(\frac{A B}{P Q}=\frac{B C}{Q R}=\frac{A C}{P Q}=\) ΔABC இன் சுற்றளவு / ΔPQR இன் சுற்றளவு
AB + BC + CA = 36 செ. மீ
\(\mathrm{PQ}+\mathrm{QR}+\mathrm{PR}=\) 24 செ.மீ
\(\frac{A B}{P Q}=\frac{36}{24} \Rightarrow \frac{A B}{10}=\frac{36}{24} \)
\(\mathrm{AB}=\frac{36 \times 10}{24}\)
AB = 15 செ.மீ
11.
\(\frac{x}{x^2-25}-\frac{8}{x^2+6 x+5} =\frac{x}{(x+5)(x-5)}-\frac{8}{(x+5)(x+1)} \)
\(=\frac{x(x+1)-8(x-5)}{(x+5)(x-5)(x+1)} \)
\(=\frac{x^2+x-8 x+40}{(x+5)(x-5)(x+1)} \)
\(=\frac{x^2-7 x+40}{\left(x^2-25\right)(x+1)}\)
12.
\(\left(1^3+2^3+3^3+\ldots+15^3\right)-(1+2+3+\ldots+15) \)
\(=\left[\frac{n(n+1)}{2}\right]^2-\left[\frac{n(n+1)}{2}\right] \)
\(=\left[\frac{15 \times 16}{2}\right]^2-\left[\frac{15 \times 16}{2}\right]=(120)^2-120\)
= 14400 - 120 = 14280
13.
கொடுக்கப்பட்ட (5, 7), (3, p) மற்றும் (6,6) என்பன ஒரே கோடமைப் புள்ளிகள்
\(\therefore\) இப்புள்ளிகளால் அமையும் முக்கோணத்தின் பரப்பு பூச்சியம்.
அதாவது \(\frac{1}{2}\left\{x_1\left(y_2-y_3\right)+x_2\left(y_3-y_1\right)+x_3\left(y_1-y_2\right)\right\}=0\)
\(5(\mathrm{p}-6)+3(6-7)+6(7-\mathrm{p})=0 \)
\(5 \mathrm{p}-30-3+42-6 \mathrm{p}=0 \)
\(\Rightarrow-\mathrm{p}+9=0 \Rightarrow \mathrm{p}=9\)
14.
கொடுக்கப்பட்டது: (a + 2, 4) = (5, 2a + b)
\(\begin{array}{rl|rl} a+2 & =5 & 2 a+b & =4 \\ a & =5-2 & 2(3)+b & =4 \\ & =3 & b=4-6 & =-2 \end{array} \)
15.
ஏழு வருடங்களுக்கு முன்பு சுவாதியின் வயது = x ஆண்டுகள் என்க.
வருணின் வயது 5x2 ஆண்டுகள் என்க.
சுவாதியின் தற்போதைய வயது =x+7
வருணின் தற்போதைய வயது=(5x2+7)
3 ஆண்டுகளுக்கு பிறகு
சுவாதியின் வயது =x+7+3
= x+10
வருணின் வயது= 5x2+7+3
=5x2+10
3 ஆண்டுகளுக்குப் பிறகு சுவாதியின் வயது = \(\cfrac { 2 }{ 5 } \) வருணின் வயது
\(\therefore x+10=\cfrac { 2 }{ 5 } \left( { 5x }^{ 2 }+10 \right) \\ \)
x+10=2x2+4
2x2-x-6=0
2x(x-2)+3(x-2)=0
(2x+3)(x-2)=0
x-2=0
x=0(\(\because\) 2x+3 \(\neq \)0 ஏனெனில் x>0)
சுவாதியின் தற்போதைய வயது =(2+7)ஆண்டுகள்
= 9ஆண்டுகள்
வருணின் தற்போதைய வயது =(5X2+7) ஆண்டுகள்
= 27 ஆண்டுகள்
16.
an=3+2n
a1=3+2=5
a2=3+2x2=7
a3=3+2x3=9
எண் வரிசை 5,7,9,11,...
இங்கு, 7-5=9-7=11-9=2
இது ஒரு A.P d=2
S24=? n=24, a=5, d=2.
s24=\(\frac{24}{2}\)[2x5+(24-1)x2]
=12[10+46]=672.
∴ 24 உறுப்புகளின் கூடுதல் =672.
17.
A = {1, 2, 3, 4, 5}
B = {1, 2, 3, 4,....}|
f : A ⟶ B, f(x) = x2
∴ f (1) = 12 = 1
f (2) = 22 = 4
f (3) = 32 = 9
f (4) = 42 = 16
f (5) = 52 = 25
∴ f - ன் வீச்சகம் = {1, 4, 9, 16, 25}
வெவ்வேறான உறுப்புகள் வெவ்வேறு நிழல் உருக்களோடு தொடர்புபடுத்தப்பட்டுள்ளதால் இது ஒன்றுக்கு ஒன்றான சார்பு ஆகும். மேலும் 3 ∈ B இருப்பினும் f(x) = x2 = 3 என்பதிற்கிணங்க என்ற ஒரு உறுப்பும் x ∈ A -ல் இல்லாததால், இது மேல் சார்பு அல்ல.
18.
Δ-ன் பரப்பு
= \(\frac { 1 }{ 2 } \) [2(k + 3) + 4(- 3 - 3) + 6 (3 - k)] = 0
⇒ \(\frac { 1 }{ 2 } \) [-4k] = 0
⇒ k = 0
Δ ABC-யின் பரப்பு
= \(\frac { 1 }{ 2 } \) [2 (0 + 3) + 4(- 3 - 3) + 6(3 - 0)] = 0
19.
ΔACD ~ ΔABC
ஆகையால்,
\(\frac { AC }{ AB } =\frac { AD }{ AC } \)
AC2 = AB·AD ...(1)
எனவே \(\frac { BC }{ BA } =\frac { BD }{ BC } \)
BC2 = BA·BD ...(2)
(1) மற்றும் (2) லிருந்து
\(\frac { { BC }^{ 2 } }{ { AC }^{ 2 } } =\frac { BA.BD }{ AB.AD } =\frac { BD }{ AD } \)
20.
வரைமுறை:
படி 1: AB = 5.5 செ.மீ என்ற கோட்டுத்துண்டு வரைந்தேன்.
படி 2: புள்ளி A வழியே ∠BAE = 25° என இருக்கும்படி AE வரைந்தேன்.
படி 3: புள்ளி A வழியே ∠EAF = 90° என இருக்கும்படி AF வரைந்தேன்.
படி 4: AB - இக்கு வரையப்படும் மையக்குத்துக்கோடு XY ஆனது AF ஐ O விலும், AB ஐ G-இலும் சந்திக்கிறது.
படி 5: O -வை மையமாகவும் OA -வை ஆரமாகவும் கொண்டு ஒரு வட்டம் வரைந்தேன்.
படி 6: G இலிருந்து மையக்குத்துக்கோடு XY-இல் GM = 4 செ.மீ இருக்கும்படி ஒரு வில் வரைந்தேன்.
படி 7: AB இக்கு இணையாக M வழியே PQ என்ற கோடு வரைந்தேன்.
படி 8: PQ ஆனது வட்டத்தை C மற்றும் S இல் சந்திக்கிறது
படி 9: AC மற்றும் BC ஐ இணைத்தேன். ΔABC ஆனது தேவையான முக்கோணம் ஆகும்.
21.
படி 1 y = x2 - 4x + 3 யின் வரைபடம் வரைவதற்குக் கீழ்க்கண்ட மதிப்புகளை அட்டவணைப்படுத்த வேண்டும்.
| x | -2 | -1 | 0 | 1 | 2 | 3 | 4 |
| y | 15 | 8 | 3 | 0 | -1 | 0 | 3 |
படி 2 : x2 - 6x + 9 என்ற சமன்பாட்டைத் தீர்வு காண்பதற்கு y = x2 - 4x + 3 லிருந்து x2 - 6x + 9 = 0 ஐக் கழிக்க வேண்டும்

y = 2x - 6 என்பது ஒரு நேர்கோட்டின் சமன்பாடு ஆகும். y = 2x - 6 -யின் வரைபடம் வரைவதற்கு மதிப்புகளைக் கீழ்க்கண்டவாறு அட்டவணைப்படுத்த வேண்டும்.
| x | 0 | 1 | 2 | 3 | 4 | 5 |
| y | -6 | -4 | -2 | 0 | 2 | 4 |
y = 2x - 6 என்ற நேர்க்கோடும் y = x2 - 4x + 3 என்ற பரவளையமும் ஒரே ஒரு புள்ளியில் சந்திக்கின்றன.
படி 3: y = x2 - 4x + 3 என்ற பரவளையமும் y = 2x - 6 என்ற நேர்கோடும் (3, 0) என்ற புள்ளியில் தொடுகின்றன. எனவே, இதன் x ஆயத் தொலைவு 3 என்பதே x2 - 6x + 9 = 0 என்ற சமன்பாட்டின் தீர்வு ஆகும்.

22.
இயந்திரத்தின் தற்போதைய மதிப்பு ரூ.40,000. அதன் மதிப்பு ஒவ்வொரு வருட முடிவில் 10% குறையும் என்பதால், முதல் வருட முடிவில் அதன் மதிப்பு ஆரம்ப மதிப்பில் 90% ஆக இருக்கும்.
அதாவது முதல் வருட முடிவில் இயந்திரத்தின் மதிப்பு 40,000 x \(\frac { 90 }{ 100 } \) ஆகும்.
இரண்டு வருடம் கழித்து இயந்திரத்தின் மதிப்பானது முதல் வருட மதிப்பில் 90% ஆக இருக்கும்.
இரண்டாம் வருட முடிவில் இயந்திரத்தின் மதிப்பானது 40,000 x \(\left( \frac { 90 }{ 100 } \right) ^{ 2 }\) ஆகும்.
இந்த வகையில் தொடர்ந்தால், இயந்திரத்தின் மதிப்பு பின்வருமாறு குறைகிறது.
\(40000,40000\times \frac { 90 }{ 100 } ,40000\times \left( \frac { 90 }{ 100 } \right) ^{ 2 }...\)
இந்தத் தொடர்வரிசை முதல் உறுப்பு 40,000 மற்றும் பொது விகிதம் \(\frac { 90 }{ 100 } \) உடைய ஒரு பெருக்குத் தொடர்வரிசை ஆகும்.
6வது வருடத்தில் இயந்திரத்தின் மதிப்பைக் காண (5வது வருட முடிவில்), பெருக்குத் தொடர்வரிசையின் 6-வது உறுப்பைக் கண்டறிய வேண்டும்.
ஆகவே, n = 6, a = 40,000, r = \(\frac { 90 }{ 100 } \)
tn = arn-1, என்பதைப் பயன்படுத்த t6 = \(40,000\times \left( \frac { 90 }{ 100 } \right) ^{ 6-1 }=40000\times \left( \frac { 90 }{ 100 } \right) ^{ 5 }\)
t6 = \(40,000 \times \frac { 9 }{ 10 } \times \frac { 9 }{ 10 } \times \frac { 9 }{ 10 } \times \frac { 9 }{ 10 } \times \frac { 9 }{ 10 } \) = 23619.6
எனவே, 6-வது வருடத்தில் இயந்திரத்தின் மதிப்பு = ரூ.23619.60
23.
1,-1,-3,-5
t2-t1=-1-1=-2
t3-t2=-3-(-1)=-2
t4-t3=-5-(-3)=-2
இது ஒரு A.P பொது வித்தியாசம் -2.
அடுத்த இரண்டு உறுப்புகள் (-5+(-2))=-7,-7+(-2)=-9, i.e \(\underline { -7 } ,\underline {-9} .\)
24.
R-ன் மதிப்பகம் = {1, 2, 3, 4}
R-ன் துணை மதிப்பகம் = B = {-1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12}
R-ன் வீச்சகம் = {3, 6, 10, 9}
25.
P(x, y) எனும் புள்ளி A(7, 1) மற்றும் B(3, 5) யிலிருந்து சமதூரத்தில் உள்ள புள்ளி. இங்கு AP = BP. ஆகையால் AP2 = BP2.
(x - 7)2 + (y - 1)2 = (x - 3)2 + (y - 5)2
x2 - 14x + 49 + y2 - 2y + 1 = x2 - 6x + 9 + y2 - 10y + 25
x - y = 2
இதுவே தேவையான உறவு ஆகும்.
26.
PQ||RS
அதனால், ∠P = ∠S (ஒன்றுவிட்ட கோணங்கள்)
∠Q = ∠R
∠PQR = ∠SOR(குத்தெதிர் கோணங்கள் சமம்)
∴ ΔPOQ∼ΔSOR (AAA விதிமுறைப்படி)
27.
கொடுக்கப்பட்ட புள்ளிகள் (1,-5) மற்றும் (4,2)
(1,-5),(4,2) ஆகிய புள்ளிகளை சேர்க்கும் கோட்டின் நடுப்புள்ளி
\(=\left(\frac{x_1+x_2}{2}, \frac{y_1+y_2}{2}\right)=\left(\frac{1+4}{2}, \frac{-5+2}{2}\right) \)
\(=\left(\frac{5}{2},-\frac{3}{2}\right)\)
\(\left(\frac{5}{2},-\frac{3}{2}\right) \)
\(\left(\frac{5}{2},-\frac{3}{2}\right)\)புள்ளி வழிச் செல்வதும் Y -அச்சிற்கு இணையானதுமான கோட்டின் சமன்பாடு x = a.
அதாவது, \(x=\frac{5}{2} \Rightarrow 2 x-5=0\)
28.
\(\frac{x^3-y^3}{3 x^2+9 x y+6 y^2} \times \frac{x^2+2 x y+y^2}{x^2-y^2} \)
\(=\frac{(x-y)\left(x^2+x y+y^2\right)}{(3 x+6 y)(x+y)} \times \frac{(x+y)^2}{(x+y)(x-y)} \)
\(=\frac{x^2+x y+y^2}{3 x+6 y} =\frac{x^2+x y+y^2}{3(x+2 y)}\)
29.

AB = 5.6 செ.மீ. AD = 1.4 செ.மீ, AC = 7.2 செ.மீ மற்றும் AE = 1.8 செ.மீ.
BD = AB - AD = 5.6 - 1.4 = 4.2 செ.மீ
மற்றும் EC = AC - AE = 7.2 - 1.8 = 5.4 செ.மீ
\(\cfrac { AD }{ DB } =\cfrac { 1.4 }{ 4.2 } =\cfrac { 1 }{ 3 } \) மற்றும் \(\cfrac { AE }{ EC } =\cfrac { 1.8 }{ 5.4 } =\cfrac { 1 }{ 3 } \)
\(\cfrac { AD }{ DB } =\cfrac { AE }{ EC } \)
எனவே, அடிப்படை விகிதசம தேற்றத்தின் மறுதலையின்படி DE -யானது BC-க்கு இணை ஆகும்.
30.
\(\left[\begin{matrix} 12 & 3 \\ x & 5 \end{matrix} \right] =\left[\begin{matrix} y & z \\ 3 & 5 \end{matrix} \right] \)
ஒத்த உறுப்புக்களைச் சமப்படுத்த
x = 3, y = 12, z = 3
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards