10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 31/07/2019
வடிவியல்
10ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
படத்தில் ΔABCல் கோட்டுத்துண்டு xy பக்கம் AC க்கு இணை மற்றும் அது முக்கோணத்தை இரண்டு சம அளவுள்ள பரப்பாக பிரிக்கிறது \(\frac { XB }{ AB } \) விகிதம் காண்க.
2.
படத்தில் PQ||RS எனில் ΔPQ ∼ ΔSOR என நிரூபிக்க
3.
படம் 4.40-யில், AD என்பது \(\angle BAC\) -யின் இருசமவெட்டியாகும். AB = 10 செ.மீ, AC = 14 செ.மீ மற்றும் BC = 6 செ.மீ.எனில், BD மற்றும் DC-ஐ காண்க .

4.
வடிவொத்த முக்கோணங்கள் ABC மற்றும் PQR-ன் சுற்றளவுகள் முறையே 36 செ.மீ மற்றும் 24 செ.மீ ஆகும். PQ = 10 செ.மீ எனில், AB -ஐக் காண்க.
5.
\(\Delta ABC\sim \Delta PQR\) ஆக இருக்குமா?

6.
ஒரு செங்கோண முக்கோணத்தில் கர்ணத்தின் வர்க்கம் மற்ற பக்கங்களின் வர்க்கங்களின் கூடுதலுக்கு சமம் என நிரூபிக்க.
7.
BL மற்றும் CM செங்கோணம் A வில் உள்ள முக்கோணம் ABC ன் நடுக்கோடுகள் 4(BL2 + CM2) = 5BC2 என நிரூபிக்க
8.
AD 丄 BC எனில், AB2+CD2 = BD2+AC2 என நிரூபிக்க.
9.
\(\Delta ABC\) யில் DE||BC, AD = x, DB = x - 2, AE = x + 2 மற்றும் EC = x - 1 எனில், பக்கங்கள் AB மற்றும் AC -யின் நீளங்களைக் காண்க.
10.
QR ஐ அடிப்பக்கமாகக் கொண்ட இரு முக்கோணங்கள் QPR மற்றும் QSR –யின் புள்ளிகள் P மற்றும் S –யில் செங்கோணங்களாக அமைந்துள்ளன. இரு முக்கோணங்களும் QR-யின் ஒரே பக்கத்தில் அமைந்துள்ளன. PR மற்றும் SQ என்ற பக்கங்கள் T என்ற புள்ளியில் சந்திக்கின்றன எனில், PT × TR = ST × TQ என நிறுவுக.
11.
90 செ.மீ உயரமுள்ள ஒரு சிறுவன் விளக்கு கம்பத்தின் அடியிலிருந்து 1.2 மீ/வினாடி வேகத்தில் நடந்து செல்கிறான். தரையிலிருந்து விளக்கு கம்பத்தின் உயரம் 3.6 மீ எனில், 4 வினாடிகள் கழித்துச் சிறுவனுடைய நிழலின் நீளத்தைக் காண்க
12.
A யிலிருந்து வரையப்பட்ட செங்கோடு பக்கம் BCஐ D யில் DB = 3 CD எனுமாறு ΔABC யில் வெட்டுகிறது. 2AB2 = 2AC2 +BC2 என நிரூபிக்க.
13.
ஓர் ஏணியானது சுவர் மீது சாய்ந்து வைக்கப்படுகிறது. அதனுடைய கீழ்முனை சுவரிலிருந்து 2.5 மீ தூரத்தில் உள்ளது எனில் அதனுடைய உச்சி 6 மீ உயரத்தில் உள்ள ஜன்னலை தொடுகிறது. ஏணியின் நீளம் காண்க.
14.
கீழே கொடுக்கப்பட்டவற்றில் எந்த முக்கோணங்கள் வடிவொத்தவை என்பதைச் சோதிக்கவும் மேலும் x –யின் மதிப்பு காண்க.
(i)
.png)
(ii)
.png)
15.
படத்தில் உள்ளவாறு O -வை மையமாகக் கொண்ட வட்டத்தின் தொடுகோடு PR எனில், ㄥPOQ ஆனது

1200
1000
1100
900
16.
வட்டத்தின் வெளிப்புறப் புள்ளியிலிருந்து வட்டத்திற்கு எத்தனை தொடுகோடுகள் வரையலாம்?
ஒன்று
இரண்டு
முடிவற்ற எண்ணிக்கை
பூஜ்ஜியம்
17.
ΔABC -யில் AD ஆனது, ㄥBAC -யின் இருசமவெட்டி, AB = 8 செ.மீ, BD = 6 செ.மீ மற்றும் DC = 3 செ.மீ எனில், பக்கம் AC -யின் நீளம் ____.
6 செ.மீ
4 செ.மீ
3 செ.மீ
8 செ.மீ
18.
\(\Delta \) இரு வடிவொத்த முக்கோணங்கள் \(\Delta ABC\) மற்றும் \(\Delta PQR\) -யின் சுற்றளவுகள் முறையே 36 செ.மீ மற்றும் 24 செ.மீ ஆகும். PQ = 10 செ.மீ எனில், AB–யின் நீளம் _____.
\(6\cfrac { 2 }{ 3 } \) செ.மீ
\(\cfrac { 10\sqrt { 6 } }{ 3 } \) செ.மீ
\(6\cfrac { 2 }{ 3 } \) செ.மீ
15 செ.மீ
19.
\(\Delta LMN\) -யில்,\(\angle L={ 60 }^{ 0 }\), \(\angle M={ 50 }^{ 0 }\) மேலும் \(\Delta LMN\sim \Delta PQR\) எனில்,\(\angle R\) -யின் மதிப்பு ____.
40o
70o
30o
110o
1.
கொடுக்கப்பட்டது XY||AC
ஆகையால் ∠BXY = ∠A மற்றும்
∠BYX = ∠C (ஒத்த கோணங்கள்)
∴ ΔABC~ΔXBY (SAS விதிமுறைப்படி)
ஆகையால் \(\frac { ar(ABC) }{ ar(XBY) } ={ \left( \frac { AB }{ XB } \right) }^{ 2 }\) ...(1)
ar(ABC) = 2ar(XBY)
\(\frac { ar(ABC) }{ ar(XBY) } =\frac { 2 }{ 1 } \) ...(2)
(1) மற்றும் (2) லிருந்து,
\({ \left( \frac { AB }{ XB } \right) }^{ 2 }=\frac { 2 }{ 1 } \) i.e. \(\frac { AB }{ XB } =\frac { \sqrt { 2 } }{ 1 } \)
\(\frac { XB }{ AB } =\frac { 1 }{ \sqrt { 2 } } \)
\(1-\frac { XB }{ AB } =1-\frac { 1 }{ \sqrt { 2 } } \)
\(\frac { AB-XB }{ AB } =\frac { \sqrt { 2 } -1 }{ \sqrt { 2 } } \)
\(\frac { AX }{ AB } =\frac { \sqrt { 2 } -1 }{ \sqrt { 2 } } =\frac { 2-\sqrt { 2 } }{ 2 } \)
2.
PQ||RS
அதனால், ∠P = ∠S (ஒன்றுவிட்ட கோணங்கள்)
∠Q = ∠R
∠PQR = ∠SOR(குத்தெதிர் கோணங்கள் சமம்)
∴ ΔPOQ∼ΔSOR (AAA விதிமுறைப்படி)
3.
BD = x செ.மீ என்க. DC = (6 – x) செ.மீ
∠A -யின் இருசமவெட்டி AD ஆகும்.
எனவே, கோண இருசமவெட்டி தேற்றத்தின்படி,.
\(\cfrac { AB }{ AC } =\cfrac { BD }{ DC } \)
\(\cfrac { 10 }{ 14 } =\cfrac { x }{ 6-x } \) ⇒ \(\cfrac { 5 }{ 7 } =\cfrac { x }{ 6-x } \)
12x = 30 எனவே, \(x=\cfrac { 30 }{ 12 } =2.5\) செ.மீ
ஆகவே, BD = 2.5 செ.மீ, DC = 6 - x = 6 - 2.5 = 3.5 செ.மீ
4.

வடிவொத்த முக்கோணங்களின் ஒத்த பக்கங்களின் விகிதம் அவற்றின் ஒத்த சுற்றளவுகளின் விகிதத்திற்குச் சமம்.
\(\Delta ABC\sim \Delta PQR\) ஆகையினால்,
\(\cfrac { AB }{ PQ } =\cfrac { BC }{ QR } =\cfrac { AC }{ PR } =\cfrac { 36 }{ 24 } \)
\(\cfrac { AB }{ PQ } =\cfrac { 36 }{ 24 } \) ⇒ \(\cfrac { AB }{ 10 } =\cfrac { 36 }{ 24 } \)
\(AB=\cfrac { 36\times 10 }{ 24 } \) = 15 செ.மீ
5.
\(\Delta ABC\) மற்றும் \(\Delta PQR\) -யில்,
\(\cfrac { PQ }{ AB } =\cfrac { 3 }{ 6 } =\cfrac { 1 }{ 2 } ;\cfrac { QR }{ BC } =\cfrac { 4 }{ 10 } =\cfrac { 2 }{ 5 } \)
\(\cfrac { 1 }{ 2 }\neq\cfrac { 2 }{ 5 } \) என்பதால் \(\cfrac { PQ }{ AB } \neq \cfrac { QR }{ BC } \)
ஒத்த பக்கங்கள் விகிதச் சமமாக இல்லை.
எனவே, \(\Delta ABC\) ஆனது \(\Delta PQR\) -க்கு வடிவொத்ததாக அமையாது.
6.
நிரூபணம்:
ΔABC ஒரு செங்கோண முக்கோணம்
∠B செங்கோணம்
நிரூபிக்க வேண்டியது: AC2 = AB2 + BC2
அமைப்பு: BC 丄 AC
ΔABC = ΔABC
\(\frac { AD }{ AB } =\frac { AB }{ AC } \)
(பக்கங்களின் விகிதம்)
AD · AC = AB2 ...(1)
மேலும், ΔBDC ~ ΔABC
\(\frac { CD }{ BC } =\frac { BC }{ AC } \)
CD · AC =BC2 ...(2)
(1) மற்றும் (2) ஐக் கூட்ட
AD.AC+CD.AC = AB2+ BC2
AC(AD+CD) = AB2 + BC2
AC.AC = AB2+ BC2
AC2 = AB2 + BC2
7.
BL மற்றும் CM என்பன ΔABC யின் நடுக்கோடுகள்
A = ∠90°.
ΔABC யிலிருந்து
BC2 = AB2 + AC2 ...(1)
(பிதாகரஸ் தேற்றத்தின்படி)
ΔABL லிருந்து,
BL2 = AL2 + AB2
\(BL^{ 2 }={ \left( \frac { AC }{ 2 } \right) }^{ 2 }+{ AB }^{ 2 }\)....(1)
(L ஆனது BC யின் நடுப்புள்ளி)
\({ BL }^{ 2 }=\frac { { AC }^{ 2 } }{ 4 } +{ AB }^{ 2 }\)
4BL2 = AC2 + 4AB2 ...(2)
ΔCMA லிருந்து,
CM2 = AC2 + AM2
\({ CM }^{ 2 }={ AC }^{ 2 }+{ \left( \frac { AB }{ 2 } \right) }^{ 2 }\)
(M ஆனது AB யின் நடுப்புள்ளி)
\({ CM }^{ 2 }={ AC }^{ 2 }+\frac { { AB }^{ 2 } }{ 4 } \)
4CM2 = 4AC2 + AB2 ...(3)
(2) மற்றும் (3) ஐ கூட்ட கிடைப்பது
4(BL2 + CM2) = 5(AC2 + AB2)
4(BL2 + CM2) = 5BC2 [(1) லிருந்து]
8.
ΔADC யில்
AC2 = AD2 + CD2 ...(1)
(பிதாகரஸ் தேற்றத்தின்படி)
ΔADB யில்,
AB2 = AD2 + BD2 ...(2)
(பிதாகரஸ் தேற்றத்தின்படி)
(1) ஐ (2) லிருந்து கழிக்க
AB2 - AC2 = BD2 - CD2
AB2 + CD2 = BD2 + AC2
9.

\(\Delta ABC\) யில் DE || BC,
தேல்ஸ் தேற்றத்தின் மூலம் நாம் பெறுவது,\(\cfrac { AD }{ DB } =\cfrac { AE }{ EC } \)
\(\cfrac { x }{ x-2 } =\cfrac { x+2 }{ x-1 } \) ⇒ x(x - 1) = (x - 2)(x + 2)
ஆகவே, x2 - x = x2 - 4 ⇒ x = 4
x = 4 எனில், AD = 4, DB = x - 2 = 2, AE = x + 2 = 6, EC = x - 1 = 3.
எனவே, AB = AD + DB = 4 + 2 = 6, AC = AE + EC = 6 + 3 = 9.
ஆகவே, AB = 6, AC = 9.
10.
கணக்கின்படி, \(\angle Q S R=\angle Q P R=90^{\circ}\)
PR மற்றும் SQ வெட்டும் புள்ளி T.
ΔQPT மற்றும் ΔRST இல்
\(\angle Q S R=\angle Q P R=90^{\circ} \)
\(\angle P T Q=\angle S T R\)
[∵ குத்தெதிா்க் கோணங்கள்]
AA விதிமுறைப்படி,
\(\triangle PQT \sim \triangle S R T\)
∴ வடிவொத்த முக்கோணங்களில் ஒத்த பக்கங்கள் விகிதசமம்.
\(\therefore \frac{P T}{S T}=\frac{T Q}{T R} \)
\(\mathrm{PT} \times \mathrm{TR}=\mathrm{ST} \times \mathrm{TQ}\)
நிரூபிக்கப்பட்டது.
11.

வேகம் = 1.2 மீ/வினாடி, என்பது கொடுக்கப்பட்டது.
நேரம் = 4 வினாடி,
தொலைவு = வேகம் × நேரம்
= 1.2 x 4 = 4.8 மீ
4 வினாடிகளுக்குப் பிறகு சிறுவனுடைய நிழலின் நீளம் x என்க
\(\Delta ABE\sim \Delta CDE\) ஆகையால்,\(\cfrac { BE }{ DE } =\cfrac { AB }{ CD } \) எனவே \(\cfrac { 4.8+x }{ x } =\cfrac { 3.6 }{ 0.9 } =4\) (90 செ.மீ = 0.9 மீ)
4.8 + x = 4x ⇒ 3x = 4.8 ஆகவே, x = 1.6 மீ
சிறுவனுடைய நிழலின் நீளம் DE = 1.6 மீ
12.
DB = 3 CD
BC = BD + DC
BC = 3CD + CD
BC = 4CD
CD = \(\frac 14\)BC
CD = \(\frac 14\) BC
BD = 3CD = \(\frac 34\) BC
ΔABD ஒரு செங்கோண முக்கோணம் D = 90°
AB2 = AD2 + BD2...(ii)
ΔACD ஒரு செங்கோண முக்கோணம் ㄥD = 90°
AC2 = AD2 + CD2 ...(iii)
(ii) லிருந்து (iii) ஐக் கழிக்க.,
AB2 - AC2 = BD2 - CD2
⇒ AB2 - AC2 = \({ AB }^{ 2 }-{ AC }^{ 2 }={ \left( \frac { 3 }{ 4 } BC \right) }^{ 2 }-{ \left( \frac { 1 }{ 4 } BC \right) }^{ 2 }\) (i) லிருந்து
CD = \(\frac 14\)BC, BD = \(\frac 34\)BD
⇒ AB2 - AC2 = \(\frac {9}{16}\) BC2 - \(\frac {1}{16}\) BC2
⇒ AB2 - AC2 = \(\frac 12\) BC2
⇒ 2(AB2 - AC2) = BC2
⇒2AB2 = 2AC2+ BC2
என நிரூபிக்கப்பட்டது.
13.
AB - ஏணி, CA - சுவர், A - ஜன்னல்,
மேலும், BC = 2.5 மீ மற்றும் CA = 6 மீ
பித்தாகரஸ் தேற்றத்தின்படி,
AB2 = BC2+ CA2
= (2.5)2 + (6)2
= 42.25
AB = 6.5
ஏணியின் நீளம் = 6.5 மீ.
14.
(i) \(\triangle A B C\) மற்றும் \(\triangle A D E\) இல் \(\angle A\) பொதுவானது
\(\frac{A E}{E C}=\frac{2}{3 \frac{1}{2}}=\frac{2}{\frac{7}{2}}=\frac{2 \times 2}{7}=\frac{4}{7} \)
\(\frac{A D}{D B}=\frac{3}{5}\)
இங்கு \(\frac{4}{7} \neq \frac{3}{5}\)
\(\frac{A E}{E C} \neq \frac{A D}{D B}\)
ஒத்த பக்கங்களின் விகிதங்கள் சமமாக இல்லை.
\(\therefore \triangle ABC\) மற்றும் \(\triangle A D E\) வடிவொத்த முக்கோணங்கள் அல்ல.
(ii) \(\triangle C P Q\) மற்றும் \(\triangle C A B\) இல் \(\angle C\) பொதுவானது.
\(\angle P Q C=180^{\circ}-110^{\circ}=70^{\circ}\)
[\( \because \angle P Q C\) மற்றும் \(\angle P Q B\) ஆகியவை நேரிய கோண இணை]
\(\angle A B C =70^{\circ} \)
\(\therefore \angle B A C =\angle Q P C\)
[∵ முக்கோணத்தின் மூன்று கோணங்களின் கூடுதல் 180o]
\(\angle P C Q =180^{\circ}-\left(\angle Q P C+70^{\circ}\right) \)
\(\therefore \angle A B C =\angle P Q C=70^{\circ}\)
\(\angle C\) பொதுவானது, \(\angle B A C=\angle Q P C\)
∴ AA விகிதமுறைப்படி, \(\triangle A B C \sim \triangle \angle P Q C\)
∴ ஒத்த பக்கங்கள் விகிதசமம்.
\(\frac{A B}{P Q} =\frac{B C}{Q C} \)
\(\frac{5}{x} =\frac{6}{3} \)
\({[\because \mathrm{BC}=\mathrm{BQ}} +\mathrm{QC}=3+3=6] \)
\(\mathrm{x} =\frac{5}{6} \times 3=2.5 \quad \therefore \mathrm{x}=2.5\)
15.
60 x 2 = 120o
16.
(b)
இரண்டு
17.
\(\frac{A B}{A C} =\frac{B D}{D C} \)
\(\frac{8}{A C} =\frac{6}{3} \)
\(A C =\frac{8}{6} \times 3=4\) செ.மீ
18.
\(\triangle A B C \sim \triangle P Q R\) எனில்,
\(\frac{A B}{P Q}=\frac{B C}{Q R}=\frac{A C}{P Q}=\) ΔABC இன் சுற்றளவு / ΔPQR இன் சுற்றளவு
AB + BC + CA = 36 செ. மீ
\(\mathrm{PQ}+\mathrm{QR}+\mathrm{PR}=\) 24 செ.மீ
\(\frac{A B}{P Q}=\frac{36}{24} \Rightarrow \frac{A B}{10}=\frac{36}{24} \)
\(\mathrm{AB}=\frac{36 \times 10}{24}\)
AB = 15 செ.மீ
19.
\(\triangle L M N \sim \triangle P Q R\) எனில்
\(\angle R =\angle N=180-(60+50) \)
\(=180-110=70^{\circ}\)
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards