10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 05/10/2019
வடிவியல்
10ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
ஒரு விமானம் விமான நிலையத்தை விட்டு மேலெழுந்து வடக்கு நோக்கி 1000 கி.மீ/மணி வேகத்தில் பறக்கிறது. அதே நேரத்தில் மற்றொரு விமானம் அதே விமான நிலையத்தை விட்டு மேலெழுந்து மேற்கு நோக்கி 1200 கி.மீ/மணி வேகத்தில் பறக்கிறது. 1½ மணி நேரத்திற்குப் பிறகு இரு விமானங்களுக்கு இடைப்பட்ட தொலைவு எவ்வளவு இருக்கும்?

2.
\(\Delta \)ABC -யில் C ஆனது செங்கோணம் ஆகும். பக்கங்கள் CA மற்றும் CB-யின் நடுப்புள்ளிகள் முறையே P மற்றும் Q எனில் 4(AQ2 + BP2) = 5AB2 என நிறுவுக.
3.
ஒரு பெண் விளக்கு கம்பத்தின் அடியிலிருந்து 6.6 மீ தொலைவிலுள்ள கண்ணாடியில் விளக்கு கம்ப உச்சியின் பிரதிபலிப்பைக் காண்கிறாள். 1.25 மீ உயரமுள்ள அப்பெண் கண்ணாடியிலிருந்து 2.5 மீ தொலைவில் நிற்கிறாள். கண்ணாடியானது வானத்தை நோக்கி வைக்கப்பட்டுள்ளது. அப்பெண், கண்ணாடி மற்றும் விளக்கு கம்பம் ஆகியவை எல்லாம் ஒரே நேர்க்கோட்டில் அமைவதாக எடுத்துக் கொண்டால், விளக்குக் கம்பத்தின் உயரத்தைக் காண்க.
4.
படம்-யில் \(\angle A=\angle CED\) எனில், \(\Delta CAB\sim \Delta CED\) என நிரூபிக்கவும். மேலும் x-யின் மதிப்பு காண்க.

5.
3 செ.மீ ஆரமுள்ள வட்டம் வரைக. வட்டத்தின் மேல் P என்ற புள்ளியைக் குறித்து அப்புள்ளி வழியே தொடுகோடு வரைக.
6.
6 மீ மற்றும் 3 மீ உயரமுள்ள இரண்டு செங்குத்தான தூண்கள் AC என்ற தரையின் மேல் படத்தில் காட்டியுள்ளவாறு ஊன்றப்பட்டுள்ளது எனில், y -யின் மதிப்பு காண்க

7.
p மீட்டர் இடைவெளியில் a மீட்டர் மற்றும் b மீட்டர் உயரமுள்ள இரண்டு தூண்கள் உள்ளன. தூண்களின் உச்சியிலிருந்து எதிரேயுள்ள தூண்களின் அடிக்கு வரையப்படும் கோடுகள் சந்திக்கும் புள்ளியின் உயரமானது \(\frac { ab }{ a+b } \) மீட்டர் என்பதை நிரூபிக்கவும்.

8.
\(\Delta PST\sim \Delta PQR\) எனக் காட்டுக

9.
3 செ.மீ ஆரமுள்ள வட்டத்தின் மையத்திலிருந்து 5 செ.மீ தொலைவில் உள்ள புள்ளியிலிருந்து வட்டத்திற்கு வரையப்பட்ட தொடுகோட்டின் நீளம் காண்க.
10.
\(\Delta \)ABC -யில் D மற்றும் E என்ற புள்ளிகள் முறையே பக்கங்கள் AB மற்றும் AC ஆகியவற்றின் மீது அமைந்துள்ளன.
AB = 12 செ.மீ, AD = 8 செ.மீ, AE = 12 செ.மீ மற்றும் AC = 18 செ.மீ. எனில் DE || BC என நிறுவுக.
11.

12.
\(\Delta ABC\) யின் பக்கங்கள் AB மற்றும் AC-ல் அமைந்த புள்ளிகள் முறையே D மற்றும் E மேலும், AB = 5.6 செ.மீ, AD = 1.4 செ.மீ, AC = 7.2 செ.மீ மற்றும் AE = 1.8 செ.மீ எனில், DE||BC எனக் காட்டுக.
13.
O-வை மையமாக உடைய வட்டத்திற்கு, வெளியேயுள்ள புள்ளி P -யிலிருந்து வரையப்பட்ட தொடுகோடுகள் PA மற்றும் PB ஆகும். ∠APB = 700 எனில், ∠AOB -யின் மதிப்பு____.
1000
1100
1200
1300
14.
15.
6 மீ மற்றும் 11 மீ உயரமுள்ள இரு கம்பங்கள் சமதளத் தரையில் செங்குத்தாக உள்ளன. அவற்றின் அடிகளுக்கு இடையேயுள்ள தொலைவு 12 மீ எனில் அவற்றின் உச்சிகளுக்கு இடையே உள்ள தொலைவு என்ன?
13 மீ
14 மீ
15 மீ
12.8 மீ
16.
\(\Delta \) இரு வடிவொத்த முக்கோணங்கள் \(\Delta ABC\) மற்றும் \(\Delta PQR\) -யின் சுற்றளவுகள் முறையே 36 செ.மீ மற்றும் 24 செ.மீ ஆகும். PQ = 10 செ.மீ எனில், AB–யின் நீளம் _____.
\(6\cfrac { 2 }{ 3 } \) செ.மீ
\(\cfrac { 10\sqrt { 6 } }{ 3 } \) செ.மீ
\(6\cfrac { 2 }{ 3 } \) செ.மீ
15 செ.மீ
17.
\(\Delta LMN\) -யில்,\(\angle L={ 60 }^{ 0 }\), \(\angle M={ 50 }^{ 0 }\) மேலும் \(\Delta LMN\sim \Delta PQR\) எனில்,\(\angle R\) -யின் மதிப்பு ____.
40o
70o
30o
110o
18.
\(\cfrac { AB }{ DE } =\cfrac { BC }{ FD } \) எனில், ABC மற்றும் EDF எப்பொழுது வடிவொத்தவையாக அமையும்.
\(\angle B=\angle E\)
\(\angle A=\angle D\)
\(\angle B=\angle D\)
\(\angle A=\angle F\)
1.
முதல் விமானம் O -வில் இருந்து புறப்பட்டு வடக்கு நோக்கி A என்ற இடத்திற்குச் செல்கிறது என்க. (தொலைவு = வேகம் × நேரம்)
எனவே \(OA=\left( 100\times \cfrac { 3 }{ 2 } \right) \)கி.மீ = 1500 கி.மீ
இரண்டாவது விமானம் O -வில் இருந்து புறப்பட்டு மேற்கு நோக்கி B என்ற இடத்திற்குச் செல்கிறது என்க
எனவே \(OB=\left( 1200\times \cfrac { 3 }{ 2 } \right) \)= 1800 கி.மீ
கணக்கிடப்பட வேண்டிய தேவையான தொலைவு BA ஆகும்.
செங்கோணம் AOB யில் AB2 = OA2 + OB2
AB2 = (1500)2 + (1800)2 = 1002(152 + 182)
= 1002 x 549 = 1002 x 9 x 61
\(AB=100\times 3\times \sqrt { 61 } =300\sqrt { 61 } \) கி.மீ.
2.

\(\Delta \)AQC யில், C ஆனது, செங்கோணம் என்பதால், AQ2 = AC2 + QC2 ...(1)
\(\Delta \)BPC- யில் C ஆனது, செங்கோணம் என்பதால், BP2 = BC2 + CP2 ...(2)
\(\triangle A B C\)-யில், C ஆனது, செங்கோணம் என்பதால், \(A B^2=A C^2+B C^2 \ldots3\)
(1) மற்றும் (2) லிருந்து, AQ2 + BP2 = AC2 + QC2 + BC2 + CP2
4(AQ2 + BP2) = 4AC2 + 4QC2 + 4BC2 + 4CP2
= 4AC2 + (2QC)2 + 4BC2 + (2CP)2
= 4AC2 + BC2 + 4BC2 + AC2 (P மற்றும் Q என்பது நடுப்புள்ளி என்பதால்)
= 5(AC2 + BC2) (சமன்பாடு (3)-லிருந்து)
4(AQ2 + BP2) = 5AB2
3.

ஒளி பிரதிபலிப்பு விதியின் படி ∠i = ∠r
∠i +∠ACB = ∠r + ∠ECD = 90o
∠ECD = \(\angle A C B\)
∠B = ∠D = 90o
\(\triangle A B C \sim \triangle D B E\) (AA விதியின் படி)
\(\frac{A B}{D B}=\frac{B C}{DC} \)
\(\frac{A B}{1.25}=\frac{66}{2.5} \)
\(\mathrm{AB}=1.25\times=\frac{66}{2.5}=3.3\) மீ
∴ விளக்குக்கம்பத்தின் உயரம் = 3.3 மீ.
4.
\(\Delta CAB\) மற்றும் \(\Delta CED\) -யில், \(\angle C\) பொதுவானது,\(\angle A=\angle CED\)
எனவே, \(\Delta CAB\sim \Delta CED\) (AA விதிமுறைப்படி)
ஆகவே,\(\cfrac { CA }{ CE } =\cfrac { AB }{ DE } =\cfrac { CB }{ CD } \)
\(\cfrac { AB }{ DE } =\cfrac { CB }{ CD } \) ⇒ \(\cfrac { 9 }{ x } =\cfrac { 10+2 }{ 8 } \) எனவே, \(x=\cfrac { 8\times 9 }{ 12 } \)= 6 செ.மீ.
5.

ஆரம், r = 3 செ.மீ எனக் கொடுக்கப்பட்டுள்ளது
வரைமுறை
படி 1 : O -வை மையமாகக் கொண்டு 3 செ.மீ ஆரமுள்ள வட்டம் வரைக
படி 2 : வட்டத்தின் மேல் P என்ற புள்ளியைக் குறித்து OP -ஐ இணைக்கவும்
படி 3 : P என்ற புள்ளி வழியே OP -க்கு செங்குத்தாக TT' வரைக
படி 4 : TT' ஆனது தேவையான தொடுகோடு ஆகும்.
6.
ΔPAC, ΔQBC இவை வடிவொத்த முக்கோணங்கள்
AP மற்றும் CR என்பன 6 மீ மற்றும் 3 மீ உயரமுடைய செங்குத்துத் தூண்கள் என்க BQ = y மீ
ΔCRA மற்றும் ΔBQA இல்
∠A = ∠A (பொதுக்கோணம்)
\(\angle A C R=\angle A B Q=90^{\circ}\)
∴ AA வடிவொப்புமை விதிமுறைப்படி,
\(\triangle C R A \sim \triangle B Q A\)
∴ அவற்றின் ஒத்த பக்கங்கள் விகிதசமம்.
\(\frac{A C}{A B}=\frac{C R}{B Q} \)
\(\frac{A C}{A B} =\frac{3}{y} \)
\(A B =\frac{A C \times y}{3} \) ....(1)
ΔCBQ மற்றும் ΔCAP இல்
\(\angle C B Q =\angle C A P=90^{\circ} \)
∠C = ∠C [பொதுக்கோணம்]
\(\therefore \triangle CB Q \sim \Delta C A P \)
\(\frac{C B}{C A} =\frac{B Q}{A P} \)
\(\frac{C B}{C A} =\frac{y}{6} \)
\( \mathrm{BC}=\frac{y \times C A}{6} \) ...(2)
\((1)+(2) \Rightarrow \mathrm{AB}+\mathrm{BC}=\frac{A C \times y}{3}+\frac{y \times C A}{6}\)
\(A C=y \times A C\left(\frac{1}{3}+\frac{1}{6}\right) \)
\(\frac{A C}{A C} =y\left(\frac{2+1}{6}\right) \)
\(1 =y\left(\frac{3}{6}\right) \)
\(1 =\frac{1}{2} y \)
y = 2 மீ
7.
P மீட்டர் இடைவெளியில் உள்ள AB மற்றும் CD என்ற இரு தூண்களின் உயரங்கள் முறையே ‘a’ மீட்டர், ‘b’ மீட்டர் என்க. அதாவது, AC = p மீட்டர். AD மற்றும் BC-யானது O-வில் சந்திக்கிறது எனில்,
OL = h மீட்டர்.
CL= x மற்றும் LA = y என்க.
எனவே, x + y = p
\(\Delta LOC\) மற்றும் \(\triangle A B C\)-லிருந்து,
\(\angle C A B=\angle C L O\) [ஒவ்வொன்றும் 90°-க்கு சமம்]
\(\angle C=\angle C\) [C -பொதுவானது]
\(\Delta CAB\sim \Delta CLO\) [AA விதிமுறைப்படி]
\(\cfrac { CA }{ CL } =\cfrac { AB }{ LO } \) ⇒\(\cfrac { p }{ x } =\cfrac { a }{ h } \)
எனவே, \(x=\frac { ph }{ a } \) .....(1)
\(\Delta ALO\) மற்றும் \(\Delta ACD\) ⇒ \(\angle ALO=\angle ACD\) [ஒவ்வொன்றும் 90°-க்கு சமம்]
\(\angle A=\angle A\) [A பொதுவானது]
\(\Delta ALO\sim \Delta ACD\) [AA -விதிமுறைப்படி]
\(\cfrac { AL }{ AC } =\cfrac { OL }{ DC } \) ⇒ \(\cfrac { y }{ p } =\cfrac { h }{ b } \) ஆகவே \(y=\cfrac { ph }{ b } \) ...(2)
(1) + (2) ⇒ \(x+y=\cfrac { ph }{ a } +\cfrac { ph }{ b } \)
\(p=ph\left( \cfrac { 1 }{ a } +\cfrac { 1 }{ b } \right) \) (ஏனெனில் x + y = p)
\(1=h\left( \cfrac { a+b }{ ab } \right) \)
எனவே, \(h=\cfrac { ab }{ a+b } \)
எனவே, இரு தூண்களின் உச்சியிலிருந்து எதிரே உள்ள தூண்களின் அடிக்கு வரையப்படும் கோடுகள் சந்திக்கும் புள்ளியின் உயரமானது \(\frac { ab }{ a+b } \) மீட்டர் ஆகும்.
8.
(ii) \(\Delta PST\) மற்றும் \(\Delta PQR\) -யில்,
\(\cfrac { PS }{ PQ } =\cfrac { 2 }{ 2+3 } =\cfrac { 2 }{ 5 } ,\cfrac { PT }{ PR } =\cfrac { 2 }{ 2+3 } =\cfrac { 2 }{ 5 } \)
இதிலிருந்து,\(\cfrac { PS }{ PQ } =\cfrac { PT }{ PR } \) மற்றும்
\(\angle P\) ஆனது பொதுக் கோணம். எனவே, SAS விதிமுறைப்படி, \(\Delta PST\sim \Delta PQR\)
9.

கொடுக்கப்பட்டது OP = 5 செ.மீ, ஆரம் r = 3 செ.மீ
தொடுகோட்டின் நீளம் PT ஐ காண செங்கோண முக்கோணம் OTP -யில்
OP2 = OT2 + PT2 (பிதாகரஸ் தேற்றத்தின்படி)
52 + 32 + PT2 ⇒ PT2 = 5² = 3² + PT²
தொடுகோட்டின் நீளம் PT = 4 செ.மீ
10.
AB = 12 செ.மீ.
AD = 8 செ.மீ
AE = 12 செ.மீ
AC = 18 செ.மீ
அடிப்படை விகிதசம தேற்றத்தின்படி
\(\frac{A D}{D B}=\frac{A E}{E C} \)
\(\frac{A D}{D B}=\frac{8}{A B-A D}=\frac{8}{12-8} \)
\(\frac{A D}{D B}=\frac{8}{4}=2 \)
\(\frac{A E}{E C}=\frac{12}{A C-A E} \)
\(\frac{A E}{E C}=\frac{12}{18-12}=\frac{12}{6}=2\)
(1) மற்றும் (2) லிருந்து
\(=\frac{A D}{D B}=\frac{A E}{E C}\)
DE || BC
11.
12.

AB = 5.6 செ.மீ. AD = 1.4 செ.மீ, AC = 7.2 செ.மீ மற்றும் AE = 1.8 செ.மீ.
BD = AB - AD = 5.6 - 1.4 = 4.2 செ.மீ
மற்றும் EC = AC - AE = 7.2 - 1.8 = 5.4 செ.மீ
\(\cfrac { AD }{ DB } =\cfrac { 1.4 }{ 4.2 } =\cfrac { 1 }{ 3 } \) மற்றும் \(\cfrac { AE }{ EC } =\cfrac { 1.8 }{ 5.4 } =\cfrac { 1 }{ 3 } \)
\(\cfrac { AD }{ DB } =\cfrac { AE }{ EC } \)
எனவே, அடிப்படை விகிதசம தேற்றத்தின் மறுதலையின்படி DE -யானது BC-க்கு இணை ஆகும்.
13.
APBO என்ற நாற்கரத்தில்
\(70^{\circ}+90^{\circ}+90^{\circ}+\angle A O B =360^{\circ} \)
\(\angle A O B =360^{\circ}-250^{\circ}=110^{\circ}\)
14.
(b)
15.
AC = 11 - 6 = 5 மீ
செங்கோண ΔABC இல்
\(\mathrm{AB}^2 =\mathrm{BC}^2+\mathrm{AC}^2=12^2+5^2 \)
= 144 + 25 = 169
AB = 13 மீ
16.
\(\triangle A B C \sim \triangle P Q R\) எனில்,
\(\frac{A B}{P Q}=\frac{B C}{Q R}=\frac{A C}{P Q}=\) ΔABC இன் சுற்றளவு / ΔPQR இன் சுற்றளவு
AB + BC + CA = 36 செ. மீ
\(\mathrm{PQ}+\mathrm{QR}+\mathrm{PR}=\) 24 செ.மீ
\(\frac{A B}{P Q}=\frac{36}{24} \Rightarrow \frac{A B}{10}=\frac{36}{24} \)
\(\mathrm{AB}=\frac{36 \times 10}{24}\)
AB = 15 செ.மீ
17.
\(\triangle L M N \sim \triangle P Q R\) எனில்
\(\angle R =\angle N=180-(60+50) \)
\(=180-110=70^{\circ}\)
18.
(c)
\(\angle B=\angle D\)
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards