10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 30/08/2019
எண்களும் தொடர் வரிசைகளும்
10ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
24,15,36 ஆகிய எண்களால் மீதியின்றி வகுபடும் மிகப்பெரிய ஆறிலக்க எண்ணைக் காண்க.
2.
ஒரு கூட்டுத் தொடர்வரிசையின் l, m மற்றும் n ஆவது உறுப்புகள் முறையே x, y மற்றும் z எனில், பின்வருவனவற்றை நிரூபிக்க.
(i) x(m - n) + y(n - l) + z(l - m) = 0
(ii) (x - y)n + (y - z)l + (z - x)m = 0
3.
பின்வரும் ஒவ்வொன்றிலும் a -யை b ஆல் வகுக்கும்போது கிடைக்கும் ஈவு மற்றும் மீதியைக் காண்க. (i) a = −12 , b = 5 (ii) a = 17 , b = −3 (iii) a = −19 , b = −4
4.
300–க்கும் 600-க்கும் இடையே 7-ஆல் வகுபடும் அனைத்து இயல் எண்களின் கூடுதல் காண்க.
5.
ஒரு தொடர்வரிசையின் பொது உறுப்பு பின்வருமாறு வரையறுக்கப்படுகிறது.
11 -வது உறுப்பு மற்றும் 18 -வது உறுப்புக் காண்க.
6.
3x ≡ 1 (மட்டு 15) என்ற சமன்பாட்டிற்கு எத்தனை முழு எண் தீர்வுகள் உள்ளன எனக் காண்க.
7.
தீர்க்க 8x ≡ 1 (மட்டு 11)
8.
445 மற்றும் 572 –ஐ ஒரு குறிப்பிட்ட எண்ணால் வகுக்கும்போது முறையே மீதி 4 மற்றும் 5 –ஐ தரக்கூடிய மிகப்பெரிய எண்ணைக் கண்டறிக.
9.
ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் 31 உறுப்புகள் உள்ளன. அதன் 16-வது உறுப்பு m எனில் அந்தக் கூட்டுத் தொடர்வரிசையில் உள்ள எல்லா உறுப்புகளின் கூடுதல் ______.
16 m
62 m
31 m
\(\frac{31}{2}\) m
10.
F1 = 1 , F2 = 3 மற்றும் Fn = Fn-1 + Fn-2 எனக் கொடுக்கப்படின் F5 ஆனது ______.
3
5
8
11
11.
1 முதல் 10 வரையுள்ள (இரண்டு எண்களும் உட்பட) அனைத்து எண்களாலும் வகுபடும் மிகச்சிறிய எண் ____.
2025
5220
5025
2520
12.
யூக்ளிடின் வகுத்தல் துணைத் தேற்றத்தைப் பயன்படுத்தி, எந்த மிகை முழுவின் கனத்தையும் 9ஆல் வகுக்கும் போது கிடைக்கும் மீதிகள் ____.
0, 1, 8
1, 4, 8
0, 1, 3
1, 3, 5
13.
(13 + 23 + 33+ ...+ 153) - (1 + 2 + 3+....+15) யின் மதிப்பு _______.
14400
14200
14280
14520
14.
t1, t2, t3,..... என்பது ஒரு கூட்டுத் தொடர்வரிசை எனில் t6, t12, t18,.... என்பது _____.
ஒரு பெருக்குத் தொடர்வரிசை
ஒரு கூட்டுத் தொடர்வரிசை
ஒரு கூட்டுத் தொடர்வரிசையுமல்ல, பெருக்கு தொடர்வரிசையுமல்ல
ஒரு மாறிலித் தொடர் வரிசை
15.
ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் முதல் உறுப்பு 1 மற்றும் பொது வித்தியாசம் 4. இந்தக் கூட்டுத் தொடர்வரிசையின் எத்தனை உறுப்புகளைக் கூட்டினால் அதன் கூடுதல் 120 கிடைக்கும்?
6
7
8
9
1.
மீ.பொ.ம. \(=3 \times 2 \times 2 \times 2 \times 5 \times 3=360\)
மிகப்பெரிய 6 இலக்க எண் 999999
24, 15 மற்றும் 36 இன் மீ.பொ.ம = 360
999999 ஐ 360 ஆல் வகுக்க கிடைக்கும் மீதி = 279 .
\(\therefore\) 24,15, 36 ஆல் வகுபடும் மிகப்பெரிய 6 இலக்க எண் = 999999 - 279 = 999720
எனவே தேவையான எண் = 999720
2.
முதல் உறுப்பு a மற்றும் பொது வித்தியாசம் d என்க. t1 = x, tm = y, tn = z எனக் கொடுக்கப்பட்டுள்ளது. பொது உறுப்பு சூத்திரத்தைப் பயன்படுத்த நாம் பெறுவது,
a + (l - 1)d = x ....(1)
a + (m - 1)d = y ..(2)
a + (n - 1)d = z .....(3)
x(m - 1) + y(n - l) + z(l - m)
= a[(m - n) +(n - l) + (l - m)] + d[(m - n)(l - 1) + (n - l)(m - 1) + (l - m)(n - 1)]
= a[0] + d[lm - ln - m + n + mn - lm - n + ln - mn - l + m]
= a(0) + d(0) = 0
(ii) சமன்பாடு (1) -லிருந்து (2), (2) -லிருந்து (3), (3) -லிருந்து (1) ஐக் கழித்தால் நாம் பெறுவது,
x - y = (l - m)d
y - z = (m - n)d
z - x = (n - l)d
(x - y)n + (y - z)l + (z - x)m = [(l - m)n + (m - n)l + (n - l)m]d
=[ln - mn + lm - nl + nm - lm]d = 0
3.
(i) a = −12, b = 5
யூக்ளிடின் வகுத்தல் துணைத்தேற்றத்தின்படி
a = bq + r, இங்கு 0 ≤ r < |b|
-12 = 5 x (-3) + 3 0 ≤ r < |5|
எனவே, ஈவு q = -3, மீதி r = 3
(ii) a = 17, b = -3
யூக்ளிடின் வகுத்தல் துணைத்தேற்றத்தின்படி
a = bq + r, இங்கு 0 ≤ r < |b|
17 = (-3) x (-5) + 2 0 ≤ r < |-3|
எனவே, ஈவு q = -5, மீதி r = 2
(iii) a = -19, b = -4
யூக்ளிடின் வகுத்தல் துணைத்தேற்றத்தின்படி
a = bq + r, 0 ≤ r < |b|
-19 = (-4) x (5) + 1 0 ≤ r < |-4|
எனவே, ஈவு q = 5, மீதி r = 1
4.
300-க்கும் 600-க்கும் இடையே 7-ஆல் வகுபடும் இயல் எண்கள் 301, 308, 315, …, 595.
300-க்கும் 600-க்கும் இடையே 7-ஆல் வகுபடும் இயல் எண்களின் கூடுதல் 301 + 308 + 315+....+595.
மேற்கண்ட தொடரின் உறுப்புகள் கூட்டுத் தொடர்வரிசையில் அமைந்துள்ளன.
முதல் உறுப்பு a = 301 ; பொது வித்தியாசம் d = 7 ; கடைசி உறுப்பு l = 595.
n = \(\left( \frac { l-a }{ d } \right) +1=\left( \frac { 595-301 }{ 7 } \right) \) + 1 = 43
Sn = \(\frac { n }{ 2 } \)[a + l], என்பதால் S43 = \(\frac { 43 }{ 2 } \)[301 + 595] =19264
5.
n = 11 என்பது ஒற்றை எண் என்பதால், a11-யின் மதிப்புக் காண n = 11 என an = n(n + 3)-யில் பிரதியிட
11-வது உறுப்பு = a11 = 11(11 + 3) = 154
n =18 என்பது இரட்டை எண் என்பதால், a18-யின் மதிப்புக் காண n = 18 என an = n2 + 1 -யில் பிரதியிட,
18 -வது உறுப்பு a18 = 182 + 1 = 325
6.
3x ≡ 1 (மட்டு 15) என்பதை
3x - 1 = 15k, k என்பது ஏதேனும் ஒரு முழு என எழுதலாம்.
3x = 15k + 1
x = \(\frac { 15k+1 }{ 3 } \)
x = \(5k+\frac { 1 }{ 3 } \)
5k என்பது ஒரு முழு எண் என்பதால், \(5k+\frac { 1 }{ 3 } \) என்பது ஒரு முழு எண் அல்ல. எனவே இச்சமன்பாட்டிற்கு முழு எண் தீர்வே இல்லை.
7.
8x ≡ 1 (மட்டு 11) என்பதை 8x - 1 = 11k, இங்கு k என்பது ஏதேனும் ஒரு முழுக்கள், என எழுதலாம்.
x = \(\frac { 11k+1 }{ 8 } \)
k = 5,13,21,29,... என நாம் பிரதியிடும் போது 11k + 1 ஆனது 8 ஆல் வகுபடுகிறது.
x = \(\frac { 11\times 5+1 }{ 8 } \) = 7
x = \(\frac { 11\times 13+1 }{ 8 } \) = 18
∴ 7,18,29,40, … என்பது தீர்வாகும்.
8.
445 மற்றும் 572 ஐ வகுக்கும்போது கிடைக்கும் மீதி 4 மற்றும் 5 எனில், நமக்குத் தேவையான எண் 445 - 4 = 441, மற்றும் 572 - 5 = 567 ஆகியவற்றின் மீப்பெரு பொது வகுத்தியாகத்தான் இருக்கும்.
எனவே நாம் 441 மற்றும் 567 ஆகிய எண்களின் மீ.பொ.வ கண்டறிவோம். யூக்ளிடின் வகுத்தல் வழிமுறையின்படி நாம் பெறுவது
567 = 441 x 1 + 126
441 = 126 x 3 + 63
126 = 63 x 2 + 0
ஆகவே 441 மற்றும் 567 ஆகியவற்றின் மீ.பொ.வ 63 ஆகும். எனவே தேவையான எண் 63 ஆகும்.
9.
\( \mathrm{n}=31, \mathrm{t}_{16}=\mathrm{m} \) \(\Rightarrow\) \(\mathrm{a} +15 \mathrm{~d}=\mathrm{m} \)
\(\mathrm{s}_{31} =\frac{n}{2}[2 a+(n-1) d] \) \(=\frac{31}{2}[2a+30 d]\)
\( =\frac{31}{2}[2(a+15d)] \) \(=\frac{31}{2}[2 m]=31 \mathrm{~m}\)
10.
F1 = 1, F2 = 3, F3 = F2 + F1 = 3 + 1 = 4,
F4 = F3 + F2 = 4 + 3 = 7, F5 = F4 + F3 = 7 + 4 = 11
11.
2, 3, 4, 5, 6, 7, 8, 9 இவற்றின் மீ.பொ.ம 2520
12.
(a)
0, 1, 8
13.
\(\left(1^3+2^3+3^3+\ldots+15^3\right)-(1+2+3+\ldots+15) \)
\(=\left[\frac{n(n+1)}{2}\right]^2-\left[\frac{n(n+1)}{2}\right] \)
\(=\left[\frac{15 \times 16}{2}\right]^2-\left[\frac{15 \times 16}{2}\right]=(120)^2-120\)
= 14400 - 120 = 14280
14.
\(\mathrm{t}_1, \mathrm{t}_2, \mathrm{t}_3, \ldots\) என்பது கூட்டுத் தொடர்வரிசை எனில் \(t_6, t_{12}, t_{18}, \ldots . . .\) என்பதும் பொது வேறுபாடு 6d உடைய ஒரு கூட்டுத் தொடர்வரிசை ஆகும்.
15.
a = 1, d = 4 மற்றும் Sn = 120
\(\mathrm{S}_{\mathrm{n}} =\frac{n}{2}[2 a+(n-1) d] \)
\(120 =\frac{n}{2}[2(1)+(n-1) 4] \)
\(120 \times 2 =\mathrm{n}[2+4(\mathrm{n}-1)] \)
\(240 =\mathrm{n}[2+4 \mathrm{n}-4] \)
\(=\mathrm{n}[4 \mathrm{n}-2] \)= 2n [2n - 1]
\(120 =\mathrm{n}[2 \mathrm{n}-1] \)
\(2 \mathrm{n}^2-\mathrm{n}-120 =0 \)
\(2 \mathrm{n}^2-16 \mathrm{n}+15 \mathrm{n}-120 =0 \)
\(2 \mathrm{n}(\mathrm{n}-8)+15(\mathrm{n}-8) =0 \)
\((\mathrm{n}-8)(2 \mathrm{n}+15) =0 \)
n = 8 அல்லது \(\mathrm{n}=\frac{-15}{2} \)
உறுப்புகளின் எண்ணிக்கை குறை எண்ணாக இருக்க முடியாது.
\(\therefore\) n = 8
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards