10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 30/09/2019
எண்களும் தொடர் வரிசைகளும்
10ஆம் வகுப்பு Maths / கணிதம் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Maths / கணிதம் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Maths Test1.
ஒரு நபர் ஒவ்வோர் ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டு சேமித்த தொகையில் பாதியைச் சேமிக்கிறார். 6 ஆண்டுகளில் அவர் ரூ.7875-ஐச் சேமிக்கிறார் எனில், முதல் ஆண்டில் அவர் சேமித்த தொகை எவ்வளவு?
2.
பின்வரும் ஒவ்வொன்றிலும் a -யை b ஆல் வகுக்கும்போது கிடைக்கும் ஈவு மற்றும் மீதியைக் காண்க. (i) a = −12 , b = 5 (ii) a = 17 , b = −3 (iii) a = −19 , b = −4
3.
பின்வருவனவற்றின் முதல் உறுப்பு மற்றும் பொது விகிதம் கொடுக்கப்பட்டுள்ளது, அதனுடைய பெருக்குத் தொடர்வரிசைகளைக் காண்க.
a = 256, r = 0.5
4.
1, −3, 9, −27… என்ற பெருக்குத் தொடர்வரிசையின் முதல் 8 உறுப்புகளின் கூடுதல் காண்க.
5.
பின்வருவனவற்றின் முதல் உறுப்பு மற்றும் பொது விகிதம் கொடுக்கப்பட்டுள்ளது, அதனுடைய பெருக்குத் தொடர்வரிசைகளைக் காண்க.
(i) a = -7, r = 6 (ii) a = 256, r = 0.5
6.
3, 15, 27, 39,… என்ற தொடர்வரிசையின் 15-வது, 24-வது மற்றும் n -வது உறுப்பு (பொது உறுப்பு) காண்க.
7.
ஒருவர் சென்னையிலிருந்து டெல்லிக்குச் செல்ல இரயிலில் புறப்படுகிறார். அவர் தனது பயணத்தைப் புதன்கிழமை22.30 மணிக்குத் தொடங்குகிறார். எந்தவிதத் தாமதமுமின்றி இரயில் செல்வதாகக் கொண்டால் மொத்தப் பயண நேரம் 32 மணி நேரம் ஆகும். அவர் எப்பொழுது டெல்லியைச் சென்றடைவார் ?
8.
104 ≡ x (மட்டு 19) என்றவாறு அமையும் x மதிப்பைக் கணக்கிடுக.
9.
15 ≡ 3 (மட்டு d) என்றவாறு அமையும் d -யின் மதிப்பைத் தீர்மானிக்க.
10.
ab x ba = 800 என்றவாறு அமையும் இரு மிகை முழுக்கள் ‘a’ மற்றும் ‘b’ ஐ காண்க.
11.
210 மற்றும் 55 ஆகியவற்றின் மீப்பெரு பொது வகுத்தியை 55x - 325 , என்ற வடிவில் எழுதினால் x –யின் மதிப்புக் காண்க.
12.
ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் 31 உறுப்புகள் உள்ளன. அதன் 16-வது உறுப்பு m எனில் அந்தக் கூட்டுத் தொடர்வரிசையில் உள்ள எல்லா உறுப்புகளின் கூடுதல் ______.
16 m
62 m
31 m
\(\frac{31}{2}\) m
13.
14.
74k ☰ _____ (மட்டு 100)
1
2
3
4
15.
யூக்ளிடின் வகுத்தல் துணைத் தேற்றத்தைப் பயன்படுத்தி, எந்த மிகை முழுவின் கனத்தையும் 9ஆல் வகுக்கும் போது கிடைக்கும் மீதிகள் ____.
0, 1, 8
1, 4, 8
0, 1, 3
1, 3, 5
16.
(13 + 23 + 33+ ...+ 153) - (1 + 2 + 3+....+15) யின் மதிப்பு _______.
14400
14200
14280
14520
17.
A = 265 மற்றும் B=264+263+262+ ...+ 20 எனக் கொடுக்கப்பட்டுள்ளது. பின்வருவனவற்றில் எது உண்மை?
B ஆனது A ஐ விட 264 அதிகம்
A மற்றும் B சமம்
B ஆனது A-ஐ விட 1 அதிகம்
A ஆனது B–ஐ விட 1 அதிகம்
18.
ஒரு கூட்டுத் தொடர்வரிசையில் முதல் உறுப்பு 1 மற்றும் பொது வித்தியாசம் 4. இந்தக் கூட்டுத் தொடர்வரிசையின் எத்தனை உறுப்புகளைக் கூட்டினால் அதன் கூடுதல் 120 கிடைக்கும்?
6
7
8
9
1.
6 ஆண்டுகளில் அவர் சேமித்த தொகை S6 = 7875
ஒவ்வோர் ஆண்டும் சேமிக்கும் தொகையானது அதற்கு முந்தைய ஆண்டின் சேமிப்புத் தொகையில் பாதி என்பதால், r = \(\frac { 1 }{ 2 } \)< 1
\(\frac { a({ 1-r }^{ n }) }{ 1-r } =\frac { a\left( 1-\left( \frac { 1 }{ 2 } \right) ^{ 6 } \right) }{ 1-\frac { 1 }{ 2 } } \) = 7875
\(\frac { a\left( 1-\frac { 1 }{ 64 } \right) }{ \frac { 1 }{ 2 } } \)=7875 ⇒ a x \(\frac { 63 }{ 32 } \)= 7875 ⇒ a = \(\frac { 7875\times 32 }{ 63 } \) ⇒ a = 4000
எனவே, அந்த நபர் முதல் ஆண்டில் சேமித்த தொகை ரூ.4000.
2.
(i) a = −12, b = 5
யூக்ளிடின் வகுத்தல் துணைத்தேற்றத்தின்படி
a = bq + r, இங்கு 0 ≤ r < |b|
-12 = 5 x (-3) + 3 0 ≤ r < |5|
எனவே, ஈவு q = -3, மீதி r = 3
(ii) a = 17, b = -3
யூக்ளிடின் வகுத்தல் துணைத்தேற்றத்தின்படி
a = bq + r, இங்கு 0 ≤ r < |b|
17 = (-3) x (-5) + 2 0 ≤ r < |-3|
எனவே, ஈவு q = -5, மீதி r = 2
(iii) a = -19, b = -4
யூக்ளிடின் வகுத்தல் துணைத்தேற்றத்தின்படி
a = bq + r, 0 ≤ r < |b|
-19 = (-4) x (5) + 1 0 ≤ r < |-4|
எனவே, ஈவு q = 5, மீதி r = 1
3.
பெருக்குத் தொடர்வரிசையின் பொது வடிவம் a, ar, ar2,...
a = 256, ar = 256 x 0.5 = 128, ar2 = 256 x (0.5)2 = 64
எனவே, தேவையான பெருக்குத் தொடர்வரிசை 256, 128, 64,....
4.
முதல் உறுப்பு a = 1, பொது விகிதம் r = \(\frac { -3 }{ 1 } \) = -3 < 1, n = 8
பெருக்குத் தொடர்வரிசையின் முதல் n உறுப்புகளின் கூடுதல் Sn = \(\frac { a({ r }^{ n }-1) }{ r-1 }\) r ≠ 1
ஆகவே, S8 = \(\frac { 1((-3)^{ 8 }-1) }{ (-3)-1 } =\frac { 6561-1 }{ -4 } \) = -1640
5.
(i) பெருக்குத் தொடர்வரிசையின் பொது வடிவம் a, ar, ar2,...
a = -7, ar = -7 x 6 = -42, ar2 = -7 x 62 = -252
எனவே, தேவையான பெருக்குத் தொடர்வரிசை -7, -42, -252,.....
(ii) பெருக்குத் தொடர்வரிசையின் பொது வடிவம் a, ar, ar2,...
a = 256, ar = 256 x 0.5 = 128, ar2 = 256 x (0.5)2 = 64
எனவே, தேவையான பெருக்குத் தொடர்வரிசை 256, 128, 64,....
6.
முதல் உறுப்பு a = 3 மற்றும் பொது வித்தியாசம் d = 15–03 = 12 .
முதல் உறுப்பு a, பொது வித்தியாசம் d ஆக உள்ள கூட்டுத் தொடர்வரிசையின் n -வது உறுப்பு
tn = a + (n - 1)d என நாம் அறிவோம்
t15 = a + (15 - 1)d = a + 14d = 3 + 14(12) = 171
(இங்கு a = 3 மற்றும் d = 12)
t24 = a + (24 - 1)d = a + 23d = 3 + 23(12) = 279
n -வது உறுப்பு (பொது உறுப்பு) tn = a + (n - 1)d
tn = 3 + (n - 1)12
tn = 12n - 9
7.
பயணம் தொடங்கும் நேரம் 22.30. பயண நேரம் 32 மணி நேரம் இங்கு நாம் மட்டு 24 ஐ பயன்படுத்த உள்ளோம்.
சென்று சேரும் நேரம்
22.30 + 32 (மட்டு 24) ≡ 54.30 (மட்டு 24)
≡ 6.30 (மட்டு 24) (அதாவது 32 = (1 x 24) + 8 வியாழன் வெள்ளி)
ஆகவே அவர் வெள்ளிக்கிழமை காலை 6.30 மணிக்கு டெல்லி சென்றடைவார்.
8.
102 = 100 ≡ 5 (மட்டு 19)
104 = (102)2 ≡ 52 (மட்டு 19)
104 ≡ 25 (மட்டு 19)
104 ≡ 6 (மட்டு 19) (ஏனெனில், 25 ≡ 6 (மட்டு 19))
எனவே, x = 6.
9.
15 ≡ 3 (மட்டு d) என்பதன் பொருள் 15 - 3 = kd, இங்கு k என்பது ஏதேனும் ஒரு முழு.
12 = kd
d ஆனது 12 ஐ வகுக்கும்.
12 -யின் வகுத்திகளாவன 1,2,3,4,6,12
d ஆனது 3 ஐ விட அதிகமாக இருக்க வேண்டும், ஏனெனில் மீதி 3 வந்துள்ளது. எனவே, d- க்கு சாதகமான மதிப்புகள் 4,6,12 ஆகும்.
10.
800 என்ற எண்ணைக் காரணிப்படுத்தும்போது, நாம் பெறுவது
800 = 2 x 2 x 2 x 2 x 2 x 5 x 5 =25 x 52
ஆகவே, ab x ba = 25 x 52
இதிலிருந்து நாம் பெறுவது. a = 2, b = 5 (அ) a = 5, b = 2
11.
யூக்ளிடின் வகுத்தல் வழிமுறையைப் பயன்படுத்திக் கொடுக்கப்பட்ட எண்களுக்கு மீ.பொ.வ காண்போம்.
210 = 55 x 3 + 45
55 = 45 x 1 + 10
45 = 10 x 4 + 5
10 = 5 x 2 + 0
மீதி = 0
ஆகவே, கடைசி படிநிலையின் வகுத்தி 5 ஆனது 210 மற்றும் 55 –யின் மீப்பெரு பொது வகுத்தியாகும். மீப்பெரு பொது வகுத்தியை 55x - 325 = 5 எனக் கொடுக்கப்பட்டுள்ளதால்,
55x = 330
x = 6
12.
\( \mathrm{n}=31, \mathrm{t}_{16}=\mathrm{m} \) \(\Rightarrow\) \(\mathrm{a} +15 \mathrm{~d}=\mathrm{m} \)
\(\mathrm{s}_{31} =\frac{n}{2}[2 a+(n-1) d] \) \(=\frac{31}{2}[2a+30 d]\)
\( =\frac{31}{2}[2(a+15d)] \) \(=\frac{31}{2}[2 m]=31 \mathrm{~m}\)
13.
(a)
14.
(a)
1
15.
(a)
0, 1, 8
16.
\(\left(1^3+2^3+3^3+\ldots+15^3\right)-(1+2+3+\ldots+15) \)
\(=\left[\frac{n(n+1)}{2}\right]^2-\left[\frac{n(n+1)}{2}\right] \)
\(=\left[\frac{15 \times 16}{2}\right]^2-\left[\frac{15 \times 16}{2}\right]=(120)^2-120\)
= 14400 - 120 = 14280
17.
\(A=2^{65} \)
\(B=2^{64}+2^{63}+2^{62}+\ldots+2^0\)
இங்கு \(a=2^{64} ; r=\frac{2^{63}}{2^{64}}=\frac{1}{2} ; n=65\)
\(\mathrm{S}_{\mathrm{n}}=\frac{a\left(r^n-1\right)}{r-1} \)
\(\mathrm{B}=\frac{2^{64}\left(\left(\frac{1}{2}\right)^{65}-1\right)}{-\frac{1}{2}}=2^{65}\left(\frac{1}{2^{65}}-1\right)(-1) \)
\(=\left(1-2^{65}\right)(-1) \) \(=2^{65}-1\)
\(\therefore B=\mathrm{A}-\mathrm{I} \) (\(\because\) \(\mathrm{A}=2^{65}\))
\(\mathrm{A}=\mathrm{B}+1\)
18.
a = 1, d = 4 மற்றும் Sn = 120
\(\mathrm{S}_{\mathrm{n}} =\frac{n}{2}[2 a+(n-1) d] \)
\(120 =\frac{n}{2}[2(1)+(n-1) 4] \)
\(120 \times 2 =\mathrm{n}[2+4(\mathrm{n}-1)] \)
\(240 =\mathrm{n}[2+4 \mathrm{n}-4] \)
\(=\mathrm{n}[4 \mathrm{n}-2] \)= 2n [2n - 1]
\(120 =\mathrm{n}[2 \mathrm{n}-1] \)
\(2 \mathrm{n}^2-\mathrm{n}-120 =0 \)
\(2 \mathrm{n}^2-16 \mathrm{n}+15 \mathrm{n}-120 =0 \)
\(2 \mathrm{n}(\mathrm{n}-8)+15(\mathrm{n}-8) =0 \)
\((\mathrm{n}-8)(2 \mathrm{n}+15) =0 \)
n = 8 அல்லது \(\mathrm{n}=\frac{-15}{2} \)
உறுப்புகளின் எண்ணிக்கை குறை எண்ணாக இருக்க முடியாது.
\(\therefore\) n = 8
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards