10th Standard Syllabus & Materials
10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Population, Transport, Communication and Trade Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Resources and Industries Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 04/09/2019
ஒலியியல்
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
ஒரு ஒலி மூலமானது 40 கிமீ / மணி வேகத்தில், 2000 Hz அதிர்வெண்ணுடன் கேட்குநரை நோக்கி நகர்கிறது. ஒலியின் திசைவேகம் 1220 கி.மீ / மணி எனில் கேட்குநரால் கேட்கப்படும் தோற்ற அதிர்வெண் ______.
2.
ஒரு நெட்டலையின் ஆற்றலானது தெற்கிலிருந்து வடக்காகப் பரவுகிறது எனில், ஊடகத்தின் துகள்கள் _____ லிருந்து _______ நோக்கி அதிர்வடைகின்றன.
3.
ஒரு துகளானது ஒரு மையப்புள்ளியிலிருந்து முன்னும், பின்னும் தொடர்ச்சியாக இயங்குவது _____ ஆகும்.
4.
ஒரு கோளின் வளிமண்டலத்தில் ஒலியின் திசைவேகம் 500 மீ.வி-1 எனில் எதிரொலி கேட்க ஒலி மூலத்திற்கும், எதிரொலிக்கும் பரப்பிற்கும் இடையே தேவையான குறைந்தபட்சத் தொலைவு என்ன?
17 மீ
20 மீ
25 மீ
50 மீ
5.
ஒரு ஒலி அலையானது எதிரொலிக்கப்பட்டு மீண்டும் அதே ஊடகத்தில் பரவும்போது, கீழ்கண்டவற்றுள் எது மாற்றமடையும்.
வேகம்
அதிர்வெண்
அலைநீளம்
எதுவுமில்லை
6.
வாயு ஊடகத்தில் ஒலியின் திசைவேகம் 330 மீவி-1. வெப்பநிலை மாறிலியாக இருக்கும் போது, அதன் அழுத்தம் 4 மடங்கு உயர்த்தப்பட்டால், ஒலியின் திசைவேகம் ____.
330 மீவி-1
660 மீவி-1
156 மீவி-1
990 மீவி-1
7.
ஒலி அலைகள் காற்றில் பரவும் போது அதன் துகள்கள்_____.
அலையின் திசையில் அதிர்வுறும்
அதிர்வுறும், ஆனால் குறிப்பிட்டத் திசை இல்லை
அலையின் திசைக்கு செங்குத்தாக அதிர்வுறும்
அதிர்வுறுவதில்லை.
8.
கூற்று: ஒலி வாயுக்களை விட திடப்பொருளில் வேகமாகச் செல்லும்.
காரணம்: திடப்பொருளின் அடர்த்தி, வாயுக்களை விட அதிகம்.
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.
இ) கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.
ஈ) கூற்று சரியானது, ஆனால், காரணம் சரியல்ல
உ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
9.
கூற்று : காற்றின் அழுத்த மாறுபாடு ஒலியின் திசைவேகத்தைப் பாதிக்கும்.
காரணம் : ஏனெனில் ஒலியின் திசைவேகம், அழுத்தத்தின் இருமடிக்கு நேர்தகவில் இருக்கும்.
அ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கம்
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.
இ) கூற்று தவறானது. ஆனால், காரணம் சரியானது.
ஈ) கூற்று சரியானது, ஆனால், காரணம் சரியல்ல
உ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
10.
ஒரு ஊடகத்தில் 200 Hz அதிர்வெண் உடைய ஒலியானது 400 மீ.வி-1 வேகத்தில் பரவுகிறது ஒலி அலையின் அலைநீளம் காண்க.
11.
ஒலியானது கோடை காலங்களை விட மழைக் காலங்களில் வேகமாகப் பரவுவது ஏன்?
12.
எதிரொலி என்றால் என்ன?
அ) எதிரொலி கேட்பதற்கான இரண்டு நிபந்தனைகளைக் கூறுக.
ஆ) எதிரொலியின் மருத்துவ பயன்களைக் கூறுக.
இ) எதிரொலியைப் பயன்படுத்தி ஒலியின் திசைவேகத்தைக் காண்க?
13.
டாப்ளர் விளைவு வரையறு.
14.
ஒலி மற்றும் ஒளி அலைகளை வேறுபடுத்துக.
1.
( )
2067 Hz
2.
( )
தெற்கில், வடக்கு
3.
( )
அதிர்வுகள்
4.
(c)
25 மீ
5.
(d)
எதுவுமில்லை
6.
(a)
330 மீவி-1
7.
(a)
அலையின் திசையில் அதிர்வுறும்
8.
ஆ) கூற்று மற்றும் காரணம் ஆகிய இரண்டும் சரி. ஆனால், காரணம் கூற்றுக்கு சரியான விளக்கமல்ல.
9.
உ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் தவறு.
10.
ஒலியின் அதிர்வெண் f = 200 Hz
ஒலியின் வேகம் V = 400 மீ.வி-1
ஒலியின் அலைநீளம் \(\lambda\) = ?
v = f \(\lambda\)
\(\lambda\) = \(\frac{v}{n}\) = \(\frac{400}{200}\) = 2 மீ.
ஒலியின் அலைநீளம் = 2 மீ.
11.
காற்றின் ஈரப்பதம் அதிகரிக்கும் போது, ஒலியின் திசைவேகமும் அதிகரிக்கிறது. எனவே, மழைக்காலங்களில் தொலைவிலிருந்து வரக்கூடிய ஒலியைத் தெளிவாகக் கேட்க முடிகிறது.
12.
ஒலி அலைகள் சுவர்கள், மேற்கூரைகள், மலைகள் போன்றவற்றின் பரப்புகளில் மோதி பிரதிபலிக்கப்படும் நிகழ்வே எதிரொலி ஆகும்.
அ) எதிரொலி கேட்பதற்கான இரண்டு நிபந்தனைகள்:
எழுப்பப்படும் ஒலிக்கும், எதிரொலிக்கும் இடையே 0.1 விநாடி இருக்க வேண்டும்.
எதிரொலி கேட்பதற்கான குறைந்தபட்ச தொலைவு 17.2 மீ.
ஆ) எதிரொலியின் மருத்துவ பயன்கள்:
எதிரொலி தத்துவம் மகப்பேறியல் துறையில் அல்ட்ராசோனோகிராபி கருவியில் பயன்படுகிறது. இதைப்பயன்படுத்தி தாயின் கருப்பையில் உள்ள கருவின் வளர்ச்சியினை ஆராய்ந்தறியப் பயன்படுகிறது.
இ) எதிரொலி முறையில் ஒலியின் திசைவேகத்தைக் காணுதல்.
தேவையான கருவிகள்:
ஒலி மூலம், அளவு நாடா, ஒலி ஏற்பி மற்றும் நிறுத்துக் கடிகாரம்
செய்முறை
ஒலி மூலத்திற்கும், எதிரொலிப்புப் பரப்பிற்கும் இடையேயானத் தொலைவை (d) அளவு
நாடாவைப் பயன்படுத்தி அளந்து கொள்ளவும்.
ஒலி ஏற்பியை ஒலி மூலத்திற்கு அருகில் வைக்கவும். தற்போது ஒலி சமிக்ஞைகள் ஒலி மூலத்திலிருந்து வெளிப்படும்.
நிறுத்துக் கடிகாரத்தைப் பயன்படுத்தி ஒலி மூலத்திலிருந்து வெளிப்பட்ட ஒலி சமிக்ஞைகளுக்கும், எதிரொலித்து வந்த ஒலி சமிக்ஞைகளுக்கும் இடையேயான கால இடைவெளியைக் குறித்துக் கொள்ளவும். கால இடைவெளி 't' என்க.
இந்த சோதனையை மூன்று அல்லது நான்கு முறை செய்து பார்க்கவும். சராசரி கால இடைவெளியைக் கணக்கிடவும்.
ஒலியின் திசைவேகம் கணக்கிடல்
ஒலி மூலத்திலிருந்து வெளியான ஒலித்துடிப்பு ஒலி மூலத்திலிருந்து சுவர் வரை சென்று பின்னர் எதிரொலித்து ஒலி மூலம் வரையுள்ள 2d தொலைவை t நேரத்தில் கடந்து செல்கிறது. எனவே

13.
ஒலி மூலத்திற்கும், கேட்குநருக்கும் இடையே சார்பியக்கம் இருக்கும்போது, கேட்குநரால் கேட்கப்படும் ஒலியின் அதிர்வெண்ணானது ஒலி மூலத்தின் அதிர்வெண்ணிலிருந்து மாறுவது போல் தோன்றும். இந்நிகழ்வு டாப்ளர் விளைவு எனப்படும்.
14.
| வ.எண் | ஒலி அலைகள் | ஒளி அலைகள் |
|---|---|---|
| 1. | பரவுவதற்கு ஊடகம் தேவை | பரவுவதற்கு ஊடகம் தேவையில்லை |
| 2. | நெட்டலைகள் | குறுக்கலைகள் |
| 3. | அலை நீளம் 1.65 செ.மீ. முதல் 1.65 மீ வரை | அலை நீளம் 4 x 10-7 மீ முதல் 7 x 10-7 மீ |
| 4. | ஒலி அலைகள் 340 மீவி-1 திசைவேகத்தில் பரவும்(NTP) | ஒலி அலைகள் 3 x 108 மீவி-1 திசைவேகத்தில் பரவும் |
10th Standard Syllabus & Materials
10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set C
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set B
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - Climate and Natural Vegetation of India Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
Tamilnadu 10th Standard Social Science GEO - India - Location, Relief and Drainage Important Questions And Answers Study Material - QB365 Set B
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards