10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 26/07/2019
ஒளியியல்
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
நிறமாலை எவ்வாறு தோன்றுகிறது?
2.
ஒளிவிலகல் ஏற்படக் காரணம் என்ன?
3.
ஒளிவிலகல் என்றால் என்ன?
4.
போக்குவரத்துச் சைகை விளக்குகள் சிவப்பு நிறத்தில் அமைக்கப்படுவதன் காரணம் என்ன?
5.
வானம் ஏன் நீலநிறமாகத் தோன்றுகிறது?
6.
சூரிய உதய மற்றும் மறைவின்போது சிவப்பாகக் காட்சியளிப்பது ஏன்?
7.
ஒளிச்சிதறல் என்றால் என்ன? அது ஏற்படக் காரணம் யாது?
8.
ஒளி விலகலின் விதிகளைக் கூறுக.
9.
ஆந்தை போன்ற இரவு நேரப் பறவைகளின் கண்களில் உள்ள கார்னியா மற்றும் கண் பாவை ஆகியவை அளவில் பெரியதாக உள்ளன. இவ்வமைப்பு அவற்றுக்கு எவ்வாறு உதவுகின்றன?
10.
நாம் பொருட்களை காண்பது _______ நிகழ்வினால் ஆகும்.
எதிரொளிப்பு
ஒளிவிலகல்
ஊடுருவல்
ஒளிச்சிதறல்
11.
ஊதா மற்றும் சிவப்பு ஒளியின் அலைநீளங்கள் முறையே _______
குறைந்தது, உயர்ந்தது
உயர்ந்தது, குறைந்தது
ஒரே அளவு
ஏதுமில்லை
12.
சொல் அகராதியில் உள்ள சிறிய எழுத்துகளைப் படிப்பதற்கு உகந்த லென்சு எது?
5 செ.மீ குவிய தூரம் கொண்ட குவி லென்சு
5 செ.மீ குவிய தூரம் கொண்ட குழி லென்சு
10 செ.மீ குவிய தூரம் கொண்ட குவி லென்சு
10 செ.மீ குவிய தூரம் கொண்ட குழி லென்சு
13.
பொருளின் அளவிற்கு சமமான, தலைகீழான மெய்ப்பிம்பம் கிடைக்க பொருள் வைக்கப்பட வேண்டிய தொலைவு
f
ஈறிலாத் தொலைவு
2f
f க்கும் 2f க்கும் இடையில்
14.
A, B, C, D என்ற நான்கு பொருள்களின் ஒளி விலகல் எண்கள் முறையே 1.31, 1.43, 1.33, 2.4 எனில், இவற்றில் ஒளியின் திசைவேகம் பெருமளவாக உள்ள பொருள் எது?
A
B
C
D
15.
ஒளிவிலகலின் இரண்டாம் விதியினை விவரி.
16.
ஒரு 5 செ.மீ உயரமுடைய பொருள் 20 செ.மீ குவியதூரம் உடைய குவிலென்சின் முக்கிய அச்சின்மீது வைக்கப்பட்டு லென்சிலிருந்து பொருளின் தொலைவு 30 செ.மீ உருவாக்கப்படும் பிம்பத்தின் (i) நிலை (ii) இயல்பு மற்றும் (iii) வடிவம் இவற்றைக் காண்.
17.
தூரப் பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மனிதர் ஒருவரின் அண்மைப் புள்ளியானது 1.5 மீ தொலைவில் உள்ளது. அவருடைய பார்வைக் குறைபாட்டை சரி செய்ய பயன்படுத்தப்பட வேண்டிய குவிலென்சின் குவியத் தொலைவை கணக்கிடு.
18.
லென்ஸின் திறனின் அலகு _____
19.
பொருள் எப்போதும் லென்சிற்கு ____ பக்கம் வைக்கப்பட வேண்டும்.
20.
உருப்பெருக்கத்தின் மதிப்பு 1ஐ விட அதிகமாக இருந்தால் _____ பிம்பம் கிடைக்கும்.
21.
ஒளிவிலகல் என்பது ஒளி வெவ்வேறு ஊடகத்தில் வெவ்வேறு _______ உடன் செல்வதால் உண்டாகிறது.
22.
நீல மற்றும் பச்சை ஒளி வெவ்வேறு _____ மற்றும் ________ உடையவை.
23.
ஊதா ஒளி
24.
சுய ஒளியை வெளியிடுபவை
25.
ஒளியை வெளிவிடும் பொருள்கள்
1.
வெள்ளொளியானது ஒளிபுகும் ஊடகத்தில் செல்லும் போது வெவ்வேறு நிறங்கள் வெவ்வேறு கோண அளவுகளில் விலகல் அடைவதால் நிறப்பிரிகை ஏற்பட்டு நிறமாலை தோன்றுகிறது.
2.
ஒளியானது வெவ்வேறு ஊடகத்தில், வெவ்வேறு திசைவேகத்தில் செல்வதால் ஒளிவிலகல் ஏற்படுகிறது.
3.
ஒளிக்கதிரொன்று ஓர் ஒளி புகும் ஊடகத்தில் இருந்து மற்றோர் ஒளிபுகும் ஊடகத்திற்குச் சாய்வாகச் செல்லும் போது, ஒளிக்கதிர் தன் பாதையில் இருந்து விலகிச் செல்கிறது. ஒளிக்கதிரின் பாதையில் ஏற்படும் இந்த விலகல் 'ஒளிவிலகல்' எனப்படுகிறது.
4.
1. கண்ணுறு ஒளியில் சிவப்பு நிறம் மிகக் குறைந்த விலகு கோணத்தைப் பெற்றுள்ளன. எனவே அதிக தூரத்திற்கு தெளிவாக காணமுடியும்.
2. எனவே போக்குவரத்துச் சைகை விளக்குகள் சிவப்பு நிறத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
5.
1. சூரிய ஒளியானது வளிமண்டலத்தின் வழியாகச் செல்லும் போது ராலே சிதறல் விதிப்படி குறைந்த அலைநீளம் உடைய நீல நிறமானது அதிக அலைநீளம் கொண்ட சிவப்பு நிறத்தைவிட அதிகமாக சிதறல் அடைகிறது.
2. இதனால் வானம் நீல நிறமாகத் தோன்றுகிறது.
6.
(i) சூரிய உதயம் மற்றும் மறைவின்போது, சூரிய ஒளியானது, நண்பகலில் இருப்பதை விட வளிமண்டலத்தில் அதிகத் தொலைவு செல்ல வேண்டியிருக்கிறது.
(ii) எனவே நீல நிற ஒளியானது முற்றிலுமாகச் சிதறலடைந்து சென்று விடுவதால், குறைவாகச் சிதறல் அடைந்த சிவப்பு நிற ஒளியே நம்மை அடைகிறது. எனவே, சூரிய உதயம் மற்றும் மறைவின் போது சூரியன் சிவப்பாகக் காட்சியளிக்கிறது.
7.
(i) சூரிய ஒளி, புவியின் வளிமண்டலத்தில் நுழையும் போது, வளிமண்டலத்தில் உள்ள பல்வேறு வாயு அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளால் அனைத்து திசைகளிலும் விலகல் அடையச் செய்யப்படுகிறது.
(ii) இந்நிகழ்வு 'ஒளிச்சிதறல்' எனப்படுகிறது. இந்நிகழ்வில் ஒளிக்கற்றையானது ஊடகத்தில் (காற்றில்) உள்ள துகள்களுடன் இடைவினையில் ஈடுபடும் போது, அவை அனைத்துத் திசைகளிலும், திருப்பி விடப்பட்டுச் சிதறல் நிகழ்கிறது. இடைவினையில் ஈடுபடும் துகள் எனப்படுகிறது.
8.
ஒளி விலகலின் விதிகள்:
(i) ஒளிக்கதிர் ஓர் ஊடகத்திலிருந்து, மற்றோர் ஊடகத்திற்குச் செல்லும்போது, படுகதிர், விலகுகதிர், படுபுள்ளியில் விலகல் அடையும் பரப்புக்குச் செங்குத்தாக வரையப்படும் கோடு ஆகியவை ஒரே தளத்தில் அமைகின்றன.
(ii) படுகோணமும், விலகு கோணமும் சமம் ∠i=∠r
9.
இந்த பண்பானது பார்க்கும் தூரம் மற்றும் பரப்பளவு அதிகமாக கிடைக்கிறது. மேலும் இரவு நேரங்களில் அதிக அளவு ஒளி கிடைக்க பயன்படுகிறது.
எனவே ஆந்தை போன்ற இரவு நேரப் பறவைகளின் கண்களின் கார்னியா மற்றும் கண்பாவை ஆகியவை அளவில் பெரியதாக உள்ளன.
10.
(a)
எதிரொளிப்பு
11.
(a)
குறைந்தது, உயர்ந்தது
12.
(a)
5 செ.மீ குவிய தூரம் கொண்ட குவி லென்சு
13.
(c)
2f
14.
(a)
A
15.
(i) ஒளிக்கதிர் ஓர் ஊடகத்திலிருந்து, மற்றோர் ஊடகத்திற்குச் செல்லும் போது, படுகோணத்தின் சைன் மதிப்பிற்கும், விலகு கோணத்தின் சைன் மதிப்பிற்கும் இடையே உள்ள தகவானது அவ்விரு ஊடகங்களின் ஒளிவிலகல் எண்களின் தகவிற்கு சமம். இவ்விதி 'ஸ்நெல் விதி' என்றும் அழைக்கப்படுகிறது.
\(\frac { sini }{ sinr } =\frac { { \mu }_{ 2 } }{ { \mu }_{ 1 } } \)
(ii) காற்றில் அல்லது வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகத்திற்கும் மற்றோர் ஊடகத்தில் ஒளியின் திசைவேகத்திற்கும் இடையே உள்ள தகவு ஒளிவிலகல் எண் (μ) என்றும் வரையறுக்கப்படுகிறது.
(iii) ஒளியின் திசைவேகமானது ஒளிவிலகல் எண் அதிகம் உள்ள ஊடகத்தில் குறைவாகவும், ஒளிவிலகல் எண் குறைவாக உள்ள ஊடகத்தில் அதிகமாகவும் அமையும்.
(iv) ஓர் ஒளிக்கதிரானது அடர்வு மிகு ஊடகத்திலிருந்து அடர்வு குறைந்த ஊடகத்திற்குச் செல்லும் போது விலகு கதிர் செங்குத்து கோட்டை விட்டு விலகிச் செல்லும்.
(v) ஒளிக்கதிர் அடர்வு குறைந்த ஊடகத்திலிருந்து, அடர்வு மிகு ஊடகத்திற்குச் செல்லும்போது செங்குத்து கோட்டை நோக்கி விலகிச் செல்லும்.
16.
கொடுக்கப்பட்டவை:
பொருளின் வடிவம் ho= 5 செ.மீ
பொருளின் வடிவம் h1=?
பொருளின் தொலைவு u =-30 செ மீ
குவிலென்சின் குவியதூரம்
கண்டறிய :
பிம்பத்தின் வடிவம் h1=?
பிம்பத்தின் இயல்பு =?
பிம்பத்தின் நிலை =?
தீர்வு
\(\cfrac { 1 }{ f } =\cfrac { 1 }{ v } -\cfrac { 1 }{ u } \)
\(\cfrac { 1 }{ v } =\cfrac { 1 }{ u } +\cfrac { 1 }{ f } =-\cfrac { 1 }{ 30 } +\cfrac { 1 }{ 20 } =\cfrac { -2+3 }{ 60 } \)
(அல்லது)
\(\cfrac { 1 }{ v } =\cfrac { 1 }{ 60 } \Rightarrow v=60\) செ.மீ
உருப்பெருக்கம் = பிம்பத்தின் வடிவத்தின் உயரம்/பொருளின் உயரம்
\(m=\cfrac { { h }_{ 2 } }{ { h }_{ 1 } } =\cfrac { { h }_{ i } }{ { h }_{ 0 } } \Rightarrow \cfrac { v }{ u } =\cfrac { 60 }{ -30 } =-2\)
\(\therefore \) h2 = h1(-2)=5 x (-2)=-10 செ.மீ
(i) பெரிதாக்கப்பட்ட தலைகீழான உண்மை பிம்பம்
(ii) பிம்பத்தின் அளவு h2 = -10 செ.மீ.
17.
தரப்பட்டவை, d = 1.5 மீ; D = 25 செ.மீ = 0.25 மீ.
பார்வை குறைபாட்டைச் சரிசெய்ய பயன்படுத்தப்பட வேண்டிய லென்சின் குவியத்தொலைவு
\(f=\frac { d\times D }{ d-D } =\frac { 1.5\times 0.25 }{ 1.5-0.25 } =\frac { 0.375 }{ 1.25 } =0.3\)மீ
18.
( )
டையாப்டர்
19.
( )
இடப்
20.
( )
பொருளை விட பெரிய
21.
( )
திசைவேகம்
22.
( )
அலைநீளம், அதிர்வெண்
23.
உயர் அதிர்வெண்
24.
ஒளிரும்பொருட்கள்
25.
ஒளிமூலங்கள்
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards