10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 31/07/2019
மின்னோட்டவியல்
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
ஒரு வீட்டின் இரு அறைகளில் வெவ்வேறு விதமான பல்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று அதிக ஒளியுடன் எரிகிறது. மற்றொன்று மங்கலான ஒளியுடையதாக இருக்கிறது. இதன் காரணம் என்ன? இரண்டாவதை இரவு விளக்காக கூட கருதலாம்.
2.
ஓம் விதியினைக் கூறி அதன் வரைபடத்தினை விவரி.
3.
ஐந்து ஆம்பியர் மின்னோட்டம் பாயும் ஒரு மின்சுற்றில் ஒரு வினாடி நேரத்தில் பாயும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கையை கணக்கிடு.
4.
அ) சாதாரண தொலைக்காட்சிப் பெட்டியை விட LED தொலைக்காட்சிப் பெட்டியினால் ஏற்படும் நன்மைகள் யாவை?
ஆ) LED விளக்கின் நன்மைகளை பட்டியலிடுக.
5.
1Ω, 2Ω மற்றும் 4Ω ஆகிய மின் தடைகளைக் கொண்ட மூன்று மின்தடையாக்கிகள் ஒரு மின்சுற்றில் இணையாக இணைக்கப்பட்டுள்ளது. 1 Ω மின் தடை கொண்ட மின் தடையாக்கி வழியாக 1 A மின்னோட்டம் சென்றால் மற்ற இரு மின்தடையாக்கிகள் வழியாக செல்லும் மின்னோட்டத்தின் மதிப்பினை காண்க.
6.
மின்னழுத்த வேறுபாட்டிற்கும், மின்னோட்டத்திற்குமான தொடர்பு
V α I
V α I2
V α \(\frac{1}{I}\)
ஏதுமில்லை
7.
ஓம் விதிப்படி மின்னழுத்தம் உயரவும் மின்தடை மாறாமலும் இருக்கும் போது
மின்தடை குறைகிறது
மின்னோட்டம் உயர்கிறது
மின்னோட்டம் மாறாது
மின்னோட்டம் குறைகிறது
8.
மின்திறனின் SI அலகு
ஜூல்
ஆம்பியர்
வாட்
ஓம்
9.
மின்தடையின் SI அலகு ______.
மோ
ஜூல்
ஓம்
ஓம் மீட்டர்
10.
கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது?
மின்னூட்டம் பாயும் வீதம் மின் திறன்
மின்னூட்டம் பாயும் வீதம் மின்னோட்டம்
மின்னாற்றல் மாறும் வீதம் மின்னோட்டம்
மின்னோட்டம் மாறும் வீதம் மின்னூட்டம்
11.
மின்னோட்டம், I
12.
மின்னழுத்த வேறுபாடு, V
13.
| பகுதி I | பகுதி II | ||
| 1) | மின்னோட்டம் | அ) | வோல்ட் |
| 2) | மின்னழுத்த வேறுபாடு | ஆ) | ஓம் மீட்டர் |
| 3) | மின்தடை எண் | இ) | வாட் |
| 4) | மின்திறன் | ஈ) | ஜூல் |
| 5) | மின்னாற்றல் | உ) | ஆம்பியர் |
14.
LED பயன்படும் சில சாதனங்களைக் கூறு.
15.
ஒரு கடத்தியின் அளவை தடிமனாக்கினால் அதன் மின் தடையின் மதிப்பு என்னவாகும்?
16.
மின்னோட்டத்தின் அலகை வரையறு.
17.
____ என்பது பல மின் கூறுகளில் வலையமைப்பு கொண்டு உருவாக்கப்பட்ட பாதை
18.
ஒரு மின்சுற்றில் சாவி _____ மின்விளக்கு ஒளிரும்.
19.
_____ உயர் அழுத்தப் பகுதியிலிருந்து குறைந்த அழுத்தப்பகுதியை நோக்கி செல்லும்.
20.
வெவ்வேறு உலோகங்களுக்கு ____ மின்தடை இருக்கும்.
21.
V மற்றும் Iக்கும் இடையேயான வரைபடம் ஒரு _______
22.
மின்னோட்டத்தின் வெப்ப விளைவு என்றால் என்ன? அதன் பயன் யாது?
23.
தொடர் மற்றும் பக்க இணைப்புச் சுற்றுகளுக்கு இடையே உள்ள வேறுபாடு யாது?
1.
இரு பல்புகளும் செல்லக்கூடிய மின்னோட்டத்தால் உயர்மின் தடையுடைய பல்பானது திறன் குறைவாக இருக்கும். எனவே அது மங்கலான ஒளிர்வினை கொண்டிருக்கும். குறைவான மின்தடை கொண்ட பல்பானது திறன் அதிகமாக இருக்கும். எனவே அதிக ஒளியுடன் எரிகிறது.
திறன், மின்தடையுடன் எதிர் விகிதத்தில் இருக்கும்.
\(\therefore P={ \frac { { V }^{ 2 } }{ R}}\) or P=V x I
\(V\times \left( \frac { V }{ R } \right) =\frac { V^{ 2 } }{ R } \).
2.
(i) ஜார்ஜ் சைமன் ஓம் என்ற ஜெர்மன் இயற்பியலாளர் மின்னோட்டம் மற்றும் மின்னழுத்த வேறுபாடு ஆகியவற்றிற்கிடையேயான தொடர்பினை நிறுவினார். இதுவே ஓம் விதி எனப்படும்.
இவ்விதியின்படி மாறா வெப்ப நிலையில், கடத்தி ஒன்றின் வழியே பாயும் சீரான மின்னோட்டம் கடத்தியின் முனைகளுக்கிடையே உள்ள மின்னழுத்த வேறுபாட்டிற்கு நேர்தகவில் அமையும்.
I α V. எனவே \(\frac { I }{ V } \)= மாறிலி
இந்த மாறிலி மதிப்பு \(\frac { 1 }{ R } \) ஆகும்
எனவே I=\(\left( \frac { I }{ R } \right) \)V
V=IR
இங்கு R என்பது மின்தடையாகும். ஒரு குறிப்பிட்ட பொருளுக்கு (எ.கா. நிக்ரோம்) குறிப்பிட்ட வெப்ப நிலையில் மின்தடை ஒரு மாறிலி ஆகும். மின்னழுத்த வேறுபாடு V-யும் மின்னோட்டம் I-யும் ஒன்றுக்கொன்று நேர்தகவில் அமைவதால் V மற்றும் I இடையேயான வரை படம் ஒரு நேர்கோடு ஆகும்.
3.
மின்னோட்டம் (I) = 5 A
காலம் (t) = 1 வினாடி
எலக்ட்ரான்களின் எண்ணிக்கை (e) = ?
q = It
= 5 \(\times\) 1 = 5 கூலூம்
q = ne
n = \(\frac{q}{e}\)
\(n =\frac { 5 }{ 1.6\times 10^{ -19 } } = 31.25 \times 10^{ 18 }\)எலக்ட்ரான்களின் எண்ணிக்கை.
4.
அ) LED தொலைக்காட்சி
LED தொலைக்காட்சி வெளியீடு பிரகாசமாக இருக்கும்.
இது மெல்லிய அளவுடையதாக இருக்கும்.
குறைவான சக்தியை பயன்படுத்துகிறது மற்றும் குறைவான ஆற்றலை நுகர்கிறது.
இதன் ஆயுட்காலம் அதிகம்.
இது மிகவும் நம்பகத்தன்மை உடையது.
ஆ) LED மின் விளக்குகளின் நன்மைகள்
LED-ல் மின் இழையில்லாத காரணத்தினால் வெப்ப ஆற்றல் இழப்பு ஏற்படுவதில்லை. மின் இழை மின்விளக்கைவிட குறைந்த வெப்பநிலையைக் கொண்டிருக்கும்.
ஒளிரும் மின் இழை பல்புடன் ஒப்பிடும் போது இது குறைந்த திறனை நுகரும்.
இது சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.
பல நிறங்களில் வெளியீட்டினை பெற்றுக்கொள்ள சாத்தியமாகிறது.
மலிவு விலை மற்றும் ஆற்றல் சிக்கனம் உடையது.
பாதரசம் மற்றும் பிற நச்சுப் பொருள்கள் பயன்படுத்தப்படுவதில்லை.
5.
R1 = 1 Ω, R2 = 2 Ω, R3 = 4 Ω Current I1 = 1 A
1 Ω மின் தடைக்கு எதிராக இருக்கும் மின்னழுத்த வேறுபாடு = I1 R1 = 1 × 1 = 1 V
இங்கு மின்தடைகள் இணையாக இருப்பதால் மூன்று மின்தடைக்கு எதிராகவும் சமமான மின்னழுத்த வேறுபாடே இருக்கும்.
எனவே 2 Ω மின் தடை வழியாக பாயும் மின்னோட்டம்
\(\frac { V }{ { R }_{ 2 } } =\frac { 1 }{ 2 } =0.5A\)
இதுபோல 4 Ω மின் தடை வழியாக பாயும் மின்னோட்டம் \(\frac { V }{ { R }_{ 3 } } =\frac { 1 }{ 4 } =0.25A\)
6.
(d)
ஏதுமில்லை
7.
(b)
மின்னோட்டம் உயர்கிறது
8.
(c)
வாட்
9.
(c)
ஓம்
10.
(b)
மின்னூட்டம் பாயும் வீதம் மின்னோட்டம்
11.
\(\frac{Q}{t}\)
12.
\(\frac{W}{Q}\)
13.
| 1 | 2 | 3 | 4 | 5 |
| உ | அ | ஆ | இ | ஈ |
14.
டிஜிட்டல் கடிகாரங்கள், கணக்கீட்டு கருவிகள், போக்குவரத்து சமிக்கைகள், தெரு விளக்குகள், அலங்கார விளக்குகள்.
15.
ஒரு கடத்தியின் மின்தடையானது (R) அதன் நீளத்திற்கு (L) நேர்தகவிலும் குறுக்கு வெட்டு பரப்பிற்கு (A) எதிர்தகவில் அமையும்.
\(R \propto \frac{L}{A}\)
ஆகவே கடத்தியின் அளவை தடிமனாக்கினால் அதன் மின்தடையின் மதிப்பு குறையும்.
16.
1. மின்னோட்டத்தின் SI அலகு ஆம்பியர் (A)
2. ஒரு கூலூம் மின்னூட்டம் ஒரு விநாடி நேரத்தில் கடத்தியின் எதாவது ஒரு குறுக்கு வெட்டுப்பகுதி வழியாக கடந்து செல்லும் போது அக்கடத்தியில் பாயும் மின்னோட்டம் ஒரு ஆம்பியர் என வரையறுக்கப்படுகிறது.

17.
( )
மின்சுற்று
18.
( )
மூடியிருக்கும் போது
19.
( )
மின்னோட்டம்
20.
( )
வெவ்வேறு
21.
( )
நேர்க்கோடு
22.
(i) மின்னாற்றல் மூலத்துடன் இணைக்கப்பட்ட மின்தடை ஒன்றின் குறுக்கே மின்னழுத்த வேறுபாடு உருவாகிறது. இந்த மின்னழுத்த வேறுபாட்டின் காரணமாக மின்தடை வழியாக ஒரு மின்னோட்டம் பாய்கிறது.
(ii) மின்னோட்டம் தொடர்ந்து மின்தடை வழியாக பாய்வதற்கு மின்னாற்றல் மூலமானது தொடர்ந்து ஆற்றலை மின்தடைக்கு கொடுத்துக் கொண்டே இருக்கும். பெற்றுக் கொண்ட ஆற்றலின் ஒரு பகுதி பயனுள்ள வேலையாக (மின்விளக்கு எரிவதற்கு) மாற்றப்படுகிறது. மற்றொரு பகுதி வெப்ப ஆற்றலாக மாற்றப்படுகிறது.
(iii) எனவே, மின் கம்பியின் வழியே மின்னோட்டம் செல்வதால் வெப்பம் உருவாகிறது. இந்த நிகழ்வு மின்னோட்டத்தின் வெப்ப விளைவு எனப்படுகிறது. மின்னோட்டத்தின் இந்த வெப்ப விளைவு மின் சூடேற்றி, மின் சலவைப் பெட்டி போன்றவைகளில் பயன்படுகிறது.
23.
| அடிப்படை | தொடர் இணைப்பு | பக்க இணைப்பு |
| தொகுபயன் மின்தடை | மிக உயர் மின்தடையை விட அதிகமாக இருக்கும். | மிக குறைந்த மின்தடையை விட குறைவாக இருக்கும். |
| இணைப்பு தடைப்பட்டால் | மூடிய சுற்றில் உள்ள ஏதேனும் ஒரு புள்ளியில் இணைப்பு தடைப்பட்டால் மின்சுற்றின் வழியாக மின்னோட்டம் பாயாது. |
ஒரு மூடிய சுற்று திறந்திருந்தாலும் மற்ற மூடிய சுற்றுகளின் வழியாக மின்னோட்டம் பாயும். |
| மின்னோட்டம் | தொகுபயன் மின்தடை அதிகமாதலால் மின்சுற்றில் மின்னோட்டம் குறைவாக இருக்கும். | தொகுபயன் மின்தடை குறைவதால் மின்சுற்றில் மின்னோட்டம் அதிகமாகும். |
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards