10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil நாகரிகம், நாடு, சமூகம் - கவிதை பேழை (செய்யுள்) -முத்தொள்ளாயிரம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil அறம்,தத்துவம், சிந்தனைகவிதை பேழை (செய்யுள்) -அக்கறை Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil உயிரின்ஓசை - துணைப்பாடம் -பிருமம் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil அறம், தத்துவம், சிந்தனை - கவிதை பேழை (செய்யுள்) -தேம்பாவணி * Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil கலை, அழகியல், புதுமை - உரைநடை உலகம் -பன்முகக் கலைஞர் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil மணற்கேணி - இலக்கணம் - இலக்கணம் -பொது Sample Question Papers Study Material - QB365 Set A

Published on: 01/08/2019
அறிவியல் முதல் இடைத்தேர்வு மாதிரி வினாத்தாள்
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
குழி லென்சு என்பது
குவிக்கும் லென்சு
விரிக்கும் லென்சு
இருபுறக் குவி லென்சு
ஏதுமில்லை
2.
புவியைச் சுற்றி வரும் ஒரு துணைக்கோளில் ஒரு பொருளின் எடை
சுழி
உண்மை எடை
உண்மை எடையைவிட குறைவு
உண்மை எடையை விட அதிகம்
3.
இயக்க நிலையில் உள்ள பொருள் இயங்கும் திசையிலிருந்து மாறாமல், திசை மாற்றத்தினை எதிர்க்கும் பண்பு
விசை
உந்தம்
திசையில் நிலைமம்
நியூட்டனின் விதி
4.
கீழ்கண்டவற்றுள் தவறான கூற்று எது.
12 கிராம் C -12 வானது அவகாட்ரோ எண்ணிக்கையிலான அணுக்களைக் கொண்டது.
ஒரு மோல் ஆக்சிஜன் வாயுவானது அவகாட்ரோ எண்ணிக்கையிலான மூலக்கூறுகளைக் கொண்டது.
ஒரு மோல் ஹைட்ரஜன் வாயுவானது அவகாட்ரோ எண்ணிக்கையிலான அணுக்களைக் கொண்டது.
ஒரு மோல் எலக்ட்ரான் என்பது 6.023 × 1023 எலக்ட்ரான்களைக் குறிக்கிறது.
5.
புவியில் M நிறை கொண்ட பொருள் ஒன்று புவியின் ஆரத்தில் பாதி அளவு ஆரம் கொண்ட கோள் ஒன்றிற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கு அதன் நிறை மதிப்பு.
4M
2M
M/4
M
6.
ஒளிச்சிதறல் என்றால் என்ன? அது ஏற்படக் காரணம் யாது?
7.
கார்பன் டை ஆக்சைடின் (CO2) கிராம் மூலக்கூறு நிறையை கண்டுபிடி.
8.
20 g துப்பாக்கி குண்டு 300 m/s ல் 2 cm க்கு எலும்பினைத் துளைத்து சென்ற பிறகு நிறுத்தப்படுகிறது. அக்குண்டினால் செலுத்தப்பட்ட சராசரி விசையைக் கணக்கிடுக.
9.
ராமன் தோட்டத்திற்கு சென்றான். ஆல மரத்தில் தண்டுப்பகுதி ஒவ்வொரு வருடமும் பருமனாக மாறிக் கொண்டிருக்கிறது. ஆனால் தென்னைமரம் இவ்வாறாக பருமனாக மாறவில்லை. ஏன் என யோசிக்கிறான். உங்களால் இதற்கு விளக்கம் கூற முடியுமா?
10.
11.
ராஜா என்ற மாணவர், குவிலென்ஸ் ஒன்றின் குவியத்தொலைவைக் கண்டறிவதற்கான சோதனையை மேற்கொள்ளும் போது, குவிலென்சானது தவறுதலாக கீழே விழுந்து, இரு சம துண்டுகளாக உடைந்துவிடுகிறது. அவர் அதே லென்சைப் பயன்படுத்தி தொடர்ந்து சோதனையைச் செய்தால்,
1) அவருக்கு பிம்பங்கள் கிடைக்குமா?
2) கண்டறியப்படும் குவியத் தொலைவில் ஏதேனும் மாற்றங்கள் இருக்குமா?
12.
13.
14.
லாந்தனைடுகள் மற்றும் ஆக்டினைடுகள் _________ என அழைக்கப்படுகின்றன.
15.
அணு நிறையைக் கணக்கிடக் கூடிய நவீன முறை _________
16.
ஓடும் மகிழுந்து வளை பாதையில் செல்லும்போது பயணியர் ஒரு பக்கமாக சாயக் காரணம் ______
17.
இருவித்திலை தாவர இலையின் வாஸ்குலார் கற்றையைச் சுற்றிலும் பாரன்கைமாவால் ஆன ________ உள்ளது.
18.
ஒரே __________ எண்ணிக்கையை பெற்றுள்ள வெவ்வேறு தனிமங்களின் அணுக்கள் ஐசோடோன்கள் எனப்படும்.
19.
மீ சிதறல் ஏற்படக் காரணம் என்ன?
20.
அறை வெப்ப நிலையில் திட நிலையில் காணப்படாத இரண்டு உலோகங்களைக் கூறு.
21.
18-வது தொகுதி தனிமங்கள் ஏன் வினைபுரியும் தன்மை அற்றவையாக உள்ளன?
22.
மைட்டோகாண்ட்ரியாவின் பணிகளைக் கூறு.
23.
பாலூட்டிகளின் இரு முக்கிய பண்புகளைக் குறிப்பிடுக.
1.
(b)
விரிக்கும் லென்சு
2.
(a)
சுழி
3.
(c)
திசையில் நிலைமம்
4.
(c)
ஒரு மோல் ஹைட்ரஜன் வாயுவானது அவகாட்ரோ எண்ணிக்கையிலான அணுக்களைக் கொண்டது.
5.
(d)
M
6.
(i) சூரிய ஒளி, புவியின் வளிமண்டலத்தில் நுழையும் போது, வளிமண்டலத்தில் உள்ள பல்வேறு வாயு அணுக்கள் மற்றும் மூலக்கூறுகளால் அனைத்து திசைகளிலும் விலகல் அடையச் செய்யப்படுகிறது.
(ii) இந்நிகழ்வு 'ஒளிச்சிதறல்' எனப்படுகிறது. இந்நிகழ்வில் ஒளிக்கற்றையானது ஊடகத்தில் (காற்றில்) உள்ள துகள்களுடன் இடைவினையில் ஈடுபடும் போது, அவை அனைத்துத் திசைகளிலும், திருப்பி விடப்பட்டுச் சிதறல் நிகழ்கிறது. இடைவினையில் ஈடுபடும் துகள் எனப்படுகிறது.
7.
CO2 = 1(C)+2(O)=1(12)+2(16)
= 12 +32
CO2 ன் கிராம் மூலக்கூறு நிறை = 44 கி
8.
கொடுக்கப்பட்டவை:
குண்டின் நிறை m =20 x 10-3 kg
தொடக்க திசைவேகம் u =300 m/s
இறுதி திசைவேகம் v =0
தொலைவு s = 2 cm
= 2 x 10-2 m
கண்டறிய:
குண்டினால் செலுத்தப்பட்ட விசை f=?
இயக்க விதி சமன்பாடுகளை பயன்படுத்த
v2=u2+2as
0=(300)2+2(a) x 2 x 10-2
a=\(\frac { (300)^{ 2 } }{ 4\times { 10 }^{ -2 } } =\frac { 9\times { 10 }^{ 4 } }{ 4\times { 10 }^{ -2 } } \)
a=-2.25 x 106 m/s2
a=2.25 x 106 m/s2
விசை F =ma
=20 x 10-3 x 2.25 x 106
=45 x 103 =4.5 x 104 N
9.
(i) ஆலமரமானது இருவித்திலை தாவரம், வாஸ்குலார் தொகுப்பில் கேம்பியம் திசு காணப்படுகிறது. இந்த கேம்பியம் திசு இரண்டாம் நிலை வளர்ச்சியில் ஈடுபடுவதால் ஒவ்வொரு நாளும் இதன் தண்டுப்பகுதி வளர்கிறது. சைலம் மற்றும் புளோயம் தடிமனாக வளர்ந்து கொண்டே இருக்கும்.
(ii) தென்னை மரமானது ஒருவித்திலைத் தாவரம். இங்கு இரண்டாம் நிலை வளர்ச்சி ஏற்படுவதில்லை. எனவே அது பருமனாக காணப்படுவதில்லை
10.
1. ஒளிச்சார்ந்த வினை தைலக்காய்டு (கிரானா) பகுதியில் நடைபெறுகிறது.
2. ஒளிசாரா வினை (கால்வின் சுழற்சி) ஸ்ட்ரோமாவில் நடைபெறுகிறது.
11.
i) ஆம், பிம்பம் கிடைக்கும். ஆனால் தெளிவான பிம்பம் தெரிவதில்லை.
ii) இல்லை. குவிலென்சானது தளக் குவிலென்சாக மாறிவிடும், இது குவிலென்சை போன்று செயல்பட்டு ஒளிக்கற்றையை குவிக்கும்.
12.
13.
14.
( )
உள் இடை நிலைத் தனிமங்கள்
15.
( )
நிறை நிறமாலைமானி
16.
( )
திசைக்கான நிலைமம்
17.
( )
கற்றை உறை
18.
( )
நியூட்ரான்கள்
19.
வளிமண்டலத்தின் கீழ் அடுக்குப் பகுதியில் உள்ள தூசு புகை, நீர்த்துளிகள் மற்றும் சில துகள்களால் மீ-சிதறல் ஏற்படுகிறது.
20.
(i) பாதரசம் (Mercury)
(ii) காலியம்(Gallium)
21.
நிலையான எலக்ட்ரான் அமைப்பை தன்னுடைய இணைதிறன் கூட்டில் பெற்றுள்ளதால் வினைபுரியும் தன்மை அற்றவையாக உள்ளன.
22.
(i) சுவாசித்தலுக்கு தேவையான ஒரு முக்கிய நுண்ணுறுப்பாகும். இதில் ஏராளமான ATP க்கள் உருவாகின்றன. எனவே இது செல்லின் ஆற்றல் மையம் அல்லது சக்தி நிலையம் என அழைக்கப்படுகிறது.
(ii) செல்லின் கால்சியம் அயனிகளின் சமநிலையைப் பாதுகாக்கிறது.
(iii) செல்லின் வளர்சிதை மாற்ற செயலில் பங்கு கொள்கிறது.
23.
(i) பாலூட்டிகளுக்கு பாலினைச் சுரக்கும் பால் சுரப்பி காணப்படுகிறது.
(ii) உடல் உரோமங்களால் மூடப்பட்டிருக்கும். ஏனெனில் இவை வெப்ப இரத்தப் பிராணிகள்.
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th Tamil கூட்டாஞ்சோறு - இலக்கணம் - தொகைநிலை தொடர்கள் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil பண்பாடு - கவிதை பேழை (செய்யுள்) -முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil உயிரின்ஓசை - இலக்கணம் - தொகாநிலை தொடர் Sample Question Papers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th Tamil இயற்கை, சுற்றுசூழல், அறிவியல் - கவிதை பேழை (செய்யுள்) -மேகம் Sample Question Papers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards