10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 4 - The Attic Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 3 - The Story of Mulan Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 3 - I am Every Woman Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 3 - Empowered Women Navigating The World Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 2 - Zigzag Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 2 - The Grumble Family Important Questions And Answers Study Material - QB365 Set A

Published on: 04/02/2020
10ஆம் வகுப்பு அறிவியல் முக்கிய வினாவிடைகள் (10th Standard Science Important Questions with Answerkey)
10ஆம் வகுப்பு Science / அறிவியல் தமிழ் மீடியம் | மாதிரி வினாத்தாள்கள் | முக்கிய வினாக்கள் | கேள்வி விடை தொகுப்பு | வினாத்தாள்கள் | பொதுத்தேர்வு மாதிரி வினாத்தாள்கள் , Science / அறிவியல் பாடத்திற்கான மாதிரி வினாத்தாள்கள், முக்கிய கேள்வி-விடைகள், ஒருமார்க் கேள்விகள், காலாண்டு & பொதுத்தேர்வு கேள்வித் தொகுப்புகள்
Questions + Answers key
Take MCQ Science Test1.
கிட்டப்பார்வை [அல்லது] மையோபியா குறைபாடு எவ்வாறு சரி செய்யப்படுகிறது? படத்துடன் விவரி.
2.
100 w பல்பு 680 mA மின்னோட்டத்தைத் தருகிறது. 30 C மின்சுமை அதன் வழியே செல்லத் தேவையான கால அளவு யாது?
3.
ஓம் விதியினைக் கூறி அதன் வரைபடத்தினை விவரி.
4.
திரவம் மற்றும் வாயுவில் வெப்ப விரிவு ஏற்படுவதை விவரி.
5.
காந்தத் தன்மை உடைய தாதுக்களில் உள்ள மாசுக்களை நீக்கும் முறையை விளக்குக.
6.
சோப்பை விட டிடர்ஜெண்ட்களை பயன்படுத்துவது அதிக நன்மைகளை தருகிறது. அதற்கான காரணங்களை பட்டியலிடுக.
7.
அணுக்கரு இணைவு எடுத்துக்காட்டுடன் விவரி.
8.
மின்தூக்கியின் நகர்விற்கேற்ப தோற்ற எடை மதிப்பு மாறுதலை விளக்குக.
9.
மீளாவினைகள் என்றால் என்ன? எடுத்துக்காட்டுடன் விளக்குக.
10.
ABO இரத்த வகைகளைப் பற்றி குறிப்பெழுதுக.
11.
முயலின் சுவாச மண்டலத்தை விளக்குக.
12.
0.001 M செறிவுள்ளஹைட்ரோ குளோரிக் அமிலத்தின் கரைசலின் pH மதிப்பை காண்க.
13.
i) MgSO4.7H2O உப்பை வெப்பப்படுத்தும் போது என்ன நிகழ்கிறது?
ii) கரைதிறன் வரையறு.
14.
இரண்டு மின்விளக்குகளின் திறன் மற்றும் மின்னழுத்த வேறுபாடு முறையே 60 W, 220 V மற்றும் 40 W, 220 V இரண்டில் எந்த விளக்கு அதிக மின்தடையை பெற்றிருக்கும்?
15.
70 மிலி கொள்ளளவு உள்ள கொள்கலனில் 50 மி.லி திரவம் நிரப்பப்பட்டுள்ளது. திரவம் அடங்கிய கொள்கலனை வெப்பப்படுத்தும் போது திரவத்தில் நிலை கொள்கலனில் 50 மி.லி-லிருந்து 48.5 மி.லி ஆக குறைகிறது. மேலும் வெப்பப்படுத்தும் போது கொள்கலனில் திரவத்தின் நிலை 51.2 மி.லி ஆக உயருகிறது எனில் திரவத்தின் உண்மை வெப்ப விரிவு மற்றும் தோற்ற வெப்ப விரிவைக் கணக்கிடுக.
16.
இரு பொருட்களின் நிறை விகிதம் 3:4. அதிக நிறையுடைய பொருள் மீது விசையொன்று செயல்பட்டு 12 மீ.வி-2 மதிப்பில் அதை முடுக்குவித்தால், அதே விசை கொண்டு மற்ற பொருளை முடுக்குவிக்க தேவைப்படும் முடுக்கம் யாது?
17.
கீல் (keel) முனையில் இருந்து 90 செ.மீ தூரத்தில் கைப்பிடி கொண்ட கதவொன்று 40 N விசை கொண்டு திறக்கப்படுகிறது. கதவின் கீல் முனைப் பகுதியில் ஏற்படும் திருப்புத்திறன் மதிப்பினை கணக்கிடு.
18.
ஒரு நபர் 50 செ.மீக்கு அப்பால் தெளிவாக பொருள்களை காண முடிவதில்லை. பார்வையை சரிசெய்யத் தேவையான லென்சின் திறன்
+5D
-0.5D
-2D
+2D
19.
லென்சு உருவாக்குவோர் சமன்பாடு என்பது
\(\frac { h' }{ h } \)
\(\frac { 1 }{ f } =\frac { 1 }{ v } -\frac { 1 }{ u } \)
\(\frac { v }{ u } \)
\(\frac { 1 }{ f } =(\mu -1)\left( \frac { 1 }{ { R }_{ 1 } } -\frac { 1 }{ { R }_{ 2 } } \right) \)
20.
ஒரு பொருள் 25 செ.மீ தொலைவில் ஒரு குவி லென்சின் முன் வைக்கப்படுகிறது. அதன் குவியதூரம் 10 செ.மீ எனில் பிம்பத்தின் தொலைவு
50
16.66
6.66
10
21.
ஒரு 110w, 220w பல்பு அளிக்கும் மின்னோட்டம்
2A
440 A
0.5 A
5.5 A
22.
ஒரு கம்பியின் மின்தடை r ஓம் எனில் கம்பியின் நீளம் இரட்டிப்பாக்கப்படும்போது அதன் மின்தடை என்ன?
r
2r
4r
\(\frac{r}{2}\)
23.
ஓம் விதிப்படி மின்னழுத்தம் உயரவும் மின்தடை மாறாமலும் இருக்கும் போது
மின்தடை குறைகிறது
மின்னோட்டம் உயர்கிறது
மின்னோட்டம் மாறாது
மின்னோட்டம் குறைகிறது
24.
ஒரு பொருளின் வெப்பநிலை உயர்வு இவற்றைப் பொறுத்து மாறுபடும்
நீளத்தை
வெப்பநிலை
பொருளின் தன்மை மற்றும் நிறை
அ) மற்றும் ஆ)
25.
பொருளானது வெப்பப்படுத்தும்போது அல்லது குளிர்விக்கப்படும் போது நீள் விரிவு ______ ல் ஏற்படும் மாற்றம்.
நீளம்
பரப்பு
பருமன்
அடர்த்தி
26.
வெப்பத்தின் SI அலகு
கலோரி
ஜூல்
கிலோகலோரி
கெல்வின்
27.
அணுக்கருவிற்கும் அயனியின் வெளிக்கூட்டு எலக்ட்ரானுக்கும் இடையே உள்ள தொலைவு
அணு ஆரம்
அயனி ஆரம்
சகப்பிணைப்பு ஆரம்
(ஆ) மற்றும் (இ)
28.
தனிம வரிசை அட்டவணையில் முதல் தொடரில் உள்ள தனிமங்கள்
1
2
3
8
29.
பின்வருவனவற்றுள் எது ஒரு கிராமில் அதிக எண்ணிக்கை கொண்ட ஆக்ஸிஜன் அணுக்களைக் கொண்டுள்ளது?
O
O2
O3
இவை அனைத்தும் ஒரே எண்ணிக்கை கொண்டது
30.
\(_{ 4 }{ Be }^{ 9 }+_{ 2 }{ He }^{ 4 }\rightarrow _{ 6 }{ C }^{ 12 }+\_ \_ \_ \_ \_ \_ \_ \_ \_ \)
எலக்ட்ரான்
புரோட்டான்
நியூட்ரான்
ஹைட்ரஜன்
31.
விண்மீன்களில் ஆற்றல் ஏற்படுவது
வேதிவினை
பிளவு
இலேசான அணுகருவினால் இணைப்பு
கனமான அணுக்கரு இணைப்பு
32.
ஆல்கஹால் + அமிலம் \(\overset { con. { H }_{ 2 }SO_{ 4 } }{ \longrightarrow } \) எஸ்டர் இவ்வினை
எஸ்டரை நீராற் பகுத்தல்
எஸ்டராதல்
நீர் நீக்கம்
ஆக்ஸிஜனேற்றம்
33.
வளைய பியூட்டேன் ________ சேர்மத்திற்கு உதாரணம்.
வளைய
வளையமில்லா
அரோமேட்டிக்
அலிசைக்ளிக்
34.
அடர்மிகு ஊடகத்தின் விளிம்பில் ஒலி அலைகளின் எதிரொலிப்பு நிகழ்வில்
இறுக்கங்கள், இறுக்கங்களாகவே எதிரொலிக்கும்
தளர்ச்சிகள், இறுக்கங்களாக மாறும்
இறுக்கங்களின் திசை மாறாது
இவையனைத்தும்
35.
பின்வரும் எது வினைவேகத்தை பாதிக்கிறது?
புறப்பரப்பளவு
அழுத்தம்
வெப்பநிலை
இவை அனைத்தும்
36.
வௌவால் கேட்கக் கூடிய ஒலியின் திறன்
<20,000 Hz
=20,000 Hz
2000 Hz
>20,000 Hz
37.
வாயுக்களை பொறுத்தவரை ஒலியின் திசைவேகத்தை பாதிக்கும் காரணிகள்
வெப்பநிலை
அடர்த்தி
ஒப்புமை ஈரப்பதம்
இவையனைத்தும்
38.
உந்தமாறுபாட்டிற்கு சமமான இயற்பியல் அளவு
திசைவேகம்
முடுக்கம்
விசை
கணத்தாக்கு
39.
"A" என்ற தனிமம் திறந்த நிலையில் காற்றுடன் "B" என்ற சேர்மத்தை தருகிறது. "B" செம்பழுப்பு நிறம் உடையது. "A" மற்றும் "B" என்பவை _________________
'A' என்பது Ag, 'B' என்பது Ag2S
'A' என்பது Cu, 'B' என்பது CuO
'A' என்பது Mg, 'B' என்பது MgO
'A' என்பது Fe, 'B' என்பது Fe2O3
40.
கால்சியம் ஆக்ஸைடு நீருடன் வினைபுரிந்து தருவது
கால்சியம் ஹைட்ராக்சைடு
கார்பன் டை ஆக்ஸைடு
கால்சியம் ஆக்ஸைடு
ஆக்சிஜன் வாயு
41.
ஒரு கதவினை திறத்தல் இதற்கான எடுத்துக்காட்டு
ஒரு தொடர் விசை
தொடு விசை
சமன் செய்யப்பட்ட விசை
சமன் செய்யப்படாத விசை
42.
விசையின் SI அலகு
ஆற்றல்
ஜூல்
நியூட்டன்
டைன்
43.
KNO3 ன் கரைத்திறன் வெப்பநிலை உயர்வைப் பொறுத்து
அதிகரிக்கிறது
குறைகிறது
மாற்றமடைவதில்லை
இவற்றுள் எதுவுமில்லை
44.
பின்வரும் எந்த கரைசலில், கரைபொருள் மற்றும் கரைப்பான் திடநிலையில் உள்ளன?
தக்கை
வெண்ணெய்
உலோகக்கலவை
புகை
45.
ஒரு கரைபொருளின் கரைத்திறன் என்பது _____________
கரைப்பான் மற்றும் கரைபொருளின் தன்மையைப் பொறுத்தது.
வெப்பநிலை
அழுத்தம்
மேற்கண்ட அனைத்தும்
46.
இயல்பாக நாடித்துடிப்பு ஒரு நிமிடத்திற்கு ________ முறைகள் ஆகும்
80-90
70-90
50-60
70-80
47.
இரத்த சிவப்பணுக்களின் மற்றொரு பெயர் _________ ஆகும்.
எரித்ரோசைட்டுகள்
லியூகோசைட்டு
துகள்களுடைய செல்கள்
துகள்களற்ற செல்கள்
48.
___________ இரத்தவகை உள்ள மனிதர்கள் AB இரத்த வகை உள்ளோரிடமிருந்து இரத்தத்தினை பெறலாம்.
'A' மட்டும்
'B' வகை மட்டும்
'AB' மற்றும் 'O'
'A, B, AB' மற்றும் 'O'
49.
அட்டை _________ நீளம் வரை வளரக் கூடியது.
35 செ.மீ
45 செ.மீ
25 செ.மீ
20 செ.மீ
50.
தாவர வேரின் வெளிப்புற அடுக்கு ________ ஆகும்
எபிபிளாஸ்மா
புறணி
புறத்தோல்
ஸ்டீல்
51.
புரோட்டோசைல இடைவெளி என்பது ஒரு ________ ஆகும்
தடித்தல்
சைலம் அடுக்குதல்
இடைவெளி
எக்ஸார்க் சைலம்
52.
வெளிநோக்கிய சைலம் (எக்ஸார்க்) மற்றும் நான்கு முனை ஆகிய அம்சங்களைக் கொண்டது ________
இருவித்திலை தாவர தண்டு
இருவித்திலை தாவர இலை
ஒருவித்திலை தாவர வேர்
இருவித்திலை தாவர வேர்
53.
முயலின் புற அமைவு நரம்பு மண்டலத்தில் ________ இணை மூளை நரம்புகளும் ___________ இணை தண்டுவட நரம்புகளும் உள்ளன.
11, 36
12, 37
12, 36
10, 37
54.
விழி ஏற்பமைவுத் திறன் குறைபாட்டைச் சரி செய்ய உதவுவது
குவி லென்சு
குழி லென்சு
குவி ஆடி
இரு குவிய லென்சு
55.
குவி லென்சின் உருப்பெருக்கமானது எப்போதும் ______ மதிப்புடையது.
நேர்க்குறி
எதிர்க்குறி
நேர்க்குறி (அ) எதிர்க்குறி
சுழி
56.
மனித இதயத்தின் சுவர் எதனால் ஆனது?
எண்டோகார்டியம்
எபிகார்டியம்
மையோகார்டியம்
மேற்கூறியவை அனைத்தும்
57.
நீராவிப்போக்கின் பொழுது வெளியேற்றப்படுவது
கார்பன்டை ஆக்ஸைடு
ஆக்ஸிஜன்
நீர்
இவை ஏதுவுமில்லை
58.
வாயு ஊடகத்தில் ஒலியின் திசைவேகம் 330 மீவி-1. வெப்பநிலை மாறிலியாக இருக்கும் போது, அதன் அழுத்தம் 4 மடங்கு உயர்த்தப்பட்டால், ஒலியின் திசைவேகம் ____.
330 மீவி-1
660 மீவி-1
156 மீவி-1
990 மீவி-1
59.
ஒலி அலைகள் காற்றில் பரவும் போது அதன் துகள்கள்_____.
அலையின் திசையில் அதிர்வுறும்
அதிர்வுறும், ஆனால் குறிப்பிட்டத் திசை இல்லை
அலையின் திசைக்கு செங்குத்தாக அதிர்வுறும்
அதிர்வுறுவதில்லை.
60.
காமாக் கதிரியக்கத்திலிருந்து நம்மைப் பாதுகாக்க ________ உறைகள் பயன்படுகின்றன.
காரீய ஆக்சைடு
இரும்பு
காரீயம்
அலுமினியம்
61.
காமாக் கதிர்கள் அபாயகரமானது காரணம் அவை ____.
கண்கள் மற்றும் எலும்புகளைப் பாதிக்கும்
திசுக்களைப் பாதிக்கும்
மரபியல் குறைப்பாடுகளை உண்டாக்கும்
அதிகமான வெப்பத்தை உருவாக்கும்
62.
ஒரு பொருளை வெப்பப்படுத்தினாலோ அல்லது குளிர்வித்தாலோ அப்பொருளின் நிறையில் ஏற்படும் மாற்றம் _____.
நேர்க்குறி
எதிர்க்குறி
சுழி
இவற்றில் எதுவுமில்லை
63.
பொது வாயு மாறிலியின் மதிப்பு _______.
3.81 J மோல்–1 K–1
8.03 J மோல்–1 K–1
1.38 J மோல்–1 K–1
8.31 J மோல்–1 K–1
64.
வேதிச் சமநிலை பற்றிய பின்வரும் கூற்றுகளில் எவை சரியானவை?
(i) இயக்கத்தன்மை உடையது.
(ii) சமநிலையில் முன்னோக்கு மற்றும் பின்னோக்கு வினைகளில் வினைவேகம் சமம்.
(iii) மீளா வினைகள் வேதிச் சமநிலையை அடைவதில்லை.
(iv) வினைபடு பொருள் மற்றும் வினைவிளை பொருள்களில் செறிவு வேறுபடலாம்.
(i), (ii) மற்றும் (iii)
(i), (ii) மற்றும் (iv)
(ii), (iii) மற்றும் (iv)
(i), (iii) மற்றும் (iv)
65.
H2(g) + Cl2(g) → 2HCl(g) என்பது ____.
சிதைவுறுதல் வினை
சேர்க்கை வினை
ஒற்றை இடப்பெயர்ச்சி வினை
இரட்டை இடப்பெயர்ச்சி வினை
66.
புவிஈர்ப்பு முடுக்கம் gன் அலகு ms-2 ஆகும். இது கீழ்காண் அலகுகளில் எதற்கு சமமாகும்.
cms-1
Nkg-1
N m2 kg-1
cm2 s-2
67.
உந்த மதிப்பை y அச்சிலும் காலத்தினை x அச்சிலும் கொண்டு ஒரு வரைபடம் வரையப்படுகிறது. இவ்வரைபட சாய்வின் மதிப்பு
கணத்தாக்கு விசை
முடுக்கம்
விசை
விசை மாற்றவீதம்
68.
தொலைநோக்கிகளின் நன்மைகள், குறைபாடுகள் யாவை?
69.
வானியல் தொலைநோக்கியைக் கொண்டு புவிப்பரப்பில் உள்ள பொருள்களை காண இயலுமா?
70.
கடத்தி-காப்பான் -வேறுபடுத்துக.
71.
நீள் வெப்ப விரிவு என்பது யாது?
72.
வெப்பப்படுத்துதல் என்றால் என்ன?
73.
தாமிர பாத்திரங்கள் பச்சை நிற படலத்தை உருவாக்குவதேன்?
74.
அறை வெப்ப நிலையில் திட நிலையில் காணப்படாத இரண்டு உலோகங்களைக் கூறு.
75.
ஆவர்த்தன பண்புகள் யாவை?
76.
அணுக்கரு இணைவு, அணுக்கரு பிளவு வேறுபடுத்துக.
77.
வளமைப் பொருட்கள் என்றால் என்ன? எடுத்துக்காட்டு தருக.
78.
ஒத்த ஈரணு மூலக்கூறு மற்றும் ஒத்த அணு மூவணு மூலக்கூறு மூலக்கூறுகளுக்கு உதாரணம் கொடு.
79.
மூலக்கூறு என்றால் என்ன?
80.
TFM என்பது எதைக் குறிக்கிறது?
81.
நிறை வரையறு.
82.
புவியின் நிறையைக் கணக்கிடுக.
83.
எரிசாராயம் எனப்படுவது யாது?
84.
ஹைட்ரோ கார்பன்கள் என்பது யாது?
85.
கேட்குநருக்கும் ஒலி மூலத்திற்கும் சார்பியக்கத்தின் வகைகள் யாவை?
86.
டாப்ளர் விளைவு வரையறு.
87.
கிளர்வு ஆற்றல் என்றால் என்ன?
88.
மெட்டதிஸிஸ் வினை என்பது யாது?
89.
மனிதனால் காற்றில்லா சுவாசத்தினை பயன்படுத்தி உயிர் வாழ முடியுமா? நியாயப்படுத்து.
90.
நீரேற்றம் - வரையறு
91.
ஸ்பிக்மோமானோமீட்டர் பற்றி ஓரிரு வார்த்தைகள் எழுது.
92.
கரைபொருள் மற்றும் கரைப்பான் வரையறு
93.
இரத்த அழுத்தம் - வரையறு.
94.
சூழ்ந்தமைந்த வாஸ்குலார் கற்றையின் படங்களை வரைந்து பாகங்களைக் குறி.
95.
அட்டைக்கு கண், காதுகள் இருக்கின்றனவா?
96.
அட்டையின் வகைப்பாட்டின் நிலையை எழுதுக.
97.
சோடி மற்றும் ஃபஜான்ஸின் இடம்பெயர்வு விதியைக் கூறுக.
98.
பரும வெப்ப விரிவு குணகம் என்றால் என்ன?
99.
நீள் வெப்ப விரிவு மற்றும் பரப்பு வெப்ப விரிவு – வேறுபடுத்துக
100.
கிட்டப்பார்வை குறைபாட்டிற்கான காரணங்கள் யாவை?
101.
இரட்டையின் திருப்புத்திறன் வரையறு.
102.
செயல்படும் திசை சார்ந்து விசையினை எவ்வாறு பிரிக்கலாம்?
103.
குவிலென்சு ஒன்றில் F மற்றும் 2F புள்ளிகளுக்கு இடையே பொருள் வைக்கப்படும் போது உருவாக்கப்படும் பிம்பத்திற்கான கதிர் வரைபடம் வரைக.
104.
ஒளிவிலகல் எண் \({ \mu }_{ 2 }\) கொண்ட ஒரு குவிலென்சு, ஒளிவிலகல் எண் \({ \mu }_{ 1 }\) உடைய ஒரு ஊடகத்தினுள் வைக்கப்பட்டுள்ளது. லென்சின் மீது ஒரு ஒளியின் இணைக்கற்றைகள் விழுகின்றன. \({ \mu }_{ 1 }\) மற்றும் \({ \mu }_{ 2 }\) கீழ்கண்டவாறு இருந்தால், குவிலென்சிலிருந்து வெளிவரும் கதிர்களின் பாதையை வரைக.
(a) \({ \mu }_{ 1 }>{ \mu }_{ 2 }\)
(b) \({ \mu }_{ 1 }={ \mu }_{ 2 }\)
(c) \({ \mu }_{ 1 }<{ \mu }_{ 2 }\).
105.
வோல்ட் வரையறு.
106.
நீள்வெப்ப விரிவு குணகம் வரையறு.
107.
Ga-150 யின் \(\alpha \) சிதைவிற்கான சமன்பாட்டை எழுது.
108.
ஒரு துப்பாக்கி 50 g நிறையுள்ள குண்டினை 250 ms-1 வேகத்தில் சுடும்போது ஒரு மரத் தக்கையினுள் ஊடுருவிச் சென்று 1 ms-ல் ஓய்வில் உள்ளது. கணத்தாக்கு மற்றும் தக்கையால் செலுத்தப்படும் சராசரி விசை இவற்றை காண்க.
109.
2 கி NaOH-ல் உள்ள மோல்களின் எண்ணிக்கையை கணக்கிடுக.
110.
அ] படத்தினை பார்த்து நீ என்ன தெரிந்து கொண்டாய்? கூறு.
ஆ] அதன் வகைகளைக் கூறு.
இ] உதாரணம் தருக.
111.
குளிர்பானங்கள் மலை உச்சியில் அதிகமாக நுரைத்துப் பொங்குமா? அல்லது அடிவாரத்தில் அதிகமாக நுரைத்துப் பொங்குமா? விளக்குக.
112.
வானத்தில் மின்னல் ஏற்பட்டு 9.8 விநாடிகளுக்குப் பின்பு இடியோசை கேட்கிறது. காற்றில் ஒலியின் வேகம் 330 மீ.வி-1 எனில் மேகக்கூட்டங்கள் எவ்வளவு உயரத்தில் உள்ளது?
113.
இசையரங்கங்களின் மேற்கூரை வளைவாக இருப்பது ஏன்?
114.
உங்களுடைய ஒரு கையில் 0°C வெப்பநிலையில் உள்ள பனிக்கட்டியும் மற்றொரு கையில் 0°C உள்ள குளிர்ந்த நீரும் உள்ளது எனில் எந்த கை அதிக அளவு குளிர்ச்சியினை உணரும்? ஏன்?
115.
ராஜா என்ற மாணவர், குவிலென்ஸ் ஒன்றின் குவியத்தொலைவைக் கண்டறிவதற்கான சோதனையை மேற்கொள்ளும் போது, குவிலென்சானது தவறுதலாக கீழே விழுந்து, இரு சம துண்டுகளாக உடைந்துவிடுகிறது. அவர் அதே லென்சைப் பயன்படுத்தி தொடர்ந்து சோதனையைச் செய்தால்,
1) அவருக்கு பிம்பங்கள் கிடைக்குமா?
2) கண்டறியப்படும் குவியத் தொலைவில் ஏதேனும் மாற்றங்கள் இருக்குமா?
116.
கதிரியக்கத்தின் SI அலகினை எழுதுக.
117.
A - என்பது கதிரியக்கத் தனிமம் ஆகும். இது α - துகளை வெளியிட்டு 104Rf259 என்ற தனிமத்தை உருவாகிறது எனில் A - தனிமத்தின் அணு எண் மற்றும் நிறை எண்ணைக் கண்டறிக.
118.
முயலின் பல்லமைவு ஏன் ஹெட்டிரோடான்ட் (வேறுபட்ட) பல்லமைவு எனப்படுகிறது?
119.
அட்டை எவ்வாறு சுவாசிக்கிறது?
1.
கிட்டப்பார்வை(மையோபியா):
(i) மையோபியா என்று அழைக்கப்படும் 'கிட்டப்பார்வை' என்னும் குறைபாடானது விழிக்கோளம் சிறிது நீண்டு விடுவதால் ஏற்படுகிறது.
(ii) இக்குறைபாடு உள்ள மனிதர்களால் அருகில் உள்ள பொருள்களைத் தெளிவாகக் காண முடியாது.
(iii) விழி லென்சின் குவிய தூரம் குறைவதாலும் விழி லென்சிற்கும் விழித் திரைக்கும் இடையே உள்ள தொலைவு அதிகரிப்பதால் இக்குறைபாடு ஏற்படுகிறது.
(iv) இதனால் கண்ணின் சேய்மைப் புள்ளியானது, ஈறிலாத் தொலைவில் அமையலாம், கண்ணின் அண்மை புள்ளியை நோக்கி நகர்ந்து விடுகிறது. இதனால் தொலைவில் உள்ள பொருள்களின் பிம்பங்கள் விழித்திரைக்கு முன்பாக உருவாக்கப்படுகின்றன.
2.
கொடுக்கப்பட்டவை:
பல்பின் வழியே செல்லும் மின்சுமை Q =30C
100 w பல்பினால் பெறப்படுகின்ற மின்னோட்டம்
I =680 mA =680 x 10-3A
கண்டறிய:
கால அளவு t =?
t =\(\frac { Q }{ t } \)
I =\(\frac { Q }{ t } \) அல்லது t =\(\frac { Q }{ I } \)
∴ t=\(\frac { 30 }{ 680\times 10^{ -3 } } \)=44.117
t=44.1 விநாடிகள்.
3.
(i) ஜார்ஜ் சைமன் ஓம் என்ற ஜெர்மன் இயற்பியலாளர் மின்னோட்டம் மற்றும் மின்னழுத்த வேறுபாடு ஆகியவற்றிற்கிடையேயான தொடர்பினை நிறுவினார். இதுவே ஓம் விதி எனப்படும்.
இவ்விதியின்படி மாறா வெப்ப நிலையில், கடத்தி ஒன்றின் வழியே பாயும் சீரான மின்னோட்டம் கடத்தியின் முனைகளுக்கிடையே உள்ள மின்னழுத்த வேறுபாட்டிற்கு நேர்தகவில் அமையும்.
I α V. எனவே \(\frac { I }{ V } \)= மாறிலி
இந்த மாறிலி மதிப்பு \(\frac { 1 }{ R } \) ஆகும்
எனவே I=\(\left( \frac { I }{ R } \right) \)V
V=IR
இங்கு R என்பது மின்தடையாகும். ஒரு குறிப்பிட்ட பொருளுக்கு (எ.கா. நிக்ரோம்) குறிப்பிட்ட வெப்ப நிலையில் மின்தடை ஒரு மாறிலி ஆகும். மின்னழுத்த வேறுபாடு V-யும் மின்னோட்டம் I-யும் ஒன்றுக்கொன்று நேர்தகவில் அமைவதால் V மற்றும் I இடையேயான வரை படம் ஒரு நேர்கோடு ஆகும்.
4.
(i) திரவ அல்லது வாயுப் பொருள்களை வெப்பப்படுத்தும் போது அவற்றிலுள்ள அணுக்கள் ஆற்றலினைப் பெற்று விலக்கு விசைக்கு உட்படுகிறது.
(ii) பொருள் விரிவடைவதன் அளவு பொருளுக்கு பொருள் வேறுபடும். ஒரு குறிப்பிட்ட அளவு வெப்ப ஆற்றல் அளிக்கப்படும் போது வாயுவில் ஏற்படும் வெப்ப விரிவு திட மற்றும் திரவப் பொருள்களைவிட அதிகமாகவும், திடப் பொருள்களைவிட அதிகமாகவும் திடப் பொருளை ஒப்பிடும் போது திரவப் பொருள்களில் அதிகமாகவும் இருக்கும்.
(iii) பரும வெப்ப விரிவு குணத்தின் மதிப்பு திரவத்தில் வெப்பநிலையைச் சார்ந்ததல்ல. ஆனால் வாயுவில், இதன் மதிப்பு வெப்ப நிலையைச் சார்ந்து அமையும்.
(iv) ஒரு கொள்கலனில் உள்ள திரவத்தினை வெப்பப்படுத்தும்போது கொள்கலனின் வழியாக வெப்ப ஆற்றலானது திரவத்திற்கு அளிக்கப்படுகிறது. எனவே, வெப்ப ஆற்றலின் ஒரு பகுதி கொள்கலன் விரிவடைவதற்கும், மீதமுள்ள ஆற்றல் திரவத்தினை விரிவடையச் செய்வதற்கும் பயன்படுகிறது. இதிலிருந்து திரவத்தில் ஏற்படும் உண்மையான விரிவை நேரடியாக கணக்கிட இயலாது.
(v) எனவே திரவத்தில் ஏற்படும் வெப்ப விரிவினை உண்மை வெப்ப விரிவு மற்றும் தோற்ற வெப்ப விரிவு என இருவழிகளில் வரையறுக்கலாம்.
உண்மை வெப்ப விரிவு:
(i) எந்த ஒரு கொள்கலனும் இல்லாமல் நேரடியாக திரவத்தினை வெப்பப்படுத்தும் போது ஏற்படும் வெப்ப விரிவு உண்மை வெப்ப விரிவு எனப்படும்.
(ii) ஓரழகு வெப்பநிறை உயர்வால் திரவத்தில் அதிகரிக்கும் உண்மை பருமனுக்கும் அத்திரவத்தின் ஓரலகு பருமனுக்கும் உள்ள தகவு உண்மை வெப்ப விரிவு குணகம் என அழைக்கப்படும். இதன் SI அலகு கெல்வின்-1 ஆகும்.
தோற்ற வெப்ப விரிவு:
(i) கொள்கலன் இல்லாமல் திரவத்தினை நேரடியாக வெப்பப்படுத்த முடியாது. இதனால் நடைமுறையில் கொள்கலனில் வைத்தே திரவத்தினை வெப்பப்படுத்த வேண்டும்.
(ii) அளிக்கப்பட்ட வெப்ப ஆற்றலின் ஒரு பகுதி கொள்கலனை விரிவடையச் செய்வதற்கும் மீதமுள்ள ஆற்றல் திரவத்தினை விரிவடையச் செய்வதற்கும் பயன்படுகிறது.
(iii) எனவே, இந்நிகழ்வில் நாம் காண்பது திரவத்தின் உண்மையான வெப்ப விரிவு அல்ல. கொள்கலனின் விரிவினை பொருட்படுத்தாமல் திரவத்தின் தோற்ற விரிவினை மட்டும் கணக்கில் கொள்வதே திரவத்தின் வெப்ப விரிவு என அழைக்கப்படும்.
(iv) ஓரலகு வெப்பநிலை உயர்வால் திரவத்தில் அதிகரிக்கும் தோற்ற பருமனுக்கும் அத்திரவத்தின் ஓரலகு பருமனுக்கும் உள்ள தகவு தோற்ற வெப்ப விரிவு குணகம் என அழைக்கப்படும். இதன் SI அலகு கெல்வின்-1 ஆகும்.
5.
காந்த முறை பிரிப்பு
(i) தத்துவம் :
தாதுக்களின் காந்தத் தன்மை, பிரித்தலின் அடிப்படையாக அமைகிறது. தாதுவோ அல்லது தாதுக்கூளமோ காந்தத் தன்மை பெற்றிருப்பின், இம்முறை செயல்படுத்தப்படும்.எ.கா.டின் ஸ்டோன் SnO2 வெள்ளீயத்தின் தாது.
(ii) முறை: நன்கு தூளாக்கப்பட்ட தாதுவானது இரண்டு உலோக உருளைகளுக்கு ஊடே செல்லும் இயங்கு பெல்டின் மூலம் கொட்டப்படுகின்றது. இவ் உருளைகளில் ஒன்று காந்தத் தன்மையுடன் இருப்பதால், காந்தத் துகள்கள், காந்தத் தன்மையுள்ள உருளையால் ஈர்க்கப்பட்டு காந்த தன்மையற்ற துகள்கள் தொலைவில் செறிந்து பிரிக்கப்படும்.

6.
டிடர்ஜெண்ட்களின் பயன்கள்:
சோப்பை விட டிடர்ஜெண்ட்களை பயன்படுத்துவது அதிக நன்மைகளை தருகிறது. ஏனென்றால்,
(i) டிடர்ஜெண்ட்டை கடின நீர் மற்றும் மென்மையான நீர் இரண்டிலும் பயன்படுத்தலாம். கடின நீரில் சோப்பை விட டிடர்ஜெண்ட்கள் சிறப்பாக செயல்புரியும்.
(ii) உப்பு நீர் மற்றும் அமிலம் கலந்த நீர் ஆகியவற்றில் கூட டிடர்ஜெண்டை பயன்படுத்தலாம்.
(iii) சலவை செய்யும் கலனிலோ, துணிகளிலோ, எந்த விதமான கறைகளையும், அரிப்புகளையும் டிடர்ஜென்ட் ஏற்படுத்தாது.
(iv) குளிர்ந்த நீரில் எளிதாக கரையும்.மேலும் கடின நீரிலும் எளிதாக அலசலாம்.
(v) சோப்பை கொண்டு சலவை செய்ய முடியாத கம்பளி போன்ற ஆடைகளையும் டிடர்ஜெண்ட் கொண்டு சலவை செய்யலாம்.
(vi) நீண்ட ஹைட்ரோ கார்பன் சங்கிலித் தொடரை கொண்டுள்ள டிடர்ஜெண்ட்கள் எளிதில் உயிரியல் சிதைவிற்கு உட்படும்.
(vii) வாகனங்களில் பயன்படுத்தப்படும் எண்ணெய் பசையினால் (கிரிஸ்) உருவாக்கப்படும் கறையை கூட எளிதாக டிடர்ஜெண்ட்டை பயன்படுத்தி நீக்கிவிடலாம்.
(viii) செயற்கையாக தயாரிக்கப்படும் துணிகளை பாதுகாக்கவும், வெண்மை தன்மையுடன் பிரகாசிக்கவும் டிடர்ஜெண்ட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
7.
(i) கனமான அணுக்கரு பிளவுற்று இரண்டு சிறிய அணுக்கருக்களாக பிளவுறும் போது ஆற்றல் வெளியாகிறது. இதனைப் போன்றே இரு இலேசான உட்கருக்கள் இணைந்து கனமான உட்கரு உருவாகும் போதும் ஆற்றல் வெளியாகிறது. இந்த நிகழ்வினை'அணுக்கரு இணைவு' எனலாம்.
(ii) வரையறை : மிக இலேசான இரு அணு உட்கருக்கள் இணைந்து கனமான அணுக் கருவிணை உருவாக்கும் நிகழ்வு அணுக்கரு இணைவு எனலாம்.
எடுத்துக்காட்டு:
\(_{ 1 }{ H }^{ 2 }+_{ 1 }{ H }^{ 2 }\rightarrow _{ 2 }He^{ 4 }+Q\) (ஆற்றல்)
1H2 என்பது ஹைட்ரஜனின் ஐசோடோப்பான டியூட்ரியத்தைக் குறிக்கிறது. ஒவ்வொரு அணுக்கரு இணைவின் போதும் வெளியாகும் சராசரி ஆற்றல் 3.814 X 10-12J.இதனைப் படம் குறிக்கின்றது.

(iii) அணுக்கரு வினையின் போது (இணைவு மற்றும் பிளவு) உருவாகும். சேய் உட்கருவின் நிறையானது இரண்டு தாய் உட்கருக்களின் நிறைகளின் கூடுதலை விடக் குறைவாக இருக்கும்.
(iv) தாய் உட்கருவின் நிறைக்கும், சேய் உட்கருவின் நிறைக்கும் இடையே உள்ள நிறைவேறுபாடு'நிறைவழு' என அழைக்கப்படுகிறது. இந்த நிறை வேறுபாடானது ஆற்றலாக (நிறை ஆற்றல் சமன்பாடு) மாற்றமடைகிறது.
(v) இந்தக்கருத்தினை 1905 இல், நிறை ஆற்றல் சமன்பாடு மூலமாக ஐன்ஸ்டீன் முன்மொழிந்தார். அதாவது நிறை ஆற்றலாகவும், ஆற்றல் நிறையாகவும் மாறும் என்பதனை நிறை ஆற்றல் சமன்பாடு வலியுறுத்துகிறது. நிறை ஆற்றல் சமன்பாட்டிற்கான தொடர்பு E =mc2 இதில் c என்பது ஒளியின் திசைவேகம் ஆகும். வெற்றிடத்தில் இதன் மதிப்பு 3 X 108மீவி-1
8.
| நிலை 1: மின்தூக்கி a என்ற முடுக்க மதிப்பில் மேலே நகர்கிறது. |
நிலை 2: மின்தூக்கி a என்ற முடுக்க மதிப்பில் கீழே நகர்கிறது. |
நிலை 3: மின்தூக்கி ஓய்வில் உள்ளது (a =0) முடுக்கம் சுழியாகும். |
நிலை 4: மின்தூக்கி புவி ஈர்ப்பு முடுக்க மதிப்பில் கீழே தடையின்றி விழுகிறது. (a=g) |
| R -W = Fதொ = ma R=W+ma R=mg+ma R=m(g+a) |
W-R=Fதொ=ma |
முடுக்கம் சுழியாகும் (a=0) W-R=Fதொ=0 R=W R=mg |
R=W-ma |
| R>W | R |
R=W | R=0 |
| தோற்ற எடை, நிலையாக உள்ள போதுள்ள எடையை விட அதிகம். |
தோற்ற எடை, நிலையாக உள்ள போதுள்ள எடையை விட குறைவு. |
தோற்ற எடை, நிலையாக உள்ள போதுள்ள எடைக்கு சமம். | தோற்ற எடையின் மதிப்பு சுழியாகும். |
9.
மீளாவினைகள்:
(i) ஒரு வினையில் வினைபடு பொருள்களை மீண்டும் பெற இயலாத வினை 'மீளா வினை' எனப்படும்.
(ii) இவ்வினை ஒரே திசையில் மட்டுமே நிகழும். அதாவது முன்னோக்கு வினையாக மட்டுமே நடைபெறும்.
(iii) நிலக்கரி எரிதல் வினையின் போது கார்பன் டை ஆக்ஸைடு வாயுவைக் கொடுக்கிறது.
(iv) இவ்வினையில் நிலக்கரியானது ஆக்சிஜனுடன் வினைபுரிந்து கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் நீரினை வெளியிடுகிறது.
(v) இதில் உருவான கார்பன் டை ஆக்ஸைடு வாயுவானது மீண்டும், நிலக்கரியாகவும், ஆக்சிஜனாகவும் மாற இயலாது. எனவே இவ்வினை மீளாவினை எனப்படும்.
10.
(i) கார்ல் லேண்ட்ஸ்டீனர் (1900) இரத்த வகைகளைக் கண்டறிந்தார். இவர் A, B மற்றும் O இரத்த வகைகளை அடையாளம் கண்டறிந்தார். டி காஸ்டிலோ மற்றும் ஸ்டெய்னி (1902) AB இரத்த வகையினை கண்டறிந்தார்.
(ii) மனித இரத்தத்தில் சில தனிச் சிறப்பு வாய்ந்த அக்ளுட்டினோஜென் அல்லது ஆன்டிஜன் (Ag) மற்றும் அக்ளுட்டினின் (அ) எதிர்பொருள்கள்
(ஆன்டிபாடி) காணப்படுவதன் அடிப்படையில் மனித இரத்தத்தினை A, B, AB மற்றும் O என நான்கு வகைகளாக அறியலாம். இந்த நான்கு வகைகளில் ஏதேனும் ஒரு வகையினை ஒரு தனிநபர் பெற்றிருப்பார்.
(a) 'A' வகை: ஆன்டிஜென் A-RBC யின் மேற்பரப்பில் காணப்படும். ஆன்டிபாடி B-இரத்த பிளாஸ்மாவில் காணப்படும்.
(b) 'B' வகை: ஆன்டிஜென் B-RBC யின் மேற்பரப்பில் காணப்படும். ஆன்டிபாடி A-இரத்த பிளாஸ்மாவில் காணப்படும்.
(c) 'AB' வகை: ஆன்டிஜென் A மற்றும் B - RBC யின் மேற்பரப்பில் காணப்படும். ஆன்டிபாடிகள் பிளாஸ்மாவில் காணப்பட மாட்டாது.
(d) 'O' வகை: ஆன்டிஜென் A மற்றும் B-RBC யின் மேற்பரப்பில் காணப்படாது. ஆனாலும் அதற்கான ஆன்டிபாடி A மற்றும் B பிளாஸ்மாவில் காணப்படும்.
11.
(i) முயலின் சுவாசம் ஓரிணை நுரையீரல்களால் நிகழ்த்தப்படுகிறது. இவை மென்மையான பஞ்சு போன்ற திசுக்களால் ஆக்கப்பட்டு, மார்புக்கூட்டினுள் வைக்கப்பட்டுள்ளன. மார்பறையானது முதுகுப் புறத்தில் முதுகெலும்புத் தொடராலும், வயிற்றுப்புறத்தில் மார்பெலும்பாலும், பக்கவாட்டில் விலா எலும்புகளாலும் சூழப்பட்டுள்ளது. மார்பறையின் கீழ்ப்பகுதியில் குவிந்த உதரவிதானம் அமைந்துள்ளது.
(ii) ஒவ்வொரு நுரையீரலும் ப்ளூரா என்ற இரட்டைச் சவ்வுகளால் ஆன உறையால் சூழப்பட்டுள்ளது. வெளிப்புறக் காற்று, புற நாசித்துளைகள் வழியாக சுவாசப் பாதையில் நுழைந்து தொண்டையை அடைகிறது. தொண்டையிலிருந்து குரல்வளை வழியாக மூச்சுக் குழாயினுள் காற்று நுழைகிறது. மூச்சுக் குழாயின் மேற்பகுதி அகன்று குரல் பெட்டியாக மாறியுள்ளது. லேரிங்ஸ் எனப்படும் இக் குரல்பெட்டியின் சுவர் நான்கு குருத்தெலும்புத் தகடுகளால் வலுவூட்டப் பெற்றுள்ளது.
குரல்பெட்டியினுள் உள்ள குரல் நாண்கள் அதிர்வடைவதால் ஒலி உருவாகிறது. குரல்பெட்டி, டிரக்கியா அல்லது மூச்சுக் குழாயாகத் தொடர்கிறது.
12.
HCl என்பது வலிமை மிகுந்த அமிலம் என்பதால் முழுவதும் அயனியாக மாறும் கீழ்கண்டவாறு.
HCI(aq)➝H+(aq)+CI-(aq)
மேற்கண்ட செயலில் ஒரு மோல் HCl ஒரு மோல் H+ அயனிகளை தரும். ஆகையால், H+ அயனியின் செறிவானது ஹைட்ரோ குளோரிக் (HCl) அமில செறிவுக்கு சமம். (0.001 M அல்லது 1.0 x 10-3 மோல் லி-1.)
pH = -log10[H+] = -log1010-3
= -(-3 x log1010)
= -(-3 x 1) = 3
pH = 3
13.
i) MgSO4 . 7 H2O படிகத்தை மெதுவாக வெப்பப்படுத்தும் போது ஏழு நீர் மூலக்கூறுகளை இழந்து நீரற்ற மெக்னீசியம்சல்பேட்டாக மாறுகிறது.

ii) கரைதிறன்:
ஒரு குறிப்பிட்ட வெப்பநிலை மற்றும் அழுத்தத்தில் 100 கி கரைப்பானில் கரைந்து தெவிட்டிய கரைசலை உருவாக்க தேவையான கரைபொருளின் கிராம்களின் எண்ணிக்கை அதன் கரைதிறன் எனப்படும்.

14.
மின்திறன் \(P=\frac { { V }^{ 2 } }{ R } \)
மின்னழுத்த வேறுபாடு V இரண்டு மின்விளக்குகளிலும் ஒரே மதிப்பை உடையதாக இருப்பதால் மின்திறன் மின்தடைக்கு எதிர் விகிதத்தில் இருக்கிறது.
எனவே குறைந்த மின்திறன் கொண்ட மின்விளக்குக்கு அதிக மின்தடை இருக்கும்.
ஆகவே 40 W, 220 V அளவினைக் கொண்ட மின்விளக்கு அதிக மின் தடையை பெற்றிருக்கும்.
15.
திரவத்தின் ஆரம்ப நிலை L1 = 50 மிலி
கொள்கலனின் விரிவால் திரவத்தின் நிலை L2 = 48.5 மிலி
திரவத்தின் இறுதி நிலை L3 = 51.2 மிலி
தோற்ற வெப்ப விரிவு = L3 - L1
= 51.2 மிலி - 50 மிலி = 1.2 மிலி
உண்மை வெப்ப விரிவு = L3 - L2
= 51.2 மிலி – 48.5 மிலி = 2.7 மிலி
16.
நிறை விகிதம் = 3 : 4
m1 : m2 = 3 : 4
முடுக்கம் a2 = 12 மீ.வி-2
F = ma
F1 = m1a1 = 3a1
F2 = m2a2 = 4 x 12 = 48 N
F = F1 = F2
3a1= 48
a1 = \(\frac{48}{3}\) = 16 மீ.வி-2
தேவைப்படும் முடுக்கம் = 16 மீ.வி-2.
17.
தரவுகள் : விசையின் மதிப்பு F = 40 நியூட்டன்
விசை செயல்படும் தூரம் = கீல்முனை அமைந்துள்ள தொலைவு = d = 90 செ.மீ = 0.9 மீ
சூத்திரம் : திருப்புத்திறன் M = விசையின் மதிப்பு F \(\times\) விசை செயல்படும் தொலைவு d
ஃ திருப்புத்திறன் = 40 \(\times\) 0.9 = 36 நியூட்டன் - மீட்டர்
18.
(c)
-2D
19.
(d)
\(\frac { 1 }{ f } =(\mu -1)\left( \frac { 1 }{ { R }_{ 1 } } -\frac { 1 }{ { R }_{ 2 } } \right) \)
20.
(b)
16.66
21.
(c)
0.5 A
22.
(c)
4r
23.
(b)
மின்னோட்டம் உயர்கிறது
24.
(c)
பொருளின் தன்மை மற்றும் நிறை
25.
(a)
நீளம்
26.
(b)
ஜூல்
27.
(b)
அயனி ஆரம்
28.
(b)
2
29.
(c)
O3
30.
(c)
நியூட்ரான்
31.
(c)
இலேசான அணுகருவினால் இணைப்பு
32.
(b)
எஸ்டராதல்
33.
(d)
அலிசைக்ளிக்
34.
(a)
இறுக்கங்கள், இறுக்கங்களாகவே எதிரொலிக்கும்
35.
(d)
இவை அனைத்தும்
36.
(d)
>20,000 Hz
37.
(d)
இவையனைத்தும்
38.
(d)
கணத்தாக்கு
39.
(d)
'A' என்பது Fe, 'B' என்பது Fe2O3
40.
(a)
கால்சியம் ஹைட்ராக்சைடு
41.
(b)
தொடு விசை
42.
(c)
நியூட்டன்
43.
(a)
அதிகரிக்கிறது
44.
(c)
உலோகக்கலவை
45.
(d)
மேற்கண்ட அனைத்தும்
46.
(b)
70-90
47.
(a)
எரித்ரோசைட்டுகள்
48.
(d)
'A, B, AB' மற்றும் 'O'
49.
(a)
35 செ.மீ
50.
(a)
எபிபிளாஸ்மா
51.
(c)
இடைவெளி
52.
(d)
இருவித்திலை தாவர வேர்
53.
(b)
12, 37
54.
(d)
இரு குவிய லென்சு
55.
(a)
நேர்க்குறி
56.
(d)
மேற்கூறியவை அனைத்தும்
57.
(c)
நீர்
58.
(a)
330 மீவி-1
59.
(a)
அலையின் திசையில் அதிர்வுறும்
60.
(c)
காரீயம்
61.
(c)
மரபியல் குறைப்பாடுகளை உண்டாக்கும்
62.
(c)
சுழி
63.
(d)
8.31 J மோல்–1 K–1
64.
(a)
(i), (ii) மற்றும் (iii)
65.
(b)
சேர்க்கை வினை
66.
(b)
Nkg-1
67.
(c)
விசை
68.
தொலை நோக்கிகளின் நன்மைகள்:
(i) கோள்கள், விண்மீன்கள், விண்மீன் திரள்கள் குறித்த விரிவான பார்வையைத் தருகிறது.
(ii) தொலை நோக்கியுடன் ஒளிப்படக் கருவியை இணைப்பதன் மூலம் வான் பொருள்களை ஒளிப்படம் எடுக்கலாம்.
(iii) குறைவான செறிவுடைய ஒளியிலும் தொலைநோக்கியைப் பயன்படுத்தலாம்.
குறைபாடுகள்:
(i) தொலைநோக்கிகளைத் தொடர்ந்து பராமரித்தல் வேண்டும்.
(ii) இவற்றை எளிதாக வேறு இடத்திற்கு எடுத்துச்செல்ல முடியாது.
69.
(i) வானியல் தொலை நோக்கிகளில் கிடைக்கும் இறுதி பிம்பமானது தலை கீழ் பிம்பமாக இருக்கும்.
(ii) எனவே, இத்தொலைநோக்கிகள் புவிப்பரப்பில் உள்ள பொருள்களைக் காண்பதற்கு ஏற்றவை அல்ல.
70.
| கடத்தி | காப்பான் |
| மின்னோட்டத்தை நன்கு கடத்தும் | மின்சாரத்தை கடத்தாது. |
| எ.கா. தாமிரம், அலுமினியம் | கண்ணாடி, இரப்பர் |
| மின்கடத்தி எண் அதிகம் | மின்கடத்தி எண் குறைவு |
| மின்தடை எண் குறைவு |
மின்தடை எண் அதிகம் |
71.
ஒரு திடப்பொருளை வெப்பப்படுத்துதலின் விளைவாக, அப்பொருளின் நீளம் அதிகரிப்பதால் ஏற்படும் விரிவு நீள் வெப்ப விரிவு எனப்படும்.
72.
வெப்பநிலை அதிகமாக உள்ள பொருளிலிருந்து வெப்பநிலை குறைவாக உள்ள பொருளிற்கு வெப்ப ஆற்றல் பரவும். இந்த நிகழ்விற்கு வெப்பப்படுத்துதல் என்று பெயர்.
73.
தாமிரம் CO2 மற்றும் ஈரப்பதத்துடன் வினைபுரிந்து பச்சை நிறக் காப்பர் கார்பனேட் படலத்தை உருவாக்குகிறது.
\(2Cu+{ O }_{ 2 }+{ CO }_{ 2 }+{ { H }_{ 2 }O\rightarrow }{ CuCO }_{ 3 }.Cu\left( OH \right) _{ 2 }\)
74.
(i) பாதரசம் (Mercury)
(ii) காலியம்(Gallium)
75.
(i) அணு ஆரம்
(ii) அயனி ஆரம்
(iii) அயனியாக்கும் ஆற்றல்
(iv) எலக்ட்ரான் கவர்தன்மை
(v) எலக்ட்ரான் நாட்டம்
76.
| அணுக்கரு பிளவு | அணுக்கரு இணைவு |
|---|---|
| கனமான அணுக்கருக்கள் பிளவுற்று இலேசான அணுக்கருக்களாக மாறும் நிகழ்வு'அணுக்கரு பிளவு' என்றழைக்கப்படுகிறது. | இரண்டு இலேசான அணுக்கருக்கள் இணைந்து கனமான அணுக்கருக்களாக மாறும் நிகழ்வு அணுக்கரு இணைவு எனப்படும். |
| அறை வெப்பநிலையில் இந்நிகழ்வு நிகழக்கூடும். | அணுக்கரு இணைவிற்கு உயர் வெப்பநிலை மற்றும் அழுத்தம் தேவை. |
| ஆல்பா, பீட்டா மற்றும் காமா கதிர்கள் வெளியாகின்றன. | ஆல்பாக் கதிர்கள் பாசிட்ரான்கள் மற்றும் நியூட்ரினோக்கள் வெளியாகின்றன. |
| அணுக்கரு பிளவு காமாக் கதிர்களை வெளியிடுவதால் இவை மனித ஜீன்களைத் தூண்டி மரபியல் மாற்றத்தை உண்டாக்கி பரம்பரை நோய்களுக்குக் காரணமாக அமைகிறது. | வெப்பமும் ஒளியும், உமிழப்படுகின்றன. |
77.
(i) பிளவுக்குட்படாத சில கதிரியக்கத் தனிமங்களை நியூட்ரான்களை உட்கவரச் செய்வதன் மூலம் பிளவுக்குட்படும் பொருள்களாக மாற்றமுடியும். இவை வளமிக்க பொருள்கள் (வளமைப் பொருள்கள்) என்றழைக்கப்படுகின்றன.
(ii) எடுத்துக்காட்டு : யுரேனியம் 238, தோரியம் 232, புளுட்டோனியம் 240.
78.
O2 (ஆக்சிஜன்)-ஒத்த ஈரணு மூலக்கூறு
O3(ஓசோன்)-ஒத்த மூவணு மூலக்கூறு
79.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அணுக்கள் அவைகளுக்கிடையேயான ஒரு வலுவான வேதிக்கவர்ச்சி விசையால் ஒன்றிணைந்து உருவாகக் கூடியது ஒரு மூலக்கூறு ஆகும்.
80.
(i) TFM என்றால் மொத்த கொழுப்பு பொருட்கள்.
(ii) இது சோப்பின் தரத்தை குறிக்கக்கூடிய முக்கிய அம்சமாகும்
(iii) உயர்ந்த TFM பெற்றுள்ள சோப்புகள் சிறந்த குளியல் சோப்பாக பயன்படுகிறது.
81.
நிறை என்பது பொருட்களின் அடிப்படைப் பண்பாகும். பொருட்களின் நிறை என்பது அதில் அடங்கியுள்ள பருப்பொருளின் அளவாகும். இதன் அலகு கிலோகிராம் ஆகும்.
82.
புவியீர்ப்பு முடுக்கம் g =\(\frac { Gm }{ R^{ 2 } } \)
i.e., M =\(\frac { g{ R }^{ 2 } }{ G } \)
g, R மற்றும் G ன் மதிப்புகளை பிரதியிட, புவியின் நிறை மதிப்பு, M =5.972 x 1024 கிகி எனக் கணக்கிடப்படுகிறது.
83.
(i) எத்தனாலின் நீர்க்கரைசல் 95.5% எத்தனாலையும் 4.5% நீரையும் பெற்றுள்ளது.
(ii) இது எரிசாராயம் என அழைக்கப்படுகிறது.
84.
கார்பன் மற்றும் ஹைட்ரஜன் மட்டுமே இணைந்து உருவாகும் சேர்மங்கள் ஹைட்ரோ கார்பன்கள் ஆகும்.
85.
(i) கேட்குநர் நிலையான ஒலி மூலத்தை நோக்கியோ அல்லது விலகியோ செல்லுதல்.
(ii) ஒலி மூலமானது நிலையான கேட்குநரை நோக்கியோ அல்லது விலகியோ செல்லுதல்.
(iii) ஒலி மூலமும், கேட்குநரும் ஒன்றுக்கொன்று நோக்கியோ அல்லது விலகியோ செல்லுதல்.
(iv) ஒலி மூலமும், கேட்குநரும் ஓய்வு நிலையில் இருக்கும்போது ஒலி பரவும் ஊடகம் நகருதல்.
86.
ஒலி மூலத்திற்கும், கேட்குநருக்கும் இடையே சார்பியக்கம் இருக்கும்போது, கேட்குநரால் கேட்கப்படும் ஒலியின் அதிர்வெண்ணானது ஒலி மூலத்தின் அதிர்வெண்ணிலிருந்து மாறுவது போல் தோன்றும். இந்நிகழ்வு டாப்ளர் விளைவு எனப்படும்.
87.
வினைபடு பொருட்கள் ஒன்றோடொன்று கலப்பதற்கு தேவைப்படும் குறைந்த பட்ச ஆற்றல் கிளர்வு ஆற்றல் எனப்படும்.
88.
இரண்டு சேர்மங்கள் வினைபுரியும் பொழுது அவற்றின் அயனிகள் பரிமாறிக் கொள்ளப்படுமானால் அவ்வினை இரட்டை இடப்பெயர்ச்சி அல்லது மெட்டதிஸிஸ் வினை எனப்படுகிறது.
89.
(i) மனிதனால் காற்றில்லா சுவாசத்தினால் உயிர் வாழ முடியாது.
(ii) காற்றில்லா சுவாசத்திற்கு மிக குறைந்த அளவு ஆற்றல் கிடைக்கிறது.
(iii) காற்றுள்ள சுவாசத்தில் மிக அதிகமான அளவு ஆற்றல் கிடைக்கிறது.
(iv) ஒரு குளுக்கோஸ் மூலக்கூறிலிருந்து காற்றில்லா சுவாசத்தின் மூலம் 2 ATP மூலக்கூறுகளும், காற்று சுவாசத்தின் மூலமாக 38 ATP மூலக்கூறுகளும் உருவாக்கப்படுகின்றன.
90.
அயனிச்சேர்மங்களை நீரில் கரைத்து தெவிட்டிய கரைசலை உருவாக்கும்போது அவற்றின் அயனிகள் நீர் மூலக்கூறுகளைக் கவர்ந்து குறிப்பிட்ட வேதி விகிதத்தில் பிணைப்பினை ஏற்படுத்திக் கொள்கின்றன. இந்நிகழ்வு நீரேற்றம் எனப்படும்.
91.
(i) இரத்த அழுத்தத்தைக் கண்டறிய உதவும் மருத்துவ உபகரணம் ஸ்பிக்மோமானோமீட்டர் ஆகும்.
(ii) இக்கருவியைக் கொண்டு ஒரு மனிதனின் மேற்கரத் தமனியின் அழுத்தம், அவர் ஓய்வாக உள்ள நிலையில் அளவிடப்படுகிறது.
(iii) மேலும் இக்கருவி இரத்த ஓட்டத்தின் நிலையையும், இதயம் செயல்படுவதையும் கண்டறிய உதவுகிறது.
(iv) குறைந்த மற்றும் உயர் இரத்த அழுத்த நிலைகளைக் கண்டறிய உதவுகிறது. மானோமெட்ரிக் மற்றும் நவீன எண்ணியல் (டிஜிட்டல்) வகையிலான உபகரணங்கள் இரத்த அழுத்தத்தினை அளக்க உதவும் சாதனங்களாகும்.
92.
ஒரு கரைசலில் குறைந்த அளவு (எடை) கொண்ட கூறு கரைபொருள் எனவும், அதிக அளவு (எடை) கொண்ட கூறு கரைப்பான் எனவும் வரையறுக்கப்படுகிறது.
93.
தமனிகள் வழியே இரத்தம் ஓடும்போது அத்தமனிகளின் பக்கவாட்டுச் சுவர் மீது இரத்தம் ஏற்படுத்தும் அழுத்தமே இரத்த அழுத்தம் எனப்படும்.
94.
95.
அட்டைக்கு காதுகள் இல்லை. அது அதிர்வுகளை தோல் மூலம் உணர்கிறது. ஆனால், கண்கள் உண்டு. அது 2 முதல் 10 சிறிய கண்கள் மூலம் உணவை அடையாளம் காண்கிறது.
96.
வகைப்பாட்டு நிலை:
தொகுதி : வளைத்தசைப் புழுக்கள்
வகுப்பு : ஹிருடினியா
வரிசை : நேந்தோப்டெலிடா
பேரினம் : ஹிருடினேரியா
சிற்றினம் : கிரானுலோசா
97.
கதிரியக்கத் தனிமம் ஒன்று ஒரு α – துகளை உமிழும் போது அதன் நிறை எண்ணில் நான்கும், அணு எண்ணில் இரண்டும் என்ற அளவில் குறைந்து புதிய சேய் உட்கரு உருவாகும்.
கதிரியக்கத் தனிமம் ஒன்று β – துகளை உமிழும்போது அதன் நிறை எண்ணில் மாறாமலும், அணு எண்ணில் ஒன்று அதிகரித்தும் புதிய சேய் உட்கரு உருவாகும்.
98.
1. ஓரலகு வெப்பநிலை உயர்வால் பொருளின் பருமனில் ஏற்படும் மாற்றத்திற்கும் ஓரலகு பருமனுக்கும் உள்ள தகவு பரும வெப்ப விரிவு குணகம் என அழைக்கப்படும்.
2. இதன் SI அலகு கெல்வின்-1
\(\frac{\Delta V}{V_{o}}=\alpha_{v}\Delta T\)
99.
| நீள் வெப்ப விரிவு | பரப்பு வெப்ப விரிவு |
| ஒரு திடப்பொருளை வெப்பப்படுத்துதலின் விளைவாக அப்பொருளின் நீளம் அதிகரிப்பதால் ஏற்படும் விரிவு நீள் வெப்ப விரிவு எனப்படும். | ஒரு திடப்பொருளை வெப்பப்படுத்துதலின் விளைவாக அப்பொருளின் பரப்பு அதிகரிப்பதால் ஏற்படும் விரிவு பரப்பு வெப்ப விரிவு எனப்படும். |
| ஓரலகு வெப்பநிலை உயர்வால் பொருளின் நீளத்தில் ஏற்படும் மாற்றத்திற்கும், ஓரலகு நீளத்திற்கும் உள்ள தகவு நீள் வெப்ப விரிவு குணகம் என அழைக்கப்படுகிறது. | ஓரலகு வெப்பநிலை உயர்வால் பொருளின் பரப்பில் ஏற்படும் மாற்றத்திற்கும், ஓரலகு பரப்பிற்கும் உள்ள தகவு பரப்பு வெப்ப விரிவு குணகம் என அழைக்கப்படுகிறது. |
| \(\frac { \triangle L }{ { L }_{ 0 } } \)=αLΔT | \(\frac { \triangle A }{ A_{ 0 } } \)=αAΔT |
100.
விழிக்கோளம் சிறிது நீண்டு விடுவதால் ஏற்படுகிறது. விழிலென்சின் குவிய தூரம் குறைவதாலும் விழி லென்சிற்கும் விழித் திரைக்கும் இடையே உள்ள தொலைவு அதிகரிப்பதாலும் இக்குறைபாடு ஏற்படுகிறது.
இதனால் கண்ணின் சேய்மைப் புள்ளியானது, ஈறிலாத் தொலைவில் அமையாமல், கண்ணின் அண்மைப்புள்ளியை நோக்கி நகர்ந்து விடுகிறது.
இதனால் தொலைவில் உள்ள பொருள்களின் பிம்பங்கள் விழித்திரைக்கு முன்பாக உருவாகின்றன.
101.
இரட்டைகளின் தொகுபயன் விசை மதிப்பு சுழியாதலால் இவை நேர்க்கோட்டு இயக்கத்தினை ஏற்படுத்தாது. ஆனால் சுழல் விளைவினை ஏற்படுத்தும். இதை இரட்டைகளின் திருப்புத்திறன் என்கிறோம்.
இரட்டையின் திருப்புத்திறன் (M) = விசையின் எண் மதிப்பு (F) \(\times\) இணைவிசைகளுக்கு இடையே உள்ள செங்குத்து தொலைவு (S)
M = F \(\times\) S
102.
விசைகளை அவை செயல்படும் திசை சார்ந்து
1. ஒத்த இணைவிசைகள்
2. மாறுபட்ட இணைவிசைகள் என்று வகைப்படுத்தலாம்.
103.

பொருள் Fக்கும் 2Fக்கும் இடையே வைக்கப்படும் போது
104.

105.
(i) மின்னழுத்தம் மற்றும் மின்னழுத்த வேறுபாட்டின் அலகு வோல்ட் (V).
(ii) ஒரு கூலூம் நேர்மின்னோட்டத்தை ஒரு புள்ளியிலிருந்து மற்றொரு புள்ளிக்கு மின்விசைக்கு எதிராக எடுத்துச்செல்ல செய்யப்படும் வேலையின் அளவு ஒரு ஜூல் எனில் அப்புள்ளிகளுக்கிடையே உள்ள மின்னழுத்த வேறுபாடு ஒரு வோல்ட் ஆகும்.
106.
ஓரலகு வெப்பநிலை உயர்வால் பொருளின் நீளத்தில் ஏற்படும் மாற்றத்திற்கும் ஓரலகு நீளத்திற்கும் உள்ள தகவு, நீள் வெப்ப விரிவு குணகம் என அழைக்கப்படும். இதன் SI அலகு கெல்வின்-1.
107.
\({ Ga }^{ 150 }\rightarrow { X }^{ 146 }+_{ 2 }{ He }^{ 4 }\)
புதிய அணு எண் -146
108.
கொடுக்கப்பட்டவை:
நிறை m =50 g =50 x 10-3 kg
இறுதி திசைவேகம் v =0
தொடக்க திசைவேகம் v =250 ms-1
காலம் t =1 ms =10-3 s
கண்டறிய:
J = F x t = ?
சராசரி விசை F = ma = ?
F=\(\frac { m(v-u) }{ t } =\frac { 50\times 10^{ -3 }[0-250] }{ 1\times 10^{ -3 } } \)
F=12500=1.25 x 104 N
J=F x t=1.25 x 104 x 10-3 =12.5 Ns
109.

110.
அ) இது ஒரு வாஸ்குலார் திசுத் தொகுப்பு.
ஆ) இது சூழ்ந்தமைந்த வாஸ்குலார் கற்றையாகும். இவை இரு வகைப்படும். அவை:
1. சைலம் சூழ் வாஸ்குலார் கற்றை
2. புளோயம் சூழ் வாஸ்குலார் கற்றை
நாம் படத்தில் பார்ப்பது புளோயம் சூழ் வாஸ்குலார் கற்றை. ஏனெனில், புளோயம் கற்றை முழுவதுமாக சூழ்ந்து காணப்படுகிறது.
இ) எ.கா. பாலிபோடியம்
111.
குளிர்பானங்கள் மலை உச்சியில் அதிகமாக நுரைத்துப் பொங்குகின்றன.
ஏனெனில், மலை உச்சியில் அழுத்தம் குறைவதால் கரைதிறனும் குறைகிறது.
இதனால் CO2 வாயு குமிழ்களாக வெளியேறுகிறது.
112.
ஒலியின் திசைவேகம் v = 330 மீ/வி
காலஅளவு t = 9.8 வி
மேகக்கூட்டங்களின் உயரம் D = v \(\times\) t
= 330 \(\times\) 9.8
D = 2940 மீ
113.
1. ஒலியை ஒரு குறிப்பிட்ட புள்ளியில் குவிக்க வேண்டியத் தேவைகள் இருந்தால் மட்டுமே வளைவான எதிரொலிக்கும் பகுதிகள் பயன்படுத்தப்படுகின்றன.
2. பரவளையத்தின் வடிவில் அமைக்கப்பட்டிருக்கும் கூடங்களில் பிரதிபலிக்கும் ஒலியானது, சுவரில் எங்கு மோதினாலும், ஒரு குவியப் புள்ளியிலிருந்து மற்றொரு குவியப்புள்ளியில் குவிக்கப்படுகிறது.
3. இதனால் இதனுள் அமர்ந்து ஒருவர் மெல்லிய குரலில் பேசினாலும் மீண்டும் மீண்டும் எதிரொலித்து வரும் ஒலியினால் அரங்கத்தில் அமர்ந்திருக்கும் அனைவரின் செவியையும் அடையும்.
114.
0°C வெப்பநிலையிலுள்ள பனிக்கட்டி நீரை விட அதிக குளிர்ச்சியாக உணரப்படும். இதனை பனிக்கட்டியின் உருகுதலின் உள்ளுறை வெப்பம் (336 kJ) மூலம் விளக்கலாம்.
0°C வெப்பநிலையிலுள்ள பனிக்கட்டி, 0°C வெப்பநிலையில் நீராக மாறுவதற்கு அதே வெப்பநிலையிலுள்ள நீரை விட அதிகமான வெப்பத்தை (1 kg நிறையுடைய பனிக்கட்டி 336 kJ என்ற அளவில்) நமது கையிலிருந்து எடுத்துக் கொள்வதால் பனிக்கட்டி அதிக குளிர்ச்சியாக காணப்படும்.
115.
i) ஆம், பிம்பம் கிடைக்கும். ஆனால் தெளிவான பிம்பம் தெரிவதில்லை.
ii) இல்லை. குவிலென்சானது தளக் குவிலென்சாக மாறிவிடும், இது குவிலென்சை போன்று செயல்பட்டு ஒளிக்கற்றையை குவிக்கும்.
116.
பெக்கரல்
117.
அணு எண் = 106 நிறை எண் = 263
[ஒரு ஆல்பா - துகள் வெளி வந்தால் அணு எண் இரண்டும், நிறை எண் நான்கும் குறைகிறது]
118.
முயலின் பற்கள் வெவ்வேறு வகைகள் இத்தகைய பல்லமைப்புக்கு மாறுபட்ட பல்லமைப்பு என்று பெயர். எனவே முயலின் பல்லமைவு ஹெட்டிரோடான்ட் (வேறுபட்ட பற்கள்) ஆகும்.
119.
தோல் மூலம் சுவாசிக்கிறது
10th Standard Syllabus & Materials
10th Standard
TN 10th English Prose - 2 - The Night the Ghost Got in Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Supplementary - 1 - The Tempest Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Poem - 1 - Life Important Questions And Answers Study Material - QB365 Set A
NEW10th Standard
TN 10th English Prose - 1 - His First Flight Important Questions And Answers Study Material - QB365 Set A
Tamilnadu Stateboard 10th Standard Subjects
Tamilnadu Stateboard Standards